இது சகஜமே! நற்சேர்க்கையால் விளையும் பலன் இதுதான்! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்!
ஸ்ரீவிநாயகருக்கு மூஞ்சூறு வாகனமாக அமைந்ததால் அதுவும் ஒரு வழிபாட்டுப் பொருளாக மாறிவிட்டது!
எருது சிவனின் வாகனமாக இருப்பதால் அதையும் மக்கள் ஆராதிக்கிறார்கள்!
கடவுள்களின் வாகனங்கள் அனைத்துமே வழிபடப்படுகின்றன...!
ஒருமுறை மகாவிஷ்ணு விடுத்த செய்தியை தெரிவிக்க கருடன் விரைந்து பறந்து சிவபெருமானிடம் சொல்ல வருகிற போது சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு கருடனைப் பார்த்து சீறியது.. அதற்கு கருடன்...
"நீ மட்டும் நீலகண்டனின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்காமல் வெளியே இருந்தாயென்றால் உன்னை சரியாக தண்டித்திருப்பேன்!" என்றது!
எனவே... எதற்குமே! தெய்வ சந்நிதானத்தில் இருக்கும் வரை தான் கௌரவமெல்லாம்...! அதை விடுத்து வெளியே வந்தால் கிடைப்பதெல்லாம் இன்னல்கள், அவமானங்கள், கெட்ட பெயர் இவையே!
நீங்கள் ஈக்களைப் போல் அனைத்திலும் அமரக்கூடாது!
தேன் வண்டுகள் போல் நறுமலர்களை அடைந்து , தேனை அருந்துதல் வேண்டும்!
பாருங்கள்... ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் , சாதாரண டாக்ஸியை ஓட்ட விரும்புவாரா? இல்லவே இல்லை!
அதே போல... இறைவனின் நாமகான அமிர்தத்தைப் பருகுகின்றவர் மற்றவரின் அரவணைப்பையோ செல்வாக்கையோ எதிர்பார்க்கவே மாட்டார்கள்!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 236)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக