தலைப்பு

விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2026

இன்று (20 ஜூலை 2026) ஶ்ரீ கிருஷ்ணரின் 5253வது அவதார தினமாகும்!

 

இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி. நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணி.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

🔥 வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்! (சிறு தொகுப்பு)

பிரசாந்தி நிலையத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சியான 'வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்' நவராத்திரியில் சதுர்த்தி திதி அன்று துவங்கி, ஏழு நாட்கள் நடைபெற்று விஜய தசமி அன்று மஹா பூரணாஹுதியுடன் நிறைவடையும்.   இந்த வருடம், இந்த யக்ஞம் இன்று முதல் (26.09.2025, வெள்ளிக் கிழமை) துவங்க உள்ளது...

வெள்ளி, 8 மார்ச், 2024

லிங்கோத்பவகரா சாயி லிங்கேஸ்வரா!!

அருவாய் உருவாய், உளதாய் இலதாய் இலங்கும் ஈசனுக்கு உகந்த திருவுறு லிங்கமாகும். உருவமாய், அதே சமயம் உருவமற்று சிவனின் அடையாளமாய் வணங்கப்படும் லிங்கம், சுந்தர ரூபனாய், சிந்திடும் கருணையாய் வந்து நம்மைக் காக்கும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டது... 

திங்கள், 24 ஏப்ரல், 2023

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

பாபாவை எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுற ஆன்மாவில் ஆழப் பதியும் வண்ணம் விளக்கப்படுகிறது இதோ...

புதன், 23 நவம்பர், 2022

பாபாவின் பிறந்தநாள் அறிக்கை!

1966 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பின்னர் பாபாவின் பிறந்த நாள் விரைந்து வந்தது. அவருடைய பிறந்த நாள் அறிக்கையாக கீழ்க்கண்டவாறு எழுதி, அதை சனாதன சாரதியில் வெளியிடும் படிபணித்தார்.

திங்கள், 21 நவம்பர், 2022

பகவான் பாபாவின் 70, 75, 80 மற்றும் 85வது பிறந்தநாள் விழாக்கள்!


எண்ண எண்ண இனிக்கும்... நினைக்க நினைக்க விழிநீர் தித்திப்பாக நனைக்கும்... இதோ வாசிக்க வாசிக்க பரவசப்படுத்தும்... அவதார வைபவ நாள் என்பது நமக்குள்ளே தெய்வீகத்தை நினைவுப்படுத்தும்... தங்கத்தேர் மட்டுமல்ல நம் உடம்பே இறைவன் பாபா நகரும் அங்கத்தேர் என்பதை ஆழமாய் உணர்த்தும் பிறந்தநாள் வைபவக் கொண்டாட்டப் பதிவு இதோ...

சனி, 19 நவம்பர், 2022

மகளிர் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

இறைவன் ஸ்ரீ சத்யசாய் பாபா, சமுதாயத்தில் பெண்களின் முக்கிய பங்கை முழு உலகிற்கும் வலியுறுத்தும் வகையில் மகளிர் தின கொண்டாட்டங்களை துவக்கினார்.  வீட்டில் மரியாதை மற்றும் சரியான நடவடிக்கையை மீட்டெடுக்க பெண்களுக்கு சிறப்பு கடமை உள்ளது என்று அவர் வலியுறுத்துகிறார்.  பிரசாந்தி நிலையத்தில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  சுவாமி கூறுவது... 

ஞாயிறு, 13 நவம்பர், 2022

இல்லங்களில் நடந்த அகண்ட பஜன் அகிலத்தின் அகண்ட பஜனாக பரவிய வரலாறு!

எழுபத்தேழாம் வயதில் எடுத்தடி வைக்கும் இளைமை மாறாத இனிமை.. அகண்ட பஜன்.சிறுவர் முதல் சீனியர் வரை பக்திச் சீரிசையை இசைக்கும் ஆரோஹணம். அகில உலகும் மேற்கொள்ளும் சங்கீத சன்மார்க்க வேள்வி. இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் பக்தியுடன் கேட்டு பகவான் திருப்பாதம் பணியும் அற்புத ஒருநாள் திருவிழா. அல்லாவும் ஏசுவும் ராம கிருஷ்ண தேவரும் புத்த மகாவீரும் ஒன்றாகக் கலந்த, எல்லை இல்லாத சாயி பரம்பொருளின் கீர்த்திதனை உளம் உருகிப் பாடும், உலகம் கொண்டாடும் ஒற்றுமைப் பெருவிழா.

புதன், 13 ஜூலை, 2022

குருவின் குணங்களும் அடையாளங்களும் | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி!!


குரு யார்? குரு எப்படிப்பட்டவர்? என்பது குருவை தனது கருவியாகக் கொண்ட சத்குருவான இறைவன் பாபாவால் மட்டுமே விளக்க முடியும்! அப்படி ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணம் வந்தே ஜகத்குருவான பாபா குரு யார் என்பதை பிரபஞ்ச சுருக்கமாய்... ஆன்ம நெருக்கமாய் விவரித்து நமக்கு உணர்த்துகிறார் இதோ...

வெள்ளி, 6 மே, 2022

நாத்திக கூட்டத்தினரிடையே நடக்கவிருந்த பாபாவை நினைந்து வருந்திய ஈஸ்வரன்னை!

இறைவன் பாபாவுக்கும்... அவரின் தாய்க்குமான பிணைப்பு சாதாரண மானுடப் பிணைப்பல்ல... சுவாமி மேலான ஈஸ்வராம்பாவின் அன்பும் அக்கறையும் அப்பேர்ப்பட்டது...எந்த ஒரு இக்கட்டான சூழலும் பாபாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்த உன்னதத் தாயின் உணர்வுப்பூர்வ அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 5 மே, 2022

தாய் சொல்லை தட்டாத தனிப்பெரும் தெய்வ சாயி!

தாய்க்கும் தெய்வ சேய்க்குமான பந்தம் தனித்துவமானது.. பெரும் மகத்துவமானது... அப்படி தாய் சொல்லி தெய்வம் ஆற்றிய அற்புத மகிமை ஒன்று சுவாரஸ்யமாய் இதோ‌...

சனி, 2 ஏப்ரல், 2022

யுகாதி தினத்திற்கான (தெலுங்குப் புத்தாண்டு தினம்), பகவானின் புனிதசெய்தி என்ன?

ஒவ்வொரு பண்டிகையையும் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை பாபா இதிலேயே தெள்ளத்தெளிவுற விளக்கி இதயத்தில் பதிப்பிக்கிறார்... அனைத்து புனித பண்டிகைக் கொண்டாட்டங்கள் யாவுமே உள்முகத்திற்கானது என்பதை ஜக ஜோதியான யுக ஆதியான பாபா யுகாதி தின செய்தியாக இதோ விடுக்கிறார்.. 

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அண்டி வருவோரைக் காக்கும் கிண்டி பாபா திருக்கோவில்!

(03-02-1949) இதே நாளில் அன்று!

அன்றும் ஒரு குருவாரம். அது 1949 பிப்ரவரி 3 ம் நாள். மன்று ஆடும் நடராசன், குன்றத்தை குடைபிடித்து கோகுலத்தைக் காத்த நேசன், பக்தர் மனம் நின்றாடும் பர்த்தீசன், தருமிகு சென்னையில், பெருமைமிகு ஷீர்டி பாபா கோயிலைத் துவக்கிவைத்து நம் அனைவரையும் ஆசியளித்த நந்நாள். வாருங்கள் நினைவுத் தடங்களில் பயணித்து அந்த கோலாகலக் காட்சிகளைக் காண்போம்...

திங்கள், 13 டிசம்பர், 2021

இன்று கீதா ஜெயந்தி : கிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள்!!

ஞானமழையான ஸ்ரீமத் பகவத் கீதை குருஷேத்ரம் எனும் யுகநிலத்தில் வழிய வழியப் பொழிந்த திருநாளான இன்று.. கீதையின் மகிமையையும்... ஸ்ரீ கிருஷ்ணரும் சுவாமியும் ஒன்றென்றும் அனுபவத்தையும்... எப்படி இந்த கீதை ஜெயந்தியை கொண்டாடுவது எனும் வழிமுறையையும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...

வெள்ளி, 12 நவம்பர், 2021

அக்ஷயமாய் வளர்ந்த அகண்ட பஜன்!


முதன் முதலாக சத்ய சாயி அகண்ட பஜன் 1946ல் பெங்களூரில் உள்ள சில சாயி குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

மக்களால் அருகம்புல் கொண்டு வணங்கப்படும் விநாயகர்!


இதன் துவக்கம் என்ன? ஒரு முறை பார்வதியும் பரமேஸ்வரனும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். நடுவராக இருக்க நந்தி வேண்டிக் கொள்ளப்பட்டார். நந்தி ஒவ்வொரு முறையும் ஈஸ்வரனே வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஈஸ்வரனின் சார்பாக நந்தி முடிவெடுப்பதாக அன்னை பார்வதி எண்ணினாள். அதனால் கோபம் கொண்ட அவள் அஜீரண கோளாறால் அவதியுற நந்திக்கு சாபமிட்டார். 

வியாழன், 12 நவம்பர், 2020

ஈடில்லாத ஈஸ்வரம்மாவின் அன்பைப் பற்றி சாயீஷ்வரனே சொல்கிறார்....


தேவகிக்கும் ... கோசலைக்கும் கிட்டாத பேறு ஈஷ்வரன்னைக்கு கிடைத்தது சுவாமியின் அன்பையும் அருகாமையும் பெற.. கர்ப்பத்தில் கடவுளைச் சுமந்தவளின் பேரன்பைப் பற்றி சுவாமியே பூரித்து பூரணமாய் விளக்குகிறார்.. மேலும் பெண்களின் பக்தியையும் மேம்படுத்தி எடுத்துரைக்கிறார் இதோ‌..

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சுவாமியின் விநாயகர் சதுர்த்தி அருளுரை!


விநாயகரே அனைவருக்கும் தலைவர், அவருக்கு மேலான தலைவரோ, எஜமானரோ கிடையாது. ஒரு புதிய காரியமோ செயலோ தொடங்குவதற்கு முன், வெற்றிக்காக விநாயகரின் ஆசிகளை வேண்டுவது நமது வழக்கம். எப்போது அவரை வழிபட்டு, அவரது ஆசிகளை வேண்டுகிறீர்களோ, அப்போது உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

இறைவன் இருக்கிறார்! - பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி -5


இந்த மந்திரம் ஒன்றே போதுமானது:
மகான்கள் இறைவன் பெயரை மந்திரமாய் அளிப்பர்.ஆனால் இறைவனோ எதை மந்திரமாய் அளிக்கிறார் என்பதை விவரிக்கும் பதிவு இது... 

புதன், 22 ஏப்ரல், 2020

ஆராதனா மகோற்சவம் (இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதி தினம்)


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் மகாசமாதி தினம், ஏப்ரல் 24ம் திகதி, வெள்ளிக்கிழமையாகும், இவ்வாண்டு அமைதியான சூழ்நிலையில் பிராத்தனைகளுடன், வீடுகளில் இருந்தபடி அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது.

சமாதி என்றால் என்ன ?
சம ஆதி என்ற சொல்லே சமாதி.