தலைப்பு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

கடவுளின் அருள் எங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?


இந்த எண்ணம் தவறானது! கடவுளின் அருள் அனைவருக்கும் சமமாகவே உள்ளது! குறைபாடு உங்கள் மனதில் தான் இருக்கிறது! 

மழை பெய்து கொண்டிருக்கும் போது... பாத்திரத்தின் முகப்பை மேல்நோக்கி வைத்தால் தான் மழை நீர் அந்த பாத்திரத்தில் விழும்! அதை விடுத்து பாத்திரத்தை கவிழ்த்தி வைத்தால் , பாத்திரத்திற்குள் எப்படி மழை நீர் வரும்? 

கடவுளின் அருள் மழையை வேண்டுபவர்கள் தனது உள்ளமாகிய பாத்திரத்தை கடவுளை நோக்கியே எப்போதும் வைத்திருந்தால் அருளாகிய நீர் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்! 


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 9)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக