தலைப்பு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அவருக்கு அவரே உருவச் சிலை அமைத்த உண்மை சம்பவம்!


சிலை செய்யும் கல்லாகவும்.. அதை வடிக்கும் கையாகவும்.. வடித்தபின் அதன் கலையாகவும் திகழ்வது இறைவன் சத்ய சாயி ஒருவரே. இதோ ஓர் உன்னதமான சத்திய சம்பவம் எப்படி உயிரோட்டமான சிற்ப சரித்திரமானது என இதோ...

திங்கள், 27 ஏப்ரல், 2020

சுவாமி ப்ரசாதம் = வாழ்க்கையின் வர ப்ரசாதம்!


ஸ்வாமியை தரிசனம் செய்ய செல்லும் போதெல்லாம், ஸ்வாமியின் அன்பினால் சிறப்பு முன்னுரிமையோடு,ஒவ்வொரு முறையும் ஸ்வாமியின் தர்ஷன்,ஸ்பர்ஷன்,சம்பாஷன் ஆகிய மூன்றின் அனுக்ரஹத்தையும் பெற்றிருந்தனர் அந்த சென்னை சகோதரர்கள். அதில் ஒருவர் ஒரு நாள் அலுவலக விடுமுறையில் கூட, ஸ்வாமி தர்சனம் பெற்று அவசரமாக ஊர் திரும்புவதுண்டு. அந்த வகையி்ல் தரிசனத்திற்க்கு பிரசாந்தி நிலையம் வரும்போதெல்லாம் ஸ்வாமி அனுமதி கொடுத்தால்தான் ஊர் திரும்புவர்.

சாயியின் ஞான முத்துக்கள் | பேராசிரியர். அனில் குமார் காமராஜு


தன் மாணவர்களோடும்... ஆசிரியர்களோடும்.. மிக சுவாரசியமாக சுவாமி ஆற்றிய உரையாடல்களின் தொகுப்பு!

உரை: பேராசிரியர் அனில் குமார் காமராஜு
மொழிமாற்றம் : செல்வி. விழுப்புரம் அர்ச்சனா
👇👇

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

பாபா ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளாக காட்சி அளித்த சம்பவம்!


இறைவன் சத்ய சாயியே எல்லா இறை வடிவங்களும் ஒன்றிணைந்த ஓர் வடிவம். அந்த சத்திய அனுபவம் இதோ.. 

எடாலம் வெங்கட ரமணப்பாவின் அனுபவங்கள் எப்போது நினைத்தாலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

பேராசிரியர் திரு. சீனிவாசன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


நம்முடைய சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. சீனிவாசன் சாய்ராம் அவர்கள் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி உடனான தன்னுடைய ஆச்சர்யமூட்டும் அனுபவங்களை நமக்கு அனுப்பி உள்ளார்கள். இவரின் அனுபவங்களை  கேட்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கின்றது.  தவறாமல் அனைவரும் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்..
👇 👇

சின்ன கதை - மாயையை விரட்டும் சாயி மாஇறைவன்!


மாயையின் நாடகம்.... மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோ மென்றால் அது ஒரு கணத்தில் நம்மை விட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கோர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும், அது நம் தலைமீது ஏறி ஆட்டம் போடும்.

புதன், 22 ஏப்ரல், 2020

ஆராதனா மகோற்சவம் (இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா மகா சமாதி தினம்)


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் மகாசமாதி தினம், ஏப்ரல் 24ம் திகதி, வெள்ளிக்கிழமையாகும், இவ்வாண்டு அமைதியான சூழ்நிலையில் பிராத்தனைகளுடன், வீடுகளில் இருந்தபடி அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது.

சமாதி என்றால் என்ன ?
சம ஆதி என்ற சொல்லே சமாதி.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தவறிலிருந்து தடுத்தாளும் சாயி தெய்வம்!


"சுவாமி, சில விஷயங்கள் தவறு  என்று தெரிந்தும், நாங்கள் அவற்றைச் செய்கிறோம். இதை எப்படித் தவிர்ப்பது?"என்று ஒரு  சகோதரர் சுவாமியிடம் பேட்டி ஒன்றில் கேட்டார்.

"பங்காரு, எவரும் தெரிந்தே தவறு செய்வதில்லை. நீங்கள்  எல்லோரும் அறியாமையால் செய்து விடுகிறீர்கள்" என்று சுவாமி அன்போடு கூறினார்.மிகவும் மனம் வருந்திச் சகோதரர், "இல்லை சுவாமி. சிலவற்றைத் தவறென்று தெரிந்தே செய்துவிடுகிறோம். தெரிந்துதான் தவறிழைக்கிறோம்" என்றார்.

சனி, 18 ஏப்ரல், 2020

சித்ராவதி எனும் யமுனையில்.. சத்ய சாயி கிருஷ்ணா விநோதனங்கள்!


இறைவன் சத்ய சாயியின் இளவயதிலேயே அவரிடம் வந்து சேர்ந்த, பாக்கியம் நிறைந்த பக்தர்களுள் திருமதி. விஜயகுமாரியும்  ஒருவர். அந்த. காலத்தில் சுவாமியான இறைவன் சத்ய சாயியை காண மிகச் சில பக்தர்களே வருவர். சுவாமி அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பார். அதிர்ஷ்டம் மிக்க அந்த பக்தர்கள் பெற்ற மறக்க முடியாத, ஆனந்தமான அனுபவங்கள் ஏராளம்!! அவற்றில் சிலவற்றை திருமதி. விஜயகுமாரி இங்கே பகிர்ந்து கொள்கிறார்:

உலகப்புகழ்பெற்ற இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் 'பத்மபூஷன்' டாக்டர். ரங்கபாஷ்யம் அவர்களின் அனுபவங்கள்!


சாய்ராம்!  சுவாமியின் அன்பிற்குரிய பழம்பெரும் பக்தரும், இரைப்பை குடலியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரும்,  டாக்டர் பிசி ராய்   பத்மபூஷன் விருதுகளை பெற்றவருமான, பத்மபூஷன் Dr. இரங்கபாஷ்யம் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்... 

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | பகவான் பரமஹம்ஸ ஸ்ரீ யோகானந்தர்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

பகவான் பரமஹம்ஸ ஸ்ரீ யோகானந்தர்(1893-1952):

வெற்றியையே பரிசளிக்கும் வீரஇறைவன் சாயி!

ஷீரடி காலத்தில் நடந்த சுவாரசிய சம்பவத்தை நினைவு கூறும் சத்திய சாயி

எனது முந்தைய உடலில் இருந்தபோது நடந்த சில பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன...
அப்போதும் எனக்கு சத்தியமே ஆதாரமாக இருந்தது. ஒரு மல்யுத்த வீரர் என்னைச் சண்டைக்கு அழைத்தார். மிகப்பெரிய கிராமவாசிகள் கூட்டத்தின் முன்னிலையில் அவரைத் தோற்கடித்தேன்.

புதன், 15 ஏப்ரல், 2020

பிரபஞ்சம் இயக்கும் சாயி பரம்பொருள்!


நாமே அனைத்தும் செய்கிறோம் என நினைக்கிறோம். சத்தியமாக இல்லை. இறைவன் சத்ய சாயியே எல்லாவற்றையும் நடத்துகிறார் இதை கேள்வி பதில் எனும் அற்புத உரையாடலின் வழி அழகாக மிக ஆழமாக அவரே தெள்ளத் தெளிவாக இதோ விளக்குகிறார்.

சுவாமி:  நீங்கள் அனைவரும் பகுதி நேர பக்தியில் பிஸியாக இருக்கிறீர்கள்.

சாயி சத்சங்கம் - 2 | சாயியின் பேரன்பே அதி அற்புதம்!

👇 👇

தரத்தை பார்த்தே வரத்தை அருளும் தெய்வம்!


நேர்காணல்  ஒன்றின்போது ஒரு சகோதரர் "சுவாமி மாநில அளவில் இளைஞர் மாநாடு  ஒன்றைப் பர்த்தியில் ஏற்பாடு  செய்ய அனுமதியுங்கள். அங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பர்த்திக்கு வரவும் சேவை செய்யவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். சுவாமி "என் மனதில் இருப்பதைச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

உலகத்தில் ஏற்படும் துன்பங்களுக்கு காரணம் என்ன?


பரமாத்மா ஆறுவித சிறப்பியல்புகளுடையவர். அவை முழுமையான ஞானம்,முழுமையான வைராக்கியம், முழுமையான அழகு, முழுமையான ஒளிமயமான சக்தி, குறையாத புகழ், அழியாத செல்வம் ஆகியவை.ஸத் (முழுமையான இருப்பு)சித் (முழுமையான அறிவு) ஆனந்தம் (முழுமையான) ஆகியவை அவரது இயல்புகள். இவை மனிதனிடமும் ஆத்மாவின் மூலம் இடம்பெற்றுள்ளன. ஆகவே மனித சமுதாயம் அனைத்துக்கும் இந்நிலையையும், சிறப்பியல்புகளையும் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்க உரிமை உண்டு. இவ்வுரிமையே, அதற்கு விதிக்கப்பட்ட கடமையும் கூட. மனிதன் இக்கடமையை நிறைவேற்றாதது தான், உலகத்தின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

சேவையில் தெய்வத்தை தரிசனம் செய்!


ஒருமுறை எங்கள்  குழு நேர்காணலில், சுவாமியிடம் ஒரு கிராமத்தில் நடக்கும் சேவையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தோம். "சால சந்தோஷம். கிராம சேவைச் செயல்பாடுகளிலேயே சுவாமியைத் தரிசிக்க நீங்கள்  இப்போது கற்றுக்கொள்ளவேண்டும். இங்கேயோ, அங்கேயோ, எங்கே ஆனாலுமே, அதே சுவாமிதான் எங்குமிருக்கிறார். உங்களுக்கென அங்கேயே காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார் சுவாமி.

சாயி சத்சங்கம் - 1 | இறைவன் இதிகாசம்

👇 👇 

சனி, 11 ஏப்ரல், 2020

பகவான் சத்ய சாயி பாபா கர்மாவை மாற்றி அமைப்பாரா?


கேள்வி: பகவான் சத்ய சாயி பாபா கர்மாவை மாற்றுவார் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?  என்னுடைய கர்மாவையும் மாற்றி பிரச்சனையை தீர்ப்பாரா?

பதில்: அருமையான கேள்வி. ஆம் என ஒரே வார்த்தையில் பதலளித்தாலும் ... முதலில் கர்மா என்பது யாதென புரிந்து கொள்வது முக்கியம்...

கர்மா என்பது நாம் செய்கின்ற செயல் மட்டும் அல்ல. 
இந்த கர்மாவானது ஜென்ம ஜென்மங்களுக்கு தொடர்ந்து கொண்டிருப்பது.. 

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கடவுள் எங்கே இருக்கிறார்? - பாபா


ஒரு நேர்காணலின் போது சுவாமி, "கடவுள் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். பல சகோதரர்கள் பதில் கூறினர்.ஒருவர் "சுவாமி கடவுள்  எனக்குள் இருக்கிறார்"என்று கூறினார்."ஓ அப்படியா?அப்படியானால் நீ ஏன் புட்டபர்த்திக்கு வருகிறாய்?எதற்காக சுவாமியைப் பார்க்க வருகிறாய்?"என்று சுவாமி  சீண்டினார். சகோதரரால் பதில் சொல்ல முடியவில்லை.சுவாமி "பங்காரு, உன்னிடம் எண்ணம், சொல்,செயல் இவற்றின் ஒருமைப்பாடு இருக்கவேண்டும். உனக்குள் சுவாமி  இருக்கிறார் என்பதோடு அதை நீ உணரவும் வேண்டும். அந்த அனுபவத்துக்குப் பின்னால்தான் நீ அப்படிக் கூறமுடியும்.இல்லையென்றால் அது போலி நடிப்புதான்" என்று கூறினார். அனுபவத்தின் குரலில்தான் நாம் பேசவேண்டும் என்பதை நாங்கள் அதிலிருந்து புரிந்து கொண்டோம். இல்லையென்றால் அது பாசாங்கு.

வியாழன், 9 ஏப்ரல், 2020

SAI BABA - Man of Miracles (Audiobook - தமிழ்)


எதையும் விஞ்ஞான பூர்வமாகவே நம்பும் ஒரு வெளிநாட்டு ராணுவ வீரர்... மெய்ஞான இறைவனான சத்ய சாயியை சரணடைந்ததன் பேரனுபவம் பேசும் நூல். பல சாயி பக்தர்களின் அரிய அனுபவங்களை ஆதாரப்பூர்வமாகப் பகிரும் நூல்... இறைவன் சத்ய சாயியின் பூர்வ ஷிர்டி அவதாரம் முதல் அவரின் இறை நிலைப் பொழிவை அத்தியாத்திற்கு அத்தியாயம் ஆச்சர்யத்துடன் விவரிக்கும் நூல். பல வெளி நாட்டு பக்தர்களுக்கு வரவேற்பு வாசலாக அமைந்த முதல் வெளிநாட்டவரின் சாயி இலக்கியம்.

புதன், 8 ஏப்ரல், 2020

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் சாயி அனுபவங்கள்!


2003-ம் ஆண்டு FIDE  (World Chess Federation) உலக செஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டியில் வென்று `உலகின் அதிவேக சதுரங்க வீரர்' என்ற பட்டத்தை, 34 வயதுடைய வீரர் ஒருவர் பெறுகிறார். இந்திய நாட்டின் தெற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த அந்த வீரருக்கு விருது கிடைத்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சிவந்த செஸ் விளையாட்டில், ரஷ்யர் அல்லாத ஒருவர் இத்தகைய சிறப்பை அடைந்ததன் ஆச்சர்யம் அது. 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தான் அந்த வீரர்.

காலம், இடம் அறிந்து பேசு!


எதைப் பேச வேண்டும்... எங்கே பேச வேண்டும்... எப்படிப் பேச வேண்டும்... இது மூன்றுமே மிகவும் முக்கியம்... இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவதே பண்பு... சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் செயல்படுவதே சாமர்த்தியம்... அதை மனிதனுக்கு இறைவன் சொல்லித் தராமல்.. வேறு யார் சொல்லித் தர முடியும்?? இதோ இறைவனின் ஆற்றுமொழி... அத்தியாவசிய கூற்றுமொழி...

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கணேஷ்புரி பகவான் நித்யானந்தா


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

கணேஷ்புரி பகவான் நித்யானந்தா:

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் திரு. சலூரி வாசுராவ் அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய பக்தரும் சந்திரலேகா, மிஸ்ஸியம்மா போன்ற புகழ்பெற்ற  படங்களின் இசையமைப்பாளரும், பிரபல பின்னணிப் பாடகருமான  சலூரி ராஜேஸ்வரராவ் அவர்களின் குமாரர் சலூரி திரு R வாசுராவ் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!

திங்கள், 6 ஏப்ரல், 2020

டிரம்ஸ் சிவமணி அவர்களின் சாயி அனுபவங்கள்!


நாத மய பிரபஞ்சமிது. அந்த லயத்தில் தான் பூமி சுற்றுகிறது. ஒரே லயத்தில் தான் சுவாசம் இயங்குகிறது. அதன் லயம் கெடும் போதே வியாதிகள் மனிதர்க்கும்.. இயற்கை சீற்றங்கள் பூமிக்கும்...

டிரம்ஸ் ஆனந்தன் அவர்கள் திரைஇசைத் திலகம் கே.வி மகாதேவன் அவர்களின் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசித்தவர்.

நீ ஒழுங்கா காயத்ரீ பண்ணுகிறதில்லை!


பிரசாந்தி நிலையத்தில் நடக்கவிருக்கும் விழாக்களைப் பற்றி 'சனாதன சாரதி' ஏட்டில் முன்னறிவிப்பு வெளியிடுவது வழக்கம். ஏதோ ஒரு விழா நடக்கவிருந்த போது அதற்கு முன்பு வெளிவந்த இதழில் இவ்வாறு அறிவிப்பு செய்வதற்கு அதன் அப்போதைய ஆசிரியரான திரு. கஸ்தூரி மறந்து விட்டார்.

சனி, 4 ஏப்ரல், 2020

சுவாமியின் தியானப் புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை..

அனைத்து சாய் பக்தர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

1946 ல் ஒரு முறை இறைவன் சத்ய சாயி பெங்களூரில் ஒரு பக்தர் வீட்டிற்கு அன்பு அழைப்பின் பேரில் தரிசனம் தர வேண்டி சென்றிருந்தார்..

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வழிகாட்டி வழித்துணை வரும் பரமன்!


இறைவன் சத்யசாயியை மனமார உருகி உருகி நினைத்து அழைத்தால் உலகத்திற்கு ஒளித் துணையாக இருக்கும் சுவாமி நமக்கு வழித் துணையாகவும் வருவார். அப்படி அழைத்து துணையாக்கிக் கொண்டவர்களின் அனுபவங்களோ ஏராளம்.

பழம்பெரும் நடிகை காஞ்சனா அவர்களின் சாயி அனுபவங்கள்!


பிரபல பழம்பெரும் திரைப்பட நடிகை காஞ்சனா அவர்கள் 1960 மற்றும் 70–களில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர்கள் இறைவன் சத்ய சாயியை பூரண ஜோதி என வியந்து விவரிக்கிறார்... வியக்கிறார்...

வியாழன், 2 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | மா ஆனந்தமயி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

மா ஆனந்தமயி(1896 - 1982):

ஸ்ரீ ராமனின் பல்வேறு செயல்களுக்கான சரியான விளக்கங்கள்:


ராமனின் சில செயல்கள் பல்வேறு காரணங்களுக்காக படித்த பண்டித்தார்களால் விமர்சிக்கப்படுகின்றன. சரியான கோணத்தில் பார்த்தால், ராமன், ஒவ்வொரு விஷயத்திலும், அந்நிகழ்வில் இருக்கும் நபர்களின் இயல்புக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார் என்பது விளங்கும்... 

புதன், 1 ஏப்ரல், 2020

சாயி பகவானின் அளப்பரிய கருணா on கொரானா

--பிரசாந்தி செய்தி,  மார்ச் 31, 2020.

பகவானால் வகுக்கப்பட்ட அற்புதமான பாதையில், மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில்,  அனந்தபூர் மாவட்டத்தில் அமைய உள்ள 14 'தனிமைப்படுத்தும் மையத்திற்கு'  தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்கள்  ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் சார்பில் நன்கொடையாக வழங்கப்படும் எனும் தகவலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தம் சந்துருடு அவர்களிடம், ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ரத்தினாகர் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு மையமும் 100 படுக்கை வசதிகள் கொண்டது.