தலைப்பு

சனி, 29 பிப்ரவரி, 2020

முன்னாள் ஆந்திரா வங்கித் தலைவர் பத்மஸ்ரீ திரு. K கோபால் ராவ் அவர்களின் சாயி அனுபவங்கள்!


உயர் திரு K. கோபால ராவ் (1908 - 2008) பழம்பெரும் சுவாமி பக்தர். பிரசாந்தி நிலய வாசி. பல ஆண்டுகளாய் சுவாமியின் அத்யந்த பக்தர். ஆந்திரா வங்கியில் பணியாற்றி முதன்மை அதிகாரத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.
1974 ல் தேசத்தின் உயரிய பத்மஸ்ரீ விருதாளர். சுவாமியின் பல ஆச்சர்ய அனுபவங்களை இதயத்தில் சுமந்திருக்கும் இந்த ஆத்மார்த்த பக்தர் நம்மிடம் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறார். 

இறைவனின் திருநாமம்!


நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! தேள்! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள்.

"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.

"கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள், இரத்தம் கொதிக்கிறது, கண்கள் சிவந்து விடுகிறது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஒரு பரம்பரையையே ஆட்கொண்ட பரம்பொருள்!


நேரடியாக கடலுக்குள் குதிக்கப் போகிறேன். கரை பார்த்து கடல் வியப்பது இந்தப் பதிவில் இல்லை.. பகிர நிறைய ஆச்சர்யங்கள் இருக்கின்றன..

திரு ரவிச்சந்திரன் சாய்ராம்
1991 ன்றிலிருந்து குடும்பத் தொழிலான கட்டுமானப் பணிகள் செய்பவர்..
அவரை எப்படி சுவாமி கட்டியமைத்தார் என்று சொல்வதற்கு முன்..

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கிரேஸி கிரியேஷன்ஸ் இயக்குநர் திரு. S.B. காந்தன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


🌹கலை விழுதை ஆட்கொண்ட சாயி:

சுவாமி தியானத்தில் வழிநடத்துகிறார்.. எழுத உந்துகிறார்..
பயணத்தை சவுகரியப்படுத்தி அனுபவங்களைப் பதிவேற்றம் செய்யும் பாக்கியம் தருகிறார்..

பக்தர்களின் அனுபவங்களை பதிவாக்குவது அணில் சேவை அல்ல.. கனல் சேவை .. பலர் இதய விளக்கில் ஆன்ம ஜோதி அணையாமல் அது சுடரை இடரின்றி ஒளிர வைக்கிறது...

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டாக்டர் P. ஜோதிமணி அவர்களின் சாயி அனுபவங்கள்!

Dr. Justice P. Jyothimani | Former Judge, Madras High Court &
Former Judicial Member, National Green Tribunal

அனைத்து ஆறு குளங்களையும் தூர்வார தமிழக அரசு உத்தரவிட வேண்டும், போரூர் ஏரியில் பொதுப்பணித்துறை மணல் அள்ள தடை, சாம்பல் கழிவுகளை அகற்றாவிட்டால் வடசென்னை அனல் மின் நிலையத்தை மூட உத்தர விடுவோம் என பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தவர் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டாக்டர் P. ஜோதிமணி ஆவார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக இவர் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையே மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் தமிழ்நாடு கண்காணிப்புக் குழுத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

புதன், 26 பிப்ரவரி, 2020

ஐயப்பா என்ற பக்தருக்கு பகவான் செய்த அறுவை சிகிச்சை!


பெங்களூருக்கு அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஐயப்பன் என்பவர், தன் மனைவியுடன், அடிக்கடி புட்டபர்த்தி வருவது வழக்கம். அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 1946 ஆம் ஆண்டு, சுவாமியின் பிறந்த நாளுக்கு முந்தைய வாரம், பாபா எல்லா பக்தர்களையும் சித்திராவதி நதிக்கு கூட்டிச் சென்றார். இது வழக்கமாக நடைபெறுவது தான்.

தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது வரும் எண்ண ஓட்டங்களை வராமல் தடுப்பது எப்படி?


ஒரு அபூர்வமான வியாதி ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் போது, அதற்குரிய மருந்தும் அந்த நாட்டிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. தீவிர முயற்சிக்குப் பின் மற்ற நாடுகளில் கிடைத்தாலும், இங்குள்ளது போல் சிறந்ததாகவோ, அதிக அளவிலோ இராது. அதுபோலவே இந்தக் கலியுகத்தில் இப்போது இந்தக் குறிப்பிட்ட மருந்து எல்லோருக்கும், எப்போதும் சுலபமாகக் கிடைக்கிறது.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அகண்ட சேவை!

அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் - பாபா 

பிரசாந்தி நிலையத்தில் அகண்ட பஜன் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறுகிறது. ஒன்று, பகவானின் பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிருக்கிழமையில் தொடர்ந்து 24 மணி நேரம், சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிருக்கிழமை மாலை 6 மணி வரை  நடக்கும்.

பிரசாந்தி நிலையத்திலுள்ள பல்வேறு பிரிவுகளின் நேர அட்டவணை!


திங்கள், 24 பிப்ரவரி, 2020

புரொபஸர் அனந்தராமனுக்கு அளித்த வாக்குறுதியை பாபா நிறைவேற்றுகிறார்!


புரொபஸர் A. அனந்தராமன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். தற்போது, ​​அவர் புட்டபர்த்தியில் உள்ள சுவாமியின்  வணிக மேலாண்மை கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மேலும் அவர் கூடுதலாக ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார். 

உங்கள் தாய் தந்தையருக்கு எப்பொழுதும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும்!


மாதா பிதா குரு தெய்வத்தின் மூலமாகிய அடி வேராகிய பரப்பிரம்ம பாபா எவ்வாறு பிள்ளைகள் பெற்றோர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும்... பெற்றோர்கள் எவ்வாறு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டவர்த்தனமாய் பகிர்கிறார்...! பெற்றோர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் பெற்றோரான பாபாவே நம்மை ஒளிநடத்த வழிநடத்துவதற்கான முழு அக்கறையும் திறந்திருக்கிறது இதோ...

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ T.S பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் சத்ய சாயி அனுபவங்கள்!


ஒரு ஆலமரத்தை ஆட்கொண்ட ஆண்டவன்:

ஸ்ரீநாரத முனிவரிலிருந்து.. சைதன்யர் தொடங்கி... இறைவனைப் புகழ்ந்து பாடுவதும்.. அந்த பேரருட் கருணையை இதயத்திற்கு எடுத்துச் சென்று பக்தியை வளர்ப்பதுமே பாரத பண்பாடு.

நமது பண்பாடே பண்ணிலிருந்து தான் ஆரம்பித்திருக்கிறது..

காலம்சென்ற ​பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


அஞ்சலி தேவி தமிழ் சினிமாவில், இந்த பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது, எனும் அளவுக்கு பரிச்சயமான நடிகையாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் கொடிகட்டி பறந்தவர் அஞ்சலி தேவி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒரே பெண் தலைவராக பரிமளித்த கலை புதல்வி.

சனி, 22 பிப்ரவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 8 | தெய்வம் தந்த பாட்டு - சாயி ராதா


🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சாயி ராதா அவர்களின் சாயி அனுபவங்கள்.

ஆண்டவன் சாயி வாழ்வின் ஆரம்பகாலம் லீலை.
யாண்டுமே வளரும் சாயி தெய்விக மகிமை எல்லாம்
வேண்டும் ஞானம் புகட்ட உபதேசங்கள் எனினும்
ஆண்டவன் சாயி வாழ்வில் எப்போதும் மூன்றும் உண்டு!

சுவாமி பக்தர்களுக்கு அளித்த 20 உறுதிமொழிகள்!


1. Those who are devoted to me  in thought word and deed  shall receive my protection without their asking.
 எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் பக்தியுடன் இருக்கின்ற ஒருவன், கேட்காமலேயே என் பாதுகாப்பை பெறுவான்!
           
2. I am ever vigilant in the homes of my devotees.
என் பக்தர்களின் இல்லங்களில், நான் எப்போதும் விழிப்போடு இருக்கிறேன்.   

அனைத்து தெய்வீக தத்துவங்களும் இணைந்தது சாயி உருவம்!


“நான் உங்களோடு பழகுவதால், உங்களைப்போலவே உண்பதால், உங்களோடு பேசுவதால், இது ஒரு மானிட உருவமே என்ற மாயையில் நீங்கள் மூழ்கிக்கிடக்கிறீர்கள். நானும்கூட உங்களோடு ஆடிப்பாடி, சேர்ந்து பணி புரிந்து உங்களை மாயையில் ஆழ்த்துகிறேன். ஆனால் எந்த வினாடியிலும் என் தெய்வீகத்தன்மை உங்களுக்கு வெளிப்படுத்தப்படலாம். அதற்கு நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்…..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

லிங்கோத்பவம் உருவான பின்னணி!


பாபா எனும் பரமேஸ்வரரின் லிங்கோத்பவம் இன்றளவிலும் அதை நாம் காணொளியில் கண்டால் கூட ஆன்மா சுத்தப்படுகிறது.. உள்ளுணர்வு புனிதப்படுகிறது... பிரபஞ்சத்தின் சூட்சும ரகசிய வடிவமான பாபா அருள்கிற லிங்கோத்பவத்தின் நதிமூலம் பரவச சம்பவமாக இதோ...

உலக நன்மைக்காக இரவு முழுவதும் இறைவனின் நாமத்தைச் சொல்லுங்கள்!


எதற்காக கண்விழித்து இன்றைய சிவராத்திரியில் பாபா நாமத்தையும் .. பஜனைப் பாடல்களையும் உச்சரிக்க வேண்டும் என்பதன் ரத்தினச் சுருக்க விளக்கமும்... சுவாமி நாமம் உச்சரிக்க உச்சரிக்க நம் கர்ம வினையை எச்சரிக்க எச்சரிக்க... நமது அக விழிப்பில் அதுவே கரைந்து  விடும் எனும் சத்தியம் விளங்கும் இதோ...

வியாழன், 20 பிப்ரவரி, 2020

சென்னையைச் சேர்ந்த உணவக உரிமையாளரின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


சுவாமியின் சாந்நித்யம் சம்பவமாகிறது ... அதுவே நமக்கு அனுபவமாகிறது... மனித வாழ்வில் எல்லா நிகழ்வையும் சுவாமியே நிகழ்த்துகிறார்.. காலம் வருகையில் அதை உணர்த்துகிறார்.. ஆச்சர்யமான சுவாமி அனுபவங்கள் அநேகம்... பிரபலங்களும்... சராசரிகளும் சுவாமியின் பார்வையில் சமமானவர்களே... இந்த பக்தர்க்கு நிகழ்ந்திருப்பது ஆச்சர்யமான அனுபவங்கள்.. ஒவ்வொரு சுவாமி அனுபவமும் ஒவ்வொருவிதமான  பகவத் கீதை உரை..

புதன், 19 பிப்ரவரி, 2020

நீ ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நான் உன்னுடன் இருக்கிறேன்!


நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்து நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நான் உன்னுடன் இருக்கிறேன்.

கவிதா வாஹினி! (பக்கம் -3) -கவிஞர் வைரபாரதி

65) மந்தஹாஸ சாயி மந்தஸ்மித சாயி:


சுவாமி நீ 
சிரிக்கிறாய் 
 சிரிப்புப் பறவை
உன் இதழிலிருந்து
என் இதயக் கூட்டிற்கு
இடம் பெயர்கிறது 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

ஸ்ரீ சத்யசாயி பாபா யார்? அவதாரமா? - பிரபல கதா காலட்சேப உபன்யாசகர் திரு ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா


இந்த சத்ய சாயி பாபா யார்? அவதாரமா? பிறகு ஏன் இவரைப் பற்றி புராணங்களில் குறிப்பிடவில்லை ?

இருந்தும் ஏன் பலர் இவரை அவதாரம், கடவுள், மகான் என்றெல்லாம் அழைக்கிறார்கள்? ஒரு வேளை பல மகான்களைப் போல் இவரும் எப்படியோ மகானாகிவிட்டாரோ? இல்லை ஏமாற்று வேலையா?

திங்கள், 17 பிப்ரவரி, 2020

நிறைவான தியானத்திற்கு 'மனநிறைவு' என்பது மிகவும் அவசியம்!


ஒருவருக்கு ஆண்டவனை அடைய வேண்டும் என்ற ஒரே ஆசை தான் இருக்க வேண்டும். இந்த உலக சம்பந்தப்பட்ட ஆசைகளில் ஒருவர் தம் வாழ்க்கையை அடகு வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே உண்மையான திருப்தியாகும். அது சாந்தி, சந்தோஷம், விசாரணை (பிரித்தறியும் மதிநுட்பம்) ஆகியவற்றை அடைவதால் ஏற்படுகிறது. அதன்பிறகு, சாட்சாத்காரமும் அதாவது ஆண்டவனை அறிதலும் அடையப் பெறும்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

தூரத்தை கடக்க தூயவனின் சங்கல்பம் போதும்!


ஒருமுறை கர்னல் ஜோகாராவ் நெஞ்சு வலி அதிகமாகி இதய நோயோ எனும் அளவிற்கு அவஸ்தை பட்டார். பெங்களூரில் ஒரு நல்ல மருத்துவமனையில் I.C.U.வில் சிகிச்சை நடந்தது. பாபா அப்போது பிரசாந்தி நிலையத்தில் இருந்தார். 

சனி, 15 பிப்ரவரி, 2020

மாதவ் தீக்ஷித்தின் நீரிழிவு குணமாக்கப்பட்டது!


கல்லூரி விடுமுறை நாட்களில் டாக்டர்.காதியா புட்டபர்த்திக்கு ஒரு குழுவோடு சென்றார். ஸ்ரீ மாதவ் தீக்ஷித்தும் அவரோடு சென்றார். ஒவ்வொரு முறை புட்டபர்த்தி செல்லும் பொழுதும், அவருடைய அதிர்ஷ்டம் சுவாமி நேர்காணல் அருளினார். விபூதி வரவழைத்துக் கொடுத்தார்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

'பார்த்தி பென்' அம்மையாரின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவம்!


 திரு.அரவிந்த்பாய் படேலும், அவருடைய மனைவி பார்த்தி பென்னும் பேட்டர்சீ (லண்டன்) என்னும் நகரத்தில் தபால்துறை வியாபாரம் ஒன்றை நடத்தி வந்தார்கள்.

நீங்கள் உண்ணும் உணவுக்கும் தெய்வ பக்திக்கும் சம்பந்தம் இருக்கின்றது!


பக்தர்: ஒருவனுக்கு இறைவனிடம் பக்தி எப்படி ஏற்படுகிறது?

பாபா: தன்னம்பிக்கை உண்டாவது அவசியம். உணவே ஆரம்பகட்டம். இந்த உடல் உணவால் உண்டாக்கப்பட்டது. ஆரோக்கியமில்லாவிடில் எந்தவிதச் செயலும் சாத்தியமில்லை.

புதன், 12 பிப்ரவரி, 2020

வெங்கடரமணப்பாவின் வீட்டில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!


ஒருநாள் வெங்கடரமணப்பாவின் மொத்த குடும்பமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய சிறு குழந்தை விழித்து எழுந்து சிறியதான, எரிந்துகொண்டிருந்த கெரசின் விளக்கின் அருகில் சென்றது.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு M.S. தோனியின் புட்டபர்த்தி வருகை!

வாழ்க்கையே ஒரு விளையாட்டு
வாழ்ந்திடு. அதை விளையாடி.. 
- பாபா

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன்.. அதிரடி மன்னன்.. திரு M.S. தோனி தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வருகை.

M.S என்றால் Master Stroke என்று புகழ் பெற்ற திரு.தோனி அவர்களை கிரிக்கெட் உலகில் அறியாதார் யார்?

திங்கள், 10 பிப்ரவரி, 2020

👍 சுயநம்பிக்கையை வளர்த்துக் கொள்!


தெய்வத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது. தெய்வத்துவத்தை அனுபவிக்க மனித முயற்சி அவசியம். மனிதன் ஐந்து புலனறிவுகள்,ஐந்து சூட்சுமப்புலன்கள், ஐந்து ஸ்தூலப்புலன்கள் இவற்றைப் பெற்றிருக்கிறான். உலகம் பஞ்சபூதங்களைக் கொண்டது. இவையனைத்தும் மனிதனிடம் கலவையாக, தெய்வத்துவம் கூடியிருக்கின்றன. இத்தெய்வத்துவம் காண இயலாதது, பற்ற இயலாதது. ஆகவே தெய்வத்துக்கு இருப்பு என்பது இல்லை என்று கூறுகிறார்கள்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

பகவானின் ஒரே ஒரு கருணை பார்வை அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து விட்டது!


பேராசிரியர் இந்திராணி சக்கரவர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாயி மிர்புரி சங்கீத கல்லூரியின் முதல்வராக இருக்கிறார். அதோடு UGC இல் கௌரவ பதவியும் வகிக்கிறார்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 7 | பக்தரைக் காக்கும் சாயி பாதம் -சுசீலா

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சுசீலா அவர்களின்  சாயி அனுபவங்கள்.

கரணம் ஒடுங்கி யேமனம் கனிந்துருகி வந்தவர்க்கு
 அரணாக ஆவேன் என்றும் அன்பாவேன் கருணையாவேன்
 பரணாக ஆவேன் படியாவேன் பலமாவேன் பலனுமாவேன்
 சரணா கதியடைந்தோர்க்கு சகலமும் ஆவேன் நானே!
                                                                                                        -பாபா 

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஓர் ஏழையின் கண்பார்வை காக்கப்பட்டது!

டாக்டர் உபாத்யாய் அவர்களின் சாயி அனுபவங்கள்

டாக்டர் உபாத்யாய் 1968-ல் டாக்டர் ஆனார். 1974-ல் கண் சிகிச்சை நிபுணர் ஆனார். அவரது பணி UKயில் மூன்று இடங்களில் நடைபெற்று வந்தது அதாவது நேஷனல் ஹெல்த் சர்வீஸ், அரசாங்க ஆஸ்பத்திரி, மற்றும் ஹார்லே தெருவில் என மூன்று இடங்களில் நடந்து வந்தது. ஆனால் அவருடைய பணி இலவச மருத்துவ முகாம்களில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது. ஆப்பிரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் என பல நாடுகளில் இருந்தும் தன்னார்வலர்கள் மிகுந்த கடமை உணர்ச்சியோடு உதவிபுரிய மிக சிறப்பாக மருத்துவமுகாம் செயல்பட்டது. 

மனிதனைச் ஆன்மீகப் பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் 6 எதிரிகள்!


ஆறு எதிரிகளையும் எப்படி வீழ்த்துவது என்பதற்கு இறைவன் சத்ய சாயி தரும் கீதையும் அதன் பாதையும் இறைவன் சத்ய சாயியால் மட்டுமே இத்தகைய நிவாரணத்தை தர முடியும் என்பதை நிரூபிக்கும் பதிவு இதோ.. 

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பிரபல தமிழ் அறிஞர் Dr. சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! நமது பகவானின்  அன்பிற்குரிய  பக்தையும், தமிழ்  பேரறிஞரும்,16 விருதுகள் 32 பட்டங்கள் பெற்ற  சாதனையாளருமான Dr. திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

அற வழியில் செல்வம் ஈட்டி வீடு பேறுக்கு ஆசை கொள்வோம்!


"செல்வத்தை ஈட்டுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மனித முயற்சிகளில் நியாயமான ஒன்றே. ஒவ்வொரு மனித வாழ்கையின் நான்கு குறிக்கோள்களில் (புருஷார்த்தங்கள்) அதுவும் ஒன்றே-தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கே அவைகள்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பத்மஸ்ரீ டாக்டர். ஷோபா ராஜு அவர்களின் சாயி அனுபவங்கள்!


ஷோபா ராஜு ஒரு இந்திய இசைக்கலைஞர்; மேலும் அவர் ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் பக்திப்பாடல்கள்  பாடும் கலைஞராகவும் திகழ்ந்தார். மேலும் அவர் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசையமைப்பாளராக விளங்கிய துறவி அன்னமாச்சாரியாவின், நற்செய்தி பரப்பும் சங்கீர்த்தனைகளின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக அறியப்பட்டார். கலைத்துறையில் அவரது பங்களிப்புக்கு கௌரவம் செய்யும் விதமாக, 2010ம் வருடம், இந்திய அரசு பத்மஸ்ரீ விருது  வழங்கியது. அவர் 1983ம் வருடம் 'அன்னமாச்சாரியா பாவன வாஹினி'(ABV)யைத் தொடங்கினார். அதன் குறிக்கோள்,"எண்ண மாசுகளை தெய்வீக இசையின் மூலம் முற்றிலும் அழிப்பது" என்பது ஆகும்.

சனி, 1 பிப்ரவரி, 2020

ராம நாமமும் ராம சேவையும்! - ஸ்ரீ சத்ய சாயி அருளுரைகள்


பலர் தங்கள் துன்பங்கள் தீரவில்லை, இறைவன் நம்மிடம் கருணை காட்டவில்லை என்று குறைப்படுகிறார்கள். இத்தகையோர் இராமாயண நிகழ்ச்சியில் ஒன்றிலிருந்து பாடம் கற்கவேண்டும்....