எவ்வாறு தங்களது பக்தர் வழி இறைவன் பாபா தன்னை யார் என்று இமய யோகி வழி அகில உலகமே உணரும் வகையில் நிகழ்ந்த அற்புத சம்பவம் மெய்சிலிர்க்கும் வண்ணம் சுவாரஸ்யமாக இதோ...
அது 1972. இல்லறத் துறவிகளான சஞ்ஜெய் - மீரா இருவரும் லக்நவ்'விலிருந்து ரிஷிகேஷ் வருகிறார்கள்! வேத நிகேதன் தாமில் தங்கி இருக்கிறார்கள்! அங்கு தங்கி இருந்த ஒவ்வொரு நாளும் சாது சன்னியாசிகளின் தரிசனம் பெற வேண்டி இருவரும் தேடிக் கொண்டே செல்கின்றனர்!
அந்த சமயத்தில் தான் இமய யோகி டாட் வாலே பாபாவை தரிசிக்க நேர்கிறது! அவர் பூத்நாத் குகை- ஸ்வர்காஸ்ரம ரிஷிகேசத்தில் வசிக்கிறார்!
பெரும்காடு சூழ் உயர்ந்த குகை அது! அந்த குகைக்குள் இல்லறத்துறவிகள் இருவரும் அவரை சந்திக்கிறார்கள்!
"நாங்கள் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் ஆசிரமத்திலிருந்து வந்திருக்கிறோம்! இப்போது ரிஷிகேசத்தில் வேத நிகேதனில் ஸ்ரீ முனிஷானந்த் ஜி ஆசிரமத்தில் தங்கி இருக்கிறோம்!" என்று அந்த இல்லறத்துறவிகள் பதில் சொல்கின்றனர்! அதைக் கேட்ட நொடி அவர்
"சத்திய உலகத்தை விட்டு ஏன் அசத்திய உலகிற்கு வந்தீர்கள்? அவர் ஒருவரே (ஸ்ரீ சத்ய சாயி பாபா) பூரண சத்தியம்! மற்றதெல்லாம் அசத்தியம்! எனக்கு "ஸ்ரீ சத்ய சாயி பாபா" மகிமை மற்றும் திவ்யத்துவத்தைப் பற்றி நன்கு தெரியும்! அவர் தான் சுர்தாஸ் சுவாமி சரணானந்திற்கு 5 நிமிடம் வரை கண்பார்வை கொடுத்தார்! அந்த 5 நிமிடங்களிலேயே சரணானந்த் ஜி ஸ்ரீ சத்யசாயிபாபா கலியுக அவதாரம் என்றும்... சாட்சாத் அந்த மகாதேவனே அவதரித்திருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார்! அவருடைய ரூபத்தை சுவாமி சுர்தாஸ் தனது கண்களில் நிரப்பிக் கொண்ட உடன் மறுபடியும் கண் பார்வை போய்விட்டன...! சுவாமி சுர்தாஸ் தன்யனானார்! நான் இப்படி இருந்துவிட்டேன்! அவருடைய தரிசனத்தையும் பார்க்க முடியவில்லை!ஸ்ரீ சத்ய சாயி பாபாவிடம் "அபாத் கதி" (எந்த வித கட்டளையும் அடங்குதலும் இல்லாத கதி) இருக்கிறது! இந்த கல்பம் மொத்தத்திற்கும் சர்வ சிரேஷ்டமான (சிறப்பான) அவதாரம் அவருடையது! என்று கூறி டாட்வாலே பாபா ஸ்ரீ சத்யசாயிக்கு இருந்த படியே வந்தனங்கள் புரிந்தார்!
"நீங்கள் சுவாமியின் (பாபாவின்) பஜனைகளை பாடுவார்கள் அல்லவா? என்னிடமும் பாடுங்கள்!" எனக் கேட்டுக் கொள்கிறார்! அந்த இல்லறத்துறவிகளும் 4 பஜனை பாடல்களை பாடிவிட்டு ... அவரிடம் மீண்டுமொருமுறை அபிப்ராயங்கள் கேட்டுவிட்டு அவர்கள் தங்கிய ரிஷிகேஷின் வேத நிகேதனத்திற்கு வந்து சேர்கிறார்கள்!
(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 23 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)
இமய யோகியின் இந்தக் கூற்று இமய நீராடையான கங்கையைப் போல் புனிதமானது! யோகிகள் தங்களுக்குள் தாங்களாக நிறைந்து இறைவன் பாபாவை அனுபவிப்பவர்கள்! அவர்களுக்கு புற தரிசனம் - சம்பாஷனம் எதுவும் தேவையே இல்லை! அதுவே மிக உச்சபட்ச பக்தி நிலை! பக்தியே யோகத்தை அளிக்கிறது.. யோகம் ஞானத்தையும் ... ஞானமே பரகதியை வழங்குகிறது! இந்த பரகதியே 'அபாத் கதி' என டாட்வாலே பாபா குறிப்பிட்டது போல் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக வடிவெடுத்திருக்கிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக