தலைப்பு

வியாழன், 19 ஜனவரி, 2023

சுவாமி! ஆன்மீக சாதனையின் பயன்கள் உடனுக்குடன் எங்களுக்குக் கிடைப்பதில்லையே! இது பற்றி சுவாமி என்ன கூறுகிறீர்கள்?

உங்கள் அணுகுமுறையே தவறானது! நீங்கள் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! உதாரணத்திற்கு ஒன்றை சொல்கிறேன்! 

பிள்ளையை பள்ளியில் lkg'யில் சேர்த்து கல்வியை ஆரம்பித்து வைக்கிறீர்கள்... அப்படியே தொடர்ந்து 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, BA or B.Sc அல்லது B.Com போன்ற பட்டப்படிப்பு வரை எத்தனை ஆண்டுகள் பிடிக்கின்றன?!

எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும்! 

இந்த உலகியல் கல்விக்கே இவ்வளவு கஷ்டம் என்றால்... நித்ய சத்தியமாகிய (அழிவில்லாப் பேரொளி)  பரம்பொருளை நாடிச் செய்கின்ற ஆன்ம சாதனைக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்... எவ்வளவு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது! எனவே அதற்குரிய பலன்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 17)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக