தலைப்பு

வியாழன், 28 நவம்பர், 2019

காலையில் எழும்போதும் இரவு படுக்கும் முன்பும் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை பற்றி நம் அன்பு பகவான் கூறியுள்ளவற்றை தெரிந்து கொள்வோமா ?


சூரியன் உதயமாகும் போதே, பக்ஷிகள் கூவிக்கொண்டிருக்கும் போதே நித்திரையிலிருந்து எழுந்து  மனமார தியானிக்க வேண்டும். "ப்ரபோ! இரவும் பகலும் இது தான் என் சாவும் பிழைப்பும்  இதுவே என் மனித பிறப்பு,  என்ன செய்தாலும்  என்ன செய்வித்தாலும் எல்லாம் உன்னுடையதே. எல்லா பாரமும் உன்னுடையதே. எல்லோரிடமும் அன்பு செலுத்திக் கொள்ளும்படி இருக்க ஆசீர்வதியுங்கள்!" 

புதன், 27 நவம்பர், 2019

செளந்தர ஸாயி சௌபாக்கிய ஸாயி! (பிரபல பாடகர் T.M.S அவர்களின் சாயி அனுபவங்கள்)


 பிரபல பாடகர் டி.எம்.எஸ் என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவாமி அனுபவங்கள். - கவிஞர் வைரபாரதி✍🏻









கனிவை ஊற்றி நிரப்பிய தொண்டை ‌.. தமிழை அழுத்தம் திருத்தமாய்ப் பாடிய குரல்..
ரசங்கள் ஒன்பது மட்டுமல்ல அதன் உட்பிரிவுகளையும் ஊடுறுவிப் பாடிய இதழ்...
மனிதப் பிறவிகளின் எல்லா பரிணாமங்களிலும் அவன் கைகளைப் பிடித்து ஊர்வலம் வரும் ஒரே பாடகர்...
பிறப்புக்கு தாலாட்டு .. வளர்ப்புக்கு போதனை .. மகிழ்வுக்கு காதல்..‌ வலிக்கு ஆறுதல் .. இளைப்பாறலுக்கு பக்தி ... இறப்புக்கு ஒப்பாரி என அங்கிங்கெனாது எங்கும் வியாபித்த ஒரே உலகப் பாடகர் என் பாட்டன் டி.எம்.எஸ்...

கவிதா வாஹினி! (பக்கம் -1) - கவிஞர் வைரபாரதி

1) அமர சாயி அமரத்துவ சாயி:

எந்த மரம் செய்த புண்ணியமோ? 
தேக்கா 
சந்தனமா 

நாங்கள் என்ன 
மரத்து விட்டோமா ? 
கடவுளே நீ 
மறந்து விட்டாயா என 
மற்றவை
முறையிடுமா? 

செவ்வாய், 26 நவம்பர், 2019

பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் திரு. குணால் காஞ்சாவாலா அவர்களின் சாயி அனுபவங்கள்!


குணால் காஞ்சாவாலா ஒரு பிரபல இந்திய பின்னணி பாடகர், இவரது பாடல்கள் பெரும்பாலும் இந்தி மற்றும் கன்னட படங்களில் இடம்பெறுகின்றன.  மராத்தி, பெங்காலி மற்றும் இந்தியாவின் பிற அதிகாரப்பூர்வ மொழிகளிலும் பாடியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பவர் சாமியாரோ, துறவியோ அல்ல அவர் தான் கடவுள், இறைவன். எங்கள் குடும்பத்தினரின் கஷ்டமான காலங்களில் எல்லாம் அவரின் உன்னதமான சக்தி தான் எங்களை காப்பாற்றியது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாபவையும், அவருடைய அதி அற்புதமான சக்தியிலும் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

ராமாயணம் பற்றி பக்தர்களின் சந்தேகங்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் அளிக்கும் விளக்கம்



கேள்வி:

ஸ்வாமி, ஸ்ரீ ராமருக்கு இளவரசர் பட்டமளிப்புக்கு சற்று முன்னதாக கைகேயி ஸ்ரீ ராமரை காட்டுக்கு அனுப்பினார்.  கைகேயிடம் ஸ்ரீ ராமரின் அணுகுமுறை எப்படி இருந்தது? பொதுவாக ஸ்ரீ ராமரின் அணுகுமுறை விரோதமாகத் தான்
இருந்திருக்கும் அல்லவா?

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பாபாவின் நேர்காணல் அறை வழியே ஆஸ்திரேலியா வந்து சேர்ந்த அன்பர்!


ஒருமுறை ஆஸ்திரேலியாவிலிருந்து பகவானைக் காண ஆறு சாய் அன்பர்கள் புட்டபர்த்திக்கு வந்திருந்தனர். பாபா அவர்களை நேர்காணலுக்கு அழைத்தார். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு பக்தரை நோக்கி,"நீ ஏன் இப்பொழுது வந்தாய்? உன் தாயார் உடல் நலமில்லாமல் இருக்கிறார்; அவர் உன்னைக் காண தவிக்கின்றார்", என்று கூறினார்.

