தலைப்பு

வெள்ளி, 31 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 13 | சித்த சோரன்


சுவாமி நிகழ்த்தும் லீலா அற்புதங்கள் பலவகைப் பட்டவை. அவைகளில் பல, எல்லோரும் பார்க்கும் வண்ணம் நிகழலாம். மற்றும் சில, ஒரு சில பக்தர்களுக்கு மட்டும் அவர் அருள்வதாக இருக்கும். வேறு சில, தனியான ஒருவருக்கு மட்டும் அருளுவதாக அமையும். அதுபோன்று அவர் ஆற்றும் லீலா வினோதங்கள்

வியாழன், 30 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 12 | அலகிலா விளையாட்டுடையான்


அந்நாட்களில், நமது பகவான் சில சமயங்களில் பிரசாந்தி நிலையப் பகுதிகளில் தங்கி இருக்கும் பக்தர்களிடம் நேரிலேயே சென்று திவ்ய தரிசனம் அருள்வதுடன், சில பக்தர்களிடம் சம்பாஷித்தும் அருள்வார். அத்தகைய பாக்கியசாலிகள் அடையும் பெருமிதத்திற்கு அளவே இருக்காது.

செவ்வாய், 28 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 11 | மொட்டுக்குள் ஒரு மோதிரம்!


ஒருமுறை, எனது நண்பர் ஒருவருடன் நான் புட்டபர்த்தி சென்றிருந்தபோது ஓர் அபூர்வ நிகழ்வு நமது சுவாமியின் சங்கல்பத்தால் புட்டபர்த்தியில் நிகழ்ந்தது! அந்த நண்பர்தான், என்னிடம் சுவாமியைப் பற்றியும், அவரது லீலா

ஞாயிறு, 26 மே, 2019

அதே பாபாதான் இவர் - 9

67. ஓம் ஸ்ரீ சாயி ப்ரியாய நம:

ப்ரியன் – விரும்பப்படுபவன்

பாபா எல்லோராலும் விரும்பப்படுபவர். ஒரு தாயும், மகளும் பெங்களூர் வந்திருந்தனர். அங்கிருந்து ஷிர்டிக்குச் சென்று ஷிர்டி பாபாவை தரிசித்து விட்டு பம்பாய்க்குச் செல்வது என திட்டமிட்டு வந்திருந்தனர். வந்த இடத்தில் சத்ய சாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டனர். அவரையும் தரிசித்து விட்டுச்

சனி, 25 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 10 | ஜோதிஸ்வரூபி!


1960களில் நான் அடிக்கடி புட்டபர்த்தி செல்வேன். ஒருமுறை நேர்காணலில், சுவாமி எனது ஒரு காதினைப் பிடித்துத் திருகியவாறே, "ரயில்வேக்காரன் உன் பாஸில் கையெழுத்துப் போடாததால் நீ அடிக்கடி இங்கு வந்து விடுகிறாய் அல்லவா?" என்று அன்புகலந்த கண்டிப்புடன் சொன்னார். ஆம்! அம்மாதிரியான பயணங்கள் நிகழுவதுண்டு! எவ்வாறாயினும் பகவான் அறியாதது என்பது ஏதேனும் உண்டா?

அதே பாபாதான் இவர் - 8

66. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம ப்ரதாய நம:
ப்ரேம – ப்ரேமை, 
ப்ரதாய – கொடுப்பவருக்கு

பெத்த வெங்கம்மராஜுவின் சகோதரி! அந்த அம்மையாரின் மீது பாபாவுக்கு விசேஷமான அன்பு உண்டு. ஏனெனில் அவர் அவ்வளவு சாதுவான ஆத்மா! மிக்க கஷ்டத்திலிருப்பவர். இறைவனைக் காண ஆவல் கொண்டுள்ளவர். அவளது விருப்பத்திற்கு இணங்க ஒரு நாள் பாபா அவளிடம் “இன்று சாயந்திரம் உனக்கு என்னுடைய முந்தைய மேனியைக் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.

வெள்ளி, 24 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 9 | அமிர்தவர்ஷினி


ஒரு தடவை நான் புட்டபர்த்தி சென்றிருந்த போது, அன்று யுகாதிப் பண்டிகை. முன்பெல்லாம் விசேஷ தினங்களில் சுவாமி அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு, அவர்களது பக்தி வழியில்  உற்சாகமூட்டும் ஒரு தெய்வீக லீலையைப் புரிந்து பரவசப்படுத்துவார். அவ்வித தினங்களில், சுவாமி தெய்வீகச் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவு மூலம், பக்தர்களுக்கு அந்த விசேஷ தினத்தின்  சிறப்பை விளக்கி, நமது பாரத பூமியின் பாரம்பரிய புனிதத் தன்மையையும் புகழ்ந்துரைத்து, மனிதப் பண்புகள் எப்படிப் பேணிக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்.

ஓ சாயி! ப்ரேமையே உருக்கொண்டவரே!

65. ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம மூர்த்தயே நம:
ப்ரேம – ப்ரேமை, 
மூர்த்த – மூர்த்திக்கு

பால சாயி பெங்களூர் நகரில் ஒரு மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.அம்மாளிகைக்கு எதிர்ப்புறச் சாலை ஓரத்தில் ஹரிஜனர் ஒருவர் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தார். எண்ணற்ற மக்கள் அம்மாளிகைக்கு ஊர்திகளில் வந்துபோய்க் கொண்டிருந்தனர்.அவர்கள் மலர்களையும் கனிகளையும் எடுத்துக்கொண்டு போவதை அவர் கண்டார். உள்ளிருந்து வருபவர்கள் முகங்களில் மகிழ்ச்சி நிரம்பி இருப்பதைக் கண்டார்.

வியாழன், 23 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 8 | கருணாமூர்த்தி


1968ஆம் ஆண்டு பகவான் பாபா முதலாவது அகில உலக சாயி மாநாட்டை மும்பையில் (பவன்ஸ் கேம்பஸில்) நடத்தினார். அதற்கான சுற்றறிக்கைகள் எல்லா சமிதிகளையும் சென்றடைந்தன. எங்கள் திருச்சி சமிதிக்கும் ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும் என்றும், அதில் கலந்துகொள்ள ஒவ்வொரு சமிதியில் இருந்தும், ஒரு தலைவர், ஒரு செயலாளர் ஆக  இருவர் மட்டும் வரலாம் என்றும்

நீல் ஆம்ஸ்ட்ராங்கும் பாபாவும்!


ஓர் அரிய அற்புதம். டாக்டர் ஶ்ரீ காந்த் சோலா அவர்கள் நியூ யார்க்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம். ஒரு சிறு பகுதி மட்டுமே. 


குரல்: சாயி கிருஷ்ணன் மலேசியா.

செவ்வாய், 21 மே, 2019

உனது நேரம் இன்னும் வரவில்லை!


ரயில், பஸ் அல்லது விமானம் மூலமாக புட்டபர்த்திக்கு வந்து விட்டதாக நாம் எப்போதும் எண்ணுகிறோம்! நமது இந்த பேரதிஷ்டத்தை உணர வைக்கும் ஓர் சம்பவத்தை இங்கு காணலாம்.

ஞாயிறு, 19 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 7 | உங்கள் பாபா - நமது பாபா


நான் இதற்கு முந்தைய பக்கங்களில் விவரித்தவாறு, திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சத்யசாயி பஜனா மண்டலி நிகழ்வுகள் நல்ல வகையிலே நடைபெற்று வந்தன. பகவானது 42வது பிறந்த தின விழா ஏற்பாடுகள் நிமித்தமாக, விழா தலைமை பொறுப்பேற்க, ஒரு மாவட்ட அரசு அதிகாரி என்ற முறையில், திருச்சி டிஎஸ்பி திரு. உன்னிகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்கச் சென்ற சென்றேன். முன்கூட்டியே நான் வந்திருப்பதாக அவருக்குச் சொல்லி அனுப்பி, அவரும் என்னை உள்ளே வர அனுமதித்ததால், நான் அவரது அறை நுழைவாயில் அருகே சென்றேன்.

சனி, 18 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 6 | வைத்தியநாதன்


திருச்சியில் 1964 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ஸ்ரீ சத்திய சாயி பஜனா மண்டலியின் சாயி சேவா பணிகள் மிகவும் பணிவுடனும் ,தெய்வீக சிந்தனையுடனும், ஆற்றப்பட்டன. அதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒரு ஒருவருடன் மற்றவர் ஒத்துப்போக கூடியவர்களாகவும், எல்லா முக்கிய

வெள்ளி, 17 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 5 | எல்லாம் வல்ல தன்மை


நான் விவரிக்க போகும் சுவாமியின் லீலா வினோத சம்பவம் 1964ல் நடந்தது என்று எனக்கு ஞாபகம்.ஒரு நாள் மாலை பிரசாந்தி நிலையத்தில் நேர்காணல் மற்றும் பஜனை வழிபாடு எல்லாம் முடிந்ததும், இரவு சுமார் 8.30 மணிக்கு திரு. கஸ்தூரி அவர்கள் ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது அன்றிரவு சுமார் 10.30மணிக்கு தாங்கொணா மழை கொட்டும் என்றும், ஆண்கள் எங்காவது பத்திரமான இடங்களுக்கு சென்று படுத்து கொள்ளுமாறும், பெண்கள் மட்டும் மந்திரில் தங்கி உறங்கலாம் என்றும் சொல்லி, இது" சுவாமி அறிவிக்க சொன்னது" என்றார்.

ஊமைச் சிறுவனை பேச வைத்த சாயி பகவான்!


58. ஓம் ஸ்ரீ ஸாயி அபரூப ஸக்தினே நம:

அபரூப – கண்ணுக்கு தெரியாத, ஸக்தினே – ஆற்றலை உடையவருக்கு

”யாருடைய க்ருபையானது ஊமையைப் பேசவைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டவைக்கிறதோ, அந்த மாதவனை வணங்குகிறேன்.”
- ஸ்ரீமத் பகவத்கீதை

வியாழன், 16 மே, 2019

லீலா மோஹன சாயி 1| Chapter 4 | யக்ஞேஸ்வரன்


அது 1963 என்று எண்ணுகிறேன். ஒரு தடவை ஸ்ரீ பாபா நேர்காணலின் போது என்னிடம், "உனது தாயாரும், அவரது தாயாரும் ரொம்பவும் ஆச்சார சீலர்கள், தெய்வ பக்தி மிக்கவர்கள், சுவாமிக்கு அவர்களிடம் அன்பு உண்டு, நீ உன் ஊருக்கு சென்றதும், அவர்களிடம் விபூதி தயாரிக்க செய்து, சுவாமிக்கு எவ்வளவு கொண்டு வர முடியுமோ, அவ்வளவு எடுத்து வா" என்று சொன்னார். சுவாமி அவ்வாறு சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

புதன், 15 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 3 | எங்கும் நிறைந்தாளல்


பகவானது அருளாலும், என்னுடைய மற்றும் எனது நண்பர்களது விடாமுயற்சியாலும் திருச்சி தில்லைநகரில் ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலி 1964ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பெற்றது. வியாழக்கிழமை தோறும் மாலை 6. 45 தொடங்கி 8 மணிவரை நாமசங்கீர்த்தனம் நடத்தப்பட்டதுடன் முக்கிய தினங்களான விநாயக சதுர்த்தி,

செவ்வாய், 14 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 2 | எல்லாம் அறிந்தருளல்


சுவாமி 1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ,17, 18, தேதிகளில் திருச்சிக்கு விஜயம் செய்தது திருச்சி பக்தர்கள் ஆற்றிய தவப்பலன். அந்தத் தவம்தான் திருச்சி பக்தர்கள் செய்த பலதரப்பட்ட சாயி சேவா பணிகள்.

