தலைப்பு

சனி, 25 பிப்ரவரி, 2023

இப்போது யாரை கேட்டாலும் "Computer - Computer - Computer" என்று அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள்! இந்த கல்விமுறை குறித்து உங்களின் கருத்து?

எல்லாவற்றிலும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது! நீங்கள் தற்போது கற்றுக் கொள்ளும் நவீன கல்வி முறை அனைத்தும் உங்கள் உள்ளேயே இருக்கின்றன!

You Are the Magnet!

You Are the Computer!

You are the Heat and Sound!


உன்னுள் இல்லாதவை வெளிப்புறத்தில் இருப்பதில்லை! உங்களுள் Electricity கூட இருக்கிறது!


எல்லாமே உள்முகத்தன்மையின் வெளிப்பாடே! (Reflection of the Inner Being)

நீங்கள் எல்லோரும் Computer என்கிறீர்கள்! 

Computer முன் நின்று கொண்டு உங்கள் மனைவி யார்? என்று கேட்டால்... பதில் கிடைக்குமா? கிடைக்காது!

எதனால்? 

Computer'க்கு நீ எந்த விஷயத்தை உள்ளே அளிக்கிறாயோ... அதைத்தான் அது தெரிவிக்கும்! புதிதாக எதையும் அல்ல...!


Computer'ரை படைத்த மனிதன்! Computer'ரை விட மேன்மையானவன்!

உன் மூளையே ஒரு கம்ப்யூட்டர்! எப்பொழுதோ நடந்தவை ஆயினும் , எந்த விஷயமாக இருந்தாலும், உன் நினைவில் வைத்துக் கொள்கிறாய்... அல்லவா! 

You Are the Computer!

காலில் கொசு கடித்தால்... நீங்கள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தாலும் உங்கள் கைகள் அந்த கொசுவை உடனே விரட்ட செயல்படுகின்றன...! 

கால்களின் முன் ஒரு முள் தென்பட்டால்... உடனே அதைத் தாண்டிச் செல்கிறீர்கள்!

இதுவே Magnetism (காந்தத்தன்மை) இதுவே Communication (தொடர்பியல்)


இங்கே பல படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்... அவர்களிடம் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால்.. சிலர் MTech என்பார்கள்! MTech என்ன ?  என்றால் Master of Technology (தொழில்நுட்பத்தில் வல்லுநர்) என்பார்கள்! 

எது தொழில்நுட்பம்? யார் மாஸ்டர்? 

ஆக பதில் தவறானதே! 


யார் மாஸ்டர் தெரியுமா?

புலன் கட்டுப்பாடு (Sense control) உடையவரே மாஸ்டர்!

God is the only Master


உங்களுக்கு அறிவு இருக்கிறது! அதை சமுதாய நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும்! 

சமுதாயத்தின் உள்புகுந்து "Take Knowledge" (அறிவை எடுத்துக் கொள்ளுங்கள்) என மனம் திறந்து செயல்புரிய வேண்டும்! 

அப்போது தான் அது Technology (தொழில்நுட்பம்)

உங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது Technology (தொழில்நுட்பம்) ஆக இல்லாமல் அது Trick-nology (தந்திரநுட்பம்) ஆக மாறிவிடுகிறது!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம்| பக்கம் : 205)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக