தலைப்பு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

மாதாஜி  கிருஷ்ணாபாய் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

மகான் யோகி ராம்சுரத்குமாருக்கு நாம தீட்சை குருவாகவும் , தனது ஸ்ரீராம பக்தியால் மகானாகவும் உயர்ந்த காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராம்தாஸ் அவர்களுக்கு ஒரு திருமகளாக திகழ்ந்து குருசேவை புரிந்த அவரது சிஷ்யை ஸ்ரீ மாதாஜி கிருஷ்ணா பாய் பாபாவை பற்றி உரைத்தவை என்ன? சுவாரஸ்யமாக இதோ...

பப்பா ஸ்ரீ ராம்தாஸ் பெரிய மகான்.. ஸ்ரீராம வடிவை தரிசனம் செய்தவர்... ராம் தரிசனத்திற்காக தன்னையே அர்ப்பணித்தவர்... ஜபதவங்கள் புரிந்தும் கிட்டாத ஸ்ரீராம தரிசனம் ஒருமுறை தியானத்தில் நீ சென்று அருகே உள்ள தொழுநோயாளி ஒருவனுக்கு சேவை செய் என்று ராமர் பேசிய சொல்லிலிருந்து அவர் செய்த சேவையால் அவர் தவம் செய்த குகையில் ஸ்ரீ ராம தரிசனம் கிடைக்கிறது.. அவரை பப்பா (தந்தையே) என அவரின் சீடர்கள் அழைப்பர்... பகவான் யோகிராம்சுரத்குமாரின் குரு இவர்...! இவர் ராமநாம தீட்சை அளித்த பிறகே யோகிராமுக்கு ஆன்ம விழிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது... அவரின் மந்திர தீட்சை மந்திரம் "ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்"


ஒரு மாது ஆன்மீக தாகம் ஏற்பட்டு பப்பாவை தரிசிக்கிறார்... பிறகு ஆசிரமத்திலேயே சேவை புரிகிறார்.. பப்பாவின் மகளைப் போல் குருதேவர் ராமதாசருக்கு சேவை புரிகிறார்... தியானம் , ராம மந்திரம் என தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார் அந்த மாது... அந்த மாதுவே மாதாஜி கிருஷ்ணா பாயாக மலர்கிறார்! பெண்களுக்கு ஆன்மீகம் சுலபம் ஆனால் அவர்களின் உலகாயத கற்பனைகளே அவர்களுக்கான முதல் எதிரி.. அதை வென்றெடுத்து வெகு சிலரே பெண்மகானாக உயர்ந்திருக்கிறார்கள்...! அந்த வரிசையில் மாதாஜியும் ஒருவர்!


ஒருமுறை குருதேவர் பப்பா அவர்கள் ஆசிரமத்தில் இல்லாத போது...மைசூர் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியிலிருந்து பக்தர்கள் ஆசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்... ஆனந்தாஷ்ரம் என்பதே பப்பாவின் ஆசிரமப் பெயர்! அப்போது ராமஜப வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்தது.. ஜபம் என்பது ஆசிரமத்தின் உயிர்நாடி... ஆஞ்சநேய சுவாமியையே இழுத்து ஆசிரமத்திற்கு கட்டிப்போட வைக்கும் அளவிற்கு அங்கே ஜபவேள்வி தினசரி நிகழும்! அப்போது அங்கே வந்த சமிதி பெண்மணி ஏதாவது ஆன்மீக ஞானம் எங்களுக்கு அளியுங்கள் என்கிறார்... அதற்கு மாதாஜியோ "நீங்கள் கடவுள் கிருஷ்ணரை முதல் தரிசனத்திலேயே கட்டியாக பிடித்துக் கொண்டு விட்டீர்கள்... எல்லோருமே ஆன்ம சாதனை புரிவது அதற்காகத்தான்...அவரின் பாதங்களை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள்... அதுவே போதுமானது.. எனது ஆன்மீக போதனை தேவையில்லை!" என்கிறார் மிக மிக தெளிவாகவும் தீர்க்கமாகவும்...


வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு பக்தர் மாதாஜியிடம் பாபாவை பற்றி கேட்கிற போது.. "சாயிபாபா அவதார புருஷர்... அவர் ஸ்ரீகிருஷ்ணரின் முழுமையான அவதாரம்... பிரம்மா விஷ்ணு சிவனின் தனித்துவ வடிவம் அவர்... அவருடைய பேரிருப்பில் எத்தனை நேரம் கூடுதலாக இருக்க வாய்ப்பிருக்கிறதோ அத்தனை நேரம் இருங்கள்.. அது உங்களுக்கு ஆன்ம முன்னேற்றம் அளிக்கும்!" என்கிறார் மாதாஜி...

"ஸ்ரீ கிருஷ்ணர் பிரேமாவதாரம்... நீங்கள் முற்ஜென்மங்களில் செய்த புண்ணியங்களால் அதே ஸ்ரீகிருஷ்ணரையே என் வடிவில் பூரண பிரேமாவதாரியாக தரிசிக்கிறீர்கள்... நீங்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள்... உங்கள் வாழ்க்கை மென்மேலும் இந்த தரிசனத்தால் தூய தெய்வீகமாகும்!" என்கிறார் பாபா.. மேலும் பிரபஞ்ச இறைவனான பாபா இந்த யற்கையின் இயக்கமே தன் உத்தரவின் பேரில் தான் அசைந்து கொண்டிருக்கிறது என்பதையும் மிக ஆணித்தரமாய் பதிவு செய்கிறார்!


(Source : Sri SathyaSai and Yogis / Page no: 119,120) / Author : Jantyala Suman babu / Eng Translation : pidatala Gopi Krishna/ Reference: "Shri Satya Sai Aanandadai" writen by KarunambaRammurti -Page 182, R.D.Awle File) 


இறைவனே ஸ்ரீ சத்ய சாயி என்பது மகான்களின் வாக்கு...  பகவான் ரமணர் பகவான் யோகிராம் என மகான்களையும் பகவான் என அழைப்பதால் பாபாவை கடவுள் இறைவன் என அழைக்கிறோம்! சூரியனால் நிலா ஒளிர்ந்தாலும் சூரியனையும் நிலாவையும் ஒரே வரிசைப்பட்டியலில் கொண்டு வருவது சீடரே குருவாகிற போது தனது குருவையே அந்த சீடர் காலில் விழுந்து வணங்கு எனச் சொல்வதைப் போல்...! மகான்கள் இறை அனுபவம் பெற்றவர்கள்... ஆனால் பாபா என்பவர் எந்த இறை அனுபவத்தை மகான்கள் அடைந்தார்களோ அந்த இறை அனுபவமே!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து:

  1. பக்தியால்நாம் செய்யும் நம் செயல்கள் வெளியே தெரிந்தாலும்..அதற்குண்டான தெய்வீக அனுபவத்தை நம் ஆன்மா மட்டுமே உணர்கிறது!!

    பதிலளிநீக்கு