திங்கள், 13 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 1 | உயிர் காத்தளித்தல் (பாகம் 3)


அந்த மாட்டு வண்டியில் ஏறி எனது வீடு நோக்கி போகும்போது அந்த வண்டிக்காரன் எனது தமையனின் உடல்நிலை மோசமாகி இறந்து விட்டதாகவே எல்லோரும் கருதியதாகச் சொன்னான். பொறுப்பில்லாமல் யாரோ ஒரு சந்நியாசியை காண ஆந்திரா சென்று விட்டதாக என்னைப்பற்றி ஊரில் பலரும் கோபத்துடன் பேசிக் கொள்வதாகவும் சொன்னான்.

உங்கள் இதயமே பிரசாந்தி நிலையம்!


நான் உங்களுடைய மனத்தில் உள்ள,  ஆசாபாசங்களை அறிவேன். ஆனால் நீங்கள் என்னுடைய இதயத்தை அறிந்து கொள்ள இயலாது.

உங்களுக்கு துன்பம் ஏற்படும்போது நான் வருந்துகிறேன். நீங்கள் மகிழ்ச்சி

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!


1978 ஆம் ஆண்டு சரோஜா முரளீதரன் தம்பதியர் திருநெல்வேலியில் இருந்தனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டில் பஜனை நடுத்துவார், சரோஜா. பஜனை முடிந்த பிறகு சுவாமி வந்து சென்றதன் அடையாளமாக, ஆங்காங்கு, ஐயனின் பாதங்கள் பதிந்த சுவடுகள் தெரியும்.

சத்ய வாக்கு!


ஞாயிறு, 12 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 1| உயிர் காத்தளித்தல் (பாகம் 2)


அன்று காலை எனக்கு பகவானின் நேர்காணல் கிடைத்தது. நேர்காணல் அறைக்குள் சென்றேன். ஏற்கனவே நான் என்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஒருஆப்பிள் பழத்தை ஒரு கையில் மறைத்து வைத்துக் கொண்டு சிறிது தயக்கத்துடன் காணப்பட்டதைக் கண்ட சுவாமி, “சுவாமிக்குக் கொடுக்க ஆப்பிள் கொணர்ந்து இருக்கிறாய். அதை நறுக்க உன் சட்டைப் பையில் ஒரு கத்தியும் வைத்திருக்கிறாய்... உம் நறுக்கிக் கொடு, சுவாமி சாப்பிடுகிறேன்” என்றார்.

சனி, 11 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 1| உயிர் காத்தளித்தல் (பாகம் 1)


எனக்கு 1958ல் திருச்சிராப்பள்ளியில் ரயில்வே பணி கிடைத்தது. தங்கும் வசதிக்கான   முயற்சியில் நான் ஈடுபட்ட போது இடவசதி ஒன்று கிடைத்து அதில் மூவர் தங்குவதாக அமைந்தது. ஒருவர் ரயில்வே பணியாளர், மற்றவர் வங்கிப் பணியாளர் நாங்கள் மூவருமே இறை அன்பு உடையவர்கள்.

வியாழன், 9 மே, 2019

கரு காக்கும் நாயகி!


மருந்தீச சாயியின் காப்பு காப்பியத்தில் ஒரு கர்ப்பிணியின் கதை பார்ப்போம்.

கௌசல்யா ராணி ராகவனுக்கு ஒரு சமயம் ரத்தப்போக்கு மிக அதிகமாகவும், விடாமலும் ஏற்பட்டது. பரிட்சை செய்ததில், ரத்தத்தை உறைய வைக்கும் பிளேட்லெட் அணுக்கள், இருக்க வேண்டிய அளவில் பத்திலொரு பங்குகூட இல்லை எனத் தெரிந்தது. "உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யணும். ஸ்ப்ளீன எடுத்து ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று கவனமாய் இருங்கள்- அதாவது நீங்கள் கருத்தரிக்கக் கூடாது" என்று டாக்டர் கூறினார்.

ஒரு யானையின் மேல் கொசு உட்கார்ந்தால் எப்படியோ அப்படித்தான் நான் செய்யும் அற்புதங்களும்.



ஒரு யானையின் மேல் கொசு உட்கார்ந்தால் எப்படியோ அப்படித்தான் நான் செய்யும் அற்புதங்களும். இவை என் மொத்தச் செயல்பாட்டில் அற்பமான இடமே பெறுகின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் மக்களின் அறியாமையை எண்ணி நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். எனது மிகப் புனிதமான குணம் அன்பே. அந்த பிரேமை அளவிட முடியாதது.


- ஸ்ரீ சத்ய சாயி பாபா

ஓ சாயி! எல்லோருடைய இதயத்துள்ளும் வாஸம் செய்பவனே!

50. ஓம் ஸ்ரீ சாயி ஸர்வஹ்ருத் வாஸினே நம
ஸர்வ – எல்லா, 
ஹ்ருத் – ஹ்ருதயத்தில், 
வாஸினே – வஸிப்பவருக்கு

கிழக்கு கோதாவரி ஜில்லாவைச் சேர்ந்த ஒரு பண்டிதர் பணமுடையால் பெரிதும் வருந்தினார். உதவி கேட்டு பாபாவுக்கு எழுதலாம் என்று மனைவி கூறியபோது அவர் அதற்கு அனுமதி தரவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு, பிரஸாந்தி நிலையத்திலிருந்த பாபாவிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது.

செவ்வாய், 7 மே, 2019

“ஒன்றுமில்லை” என்றார் சுவாமி, நன்றாகிவிட்டது!


டாக்டர் வசுந்தரா கூறுகிறார்:

தட்டம்மை (மீசில்ஸ்) உடன் நிமோனியாவும் தாக்கவே, நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கியது ஒரு குழந்தை. இடைவிடாத பிரார்த்தனைக்கு சுவாமியின் ஒரே  பதில், “கவலைப்படாதே!”

சனி, 4 மே, 2019

அதே பாபாதான் இவர் - 7: டாக்டர் R.T. காகடேவின் அனுபவம்!


டாக்டர் R.T. காகடே ஷிர்டி சாயிபாபாவின் தீவிர பக்தர். மஹாராஷ்டிர மாநிலத்தில் சதாராவில் பிறந்த இவர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ராணுவத்தில் Emergency Commissioned Officerஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வெள்ளி, 3 மே, 2019

💣 லண்டனில் ஹிட்லரின் குண்டு மழையிலிருந்து அன்பரைக் காப்பாற்றிய சாயிநாதன்


ஹிட்லர் போட்ட குண்டு மழையால் நடுங்கிப் போய் இருந்த லண்டன் மாநகரில்,  ஓர் அன்பரை சுவாமி எவ்வாறு காப்பாற்றினார் என்பதைப் பார்ப்போம்.

"ஏர் ரெய்டு வார்டன் (Air Raid Warden)  ஞாபகம் இருக்கா?"  - இப்படி சுவாமி கேட்டார், மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் முன் வரிசையில் இடம் பெற்றிருந்த ஒரு பிரமுகரை முதன்முறை கண்டபோது...

புதன், 1 மே, 2019

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சாயி அனுபவங்கள்!

கிரிக்கெட் தெரிந்த ஒவ்வொருவரும் சுனில் கவாஸ்கரை தெரியாமல் இருந்திருக்க மாட்டார்கள்.  ஏனெனில் அவர் இந்திய அணிக்காக  செய்த சாதனைகள் அப்படி.  அப்படிப்பட்ட சுனில் கவாஸ்கரின் வாழ்க்கையில் சுவாமி  எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் வாழ்வில் நடந்த ஒரு அற்புதம் உங்களுக்காக..

சுனில் கவாஸ்கர், பிரபல கிரிகெட் வீரர், பகவானை தரிசிப்பதற்காக 1982-ல் ஒருமுறை புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பகவான் அவருக்கு அன்று மாலையே இண்டர்வ்யூ வழங்கி ஆசிர்வதிர்த்தார்.