தலைப்பு

திங்கள், 6 மார்ச், 2023

சுவாமி! நீங்கள் சிருஷ்டித்த (படைத்த) அனைத்தும் நல்லவையே என்கிறபோது தீய செயல்கள் எதிலிருந்து உருவாகின்றன?

சிருஷ்டி அனைத்தும் நல்லவையே! சிருஷ்டியில் தீயவை என்பது கிடையவே கிடையாது! கால மாற்றத்தினால் உங்களுக்கு நல்லவை தீயவை எனத் தோன்றுகின்றன!

இன்று நன்றாக இருக்கும் பழம் நாளையே அது உங்களால் ஜீரணிக்கப்பட்டு மலமாக மாறுகிறது! 

உண்மையில் இரண்டும் ஒன்றே தானே! கால மாற்றங்களே இதற்கு காரணம்! 

உங்கள் பார்வையில் நல்லன, கெட்டன என இருக்கிறதே தவிர, இறைவன் பார்வையில் அனைத்தும் நல்லவையே! இதில் சந்தேகமே வேண்டாம்!

இறைவன் அனைத்தையும் சிருஷ்டித்து (படைத்து) உங்களுக்கு அளித்துள்ளார்! அதைப் பயன்படுத்துவதில் தான் நல்லவை கெட்டவை என வருகின்றன...!


ஒரு உதாரணம்: வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்! அவற்றை சமைத்து உண்பது உங்களைப் பொறுத்ததே! 

எப்படி சமைக்கிறீர்களோ அதன்படிதான் ருசி இருக்கும்! 

எல்லாவற்றையும் எவ்வளவு முறையாக கலந்து சமைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ருசி சமையலில் இருக்கும்! உணவின் ருசி அதன்படியே அமைகின்றன!

இதில் சமையல் பொருட்கள் இறைவன் தருவது... சமையலோ நீங்கள் புரிவது... 

அதுபோல் உலகில் அனைத்தும் இறைவன் படைத்தது.. அதை‌ மிகச் சரியாக நேர்மையாக எப்படி முறைப்படி பயன்படுத்த வேண்டுமோ அது உங்களை பொறுத்ததே! உங்களின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான் நல்லவை தீயவை அமைகின்றன!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 185)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக