இறைவனிடம் குறை என்பதே இல்லை! இறைவனிடம் குறைகளை காண விளைவது மகா பாவம்! இதை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை!
தலைமுதல் கால் வரை இறைவன் எந்தவித சுயநலமும் இன்றி பரிசுத்தமான பேரன்புடன் , உலக நன்மையை மட்டுமே கருதி அனைத்தையும் நிர்வகிக்கிறான்!
இறைவன் எதைச் சொன்னாலும் ,செய்தாலும், செய்வித்தாலும், சங்கல்பித்தாலும் அனைத்தும் உலக நன்மைக்காவே!
தனக்கென்று எதுவும் தேவையில்லை இறைவனுக்கு...! தன்னைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதால் இறைவனுக்கு சுயநலமில்லை...!
இந்நாளில் கலியின் ஆதிக்கத்தால் மனிதர்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றி அமைதியின்மை, குழப்பம், அநியாயம், அக்கிரமங்கள், கெட்ட வழக்கங்கள் நிரம்பி வழிகின்றன... இக்கால மனிதன், தன்னைப் பெற்று வளர்த்த, தாய், தந்தையரையே கவனிக்காமல் , அவர்களுடைய பிரேமை, தியாகம், இவற்றை மறந்து , நன்றி கெட்டவர்களாக, அரக்கர்களாக, அரக்கர்களாக நடந்து கொள்ளும் பொழுது, இறைவனை பற்றிய நினைப்பு மட்டும் வேறு எப்படி இருக்கும்?!?
கௌரவர்கள் மிகவும் அநியாயமாக நடந்து கொண்டனர், அவர்களது நடத்தை அனைத்தும் பயங்கரமானவை! சுயநலமும் கருமித்தனமும் அவர்களிடம் தாண்டவமாடின!
அவர்களின் திட்டமெல்லாம் குறுக்கு வழிகளே!
நஞ்சு கலந்த உணவைப் பரிமாறுதல், அரக்கு மாளிகைக்கு தீ வைத்தல், சூதாட்டத்தில் ஏமாற்றுதல் போன்ற அக்கிரமங்களையே தொடர்ந்து செய்தனர்!
அவர்களை அந்த விதத்திலேயே மடக்கி தண்டித்தாக வேண்டும்!
ஆம்.. முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும்! வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்!
உதாரணமாக திருடன் உங்கள் வீட்டில் புகுந்து பணத்தையும் , நகைகளையும், அபகரித்து , பின்பக்கமாக தப்பி ஓடுகிறான் என்கிற போது , நீங்களும் கூட பின்பக்க வழியாகவே ஓடிப் போய் அவனை பிடிக்க வேண்டும்...
"நான் இந்த வீட்டின் எஜமானன், முன்பக்கம் வழியாக சென்று தார் ரோட்டில் ஓடிப்போய் தான் பிடிப்பேன்!" என்றா நினைப்பீர்கள்?! அப்படிச் செய்தால் திருடனை பிடிப்பது நடக்கக்கூடிய காரியமா?
அவன் ஓடிய வழியே சென்று தான் அவனை பிடிக்க வேண்டும்!
அது போல தீயவர்களான கௌரவர்களின் தீய செயல்களை , கொடூரமான நடத்தையை, அவர்கள் பாண்டவர்களுக்கு இழைத்த அநியாயத்தை அவர்களின் வழியிலேயே சென்று, அவர்களை அழித்து, பாண்டவர்களுக்கு சுயராஜ்ஜிய வெற்றியை தேடித் தந்தார் ஸ்ரீ கிருஷ்ணர், இதில் எந்தவிதமான சுயநலமும் இறைவனுக்கு இல்லவே இல்லை!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 154 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக