எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- அரிய பொக்கிஷங்கள்
- MP3 ஆடியோக்கள்
- சாயி சத்சங்கம்
- தெய்வீக நிகழ்வுகள்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- இதே நாளில் அன்று!
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 16 மார்ச், 2023
சுவாமி! பக்தி வருவதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானதல்லவா...? அந்த நம்பிக்கை வருவதற்கு என்ன வழி?
நம்பிக்கை என்பது வருவதாவது!? இதென்ன கடையிலா கிடைக்கும்? யாரோ கொடுத்து நீங்கள் எடுத்துக் கொள்வது அல்ல...நம்பிக்கை உங்கள் அடிப்படை குணம்! "விசுவாசமே உங்கள் சுவாசம்"! தெய்வ நம்பிக்கையே உங்கள் உயிர்நாடி! அது இல்லை என்றால் உங்களுக்கு மூச்சே இல்லை என்று கூறலாம்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் !
புதன், 15 மார்ச், 2023
1000 அடி யமுனோத்ரி பள்ளத்தாக்கில் விழப்போன யோகி ஓம்குரு!
ஆன்மீக சாதகராக இமாலயத்தில் தெய்வீக யாத்திரை புரிந்த ஒருவரை இறைவன் பாபா எவ்வாறு காப்பாற்றினார் எனும் ஓர் ஆச்சர்ய மகிமா சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
செவ்வாய், 14 மார்ச், 2023
விபூதி மறுத்த வைஷ்ணவ பெண்மணி - வீடு தேடிவந்து பூசிவிட்ட பாபா- பஹ்ரன் பரவச அனுபவம்!
தீரமாக இறைவன் பாபா மற்றும் அவரது பஜனை - விபூதி பிரசாதம் இவற்றை நம்ப மறுத்த ஒரு முதிர் பெண்மணிக்கு பாபாவே நேரடியாக அவர் வீட்டிற்கு சென்று செய்த அற்புதம் பரவசமாக இதோ...
திங்கள், 13 மார்ச், 2023
மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவ ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் பல குறுக்கு வழிகளை கையாள வேண்டும்?
இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை!
தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்!
ஞாயிறு, 12 மார்ச், 2023
முன்பின் தெரியாத இருவரை தம்பதியாக்கிய தெய்வ சாயி!
புதன், 8 மார்ச், 2023
செவ்வாய், 7 மார்ச், 2023
2013 ஆண்டின் உத்தர்க்காண்ட் பிரளயம் - பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பாபா செய்த தொலைபேசி!
எவ்வாறு மிகப்பெரிய ஒரு சமீபத்திய பேரிடரில் இருந்து தனது பக்தரை பாபா மீட்டார் எனும் ஆச்சர்ய அனுபவம் விறுவிறு என இதோ...
திங்கள், 6 மார்ச், 2023
மொரிஷியஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் புட்டபர்த்தி தரிசனம்!
மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...
சுவாமி! நீங்கள் சிருஷ்டித்த (படைத்த) அனைத்தும் நல்லவையே என்கிறபோது தீய செயல்கள் எதிலிருந்து உருவாகின்றன?
சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!
இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது!
சனி, 4 மார்ச், 2023
ஸ்ரீ பிரேம சாயி பாதமாய் உருமாறிய ஸ்ரீ சத்ய சாயி பாதம்!
எவ்வாறு ஒரு ஆத்மார்த்த பக்தருக்கு அரிதிலும் அரிதான விந்தையான ஒரு அற்புதத்தை இறைவன் பாபா வழங்குகிறார் என்பதைக் குறித்த சுவாரஸ்ய பதிவு இதோ...
சுவாமி! ஒருவர் Good'டாக (நல்லவராக) இருந்தால் போதாதா? ஏன் God'டை (கடவுளை) உணர்ந்து கொள்ள வேண்டும்?
Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது!
உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...!
அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை)
வியாழன், 2 மார்ச், 2023
முனைவர் V.K. கோகாக் | புண்ணியாத்மாக்கள்
"நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.கே.கோகாக், ஆன்மீகப் பின்னணியுடன் மதச்சார்பற்ற கல்வியை வழங்கக்கூடிய ஒரு சிறந்த ஆசான் ஆவார். கோகாக்கின் இதயம் மிகவும் தூய்மையானது. அவர் எப்போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரித்து வந்தார். அவர் எனது கட்டளையை எழுத்திலும் செயலிலும் கடைப்பிடித்தார். ஒரு சிறு சந்தேகத்தைக் கூட என்னை அணுகித் தெளிவுபடுத்திக் கொள்வது அவர் வழக்கம். அவர் உன்னதமானவர் ஆகையால் நமது பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரானார். அவருடைய கடின உழைப்பின் பலனை இன்று மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர்." என்று 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் நாள், தனது தெய்வீகப் பேருரையில் சுவாமி குறிப்பிட்டார்.
எவ்வளவு பக்தியாக பல காலம் இருந்தும் சிலர் திடீரென ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிப் போகிறார்களே? காரணம் என்ன?
இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்!
புதன், 1 மார்ச், 2023
கேதார்நாத் கௌரி குண்டத்தில் பாபா யார்? எனும் ரகசியம் பகிர்ந்த ஒரு இமய யோகி!
இமய மகான்களுக்கு இறைவன் பாபா எவ்வாறு தனது அருள்மயமான மகிமையை இன்றளவும் பொழிந்து கொண்டே வருகிறார் என்பதற்கான அரியதொரு உன்னத சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
தற்கால அரசுகளின் நடப்பு நிலை எவ்வாறு இருக்கிறது?
"சத்யம் வத; தர்மம் சர" என்பது வேதத்தின் பிரகடனம்! "சத்தியம் பேச வேண்டும்.. அறத்தை கடைபிடிக்க வேண்டும்!" என்பதே இதன் பொருள்! தற்காலத்தில் என்ன நடக்கிறது? அனைவரும் ஆச்சர்யகரமான வகையில் அறத்தை அள்ளி அள்ளிப் பேசுகிறார்கள்! அதாவது 'தர்மம் வத' என்று ஆக்கிக் கொண்டுள்ளனர்...அதை வாழ்க்கையில் நடத்திக் காட்டுவது பற்றிக் கவலையே காட்டுவதில்லை! 'சத்யம் வத:' என்பதையும் சத்யம் வத(வதை)' என்றாக்கி சத்தியத்தையும் வதைத்து வருகிறார்கள்!
செவ்வாய், 28 பிப்ரவரி, 2023
சிறு குழந்தையின் முனகல் குரலைக் கேட்டு சிருஷ்டி கல்கண்டு கொடுத்த தெய்வத்தாய் சாய்!
பெரியோர் முதல் குழந்தைகள் முதல் பறவைகள் முதல் எறும்புகள் வரை பாபா காட்டும் பரிவு சரிசமமானது... அதற்கான உதாரணங்களோடும் ஊடாடும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
திங்கள், 27 பிப்ரவரி, 2023
பாபாவின் முடி நிஜமா? என சோதிக்க சென்றவர் அடியும் நிஜமே என சரண் அடைகிறார்!
எவ்வாறு ஒரு நாத்திகவாதியை ஆன்மீகவாதியாக இறைவன் பாபா உருமாற்றி இமயமலை அழைத்துச் செல்கிறார் எனும் பரவச சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
சனி, 25 பிப்ரவரி, 2023
இப்போது யாரை கேட்டாலும் "Computer - Computer - Computer" என்று அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள்! இந்த கல்விமுறை குறித்து உங்களின் கருத்து?
எல்லாவற்றிலும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது! நீங்கள் தற்போது கற்றுக் கொள்ளும் நவீன கல்வி முறை அனைத்தும் உங்கள் உள்ளேயே இருக்கின்றன!
வியாழன், 23 பிப்ரவரி, 2023
பாபா கனவில் வருவதற்கான காரணம் என்ன? கனவு அருளும் சாயி கனிவு!
ஒரு பக்தரின் கனவில் அடிக்கடி தோன்றி... ஒருமுறை ஏன்? தான் அவருக்கு சாயி கனவுகளை வழங்குகிறேன் என்பதன் காரணத்தை விளக்குகிறார் இறைவன் பாபா... அந்த சுவாரஸ்ய அனுபவம் இதோ...
சுவாமி! உங்கள் ஆசீர்வாதத்தினால் உங்கள் சந்நதி அடைந்திருக்கும் நாங்கள் பூர்வ ஜென்ம வாசனைகள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமா?
இப்போது உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாக்கியங்கள், முற்பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல காரியங்கள் இரண்டும் தேவையானவையே!
ஒன்றுக்கு மற்றது சம்பந்தப்பட்டவையே!
செவ்வாய், 21 பிப்ரவரி, 2023
மாதாஜி கிருஷ்ணாபாய் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
மகான் யோகி ராம்சுரத்குமாருக்கு நாம தீட்சை குருவாகவும் , தனது ஸ்ரீராம பக்தியால் மகானாகவும் உயர்ந்த காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராம்தாஸ் அவர்களுக்கு ஒரு திருமகளாக திகழ்ந்து குருசேவை புரிந்த அவரது சிஷ்யை ஸ்ரீ மாதாஜி கிருஷ்ணா பாய் பாபாவை பற்றி உரைத்தவை என்ன? சுவாரஸ்யமாக இதோ...
இவ்வளவு பெரிய உடலில் உயிர் (பிராணன்) எங்கே இருக்கிறது?
நீங்கள் இதயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்! அது தவறு! தற்காலத்தில் இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது... இதயத்தை எடுத்துவிட்டால் உடனே மரணம் ஏற்படுவதில்லை! அதில் உயிர் எங்கே இருக்க முடியும்?
திங்கள், 20 பிப்ரவரி, 2023
மனதை அடக்க நம் சுவாமி கூறும் நல் உபதேசம்! Divine Discourse Jan.08, 1983
மனதின் ஓட்டமே மனிதனின் ஆட்டம். மனம் மயங்கி மதி கெட்டவர்களை, மக்களே போல்வர் கயவர் என்கிறார் திருவள்ளுவர். மனதை அடக்க மலை, காடுகளை நாடினர் பலர். ஆயின் மனமும் அவருடன்தானே சென்றது. நம்முடன் எப்போதும் ஒட்டி உறவாடும் மனதை எளிதில் அடக்க இயலாது. ஆயின் பகவான் பாபா காட்டும் இந்த எளிய வழியை பின்பற்றினால் மனம் அடங்கி, மனிதன் யோகி ஆகலாம்.
புதன், 15 பிப்ரவரி, 2023
சாக்ஷாத் சங்கர ஸ்வரூபம்
பகவானின் இளம் வயதில், மந்திரில் தினசரி பூஜை செய்யும் புரோகிதர் திரு. சேஷகிரிராவ் மற்றும் அந்நாளைய பக்தர்கள் சிலர் இணைந்து நம் ஸ்வாமி மேல் 108 நாமங்களை தொகுத்து ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளியை உருவாக்கினர்.
ஸ்ரீ காமாவதானி | புண்ணியாத்மாக்கள்
தினமலர் செய்தி: சத்ய சாய் கோவிலில் காஞ்சி மடாதிபதி!
விசாகப்பட்டினம், பிப், 14- ''அன்பு, அக்கறையுடன் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் அருளாசியில் தெரிவித்தார்.
சனி, 11 பிப்ரவரி, 2023
ஆன்மீக ஆனந்தத்தை ஒருவர் எவ்வாறு அடைய முடியும்?
ஆன்மீகத்தில் கூட ஒருவர் அமைதியின்றி இருப்பது துரதிருஷ்டமே! ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டே மனக்கஷ்டத்துடன் இருப்பது கேலிக்குரியது!
வியாழன், 9 பிப்ரவரி, 2023
சுவாமி! கொடுப்பினைக்கு முக்கியமாக எங்களிடம் என்ன இருக்க வேண்டும்?
எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!
புதன், 8 பிப்ரவரி, 2023
ஸ்ரீ ஆதிசங்கரர் மிகச் சிறிய வயதிலேயே உடலை துறந்துவிட்டார்! இதற்கு காரணம் என்ன சுவாமி?
அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதிசங்கரர் இளம் வயதிலேயே உடலை துறந்தவர் என்பது உண்மையே!
பிரஸ்தானத்ரயத்திற்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதி... ஞான மார்க்கத்தை போதித்து... பக்தி மார்க்கத்தை நிலை நாட்டி... அநேக இறை துதிகளை உலகிற்கு அளித்து... இமயம் முதல் குமரி வரை பிரயாணம் செய்து... பீடங்களை ஏற்படுத்தி , சநாதன தர்மத்தின் இலட்சிய மூர்த்தியாக நிலை பெற்றவர் ஸ்ரீ ஆதிசங்கரர்!
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு பாபா அளித்த கண் பார்வை!
கடவுளின் அருள் எங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
இந்த எண்ணம் தவறானது! கடவுளின் அருள் அனைவருக்கும் சமமாகவே உள்ளது! குறைபாடு உங்கள் மனதில் தான் இருக்கிறது!
மழை பெய்து கொண்டிருக்கும் போது... பாத்திரத்தின் முகப்பை மேல்நோக்கி வைத்தால் தான் மழை நீர் அந்த பாத்திரத்தில் விழும்! அதை விடுத்து பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தால் , பாத்திரத்திற்குள் எப்படி மழை நீர் வரும்?
சனி, 4 பிப்ரவரி, 2023
சுவாமி! உலகில் பலத்தரப்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மனிதர்கள் உங்கள் பக்தராக இருந்து பல்வேறு கௌரவங்களைப் பெறுகிறார்கள்! இதற்கு உங்கள் கருத்து?
இது சகஜமே! நற்சேர்க்கையால் விளையும் பலன் இதுதான்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!
ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சூறு வாகனமாக அமைந்ததால் அதுவும் ஒரு வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டது!
எருது சிவனின் வாகனமாக இருப்பதால் அதையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்!
வியாழன், 2 பிப்ரவரி, 2023
24 ரூபாய் தேவைப்படும் தையல்காரரனின் பயணச் செலவுக்கு 14 ரூபாய் மட்டுமே கொடுத்தார் பாபா! ஏன்?
பிரபலம் முதல் பராரி வரை முராரி பாபா அனைவரையும் சமமாக அரவணைப்பவர்... இதை உணர்த்தும் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...
சுவாமி! உங்கள் மீதுள்ள எங்களது நம்பிக்கை ஒரே அளவில் இருப்பதில்லை... ஆனால் உங்களுக்கோ எங்கள் மீது எதனால் அத்தனை நம்பிக்கை?
"ஏகோவசி சர்வ பூதாந்தராத்மா"
இறைவன் சகல ஜீவராசிகளிடமும் , விதவிதமான உருவங்களில் , வேறுபட்ட பெயர்களில் வாழ்கிறார்!
புதன், 1 பிப்ரவரி, 2023
சுவாமி! உங்களுக்கு கோபம் வருமா?
சுவாமி எனக்கு எந்தவிதமான சுயநலமும் கிடையாது! சுவாமி எனக்கு கோபம் இல்லை! கோபமே வராது!
Love is God - God is Love
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
சுவாமி! ஒரு தலைவரின் குணநலன்கள் எவ்வாறு அமைந்திருப்பது அவசியம்?
வெள்ளி, 27 ஜனவரி, 2023
ஸ்ரீ சந்திர யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...
சுவாமி நாங்கள் மூன்று நான்கு வேளைகள் சாப்பிட்டும் உடம்பில் போதிய வலுவில்லை ஆனால் தாங்கள் குறைந்த அளவே உணவருந்தி ஏராளமான சேவை, தரிசனம் என 24/7 நாளும் இயங்குகிறீர்கள்! எப்படி இது சாத்தியப்படுகிறது?
இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது!
சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்!
சனி, 21 ஜனவரி, 2023
சுவாமி! ஆன்மீக சாதனா (ஆன்மீகப் பயிற்சி) தினசரி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?
வியாழன், 19 ஜனவரி, 2023
கர்னல் ஜோகா ராவ் | புண்ணியாத்மாக்கள்
பூரணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா தனது 65வது பிறந்ததினப் பேருரையின்போது பின்வருமாறு குறிப்பிட்டார், "கடந்த இருபது ஆண்டுகளாக பிரசாந்தி நிலையத்தின் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதிலும், மத்திய அறக்கட்டளையின் உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றுவதிலும் இரவும் பகலும் இடைவிடாது உழைத்தவர் ஜோகாராவ். எல்லோரும் அவரை கர்னல் ஜோகாராவ் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர் உண்மையில் கர்மயோகி ஜோகாராவ். (பகவான் பின்னர் கர்னல். ஜோகாராவின் கையில் தங்கத்தாலான கங்கணம் ஒன்றை அணிவித்தார்). எப்ப்பேற்பட்ட பாராட்டு! பரமாத்மாவினிடமே நேரடியாக கர்மயோகி பட்டம் பெறுவதென்றால் எத்தகைய அயராத சேவையாற்றியிருக்க வேண்டும் அந்த புண்ணியாத்மா?
சுவாமி! ஆன்மீக சாதனையின் பயன்கள் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைப்பதில்லையே! இது பற்றி சுவாமி என்ன கூறுகிறீர்கள்?
உங்கள் அணுகுமுறையே தவறானது! நீங்கள் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்!
பிள்ளையை பள்ளியில் lkg'யில் சேர்த்து கல்வியை ஆரம்பித்து வைக்கிறீர்கள்... அப்படியே தொடர்ந்து 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, BA or B.Sc அல்லது B.Com போன்ற பட்டப்படிப்பு வரை எத்தனை ஆண்டுகள் பிடிக்கின்றன?!
எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும்!
புதன், 18 ஜனவரி, 2023
சுவாமி! எங்கள் செயல்களுக்கு நாங்களே பொறுப்பு... அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற போது இந்நிலையில் கடவுள் பக்தி எந்த அளவில் பயனளிக்கும்?
இறைவன் எல்லாவற்றையும் படைத்துவிட்டு அவற்றை அனுபவிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் மனிதருக்கு வழங்கி இருக்கிறார்! ஆனால் அதில் ஓர் நிபந்தனை...
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
301-350 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
சனி, 14 ஜனவரி, 2023
எங்களின் இந்த மனதை ஆன்ம விசார மார்க்கத்தில் செலுத்தமுடியவில்லையே! இயல்பாக மனம் அலைபாய்கிறது என்பதாலா? இல்லை வேறு எதனாலுமா?
மனம் நிலை கொள்வதில்லை, மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்! இது உண்மை அல்ல!
மனம் என்பதே உண்மையில் இல்லை..
எப்படி துணியானது நூல்களின் சேர்மானமோ அதுபோல் ஆசைகளின் அழுக்குமூட்டையே மனம்! மனம் என்பது தனியாக ஒன்று இல்லை!
வியாழன், 12 ஜனவரி, 2023
இறைவனது அருள் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
இறைவனின் இதயத்தை நெகிழச் செய்து நெக்குருகச் செய்யும் சக்தி பக்தி ஒன்றே தான்! இறைவன் உங்கள் செல்வத்தையோ , கல்வித்திறனையோ, அதிகார பலத்தையோ மதிப்பதில்லை! உங்கள் பக்தி மட்டுமே இறைவனை ஈர்க்க வல்லது!

















































