இதுவே தெய்வீகம்! உங்களுக்கு சக்தி உணவிலிருந்து கிடைக்கிறது! அது குறைந்தால் உங்களுக்கு சக்தி குறைகிறது!
சுவாமிக்கு சக்தி ஆகாயத்திலிருந்து கிடைப்பதில்லை... நான் காலையில் எதுவும் உட்கொள்வதில்லை! ஒரு கோப்பை தண்ணீர் (Glass of water ) அவ்வளவு தான்!
காலை 10 மணிக்கு கொஞ்சம் ஆகாரம் சாப்பிடுகிறேன்!
தயிர், நெய் , இனிப்புகள், ஐஸ்க்ரீம் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை நான் உண்பதில்லை!
ஏழைக் குடியானவனின் உணவாகிய ராகி உப்புமா கொஞ்சம் சாப்பிடுகிறேன்!
பல வருடங்களாக நீங்கள் பார்த்து வருகிறீர்கள் அல்லவா!
மாலையில் எதுவும் உட்கொள்வதில்லை! எத்தனையோ வேலைகள் அத்தனையையும் சுவாமியே கவனிக்கிறேன்!
இத்தனை கல்வி நிலையங்கள்! மருத்துவமனைகள்! Water projects (தண்ணீர் செயல்பாட்டு திட்டங்கள்), லட்சக்கணக்கான பக்தர்கள் என அனைத்தையும் சுவாமியே சுயமாக கவனித்துக் கொள்கிறேன்!
ஆனால்...
எனக்கும் பக்தருக்கும் நடுவில் எவரும் இல்லை
எல்லாம் நேரடியாகவே ( Direct )
Love to love - Heart to Heart
அவ்வளவு தான்!
விஞ்ஞானிகள் சொல்வார்கள்,
சுவாமி செய்கின்ற வேலைக்கு குறைந்த பட்சம் 1500 கலோரீஸ் தரும் உணவானது அருந்த வேண்டுமென்று... ஆனால் சுவாமி நான் உட்கொள்ளும் உணவில் 200 கலோரீஸ் கூட இருப்பதில்லை!
அப்படி என்றால் சக்தி எங்கிருந்து வருகிறது?
உணவிலிருந்து அல்ல!
I Do Not Get Energy
I am energy
(எனக்கு எங்கிருந்தும் சக்தி வருவதில்லை!
சுவாமி நானே அந்த இறை சக்தி! )
சுவாமிக்கு தேக ரீதியாக வயது 70 (அப்போது) ஆகிறது! நன்றாகப் பார்க்க முடியும்! உங்களுக்கு 40 வயதைத் தாண்டும் முன்பே வெள்ளெழுத்துக் கண்ணாடி தேவைப்படுகிறது!
வெகு தொலைவில் உள்ளவற்றை கூட என் பூதக் கண்களால் காண முடியும்! ஒரு எறும்பு ஓசை செய்தால் கூட என்னால் கேட்க முடியும்! எனது பற்கள் மிகவும் கூர்மையானவை! எனக்கு ஒரு தலைமுடி கூட நரைத்திடவில்லை!
பக்தர்களுக்கு அசௌகர்யமாக இருக்குமே தவிர சுவாமிக்கு இன்னமும் நடக்க வேண்டும் போலத்தான் உள்ளது!
என் பணியை எல்லாம் சுவாமி நானே செய்து கொள்கிறேன்!
இந்த உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என உங்களுக்கு வியப்பாகவே இருக்கலாம்...
உணவு உண்ணும் முன் உங்கள் பிரார்த்தனை என்ன?
"அஹம் வைஷ்வாநரோ பூத்வா" என்கிறீர்கள் அல்லவா!
உங்களது உணவை கிரகித்து , ஜீரணம் செய்து, அனைத்து உறுப்புகளுக்கும் அதன் சக்தியை அனுப்பி வைக்கும் வைஷ்வாநரர் இறைவனே அல்லவா! ஆக இத்தனை மனிதர்களாகிய நீங்கள் உணவு உட்கொள்ளும் போது சுவாமி நான் உணவு அருந்துவது தேவையற்றதே!
தேகரீதியாக பார்த்தால் உங்கள் இந்திரியங்கள் ஏன் பலவீனமடைகின்றன?
Misuse of Senses (இந்திரியங்களை தவறாக பயன்படுத்துவதால்)
சுயநலமாக தனக்கென்றே பயன்படுத்தும் குறுகிய மனப்பான்மையே!
இதற்குக் காரணம், எனக்கு தலை முதல் கால் வரை சுயநலம் என்பது எந்நாளும் இருந்ததே இல்லை!
1.உலக நன்மை
2.உங்களது நலம்
3.உங்களது தனிப்பட்ட ஆன்மீக மேம்பாடு!
இவையே என்
சங்கல்பங்களில் இருந்த வண்ணம் உள்ளன...!
எனக்கென்று எதுவுமே இல்லை! நீங்களே என்னுடையவர்!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 233)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக