தலைப்பு

சனி, 11 பிப்ரவரி, 2023

ஆன்மீக ஆனந்தத்தை ஒருவர் எவ்வாறு அடைய முடியும்?

ஆன்மீகத்தில் கூட ஒருவர் அமைதியின்றி இருப்பது துரதிருஷ்டமே! ஆசிரமத்தில் வாழ்ந்து கொண்டே மனக்கஷ்டத்துடன் இருப்பது கேலிக்குரியது! 

எந்த மாற்றமும் இன்றி காதால் கேட்டறிந்த போதனைகளில் ஒன்றைக்கூட கடைப்பிடிக்காமல் , ஆன்ம சாதகர்கள் என்று நினைப்பதும்... தங்களை பக்தர்கள் என்று கூறிக் கொள்வதும் மிகவும் அவனமானத்துக்கு உரியது!


நிர்மலமான , ஆடம்பரமற்ற, அகங்காரமற்ற , வைராக்கியத்தில் தோய்ந்த நிரந்தர ஆன்மாவை அடைவதற்காக காலத்தை நல்வழியில் செலவழிப்பதே ஆன்மீக வாழ்க்கையாகும்! முடிவில்லா ஆசைகளும் , அர்த்தமற்ற ஏக்கங்களும் (எல்லாவிதமான ஏக்கமும் அர்த்தமற்றவையே!) , நிரந்தரமான தாபங்களும் , தனக்கு வர வேண்டியவற்றைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், தேகபாவனையும் ஆன்மீக வாழ்க்கைக்கு தடைகளாக அமைகின்றன...! அதனால் தான் பலர் ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்கள்! 


இறையானந்தம் என்பதற்கு நான்கு விஷயங்கள் முக்கியமானவை...!

1. சமம் - தமம்

(வெளிப்படையான புலன்கட்டுபாடு மற்றும் உட்புறமான புலன் கட்டுப்பாடு)

2. திருப்தி

3. ஆன்ம விசாரணை

(ஆன்ம - ஆன்மா அற்றவை பற்றிய விசாரணை) 

4. சத்சங்கம்

இவற்றினால் மட்டுமே ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்! 


சரீரத்தின் (உடம்பின்) மதிப்பற்ற நிலையையும் அதில் உறையும் தெய்வத்துவத்தையும் நன்றாக உணர்ந்து, அனுபவித்து ஆனந்தம் அடைதல் வேண்டும்! 

இந்த உடல் மதிப்பே இல்லாதது! நிலையற்றது! 


இரண்டு பக்கெட் நீர், ஒரு பக்கெட் சுண்ணாம்பு , இரண்டு இன்ச் நீளமுள்ள நான்கு ஆணிகளில் உள்ள அளவு இரும்பு , ஆறு பென்சில்களில் உள்ள லெட் (Lead), 920 தீக்குச்சிகளில் உள்ள அளவு பாஸ்பரஸ் , நான்கு லக்ஸ் சோப்புகளில் உள்ள அளவு ஃபாட்டி அமிலம் (fatty acid) இவற்றைக் கொண்டு உருவாக்கியது தான் உங்களின் மனித உடல்! இதில் தான் நித்ய சத்தியமான தெய்வத்துவம் உறைகின்றது! இதை புரிந்துணர்வு பெறுவதில் தான் ஆன்மீக ஆனந்தம் இருக்கிறது! 


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 208)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக