நாம் ஒவ்வொரு நாளையும், அன்பினால் தொடங்குவோம்,
அன்பினால் நிரப்புவோம்,
அன்பினால் செலவிடுவோம்,
அன்பினால் முடிப்போம்,
இதுவே, இறைவனை அடையும் வழி. -பாபா
அதாவது வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பால் நிரப்பப்பட வேண்டும். இறைவனை அடைய அது ஒன்றே வழியாகும். சுவாமி கூறுகிறார், "என் வாழ்க்கையே எனது செய்தி" சுவாமியின் செய்தி அன்புதான்! சுவாமி தனது மாணவர்கள் அன்பால் நிரப்பப்பட வேண்டும் என விரும்புகிறார்.