தலைப்பு

சனி, 16 செப்டம்பர், 2023

வாழ்வில் வளமையை வரமாக சேர்க்கும் வற்றாத இரு அவதார செல்வங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் தனது பக்தர்களின் அகமும் புறமும் வளம் சேர்த்தன எனும் ஆச்சர்யப் பொருத்த திருச்சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 14 செப்டம்பர், 2023

தற்கொலை புரிய இருந்தவரை சிறையில் அடைத்து சிறைச்சாலையில் காட்சி கொடுத்த பாபா!

தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக இருந்த ஒருவரை பாபா எவ்வாறு இருமுறை தடுத்தாட் கொள்கிறார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 13 செப்டம்பர், 2023

பரம்பொருள் பாபா - சூட்சும அறுவை சிகிச்சை நிபுணர்!நான் ஒரு ஆன்மீக குடும்பத்தில் பிறந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரமாக நான் நினைக்கிறேன். எனது தாயார் ஸ்ரீ ஷிரடி சாயிபாபாவின் தீவிர பக்தர். எனது மூத்த சகோதரருக்கும் எனக்கும் அவரது மகிமைகளைப் பாட கற்றுக் கொடுத்து தினசரி காலை மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பாட வைத்து பக்தி மார்க்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். என் தந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகத்தைப் பெற்று, ஆன்மீக பயிற்சியின் அத்வைத அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி ஆன்மீகத் தேடுலில் ஈடுபட்டிருந்தவர். எங்கள் தந்தை எங்களுக்கு ஞான மார்க்கம் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். எனது சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் ஆன்மீக வளர்ச்சியில் எனது நாயகனாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்த வந்த என் மூத்த சகோதரர் எனக்குக் கிடைத்த மற்றொரு வரம்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

இறந்த ஆறு வயது உடலுக்கு மீண்டும் உயிர் அளித்த இறவா இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!

எவ்வாறு ஆறே ஆறு வயதான ஒரு குழந்தையின் இறந்த உடலுக்கு பாபா எவ்வகையில் மீண்டும் உயிர் அளிக்கிறார் என்கிற பரவச மகிமா சம்பவம், சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கருத்தரிக்கக் கூடாத பெண்மணிக்கு சாயி கீர்த்தியை அருளிய சாயி கீர்த்தி!

கர்ப்பம் தரிக்கவே இயலாத உடல் கேட்டில் இருந்த பெண்மணிக்கு பேரிறைவன் பாபா நிகழ்த்திய மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ..!

சனி, 9 செப்டம்பர், 2023

பெயரை உச்சரித்தாலே காக்க ஓடோடி வந்திடும் இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு தங்களது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே இரு பெரும் அவதாரங்களும் ஆபத்தில் உதவுகின்றனர் எனும் ஆச்சர்யப் பொருத்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

"ஸ்ரீ சத்ய சாயி - மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர்" - ரிஷி பரத்வாஜ்

ஸ்வாமியே மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர். சிறந்த மருத்துவர்கள் தோல்வியடையும் போது, அவர் வெற்றி பெறுகிறார்! இதை பற்றி சொல்வதற்கு எனக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது...

பேராசிரியர்களுக்கு ஞானாசிரியர் பாபாவின் வழிகாட்டுதல்கள்!

அறிவுரை வழங்கும் ஆசிரியர்களுக்கு யார் அறிவுரை வழங்குவது? இறைவனே! ஆம் அறிவுக்கு ஞானமே அறிவுரை வழங்கி நல்ல வழியில் ஆற்றுப்படுத்த முடியும்! அத்தகைய ஆற்றுப்படுத்துதலை இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே கீதோபதேசமாய் புரிகிறார் இதோ...

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

இறைவன் பாபா மடியில் தலை சாய்த்து இன்னுயிர் நீத்த மகான்!

ஸ்ரீ சத்ய சாயி பாபாவாரு அவர்களின் பாட்டனார், ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள் தவ வாழ்வு வாழ்ந்த தயாசீலர். நூற்றுப்பத்தாண்டு நிறைவாழ்வு வாழ்ந்து, மண்ணுலகில் அவதாரம் எடுத்த பாபாவை இறைவன் என அறிந்து அவர் மடியில் படுத்தபடி விண்ணுலகம் ஏகிய பேற்றைப் பெற்றவர்...

சனி, 2 செப்டம்பர், 2023

இரு அவதாரங்களும் வேற்றுலகத்திற்கு அழைத்துச் செல்லுதல்! : அமானுஷ்ய ஆச்சர்ய அனுபவங்கள்!

எவ்வாறு இரண்டு அவதாரங்களுமே ஒரே விதமான அனுபவங்களை யுகம் கடந்தும் வழங்கி வருகின்றன எனும் மெய் சிலிர்க்கும் அரிய அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...

புதன், 30 ஆகஸ்ட், 2023

நான்கு மாதங்கள் கடந்தும் அழுகாத கல்லறைப் பிணம் - பாபாவின் விசித்திர லீலை!

ஒரு மருத்துவர் அவர் பாபா பக்தர், ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார், அது போலீஸ் கேஸ் வரை நீள்கிறது! அது என்ன பிரச்சனை? எப்படி அவர் அதிலிருந்து மீள்கிறார்? விறு விறு சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மூன்று நாட்களே உயிரோடு இருக்கப் போகிற மூன்று மாத கர்ப்பிணியை பாபா காப்பாற்றிய அதிசயம்!

எவ்வாறு உயிர் போகிற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணியை பாபா காப்பாற்றுகிறார், ஆச்சர்யமான அதிசயம் விறு விறு என இதோ...

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

இறந்தவர்களை உயிர்ப்பித்த இறவா இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் இறைவன் அவதரித்து  இறந்தவர்களை உயிர்ப்பித்து காத்தருள்கிறார் எனும் ஆச்சர்யப் பதிவு சான்றாதாரத்தோடு சுவாரஸ்யமாக இதோ...

சனி, 26 ஆகஸ்ட், 2023

சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்தின் பெயர் "சிவசக்தி"

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின் பேசிய பிரதமர் மோடி, "நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என அழைக்கப்படவுள்ளது. அதுபோல லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். 

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

சந்திராயன் சரித்திரத்தில் சாதனை படைத்த சாயி மாணவிகள்!

கல்வி வியாபாரப் பொருளாகி கைக்கெட்டாத விலையுடன் விற்கப்படும் அவல நிலையைக் கண்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா , மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கவும், அவர்களது குண நல மேம்பாட்டுக்கும்  ஸ்ரீ சத்ய சாயி உயர்க் கல்வி நிறுனத்தை தோற்றுவித்தார்.  புட்ட பர்த்தியிலும், பெங்களூரிலும்  கலாசாலைகளை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்களை அதில் இணைத்து கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை உலகெங்கும் அறியச் செய்தார். அது மட்டுமின்றி  மாணவிகளுக்காக அனந்தபூரில் ஒரு கலாசாலையையும்  நிறுவி, நல் முத்துக்களாக மாணவிகளை அதில் பயிற்றுவித்து அருளினார். இன்று உலகெங்கும் சாயி மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பு வகித்து மாதவ சேவையாக மானவ சேவை ஆற்றுகின்றனர்.


புதன், 23 ஆகஸ்ட், 2023

ஆதிவாசி மொழியில் உபநிஷதங்களை மொழி பெயர்க்க வைத்த ஆதிபுருஷ சாயி!

உபநிஷதங்கள் வேத ஆழம் மிகுந்தவை... அவற்றை அனைவருக்கும் தெரிந்த மொழியில் எழுதுவதே சற்று சிரமமான காரியம்.. அதிலும் சற்று கடினமான ஆதிவாசி மொழியில் இந்த ஆதி ஞானத்தை மொழி பெயர்ப்பது மனித சிந்தனையில் கூட விரைவில் எழாத விஷயம், இப்படி இருக்க எப்படி பாபாவால் இது யாருக்கு எவ்வாறு சாத்தியப்பட்டது? சுவாரஸ்யமாக இதோ... 