சனி, 23 நவம்பர், 2019

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாள் செய்தி!


"அன்பின் திருஉருவங்களே. இன்று என் பிறந்த தினம் என்ற எண்ணத்துடன் இதை கொண்டாடுவதில்  மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றீர்கள்." என்னை பொருத்தவரை எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை இல்லை.

வெள்ளி, 22 நவம்பர், 2019

தெய்வத்தின் குரல் - சத்ய சாயி பாபா | N.கஸ்தூரி


பேராசிரியர் N.கஸ்தூரி அவர்கள் 1958-ல் சுவாமியைப் பற்றி எழுதிய அற்புதமான கட்டுரை:

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தான் ஒரு அவதார புருஷர் என உலகுக்கு அறிவிப்பதை, பல சமயங்களில் தவிர்த்து வந்தார். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தனது 14வது வயதில் தான் ஒரு அவதாரம் எடுத்து வந்திருப்பதை பிரகடனப்படுத்தினார். அவருடைய இளம் பருவத்திலேயே தன்னுடைய தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி, தன்னுடன் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி அருள்பாலித்தார். அவர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்தவராயிருந்தார்.

வியாழன், 21 நவம்பர், 2019

சுவாமியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - 1960 மற்றும் 1975


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் ஆதிகாலத்து அவதாரத்திருநாள் கொண்டாட்டத்தில் இப்போதுள்ள பலர் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை... ஊடகப்புரட்சி அற்று வெறும் ஆன்மீகப் புரட்சியே நிகழ்ந்து கொண்டிருந்ததால் எல்லா அவதார வைபவங்களும் காணொளி பதிவாக அரங்கேறும் வாய்ப்புமில்லை.. இதோ அந்தக் குறை இனிதே அகன்று போகிறது இதோ... ஸ்ரீசத்யசாயி யுகத்தின் பதிவு வழியாக... நாம் நமது வாசிப்பில் இறைவனின் திருக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறோம் இதோ...

சனி, 16 நவம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 2 | வாழ்வெனும் வழக்கில் ஆண்டவன் தீர்ப்பு!


ஆஸ்திரேலியாவில் வாழும் பிரியா சிவராஜா அவர்களின் அனுபவங்கள்.

உலவிடும் காற்றில் வெளியில் உலகங்கள் எங்கும் எங்கும் நிலவினில் வானில் நீரில் நீணிலம் எங்கும் எங்கும் அலகிலா விளையாட்டுடைய சாயியின் காட்சி தோன்றும்
நிலையிலா வாழ்வு தன்னில்
நிலையான தெய்வம் தோன்றும்!

சுவாமி நட்சத்திரம் திருவாதிரையன்று மாலை சாயி  பக்தை பிரியாவிடம் பேசுகின்ற நல்வாய்ப்பு சாயி சங்கல்பத்தால் கிடைத்தது. கனடாவிலிருந்து

புட்டபர்த்தியில் முதன் முதலாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!


பிறப்பு இறப்பற்ற இறைவன் பூமியில் இறங்கி வரும் அவதாரத் திருநாளை அகில உலகமே கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது... அதை ஆதி சாயி பக்தர்கள் கொடுத்து வைத்திருந்தபடி கோலாகலமாகக் கொண்டாடினர், அதன் கொண்டாட்ட விவரங்கள் வியப்பு மிகு பதிவாக இதோ...

திங்கள், 11 நவம்பர், 2019

ஆந்திர முன்னாள் அமைச்சர் டாக்டர் J. கீதா ரெட்டி அவர்களின் அனுபவங்கள்

டாக்டர் J. கீதா ரெட்டி. 
ஆந்திர முன்னாள் அமைச்சர் (2004 - 2014)

நான் எப்பொழுதுமே “பாபாவின் பக்தையாவேன்“ என நினைத்துப் பார்த்தது இல்லை, ஆனால் விதி வேறு விதமாக இருந்தது. 1980இல், என் கணவர் திரு. டாக்டர் இராமச்சந்திரரெட்டி தன் 30-வது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அது அவரின் இடது பக்க உடம்பையும், வாயையும் முடக்கியது,

இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?


பக்தர் கேட்டவை பாபா அருளியவை:

ஹிஸ்லாப்: இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

பாபா:  சூடாயிருக்கும்விளக்கை ஒரு குழந்தை தொடுவது, அவ்விளக்கு குழந்தையை சுடும் வரை தான். இளைஞர்கள் நிதானமற்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உடனுக்குடன் பலன் காண விழைகிறார்கள்.

சனி, 9 நவம்பர், 2019

அகண்ட பஜன் உருவான பின்னணி!


அகண்ட ஜோதி ஏற்றி ஆன்மாவிலும் சுவாமி வெளிச்சம் பிரகாசிக்க வருடா வருடம் இரு முழு நாள் சங்கீர்த்தனமாய்.. நாத உபாசனையாய் .. பஜனைச் சரமாய் ... இரவு பகலாய் தொடரும்  கீதமழையாய் கொண்டாடப்படும் இறைவன் சத்யசாயியின் அகண்ட பஜனையின் துவக்கமும் அதன் முக்கிய காரணம் மற்றும் பலன்களையும்.. அதன் பின்னணி சுவாரஸ்யங்களையும் தனது உரையால் விளக்குகிறார் சாயி சகோதரி விழுப்புரம் அர்ச்சனா சாயி ராம் இதோ...

பஜனை மிகவும் மதிப்பு வாய்ந்தது!


"சாய் பாபாவிடம் செல்லும்போது, ​​பஜனையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று மக்கள் கூறலாம். ஆனால், பஜனை விட பெரியது எதுவுமில்லை என்பதை உணருங்கள். பஜனையில் என்ன ஒரு பேரின்பம் இருக்கிறது!

புதன், 6 நவம்பர், 2019

பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் அனுபவங்கள்!


பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ ராம்நாத் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. இவர் இந்திய திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர் இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

செவ்வாய், 5 நவம்பர், 2019

சர்வதேச தரத்திற்கு உயரப்போகிறது புட்டபர்த்தி!


அனந்தபூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இருப்பிடமான புட்டபர்த்தி சர்வதேச சுற்றுலா ஆன்மீக இடமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.சத்யநாராயணா தெரிவித்தார். ஒரு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவில் தயாரிக்கப்படும், மேலும் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக மாநில அரசு அதை மத்திய அரசுக்கு அனுப்பும், என்றார்.

சாயியின் மூன்று சங்கல்பங்கள்!


நான் ஒருவருக்கு வாக்குத் தந்துவிட்டால், அவர் எனக்கெதிராகத் திரும்பினாலும் நான் அவரை வெறுக்க மாட்டேன். அவர் என்னை இகழ்ந்து பேசினாலும், அவரை நான் தொடர்ந்து நேசிப்பேன். என் வாக்குறுதியைக் கடைப்பிடித்து இறுதிவரை போராடுவேன். என்றோ ஒருநாள் அவர்கள் சரியான பாதைக்குத் திரும்பி வருவார்கள்.

திங்கள், 4 நவம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றி பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!


 சுவாமி என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ஒரு அரிதான பரிபூர்ண அவதாரம். தன்னுடைய தன்னலமில்லா பேரன்பால் நிகழ்த்திய அற்புதங்களால் மட்டுமே பல்வேறு நாடுகளில் வாழும் கோடான கோடி பக்தர்களை புட்டபர்த்திக்கு வரவழைத்தாரே தவிர. அவர் ஒருபோதும் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் சென்று, பிரசங்கம் செய்து, ஆன்மீகப் பயிற்சிகள் என்ற பெயரில் கட்டணம் வசூலித்ததோ அதன் மூலம் பக்தர்களை தன் வசப்படுத்தியதோ கிடையாது! 

சனி, 2 நவம்பர், 2019

பாபா ஒரு நடமாடும் தெய்வம் - முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பத்மஸ்ரீ திரு M. N. கிருஷ்ணமணி

காலம்சென்ற பிரபல மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவருமான பத்மஸ்ரீ திரு. M. N. கிருஷ்ணமணி அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.

எம்.என்.கிருஷ்ணமணி: சாயிபாபா பிறரை காப்பாற்றுவதற்காக தனது அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார். எனது சகோதரி மோசமான கேஸ்ட்ரிக் அல்சரால் ( இரைப்பை புண் ) பாதிக்கப்பட்டிருந்தார். அவள் மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவமனை மருத்துவர் அவளுக்கு உணவாக பாலை மூக்கு வழியாக அளிக்கப் பரிந்துரைத்தார். ஒரு இளவயதினரான,

உல்லாசமாக திரிந்த சீன நாட்டவரை சிங்கப்பூரில் திருத்தி பக்குவப்படுத்திய பாபா!


சுவாமி தன்னை உணர வைப்பார். தன்மை உணர வைப்பார். எப்போது பிடிவாத மனம் சரணாகதி மனமாகிறதோ.. அப்போது தன் திரை விலக்கி நிறைவு சேர்ப்பார் மறை மூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி எனும் பேருண்மையை கடல் கடந்து அனுபவித்த ஒரு சீனரை பற்றிய அனுபவ ஸ்கேனிங் ரிப்போர்ட் இதோ...

வெள்ளி, 1 நவம்பர், 2019

சத்ய சாயி தந்த குழந்தை வரம்!


திரு. பாலகிருஷ்ணன் தற்போது சென்னை வாஸி. முன்பு மதுரையில் வசித்தவர், மதுரை சமிதியில் அங்கம் வகித்து பல சேவைப் பணிகளில் ஈடுபட்டவர். அவர் தனது தெய்வீக அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

"எனக்கு திருமணம் 1985ல் நடைபெற்றது. ஆயின் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இந்நிலையில், பகவானின் பக்தனான நான் 1990ம் வருடம் மதுரையில் எனது சமிதி உறுப்பினர்களுடன் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற பகவானின் 65வது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொள்ள சென்றேன். அவ்வமயம் உலக சாயி நிறுவன மாநாடும் நடந்தது.