தலைப்பு

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

விநாயகராக காட்சி அளித்த ஸ்ரீ சத்ய சாயி பரம்பொருள்!

ரமண மகரிஷியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அமிர்தானந்தரின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்... 

பகவான் ரமண மகரிஷியின் சீடராக இருந்த அமிர்தானந்த சுவாமிகள் சின்னஞ்சிறு வயதில் தினசரி செய்து வந்த கணபதி ஹோமத்தின் பிரதிபலனாக அவரின் 78 ஆவது வயதில் இறைவன் சத்ய சாயியை தரிசிக்கும் பெரும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.. அந்த தெய்வீக சந்தர்ப்பத்தில் இறைவன் சத்ய சாயி அவருக்கு சாட்சாத் விநாயகப் பெருமானாக காட்சி அளித்த அற்புத அனுபவம் இதோ...

புலால் உண்பது மெய்ஞானம் கிடைப்பதற்கு தடையாக இருக்குமா?

அன்பே கடவுள் என்பது இந்து மதத்தின் தத்துவம். தன்னை காப்பாற்ற யாரும் இல்லாதவர்களைக் கடவுள் காக்கிறார். இதையே புராண வரலாறுகள் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லுகின்றன... ஆகையால் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாத மிருகங்களை வதைத்து உணவாக்கிக் கொள்வதற்குத் தெய்வ சம்மதம் கிடைக்காது! மெய்ஞானத்தை உணர விரும்புகிறவர் இந்த அடிப்படையைக் கவனிக்க வேண்டும்! 

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ காபூல் தபஸ்வி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு ஆன்மீக தபஸ்வி எவ்வாறு பாபாவை அவரது சிறுவயதில் தரிசித்தார்? என்ன ரூபம் அவர் கண்டார்? எப்படிப் பரவசப்பட்டார்? பிறகு அவர் என்ன ஆனார்? எனும் அதிசய அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 27 ஆகஸ்ட், 2022

பாபாவே "பாட்டி பாட்டி" என அழைத்த ஒரு பக்த பெருமாட்டி!

எவ்வாறெல்லாம் தனது பக்தர்களிடம் பாபா பரிசுத்த பேரன்பையும் பரிவையும் அதில் பரிபக்குவத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த்து பாதுகாத்தார் எனும் இதய அணுக்கப் பதிவு சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

"ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்" திரைப்படமாக விரைவில்...

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை பற்றி இரண்டு பாகங்களாக  உருவாக இருக்கும் பிரம்மாண்டமான  திரைப்படமும்... அதைச் சார்ந்த மிக பிரம்மிப்பூட்டும் வியப்புமிகு செய்திகளும்...

நமது ஐம்புலன்களின் முக்கியமாக நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வது ஏன்?

"நாவை அடக்கினால் நாம் ஞானியாகிவிடுவோம்!" என்று சுலபமான ஒரு வழியை கற்றுக் கொடுக்கிறார் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி...

தெய்வம் மனுஷ ரூபத்தில் தான் வரும்! | Actress Lakshmi Sivachandran | Sathya Sai Baba

இந்தியத் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம் லட்சுமி. தனித்துவமான நடிப்புக்குச் சொந்தக்காரரான இவருக்கு மாநில அரசு விருது, ஃபிலிம் ஃபேர் விருது, தேசிய விருது என விருதுகள் விலாசம் தேடிவந்தவண்ணம் இருந்தன. நடிப்புத்துறையில் தனிமுத்திரை பதித்த இவரிடம் அவரின் ஆன்மிகம் குறித்துக்கேட்டோம். சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிகழ்ந்த அற்புதம், புட்டப்பர்த்தியில் நிகழ்ந்த பரவச சாயி தரிசனம் என பல்வேறு ஆன்மிக நினைவுகளைப் பகிர்கிறார் திருமதி லட்சுமி சிவச்சந்திரன். 

புதன், 24 ஆகஸ்ட், 2022

தாம்பூலத் தட்டோடு வந்த ராமய்யா தம்பதிகளை ராகு காலம் முடியும் வரை காக்க வைத்த பாபா!

பாபாவுக்கு யாவரும் சமமே! ஈ முதல் நாய் வரை... பறவை முதல் மனிதர் வரை ஒன்றாகவே பேரன்பு செய்தவர் பாபா...! அந்த வரிசையில் ஒரு ஏழைத் தம்பதியினரை வேண்டும் என்றே நீண்ட நேரம் காக்க வைக்கிறார் ... ஏன்? எதற்காக? அவர்கள் ஏழை என்பதாலா? பரவசமான பதில் சுவாரஸ்யமாய் இதோ...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ தாகூர் அபிராம் பரமஹம்சா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரிசாவில் உலவிய மகான் எவ்வாறு தனது பக்தரை பாபாவிடம் தனது சமாதிக்கு பிறகு ஆற்றுப்படுத்துகிறார் என்பதும்... குருவே இறைவனிடம் வழிகாட்டுகிறார் எனும் சத்தியமும் சுவாரஸ்யப் பகிர்வாக இதோ...

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

அச்சமின்றி நகர் சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளுங்கள்!!


ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காலத்திலேயே உயிரூட்டப்பட்ட நகரசங்கீர்த்தனம் ஷிர்டி காலம் தொடங்கி பர்த்தி காலம் என பூத்துக் குலுங்குகிறது... இதயத்தில் பாபாவை சுமப்பவர் எவரும் பயத்தையும் தயக்கத்தையும் சுமப்பதில்லை.. எனவே நகரசங்கீர்த்தன கீத உலா குறித்தான சந்தேகங்களை தெளிவாக்குகிறார் இறைவன் பாபாவே இதோ...

சுவாமி ஸ்ரீ ஆத்மானந்தா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

தனது குரு உத்தரவு தந்த பிறகே எவ்வாறு ஒரு தூய துறவி பாபாவை பற்றி அகம் திறக்கிறார் என்பதையும்... பாபா யார்? எனும் பிரபஞ்ச ரகசியத்தை எந்த இடத்தில்? யார் சென்று கேட்க? எவ்வாறு அதனை வெளிப்படுத்தினார்? என்பது சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ Y.V குடும்பராவ் | புண்ணியாத்மாக்கள்

சுவாமியின் பெங்களுரு பிருந்தாவன ஆசிரமத்தை எவ்வாறு ஶ்ரீ ராமபிரம்மம் அவர்கள் திறம்பட நிர்வகித்தாரோ… அதேவிதமாக புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தை நிர்வகித்தவர் திரு.குடும்பராவ் அவர்கள். பாபாவுக்கு சேவை செய்வதற்காகவே தன் பணியை (துணை நீதிபதியாக பதவிவுயர்வு பெற்றிருந்த சமயத்தில்) ராஜினாமா செய்தவர். பிரசாந்தி நிலையத்தில் குடியேறி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சேவையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொண்ட புண்ணியாத்மா திரு. குடும்பராவ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பி இதோ…

வேதங்களின் நால்வகை வழிகாட்டிகள்!!

மனிதன் தனது அனைத்து ஆசைகளையும் துறக்க இயலாது. மனித வாழ்வு சிறக்க, வேதங்கள் நான்கு வழிமுறைகளை எடுத்தியம்புகின்றன. அவை, அறம் பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோட்சம்) என்கிற நான்கு வழிகாட்டி நெறிமுறைகளாகும்.... 

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

பேராசிரியர் N. கஸ்தூரி | புண்ணியாத்மாக்கள்

மூன்றான ஸ்ரீ சாயி அவதாரங்களில் ஷீரடிசாயி மற்றும் சத்யசாயிக்கு அடுத்தபடியாக "பிரேமசாயி"  அவதாரம் வரவிருப்பது நாமனைவரும் அறிந்ததே. பிரேமசாயி பாபாவின் தாயார் ஆகின்ற பாக்கியம் பெற்ற உன்னத ஆன்மா, சேவைத்திலகம் தெய்வத்திரு. கஸ்தூரி அவர்கள். 1990களின் முற்பகுதியில், மாணவர்களுடனான ஒரு நேர்காணலின் போது சுவாமி, "பேராசிரியர் கஸ்தூரி பிரேமசாயி பாபாவின் தாயாக இருப்பார்அவர் இப்போது ஏற்கனவே மறுபிறவி எடுத்துள்ளார்" ​​என்று கூறினார். அப்பேற்பட்ட உன்னத ஆத்மா திரு.கஸ்தூரி அவர்களைப்பற்றி நினைவுகூர்ந்து ஆனந்தப்பட இந்தப்பதிவு.

புதன், 10 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ யோகி சுப்புராய மகோதயா | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு ஒரு யோகி பாபாவை உணர்கிறார்.. பாபா அந்த யோகிக்கு எந்தவகையான அனுபவம் யாவும் தந்திருக்கிறார்... அவர் அடியொற்றிய அணுக்கமானவர்களுக்கு பாபா எவ்வகை அனுபவம் தந்திருக்கிறார்.. சுவாரஸ்ய சுருக்கமாக இதோ...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

உத்தம பக்தர்களுக்காக உருகிவிடுகிற நவநீத இதய சாயி!

பாபா எவ்வாறெல்லாம் தனது பக்தர்களுக்காக தன்னையே பல சந்தர்ப்பங்களில் அர்ப்பணிக்கிறார் என்பதற்கான சிறு சிறு உதாரணங்கள் இதோ...

தடையறாது ஓடும் ஜீவநதி ஸ்ரீ சத்யசாயி சங்கல்ப பணிகள்!

பகவான் காட்டிய வழிகளில் நடந்து அவருடைய தெய்வீக சங்கல்ப சேவைப் பணிகளில் ஈடுபடுவது என்பது அவர் நமக்கு காட்டும் அனுக்ரஹமாகும். அவருடைய தெய்வீகப் பணிகளில் நாம் ஈடுபடுவதால்தான் அப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக ஒரு எண்ணம் சிலர் மனதில் எழலாம். ஆனால் பகவான் கூறுவதென்ன. படித்து தெளிவடைவோம்.

சனி, 6 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ நாராயணகிரி சுவாமிகள் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு தூய துறவி எவ்வாறு ஆன்மீகத்தில் மகானாக அகமாற்றம் அடைந்தார்...? பாபாவை எந்த வடிவில் தனது முதல் தரிசனத்தில் கண்டார்...? சமாதி அடைகையில் அவரது குரு அவருக்கு சொல்லிய ரகசியம் என்ன? தன் காலில் விழுகிற போது அன்பர்களிடம் அவர் சொன்ன செய்தி என்ன? சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ சாயி வரலட்சுமி வரம் அருளி வளம் பெற்ற பக்தர்களின் லட்சுமி கடாட்ச அனுபவங்கள்!!

இறைவன் சிறு பார்வையே புற செல்வத்தோடு அக செல்வத்தையும் சேர்த்தே நமக்கு தருகிறது... புற செல்வத்தோடு அக செல்வமும் சேர வாழ்க்கையிலே பக்குவம் விளைகிறது... குசேலரை குபேரராக்கிய அதே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே இப்போதும் நமக்கு நலமளித்து வளமளித்து வருகிறார்... அதற்கான ஆதார சம்பவங்கள் இதோ...

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ ராமபிரம்மம் | புண்ணியாத்மாக்கள்

"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஸ்ரீ ராமபிரம்மம் இதோ...!

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பாபாவின் சமாதியை முன்பே துல்லியமாக தெரிவித்த ஸ்ரீ சிவபால யோகி மகராஜ்!!

எவ்வாறு ஒரு மகான் பாபாவிடம் பக்தி பூண்டிருக்கிறார்... எவ்வாறு அவர் பாபாவிடம் நடந்து கொள்கிறார்... 2011 ல் பாபா சமாதி ஆவார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே எந்த சந்தர்ப்பத்தில் யாரிடம் பகிர்ந்து கொள்கிறார் ... மிக சுவாரஸ்யமான பதிலாக... பதிவாக இதோ...

திங்கள், 1 ஆகஸ்ட், 2022