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ சத்ய சாயிபாபா ~ என் வாழ்க்கையின் ஒளி - லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd)

லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd) அவர்களுக்கு பாபாவை பற்றி எப்படி தெரிய வருகிறது என்பது பற்றியும், இவரது வாழ்க்கை முறைகளை சுவாமி எவ்வாறு மேம்படுத்துகிறார், வேண்டுகோள்களை ஏற்கிறார், நெருக்கடியான சமயங்களில் சுவாமி எவ்வாறு அருள் பாலிக்கிறார் என்பதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறைவனுடனான அவருடைய அனுபவங்களில் சில.... 

சனி, 19 ஆகஸ்ட், 2023

சம்பவங்களையே மாற்றி அமைத்திடும் இரு பெரும் சம்பூர்ண அவதாரங்கள்!

எவ்வாறு மனித இயலாமயை நீக்க பெரும் அவதாரங்களும் யுகம் விட்டு யுகம் தாண்டியும் தனது நீள் கருணைக் கரங்களை நீட்டுகிறது... ஆன்மாவை தேற்றுகிறது... கடைத்தேற்றுகிறது எனும் ஆச்சர்யம் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 16 ஆகஸ்ட், 2023

ஸ்ரீ V.K நரசிம்மன் | புண்ணியாத்மாக்கள்

ஸ்ரீ V.K. நரசிம்மன் அவர்கள், சர்வதேச அளவில் பிரபலமான பத்திரிகையாளர். அவர் தி இந்து நாளிதழின் துணை ஆசிரியராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆராய்ந்து எழுதும் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர். தேசிய விடுதலை, சமூகநீதி மற்றும் தார்மீக விழுமியங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். 1980ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்திற்கு வந்துசேர்ந்த அவர், சேவைத் திலகம் பேராசிரியர் கஸ்தூரிக்குப் பின்னர் 1987 முதல் 2000 வரை... சுவாமியின் ஆன்மீக மாத இதழான சனாதன சாரதியின் ஆசிரியராக பணியாற்றும் பெரும்பாக்கியத்தைப் பெற்றவர் திரு. நரசிம்மன் அவர்கள்.

சனி, 12 ஆகஸ்ட், 2023

மதுரா அமைச்சர் அக்ரூரரும் நிலா மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சொல்லிய வார்த்தை ஒன்றே!!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களின் மகிமையை அனுபவித்தவர்கள் சொல்லிய வார்த்தைகள் துல்லியமாக பொருந்துகின்றன என்பதனை விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இயற்கைக்கே இரு பேரவதாரங்களின் பாதங்களால் எழுந்த பேரார்வமும்.. குதூகலமும்...!

எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய இரு அவதாரங்களின் பாதங்களை தீண்ட இந்த இயற்கையே எவ்வாறு ஆர்வப்பட்டது.. பாதம் அடைந்து எவ்வாறு குதூகலப்பட்டது எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

புதன், 9 ஆகஸ்ட், 2023

சாயி சுப்ரமண்யராக தோன்றி தரிசனம் கொடுத்த ராஜ நாகம்!


எவ்வாறு சுப்ரமண்ய தரிசனம் நேர்ந்தது? என்ன சூழ்நிலையில்? எதனால்? யாருக்கு? அதற்கும் பேரிறைவன் பாபாவுக்கும் என்ன தொடர்பு? சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

"பாபா தான் என்னை சேவை செய்ய தூண்டியது!" -மனம் திறக்கிறார் திரு.ஹரி ரஞ்சன் ராவ், IAS

திரு. ஹரி ரஞ்சன் ராவ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தற்போது, மத்தியப் பிரதேசம், போபால், முதல்வர் அலுவலகத்தின் செயலாளராக உள்ளார். இவர் பல்வேறுபட்ட நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட ஆட்சியராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

நார்வே நபருக்கு வைத்த செய்வினையும், பாபாவிடம் அவர் சேர்ந்த ஜெயவினையும்!

பொறாமை கொண்டு நார்வே நபருக்கு வைக்கப்பட்ட மாந்த்ரீக செய்வினையும், அதிலிருந்து அவர் எவ்வாறு தப்பித்து ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா பிறகு ஸ்ரீ சத்ய சாயி பாபா என இரு அவதாரங்களோடும் இணைந்து மேன்மை அடைகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

இரு கடவுளவதாரங்களின் கட்டளைக்கு எப்போதும் காத்திருந்த வானுலக தேவதைகள்!

எவ்வாறு இரண்டு அவதாரங்களிலும் வானுலக தேவதைகள் அவதார வழிபாடு செய்து அவர்களின் கட்டளைகளை ஏற்று உபச்சாரம் செய்தன எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...! 

புதன், 2 ஆகஸ்ட், 2023

பாபா தனது மாணவர்களுடன் பார்த்த வீர அபிமன்யு திரைப்படம்!

நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு எவ்வாறு கொடைக்கானல் பசுமையானது என்றும், அதை பரவசமோடு தரிசித்த தாவரவியல் பேராசிரியர் வாழ்வில் நடந்த வேறுபல சுவாரஸ்யமான சாயி அனுபவங்களும் இதோ...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

இரு அவதாரங்களையும் ஆண்களை விட அதிகம் உணர்ந்து கொண்டு முதலில் பக்தி செலுத்திய பெண்மணிகள்!

எவ்வாறு இரண்டு யுகங்களிலும் பெண்களே ஆண்களை விட அவதாரங்களை நொடிப் போதில் உணர்ந்து பக்தி செலுத்தி வருகிறார்கள் எனும் ஆச்சர்ய பொருத்த அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 29 ஜூலை, 2023

டாக்டர் காடியா | புண்ணியாத்மாக்கள்

டாக்டர் காடியா என்று அன்போடு சாயி வட்டத்தில் அழைக்கப்படும் ஸ்ரீ திருபாய் ஜக்ஜீவன்தாஸ் காடியா, நவவித பக்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள சரணாகதி மற்றும் சேவை ஆகிய இரண்டின் அடையாளமாக விளங்கியவர். 1960ம் ஆண்டு தொடங்கி 2009ல் தன்னுடைய கடைசிமூச்சிருக்கும் வரை சிறந்த பக்தராக, சேவகராக, பஜன் பாடகராக, ஆன்மீக வழிகாட்டியாக.. மொத்தத்தில் சாயி பக்தர்கள் மத்தியில் ஒரு உதாரண புருஷராக வாழ்ந்தவர்.  ஒரு மகரிஷிக்கு ஒப்பாக வாழ்ந்த டாக்டர் காடியா அவர்கள், தன்னை "தாசன்" (இறைவனுக்குப் பணியாளன்) என்றும், "தாசானுதாசன்" (இறைவனின் அடியார்க்கு அடியவன்) என்றும் கூறி மகிழ்பவர்.

வியாழன், 27 ஜூலை, 2023

"சில கோமாளி மனிதர்கள் என்னை ஏமாளியாக நினைக்கிறார்கள்!" -- பாபாவின் தடாலடி செய்தி!

எவ்வாறு ஒரு பக்தருக்கு உண்மையை உள்ளது உள்ளபடி இதுவரை இல்லாமல் வெளிப்படையாக இறைவன் பாபா பகிர்கிறார் என்பது மிக சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 25 ஜூலை, 2023

நன்கொடை தேவையில்லை என்று செக்'கை பாபா திருப்பி அனுப்பினார்!

அன்று போல் அந்தப் பொற்காலம் இன்று வாராதோ என்ற அளவிற்கு பேரிறைவன் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 24 ஜூலை, 2023

ஒரே சமயத்தில் பல ரூபங்கள் எடுத்த இரு பேரவதாரங்கள்!

எவ்வாறு ஒரே சமயத்தில் பற்பல ரூபங்கள் எடுத்து பக்தரை காக்கிறது இந்த இரு பரிபூர்ண அவதாரங்கள் எனும் ஆச்சர்ய அனுபவங்கள் சில சுவாரஸ்யமாக இதோ...! 

சனி, 22 ஜூலை, 2023

தூக்குக் கயிற்றில் தொங்கிய பெண்மணிக்கு பாபா நிகழ்த்திய பரவச அற்புதம்!

எவ்வாறு ஒரு எளிய காபி தோட்டத்துக் கூலித் தொழிலாளி வாழ்வில் நிகழ்ந்த மெய்சிலிர்க்கும் அரிய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 20 ஜூலை, 2023

இரு அவதாரங்களின் சிறு வயதிலேயே அவர்களை இறைவன் என உணர்ந்த மகத்துவர்கள்!

எவ்வாறு இரு பெரும் அவதாரங்கள் தங்களின் அவதார ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு முன்பே  அவர்களை இறைவன் என யார் யார் உணர்ந்தார்கள்? சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்! மிகப் பொருத்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 19 ஜூலை, 2023

"ஈகோ இருக்கும்வரை சுவாமியை நெருங்க முடியாது!" -ஸ்ரீ பெஸ்தோன்ஜி பொச்சா

1967'களில் ஆங்கில சனாதன சாரதியில் வெளியான அரிய அற்புத கட்டுரை... பேரிறைவன் பாபா பக்தரான பெஸ்தோன்ஜி பொச்சா அருளியது... அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற வியப்புமிகு தெய்வீக வரிகள் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 18 ஜூலை, 2023

ஏன் ஸ்ரீ சத்ய சாயி பாபா விரைவிலேயே தன் உடலைத் துறந்தார்?

26/2/1965 ல் பிறக்கிற மோகன்ஜியை, "நீ என்னவாக ஆக விரும்புகிறாய்?" என்று ஆசிரியர் கேட்ட போது "தனியாக இருக்க விரும்புகிறேன்!" என்று பதில் கூறியிருக்கிறார்! கப்பல் தொழிற்சாலையில் 24 ஆண்டுகள் முதன்மை மேலாண்மையாளராக பணியாற்றுகிறார் மோகன்ஜி! 1992 ல் சரிதாவோடு திருமணம்! அம்மு என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது... அப்படியே பயணித்தால் அது சராசரி வாழ்க்கை... அடிபட்டுப் பயணிக்கிற அதிர்ச்சி ஆன்மீக வாழ்வைத் தருகிறது...! அது மோகன்ஜி விஷயத்தில் உண்மையாகிறது!

திங்கள், 17 ஜூலை, 2023

இரு பேரவதாரங்கள் செய்த தெய்வீகப் பிரகடனங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தங்களது பரம தெய்வீகத்தை எந்தெந்த சூழ்நிலைகளில் பறைசாற்றின எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 15 ஜூலை, 2023

ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் | புண்ணியாத்மாக்கள்

ஒரு ஊரளவிலான  சாதாரண பதவிகள் கிடைத்தாலே மக்கள் நிலை தடுமாறி கடவுளையே அலட்சியம் செய்கின்ற கலிகாலம் இது. அதில் முதலமைச்சர், இரண்டு மாநிலங்களுக்கு  கவர்னர் என்றெல்லாம் பொறுப்பு வகித்த ஒருவர், தன்னை ஒரு பணிவான பக்தராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டு உதாரணமாக வாழ்ந்தார் என்பது போற்றத்தக்க அதிசயமே!. பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின்  நேரடி வாய்மொழியில் "உன்னதமான ஆன்மா" என்று பெயரெடுத்த ஸ்ரீ புர்குல ராமகிருஷ்ணா ராவ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளின் பாகம் ஒன்று புண்ணியாத்மாக்கள் வரிசையில் இதோ..


புதன், 12 ஜூலை, 2023

பாம்புகளிடம் இருந்து பக்தரை காப்பாற்றிய இரு பூர்ணாவதாரங்கள்!


எவ்வாறு இரு யுகங்களிலும் இரண்டு அவதாரங்களும் பக்தரை கொடும் பாம்புகளிடம் இருந்தும் பாம்பு விஷங்களில் இருந்தும் காப்பாற்றியது? எனும் பேராச்சர்ய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ.... 

செவ்வாய், 11 ஜூலை, 2023

1960'களின் பழைய பக்தர்கள் பகிரும் பாபாவின் பரம விநோதங்கள்!!

பழைய பக்தர்களின் அனுபவங்கள் ஆன்மீகப் பொக்கிஷங்கள்! தன்னை திறந்து காண்பித்த தெய்வத்திடம் தன்னை மறந்து காண்பித்த தூய பக்தி அவர்களுடையது! அத்தகைய பக்தியை பறைசாற்றும் வண்ணம் நிகழ்ந்த அற்புதங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 10 ஜூலை, 2023

இடித்த பெரும் மழையில் இருந்து காத்த இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் இருட்டி வரும் வானிலையை தனது கைகளால் தடுத்து நிறுத்தி இன்னல் துடைத்தனர் எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஸ்ரீ சத்யசாயி கண்ணனின் கீதோபதேசங்கள்!


மாதா சரஸ்வதிக்கே வித்யை கொடுத்து, வேதங்களினால் கூட விளங்க முடியாதவரான பேரிறைவன் பாபா தன் கைப்பட பெரும் பிரம்ம ஞானத்தை எழுதியது என்பது கலி மனிதர்கள் மேல் பாபா காட்டிய பெருங்கருணை...‌ வாஹினிகளை நம் வாழ்க்கையாக்கவே பாபா எழுதி அளித்த வாஹினிகளின் தொகுப்பு இதோ...

சனி, 8 ஜூலை, 2023

காட்டுத் தீயை நொடியில் அணைத்த இரு அவதாரங்கள்!

எவ்வாறு படபடவென சூழ்ந்த காட்டுமிராண்டித்தனமான காட்டுத் தீயை கண்ணிமைக்கும் நொடியில் அணைத்து இரு அவதாரங்களும் தங்களையே நம்பி வாழும் பக்தர்களை காத்தது? எனும் பேராச்சர்ய அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 6 ஜூலை, 2023

புதன், 5 ஜூலை, 2023

ஒவ்வொருவர் இதயத்திலும் நிறைந்திருக்கும் இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் தங்களை ஒன்றென உணர்த்தும் படியே நம் ஒவ்வொருவர் இதயத்தில் எப்படியாக இணைந்திருக்கின்றனர் என்பதை வாழ்க்கை அனுபவம் வழியாகவும் கீதை வழியாகவும் உணர்த்தும் உன்னத பதிவு சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 4 ஜூலை, 2023

கனவில் ஓம் எழுதி நேரில் சேர்த்த பாபாவின் ஓம்கார அற்புதம்!

எவ்வாறு ஒரு பக்தைக்கு பாபா கனவில் தோன்றி..  தான் வரும் அந்தக் கனவு கனவல்ல நிஜம் என்று உணர வைக்கிறார் எனும் அற்புத சம்பவம்.. சுறுக்கென்று சுவாரஸ்யமாக இதோ...

திங்கள், 3 ஜூலை, 2023

இரு அவதாரங்கள் காட்டிய விஸ்வரூப தரிசனம்!!

எவ்வாறு இரு அவதாரங்களும் வாய் வழியேவும் வாயில் வழியேவும் விஸ்வரூப தரிசனம் காட்டி தங்களது இறைமையை உணர வைத்தார்கள் எனும் பேராச்சர்யப் பதிவு அமானுஷ்யமாக இதோ...!

வியாழன், 29 ஜூன், 2023

திசைதோறும் தியான நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் சாயி வட விருட்சம்!

வட விருட்சம் ஏன் உருவானது? எதற்காக உருவானது? அதனுடைய முக்கியத்துவம் என்ன? மற்ற மரங்களை போல் அது வெறும் ஒரு மரமா? உண்மைகள் உடைக்கப்பட்டு ஆன்மீக உற்சவம் ஏறுகிறது சுவாரஸ்யமாக இதோ...