தலைப்பு

சனி, 21 ஜனவரி, 2023

சுவாமி! ஆன்மீக சாதனா (ஆன்மீகப் பயிற்சி) தினசரி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?


ஆன்மீக சாதனா அத்தியாவசியமாக இருப்பதால் தான் அதை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி சொல்கிறேன்! 
பாத்திரங்களை தினமும் தேய்த்துக் கழுவுவதால் தான் அவை தூய்மையாக இருக்கின்றன! 
மன உறுதி, அசைக்க முடியாத நம்பிக்கை, பரிபூரண சரணாகதி இவை ஏற்படும் வரை இடைவிடாமல் நீங்கள் ஆன்ம சாதனையை கடைபிடித்தே ஆக வேண்டும்!

உதாரணத்திற்கு: நெற்பயிருக்கு தினமும் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்! அப்படிச் செய்யவில்லை என்றால் பயிர் காய்ந்து , கருகி , அழிந்துவிடும்! ஆனால் பனை , யூக்கலிப்டஸ் மரம் , ஆல மற்றும் அரச மரம் இவைகளுக்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை! அவை தானாகவே வளரும்...! இது வியப்பல்லவா! 


சிறு நெற்பயிர்களுக்கே அவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்றால் பெரிய பெரிய மரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? ஆனால் அப்படி இல்லையே! இதற்கு என்ன காரணம் எனில்... மரங்களில் உள்ள வேர் பூமியின் அடியாழத்தில் ஊடுருவிச் சென்று , ஆழத்தில் உள்ள நீர் நிலைக்கு உள்ளே தனக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்கின்றன... அதனால் நீங்கள் அவற்றுக்கு தினமும் நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை! 

அதே போல் மன உளைச்சல்கள் முழுவதும் அடங்கி , நம்பிக்கை ஆழமாக உறுதியாக ஊன்றும் வரை நீங்கள் தினசரி "ஆன்மீக சாதனா"வை கடைபிடித்தே ஆக வேண்டும்! இப்போது உங்கள் நம்பிக்கை எல்லாம் தினசரி நீர் ஊற்றிப் பராமரிக்கப்பட வேண்டிய நெற்பயிரைப் போல உள்ளது! எனவே உங்களுக்கு ஆன்மீக சாதனா தினசரி அத்தியாவசியமாக வேண்டும்!

(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 14) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக