தலைப்பு

புதன், 18 ஜனவரி, 2023

சுவாமி! எங்கள் செயல்களுக்கு நாங்களே பொறுப்பு... அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற போது இந்நிலையில் கடவுள் பக்தி எந்த அளவில் பயனளிக்கும்?

இறைவன் எல்லாவற்றையும் படைத்துவிட்டு அவற்றை அனுபவிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் மனிதருக்கு வழங்கி இருக்கிறார்! ஆனால் அதில் ஓர் நிபந்தனை... 

நீங்கள் எதையாவது செய்யலாம் , எதையும் அனுபவிக்கலாம்... ஆனால் அதன் பலனில் இருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது!

நீங்கள் எதைச் செய்தாலும் அதன் பலனை கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்! எனவே நீங்கள் புரிந்த செயல்களுக்கு நீங்களே பொறுப்பு! நன்மை-தீமை இவை இரண்டும் நீங்களே செய்தவை... ஆனால் இறைவன் மீது பக்தி எதற்கு? என கேட்கிறீர்கள்! 

அதற்கு ஒரு உதாரணம் : உங்களுக்கு கொஞ்சம் விளைநிலம் இருக்கிறது... அதில் நீங்கள் வெங்காயத்தை உற்பத்தி செய்தாலும்... மல்லிகைத் தோட்டம் வைத்தாலும் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது! ஆனால் அதற்காக வரியை நீங்கள் அரசாங்கத்திற்கு செலுத்தியே ஆக வேண்டும்! 

வரி செலுத்துவது போல் கர்மாவின் பலன்களும் தவிர்க்க முடியாதவை! 


அதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்! வருமான வரி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்...  எந்த அளவுக்கு வருமானம் உள்ளதோ அதற்கு ஏற்ப வரி செலுத்தியே ஆக வேண்டும்! இது தவிர்க்க முடியாதது... ஆனால் இங்கு சிறிய வரிச்சலுகை உண்டு... அதுதான் வரி விலக்கு (Tax Exemption) என்பது!

LIC, Provident Fund இவற்றில் சேமிப்பு வைத்தால் அந்த தொகைக்கு ஏற்ப வரி விலக்கு கிடைக்கும்... அதே போல் ஆன்மீக சாதனா வழியாகிய பக்தியோடு கூடிய வழிபாடு, சேவை, நாமசங்கீர்த்தனம் இவற்றில் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் கர்மாவின் வலிமையில் இருந்து நீங்கள் சற்றே விடுபடுகிறீர்கள்... எனவே கடவுளிடம் பக்தி கொள்வதிலும் , கடவுளின் அருளாலும் உங்களின் விதியின் வலிமை குறைகிறது!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக