தலைப்பு

செவ்வாய், 29 ஜூன், 2021

போர்க்களத்தின் எல்லையில் பெரும் நெருப்பை அணைத்து தன் பள்ளித் தோழர்களைக் காப்பாற்றிய பால சாயி!


சுவாமி அவதரிப்பதற்கு முன்பே சாட்சாத் பரிபூரண இறைவனே.. அவதார பிரகடன வைபவத்திற்கு முன்பும்.. 1918 முதல் 1926 வரையிலான இடைப்பட்ட காலத்திலும் அவர் பரிபூரண பரம்பொருளே.. உருவம் / அருவம் என்பது சுவாமிக்கொரு பொருட்டல்ல... எங்கிருப்பினும்.. எத்தகைய தீமையாயினும் தன்னை நம்புபவரை காப்பாற்றுவது கடவுள் சத்யசாயியின் இறை சுபாவமே என்பதற்கான மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...

திங்கள், 28 ஜூன், 2021

பிறவி ஊமையை பாடவே வைத்த பகவான் பாபாவின் பேரற்புதம்!

மனித ஆற்றலுக்கு எல்லாம் ஆற்றல் தரும் பேராற்றல் இறைவனான ஸ்ரீ சத்ய சாயி எவ்வாறு ஒரு பிறவி ஊமையைப் பாடவே வைத்தார் எனும் பேரன்பும் தாங்கியும் உணர்வுப் பூர்வமான சுவாமியின் கருணை நிறைந்த பதிவு இதோ...

ஞாயிறு, 27 ஜூன், 2021

ஒரு ஏழை கிழவியின் ஆசையை நிறைவேற்றிய தயாள சாயி! 

சுவாமி இறைவன். எப்படி? எப்படி எனில் இறைவனுக்கு ஏழை பணக்காரன்.. நல்லவன் கெட்டவன் என்ற எந்த பாகுபாடும் இல்லை. தன்னை தூற்றியவரையும் வாழ வைப்பவன். அனுபவம் தந்து மனம் மாறச் செய்பவன். அப்பேர்ப்பட்ட இறைவனே ஸ்ரீ சத்ய சாயி எனும் சத்தியம் விளக்கும் கருணை ததும்பிடும் பதிவு இதோ..

பகவான் பாபா பார்வைக்காக ஏங்கிய நாயின் பக்தி கண்டு முக்தி அளித்த பாபா!

உயிரினங்கள், உயிறற்றவை(சேதன, அசேதன) அனைத்தும் பகவானின் படைப்புகள் தானே. உயர்வு தாழ்வு நாம் பாராட்டலாம்.பகவான் அப்படி அல்ல. படி அளக்கும் பரந்தாமன் பாபா, பாகுபாடின்றி, தமது கருணையை  அனைவர் மீதும் சமமாக பொழிந்து பாதுகாக்கிறார் அல்லவா... 

சனி, 26 ஜூன், 2021

தன் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் கருணை நிரப்பிடும் தெய்வ சாயி!


ஒவ்வொரு ஸ்வரமும் நாதத்தை குறிப்பது போல இறைவன் சத்ய சாயியின் ஒவ்வொரு அசைவும் கருணையையே குறிப்பிடுகிறது என்பதை உள்ளூற உணர்த்தும் காருண்ய பதிவு இதோ.. 

வியாழன், 24 ஜூன், 2021

பரபரக்கும் ரயிலில் கொள்ளையடித்த திருடர்களிடம் இருந்து ஒரு நொடியில் காப்பாற்றிய சுவாமி! 

சுவாமி ஸ்ரீ சத்ய சாயி எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். ஆபத் பாந்தவர். எந்தவிதமான கொடிய ஆபத்திலிருந்தும் தன் பக்தர்களின் பதபதைக்கும் அழைப்பை ஏற்று அந்த நொடியே காப்பாற்றும் சுவாமி எவ்வாறு ஒரு திகில் கலந்த சூழ்நிலையில் ஒரு பக்தையின் உயிரையும்... உடமையையும் காப்பாற்றினார் என்பதை விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

செவ்வாய், 22 ஜூன், 2021

350 பேருக்கு சமைத்த கல்யாண விருந்து சுவாமியால் 2100 பேருக்கு பரிமாறப்பட்டது!

சுவாமி ஸ்ரீ சத்ய சாயி அன்னபூரணிக்கே படி அளப்பவர். அவரால் இயலாத செயல் ஏதும் இல்லை. சுவாமி ஒரு வார்த்தை சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கடைபிடிக்க வேண்டும் என்ற போதனையோடு பரிமாறப் பரிமாற வளர்ந்து கொண்டே வந்த கல்யாண விருந்தும் இங்கே ஞான சுவையோடு பரிமாறப்பட்டிருக்கிறது.... 

காசாளரின் வடிவில் வந்து சேல்ஸ் மேனின் வேலையைக் காப்பாற்றிய கடவுள் சாயி!

இன்ன வடிவம் தான் எடுப்பது என்பது சுவாமியிடம் இல்லை. எந்த வடிவமும் சுவாமியால் எடுக்க முடியும். தனக்கு பிடித்த ரூபத்தில் வரவேண்டும் என பக்தர்கள் வேண்டுவதை விட சுவாமி எந்த ரூபத்தில் அருள் புரிய வருகிறாரோ அதை பக்தியோடு ஏற்க வேண்டும் . காரணம் அதில் மீட்பு இருக்கிறது.. காவல் இருக்கிறது... கருணை இருக்கிறது என்பதை உணர்த்தும் அற்புதப் பதிவு இதோ.... 

திங்கள், 21 ஜூன், 2021

EP 8: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! | நந்தீஸ்வரர் நாடி & கோரக்கர் நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... நந்தீஸ்வரர் மற்றும் கோரக்கர் நாடியை தான் வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்.... 

ஜாதக கட்டங்களையே பக்தர்களுக்கு சாதகமாக்கிடும் சுவாமி!

மனிதன் வருங்காலத்தை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறான். அதற்கு வானியல் விஞ்ஞான அணுகுமுறையால் ஜோதிட சாஸ்திரம் உதவுகிறது. அறிந்து கொள்கிறானே தவிர மனிதனால் அதை மாற்ற முடிவதில்லை. சுவாமியால் மட்டுமே ஜாதகக் கட்டங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடிகிறது என்ற சத்தியம் விளக்கும் சுவாரஸ்யப் பதிவு.... 

ஞாயிறு, 20 ஜூன், 2021

ஒரே ஒரு நூறு ரூபாயை பல கோடிகளுக்கு சமமாக்கிய ஸ்ரீ சத்யசாயி இறைவன்!

கடிதத்தை வாங்கிக் கொண்டு அதைப் பிரித்துப் பார்க்காமலேயே அதில் உள்ளவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்த சுவாமி அந்தச் சிறுவன் இணைத்திருந்த சின்னஞ்சிறு தொகையை ஏன் எதனால் சிகரமாக்கினார்.. அப்படி என்ன அந்த பையனின் கடிதத்தை எழுதப்பட்டிருந்தது என்பதை விளக்கும் அருமையான சுவாமி அனுபவப் பதிவு இதோ...

சனி, 19 ஜூன், 2021

மீண்டும் பிறந்து வந்த கடவுளின் நண்பர்கள்!

The Story of Jack & Jill - Swami's Beloved Pets 

சாக்ய (நட்பு ) பக்தி, நவவித (ஒன்பது)பக்திகளில் ஒன்று. நாம் சாயிமாத பிதா தீனபந்து சகா என்று கூறுவதில்லையா? பகவான் பாபாவின் பள்ளிப் பருவத்தில் அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் அன்பான நட்புடன் பழகி வந்தனர். அதில் சிலர் அவரை உயிரைவிட மேலாக நேசித்தனர். அர்ஜுனன் கிருஷ்ணரிடம் வைத்த சக்ய பக்திக்கு நிகரான பக்தியை பாபாவிடம் வைத்த இரு மாணவர்களின் உன்னதக் கதை. இது உள்ளம் உருக்கும் நிகழ்வு. பக்தி வெள்ளம் பெருக்கும் பகிர்வு... 

வெள்ளி, 18 ஜூன், 2021

சிதம்பர கிருஷ்ணனின் ஆயுள் நீட்டிக்கப்பட்டது!


ஸ்ரீ சிதம்பர கிருஷ்ணன் பெரும் பாக்யசாலியான இவர்,  அசாதாரண தெய்வீக  மனிதர்... திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பெரும் தனவானாக திகழ்ந்தவர்,  எங்கள்  சுவாமி, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களோடு நெருங்கிய ஆத்மானுபவங்களை பெற்றவர், 1964 முதல் 1973 வரை ஒவ்வொரு ஆண்டும் வெளியூர் பயணங்களின் போது ஸ்வாமி  நெல்லை வருகை தரும் சமயத்தில் குறைந்தபட்சம்  3 நாட்கள் சுவாமி இவரது வீட்டை தங்குவதற்குப் பயன்படுத்துவார். மேலும்,  சுவாமி  தமிழகத்திற்குச் வந்த  அந்த நாட்களில் பெரும்பாலும் இவரது கார் மட்டுமே பயன்படுத்தப்பட்டுருக்கிறது.... இவரே ஓட்டுனராக செயல்பட்டு பகவானின் சம்பாஷனம், ஸ்பரிசம், நயன தீக்ஷைகளை பெற்று முக்தி பெற்றவர்... 

வியாழன், 17 ஜூன், 2021

நாம் புல்லாங்குழலாக இருந்தால் - நம் சாயி புருஷோத்தமனுக்கு மிகவும் பிடிக்கும்!


காற்றினிலே வரும் கீதம், அது கண்ணனின் மோகன கீதம். கோவிந்தன் குழல்கொண்டு ஊதியபோது ஆவினங்கள்மேய்ச்சல் மறந்து நிற்க, அவை மடியில் பாலுண்ணும் கன்றுகள் பரந்தாமன் குழலின் இனிய கானம் கேட்டு மயங்கி நின்றனவாம். கண்ணன் அதரத்தின் வழியாக இன்னிசை பொழிய, புல்லாங்குழல் என்ன தவம் செய்ததோ? ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அந்த நெருக்கத்தை,பெருமையை புல்லாங்குழலுக்கு அளித்தார்?இதற்கு பாபா கூறும் அற்புத விளக்கம் , நம் வாழ்வில் ஒளிகூட்டி வழி காட்டும் கலங்கரை விளக்கம்.

பாபுஜி குப்தாவின் கர்ம வினையையே மாற்றிய சாயி விந்தை!


கர்மா என்பதே மனிதனுக்கான ஜென்மாந்தர விதி... அதை மாற்றி அமைக்க அதை உணர்ந்த மகான்களால் கூட முடியாத அம்சம். அதை இறைவனால் மட்டுமே மாற்றி அமைக்க முடியும்.. இதோ சத்ய சாயி இறைவன் அதைப் புரிந்து பக்திக்கு தந்த பரிசுகள் இதோ...

புதன், 16 ஜூன், 2021

EP 7: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - தேவரிஷி நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... தேவரிஷி நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

செவ்வாய், 15 ஜூன், 2021

101-150 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

லாரி டயர்களை தன் உள்ளங்கையால் தாங்கி சிறுவனைக் காப்பாற்றிய சத்திய சாயி!

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் கருணை என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாதது‌. அதை விவரிக்க ஆரம்பிக்கும் இதயம் ஈரப்பஞ்சாக மாறி கண்களை நனைக்கும் அளவிற்கு பரவசப்படும். அப்படி ஓர் பெருங்கருணையும்... குணமாக்கலும் பரவசப்பதிவாக இதோ..

திங்கள், 14 ஜூன், 2021

முதன் முதல் மாருதி 800 காரில் ஏறி ஸ்ரீ சத்யசாயி ராமரே பவனி வந்தார்!

மாருதி நிறுவனம் கொடுத்து வைத்திருக்கிறது. அதன் முதல் தயாரிப்பு சுவாமியின் ஸ்பரிசம் பட்ட பின்னரே ஊர் உலகில் பவனி வந்தது என்பதன் சுவாரஸ்ய விளக்கப் பதிவு இதோ...

ஞாயிறு, 13 ஜூன், 2021

கார்முகில் கேசவ சாயி கார் ஓட்டிய சாகசங்கள்!

தேர் ஓட்டிய பகவான்.. கார் ஓட்டிய விந்தை... 

பாரதப் போரில் தேரை ஓட்டியதும்.. கலியுகத்தில் காரை ஓட்டுவதும்..மனித எண்ண ஓட்டத்தை கவனிப்பவரும் சாட்சாத் இறைவன் ஸ்ரீ சத்யசாயி கிருஷ்ணரே! அவரே இந்த மனித வாழ்வில் ஒரே ஓட்டுநர்.. ஒரே நடத்துனர்.. நாம் வெறும் பயணிகள் மட்டுமே என்பதை உணர்த்தும் பரவசப் பதிவு இதோ...

சனி, 12 ஜூன், 2021

கொரோனா எனும் அசுரப் பந்தை சிக்ஸர் அடித்தபடி சேவையாற்றிடும் சாயி பக்தர்!


கொரோனா தொற்று இந்தியாவில் பரவுவதற்கு முன்பே இங்கு சுவாமி சேவையை தொடங்கிய ஒரு கிரியா ஊக்கி இந்த சுவாமி பக்தர்.. இவர் அனுபவித்த கொரோனா காலத்து சேவை நிகழ்வின் ஆச்சர்ய அனுபவங்களை வாசிப்போம் இதோ..

பிரசாந்தி நிலையம் நமது அன்னை இல்லம் (பிரசாந்தி சேவைக்கு ஒரு புது விளக்கம்)


நம் அகங்காரத்தை அகற்றி, கர்ம வினைகளை களைய , பகவான் நமக்கு அளிக்கும் சந்தர்ப்பமே பர்த்தி சேவா. சேவை செய்யும் நாட்களில் பாபா தரிசனமும் பெறும் கூடுதல் பாக்கியமும் நமக்கு கிட்டுவதால், நமது வாழ்க்கை என்னும் பாஸ்புத்தகத்தில், புண்ணியம் என்கிற வரவு , எவ்வித முயற்சியுமின்றி வைக்கப்படுகிறது. பிரசாந்தி சேவா குறித்த உண்மையான விளக்கம், அதை மேற்கொள்ளும்போது இருக்கவேண்டிய மனோபாவம், பற்றி ஒரு சேவாதள தொண்டரின் அபூர்வ விளக்கத்தை இனி காண்போம்.... 

வெள்ளி, 11 ஜூன், 2021

EP 6: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - நாரத மகரிஷி நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... நாரத மகரிஷி நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

வியாழன், 10 ஜூன், 2021

இலங்கை கிறிஸ்துவ இளைஞனுக்கு காளியாக தரிசனம் அளித்து நேர்காணல் அறையை வனமாக்கிய சத்யசாயீஷ்வரி!


சுவாமி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். தன்னை தேவ வடிவமாய் சுருக்கவும் முடியும் .. அவரால் பிரபஞ்ச வியாபகமாய்ப் பெருக்கவும் முடியும்! அவ்வாறு காளிதேவியாக இலங்கையில் வாழும் ஒரு கிறிஸ்துவ காளி பக்தருக்கு சுவாமி அவரின் தவத்திற்காக வரமளித்து ஆன்மீக தெளிவு தந்திருப்பதன் பேராச்சர்யப் பதிவு இதோ...

பெற்றோர்கள் நம்மைப் பாதுகாத்து வழிநடத்தும் தெய்வங்கள்!


ஒருமுறை சிவபெருமானும், தாயார் பார்வதியும் வான்வெளியில் உலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூமியில் ஒரு மனிதன் தான் அமர்ந்திருந்த மரக்கிளையினையே வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அக்கிளையானது முற்றிலுமாக வெட்டப்பட்டு எந்நேரமும் விழுந்துவிடும் ஆபத்தான நிலையில் இருந்தது.

புதன், 9 ஜூன், 2021

மேரி மாதாவை வழிபட்டவருக்கு அனுகிரகம் புரிந்த சாயி மாதா!


"எனக்கென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்தப் பெயரால் அழைத்தாலும் நான் உடனேபதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்."
 -ஸ்ரீ சத்ய சாயி பாபா 

செவ்வாய், 8 ஜூன், 2021

நமது சிறுசெயலும் யாரையும் பாதிக்கக் கூடாது!


எண்ணற்ற கோடி எறும்பினும் கீழுள ஜீவன்களை பகவான் படைத்து அளித்து காப்பாற்றுகிறார். ஒதுக்கப்பட்ட உயிர்களையும், ஒடுக்கப்பட்ட தீனர்களையும் , கனிவுடன் நோக்கி அவர்கள் கண்ணீரைத் துடைப்பது பாபாவின் கரங்கள் அல்லவா?.. 

திங்கள், 7 ஜூன், 2021

பழம்பெரும் பக்தை செல்வி. ராணி ஜாவா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!

-பம்பாய் தர்மக்ஷேத்ராவின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் செல்வி.ராணி ஜாவா அவர்களின் உரை... 

செல்வி. ராணி ஜாவா, தமது உடல் குறைபாடுகளை புறக்கணித்து, பகவான் பாபாவின் அருள் நிழலிலே இளைப்பாறி, பெறற்கரிய பேறு பெற்றவர்.  பல துறைகளில் பயின்று பட்டங்கள் பலபெற்றவர். சிறந்த தொழிலதிபராக மிளிர்ந்தவர். கல்லூரி முதல்வராக பதவி வகித்தவர். அதற்கும் மேலாக பகவானின் பரிபூரண பக்தை... 

ஞாயிறு, 6 ஜூன், 2021

EP 5: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - ராஜரிஷி விஸ்வாமித்திர நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... ராஜரிஷி விஸ்வாமித்திர நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

ஷிர்டி சாயியும் நானே.. சத்ய சாயியும் நானே!


சாயியின் தோற்றமே இரண்டாக இருக்கிறது. பேரருள் ஒன்று தான். கண்கள் இரண்டாக இருப்பதனால் காட்சி இரண்டாக இருப்பதில்லையே..
இரு சாயியும் ஒரே சாயி தான்.. என்பதை ஆழமாய்ப் புரிய வைக்கிறார் ஒரு பரவச அனுபவத்தில் இறைவன் சத்ய சாயி இதோ... 

சனி, 5 ஜூன், 2021

ஸ்ரீ சத்ய சாயி ஏன் எந்த செய்தி ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை??


கேள்வி: உங்கள் சத்யசாயி இதுவரை எந்த செய்தி ஊடகத்திற்காவது பேட்டி அளித்திருக்கிறாரா? அதில் ஏன் ஒன்று கூட ஒளிபரப்பப்படவில்லை?

வியாழன், 3 ஜூன், 2021

ஆண்டவன் சாயி அளித்த அட்சய பாத்திரங்கள்!


இறைவன் சத்ய சாயி இந்தக் கலியுகத்தில் எந்தெந்த மகா பக்தர்களுக்கு அட்சய பாத்திரம் அளித்திருக்கிறார் என்பதன் பரவசத் தொகுப்பு இதோ... 

துவாபர யுகத்து அற்புதப் பாத்திரம். அன்னமோ ஏதேனும் ஒரு வகை உணவோ அந்தப் பாத்திரத்தில் இட்டால் அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டே வரும்...

EP 4: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - சுகர் நாடி & புத நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... சுகர் மற்றும் புத நாடியை  வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....

புதன், 2 ஜூன், 2021

எல்லா தெய்வ ரூபங்களிலும் காட்சி அளித்து ஐஸ்கட்டி வைத்தியம் செய்த சாயி!


Air Chief Marshal Nirmal Chandra Suri, PVSM, AVSM, VM, ADC (born 26 July 1933) was the 15th Chief of Air Staff of the Indian Air Force, from 31 July 1991 to 31 July 1993

இந்திய விமானப்படையின் முன்னாள் முதன்மைத் தளபதி திரு.நிர்மல் சந்திர சூரி அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்! 

செவ்வாய், 1 ஜூன், 2021

நெஞ்சம் மறப்பதில்லை படம் போல 'திகில்' தரக்கூடிய சத்ய சாயி அனுபவம்!


இறைவன் சத்ய சாயி காலத்தையும், வெளியையும் கடந்தவர் என்பதற்கான நிறைய அனுபவங்களில் இதுவும் ஒன்று. காலங்களை தனதாக்குபவர்.. கடந்தவர்.. கட்டமைப்பவர்.. பராமரிப்பவர் யாவும் இறைவன் சத்ய சாயியே... ஆதலாலே அவரை 'இறைவன்' என அனுபவத்தினால் அழைக்கிறோம். திகில் தரக்கூடிய முன் ஜென்மம் தொடர்பான ஒரு பெரிய அனுபவம் இதோ...