இப்படிப்பட்ட எண்ணமே மிகவும் தவறானது! நீங்கள் சொல்கின்ற சிரத்தை, பக்தி இவை உண்மையானதும் சிரத்தையானதும் அல்ல... அவை யாவும் செயற்கையானவையே! பிளாஸ்டிக் பூக்கள் போன்றவையே! அவற்றுக்கு நறுமணம் கிடையாது! அவற்றால் தேனீக்களை கவர இயலாது! எல்லாம் Show (வெறும் வெளிக் காட்டல்) தான்!
இறைவன் வெளிப்படையான தோற்றங்களை கண்டு கொள்வதே இல்லை! அவர் காண விளைவது உங்கள் உள் உறையும் தன்மையையே!
உண்மையிலேயே உண்மையான பக்தியும் சிரத்தையும் இருக்குமானால் எந்தவிதமான விலகுதலும் ஏற்படாது!
சூழ்நிலை காரணமாக சிரத்தையும் பக்தியும் தடம் மாறுகிறது என்கிறீர்கள்! இது மிகவும் தவறு! சூழ்நிலை எதையும் செய்வதில்லை... உங்களிடமே குறை உள்ளது! உறுதியான விஸ்வாசம் இருப்பதில்லை! உள் மனதில் விஷம் கலந்த விதைகள் உள்ளன...! அவை ஒளிந்திருக்கின்றன...
இங்கிருந்து வெளியே சென்ற உடனே அவை தலையெடுக்க ஆரம்பிக்கின்றன...
சூழ்நிலை அதற்கு சாதகமாகிறது! அவ்வளவு தான்! சூழ்நிலைக்கு கண் , கால், மூச்சு உங்களைப் போல் கிடையாது இல்லையா?
உதாரணத்திற்கு... நீங்கள் இங்கு கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக இருப்பதால் நீங்கள் கம்பளி, கனத்த போர்வை இவை யாவும் கொண்டு வர வேண்டி இருக்கிறது... அதுபோல் சேவைக்கு பக்தி, சிரத்தை, நேரம் தவறாமை போன்ற உள்ளக் கலசங்களை அணிந்து வருகிறீர்கள்... ஆக வெளி சூழ்நிலையை குறை சொல்வதில், நிந்தனை செய்வதில் எந்த பயனும் இல்லை!
நற்குணம், நல்லொழுக்கம், நல்லெண்ணம் உங்களிடம் உறுதியாக இருக்கும் என்றால் எந்தவிதமான தீயமாற்றமோ , துர்சேர்க்கையோ, தடம் புரள்வதோ ஏற்படாது!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 188)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக