தலைப்பு

சனி, 30 டிசம்பர், 2023

தனது ஊதா நிற ஆராவால் ஒரு பக்தித் தம்பதிகளை குளிப்பாட்டிய பாபா!

பேரிறைவன் பாபாவின் ஆரா (Aura) பேரன்பின் பிரதிபலிப்பாக ஊதா நிறமாக பரவும் என்பது கிர்லியன் கேமரா வழி நாம் கண்டுணர்ந்ததே! அத்தகைய பாபாவின் ஊதா நிற ஆரா எவ்வாறு ஒரு தம்பதிகளுக்கு மகிமை புரிந்தது? சுவாரஸ்யமாக இதோ...

வெள்ளி, 29 டிசம்பர், 2023

காஷ்மீரில் கண்ட ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் - பாபா எடுத்த தங்கக் கிருஷ்ணர்!

எவ்வாறு திகைப்பூட்டும் இரு அபூர்வக் காட்சிகள் இக்கலியுகத்திலேயே நிகழ்ந்து ஸ்ரீசத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை வலியுறுத்தும் ஆச்சர்ய திருச்சம்பவம் சுவாரஸ்யமாக இதோ..!

புதன், 27 டிசம்பர், 2023

யார் அந்த குடும்பத் தலைவன்?


எவ்வாறு ஒரு பக்தருக்கு விசித்திரமான ஒரு கனவு வழி பேசி மிகப்பெரிய உண்மையை விளங்கச் செய்ய பேரிறைவன் பாபா மேற்கொண்டவை என்ன? அந்த பக்தருக்கு பதில் தெரியாது போகவே...‌ யார் அந்த பதிலை இறுதியில் விளங்க வைத்தது எனும் ஒரு நூதன சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 26 டிசம்பர், 2023

விபூதி பொட்டலங்களை பகிராமல் போனவர்க்கு பாபா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

வாழ்வதே பகிர்வதற்குத் தான் எனும் ஆன்ம அர்த்தத்தை பாபா எவ்வாறு செயல்வழி ஆன்மீகத்தில் உணர வைக்கிறார்? சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 23 டிசம்பர், 2023

வேண்டுதலின் பேரில் வந்திறங்கிய இரு வானுலக அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் வேண்டுதலின் பேரில் வானுலகம் விட்டு பூமியில் வந்திறங்கினார்கள் என்பதை இரு அவதாரங்களின் வாய் மொழியிலேயே கேட்பது விசேஷம்...அந்த புனித உரையாடல் பூரிப்பாக்கிட இதோ...

வியாழன், 21 டிசம்பர், 2023

ஒரு பக்தர் குடும்பத்திற்கே பாபாவின் நேர்காணல் அறையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்!

ஒரு குடும்பத்தையே அழைத்து இறைவன் பாபா நேர்காணல் தருகிற போது அங்கே என்னென்ன பேசினார் எனும் சுவாரஸ்ய அனுபவங்களில் பாபாவை சக்கர நாற்காலி விட்டு இயல்பாய் நடக்க விண்ணப்பித்த பக்தருக்கு பாபா அளித்த பதில்? சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 18 டிசம்பர், 2023

"வெளியே பகீர் யுத்தம்! உள்ளே பஜனை சத்தம்! பழுதான காலிங் பெல் தானாக ஒலிக்கிறது...!"

பரபரப்பான யுத்த சூழ்நிலையிலும் , உறக்கமற்ற இரவுகளிலும் கழித்த பக்தருக்கு எவ்வாறு தான் அருகே இருக்கிறேன் என்று பாபா உணர வைத்த திக் திக் கலந்த மெய் சிலிர்க்கும் அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 16 டிசம்பர், 2023

இரு யுகத்து மகரிஷிகளும் அனுபவித்த இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் முனி சிரேஷ்டர்கள் இரு யுகத்து அவதாரங்களின் மகிமையை உணர்ந்து அனுபவித்து கடைத்தேறினார்கள் எனும் ஆச்சர்ய சானறாதாரங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 13 டிசம்பர், 2023

கனவில் கொடுத்த அதே புடவையை நேரில் அளித்த பாபா!!

பேரிறைவன் பாபா தோன்றுகிற கனவுகள் எல்லாமே சர்வ சத்தியம் என்பதை நிரூபிக்கும் உன்னதமான அனுபவப் பதிவு சுவராஸ்யமாக இதோ...!

சனி, 9 டிசம்பர், 2023

இமய பத்ரி நாராயண கிருஷ்ணரே இதய பர்த்தி நாராயண கிருஷ்ணர்!

எவ்வாறு இமாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரே பக்தரின் இதயத்திலும் வீற்றிருக்கும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் என்பதை ஆன்மா வரை ஆழப்பதிய வைக்கும் அனுபவப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 2 டிசம்பர், 2023

தீர்க்க தரிசன ஸ்ரீ காசி யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்பே முன்பின் அறிமுகமில்லாத ஒரு யோகி கூறிய வாக்கு எத்தனை சத்தியமாக நிகழ்ந்தது அதில் பாபா எவ்வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்... அவர் பாபா பற்றி கூறிய சத்திய மொழிகள் யாவை? சுவாரஸ்யமாக இதோ...

புதன், 29 நவம்பர், 2023

திருமதி. கருணாம்பா ராமமூர்த்தி | புண்ணியாத்மாக்கள்

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா தனது 14வது வயதில், அதாவது 1940ம் ஆண்டு தன்னுடைய அவதாரத் தன்மையை பிரகடனம் செய்தார். அப்போதிருந்தே  படிப்படியாக  பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் சுவாமியைத்  தேடிவந்து… அவரை நெருங்கிப் பழகும் பாக்கியமும் பெற்றனர். அவர்கள் அனைவருமே... "பரமாத்மாவே மனிதவடிவெடுத்து வந்துள்ள இந்தத் தருணம் மனித குலத்துக்கே முக்கியமானதென்று உணர்ந்து ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்த ஆன்மீக விசாரணையில் செல்வழித்தனரா?" என்று கேட்டால்… பெரும்பாலும் இல்லை! எனலாம். ஏனென்றால் சுவாமியின் பால்ய மற்றும் இளமைக் காலங்களில் சுவாமியை நெருங்கிப் பழகும் அதிர்ஷ்டம் படைத்தவர்கள் பெரும்பாலும் பிருந்தாவனத்தின் பாலகிருஷ்ணனாகவே அவரைக் கருதி, அவரின் லீலைகளை அனுபவிப்பதிலேயே ஆர்வம் செலுத்தி மகிழ்ந்தனர். அதோடு பலருக்கு, சுவாமியும் கூட… தன்னுடைய முழுமையான இறைத் தன்மையை படிப்படியாகவே உணர்த்தி வந்தார் என்பதை நாமும் கூட அறிந்துணரலாம்.

செவ்வாய், 28 நவம்பர், 2023

"சௌகார்பேட்டை சேட் கடையில் வாங்கியதோ?" என சந்தேகப்பட்டவருக்கு பாபாவின் சிருஷ்டி ட்ரீட்

ஒவ்வொரு மனிதரின் உணர்வு நிலையில் மாற்றம் ஏற்படுத்துவது அவதாரங்களால் மட்டுமே சுலபமாய் முடிகிற திருச்செயல்... அந்த அகமாற்றத்தையும் வருத்தாமல் பேரன்போடு செய்தவர் பாபா.. அவரின் திவ்ய சிருஷ்டிகளும்... தான் இருக்கிறேன் எனும் பேரிருப்புப் பொழுதுகள் சிலவும் சுவாரஸ்யமாய் இதோ...!

திங்கள், 27 நவம்பர், 2023

திருப்பதி பெருமாளான ஸ்ரீ கிருஷ்ணரும் புட்டபர்த்தி பெருமாளான ஸ்ரீ சத்ய சாயியும் ஒருவரே!

எவ்வாறு இரு அவதாரங்களும் ஒன்றே எனும் அனுபவப்பூர்வமான சத்தியத்தை ஒரு பரம‌பாக்கிய பக்தர் பெறுகிறார் எனும் சான்றாதார அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 20 நவம்பர், 2023

சாயி குறள் அமுதம் - புதிய நூல்(PDF வடிவில்) அறிமுகம்!

யாதுமாகி இருந்து அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்கிறான் கீதையிலே கண்ணன். ஆனால் அழைக்காமலேயே வந்து என்னை ஆட்கொண்டு பாம்பின் விஷக்கடியின் போது  உயிரை மீண்டும் உடம்புக்குள்ளேயே அனுப்பிய ஸ்ரீ சத்ய சாயிபாபா (ஸ்ரீ சத்ய சாயி யுகம் பக்தர்களின் அனுபவங்கள் வியாழன், 9 டிசம்பர், 2021) இன்று என்னை கருவியாக்கி "சாயி குறள் அமுதம்" ஆக வடிக்கச் செய்துள்ளான்..!

சனி, 18 நவம்பர், 2023

விஜயவாடா சீதாராமபுரம் சிக்னல் ஜங்ஷனுக்கு புதிய பெயர் -பகவான் ஸ்ரீ சத்யசாயி சர்க்கிள்!!

மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சியாய் ஆந்திர அரசால் ஏற்கெனவே ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம் உருவான நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எப்போதுமே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு சாலை சந்திப்புக்கு பகவானின் திருப் பெயரைச் சூட்ட விஜயவாடா  மாநகராட்சி நகர மண்டலம் எலுரு சாலையில் உள்ள சீதாராம்புரம் சிக்னல் சந்திப்பின் பெயர் பகவான் ஸ்ரீ சத்யசாயி வட்டம் (Bhagavan Sri Sathya Sai Circle) என்று பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதாரத் திருநாளில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்மானம்  விஜயவாடா முனிசிபல் கவுன்சிலில் முன்மொழியப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது!

புதன், 15 நவம்பர், 2023

25 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த கை கால்களை இயங்க வைத்த சாயி இறைவன்!

எவ்வாறு கை கால்கள் முடங்கி இருந்த ஒருவருக்கு தனது தரிசன வரிசையில் குணமளித்தார் எனும் ஆச்சர்ய சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 14 நவம்பர், 2023

எவர் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத இரு பேராற்றலின் அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களுமே சந்திக்க விளைந்த முட்டுக்கட்டைகள்... அதனுள் சிக்காமல் எவ்வாறு சுலபமாக வெளி வந்தார்கள்? எனும் சுவாரஸ்யமான அனுபவங்கள் விறுவிறுவென இதோ...!

புதன், 8 நவம்பர், 2023

ஸ்ரீ சத்ய சாயி பாபா பற்றி பிரபல வெளிநாட்டு "VOGUE" பத்திரிகையின் கட்டுரை - 1975

Sathya Sai Baba (from Vogue Magazine - Canada Edition, December 1975).

 1975ஆம் ஆண்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஆறு மாதகாலம் தங்கியிருந்த கானடா எழுத்தாளர் திரு. பால் வில்லியம் ராபர்ட்ஸ், உலகின் முன்னணி பேஷன் பத்திரிகையான வோக்கில் எழுதிய நேரடி அனுபவக் கட்டுரை...! 

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஆப்ரிக்கா நள்ளிரவில் வேற்றுருவில் தோன்றி வீட்டுக்கு வழிகாட்டிய பாபா!

எவ்வாறு ஆப்ரிக்கா தேசத்தை சேர்ந்த நபருக்கு பேரிறைவன் பாபா தேடி வந்து அருள் புரிகிறார்? அப்படிப் புரிந்து உயிரையே காப்பாற்றுகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 6 நவம்பர், 2023

செயல்படுவதற்கு முன்னமே இரு அவதாரங்களையும் தடுத்த இருவர்!

எவ்வாறு ஒரே விதமான அணுகுமுறை இரு வேறு யுகங்களில் இரு பெரும் அவதாரங்களுக்கும் நேர்ந்திருக்கிறது.. அதற்கு இரு அவதாரங்களும் ஒருமித்து சொன்ன ஒரே பதில் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 4 நவம்பர், 2023

மனநிலை பாதித்த பெண்மணி பாபாவின் சுதர்சன மகிமையால் குணமடைகிறாள்!

எவ்வாறு சாயி பக்திக் குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கு சித்தம் கலங்குகிறது? அது எதனால்? பிறகு எவ்வாறு அதிலிருந்து அவள் விடுதலை பெறுகிறாள்? பாபாவின் சுதர்ஷன மகிமை என்றால் என்ன? சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 2 நவம்பர், 2023

ஶ்ரீ சத்யசாயி யுகம் - சமூக ஊடக சரித்திரம்!

தென்னாடுடைய சாயிசிவன்

எந்நாட்டவர்க்கும் இறைவனே என்று

தமிழ் பேசும் பக்தர்கள் கூடி

வாட்ஸாப்பில் ஒய் நாட்? என்றதில்

‘ஶ்ரீ சத்யசாயி யுகம்’ மலர்ந்தது!

புதன், 1 நவம்பர், 2023

சுவை மிகு சமையல் பாத்திரத்தில் சாயி சிருஷ்டி கணையாழி!

எவ்வாறு அயல்நாட்டில் வசிக்கும் ஒரு பக்தைக்கு அங்கேயே தனது சிருஷ்டி மோதிரத்தை பரிசளித்தார்? பிறகு அது என்னானது ? சுவாரஸ்யமாக இதோ!

திங்கள், 30 அக்டோபர், 2023

கிண்டி கோவில் லீலாம்மாவின் பிளட் பாய்சனை பாபா குணப்படுத்துகிறார்!

திடீரென ஏற்பட்ட உடல் கோளாறு, பிளட் பாய்சன் என மருத்துவர்கள் சொல்ல அதிர்ச்சி, லோகநாத முதலியாரின் மகளான செல்வி லீலாவோ படித்துக் கொண்டிருக்கிற இளம் வயது, ஒட்டுமொத்தமாய் பாபாவிடம் சரணாகதி அடைந்த குடும்பம் லீலாவின் குடும்பம், பாபா எவ்வாறு காப்பாற்றுகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 27 அக்டோபர், 2023

இரு இறை அவதாரங்களுமே பரிபூரண 'கர்ம யோகி'கள்!


எவ்வாறு இரு யுகத்தின் இரு அவதாரங்களும் ஒரே விதமான சொற்களையே பேசி ஒரே செயல்களையே செய்து வருகிறார்கள் எனும் ஆச்சர்ய வாய்மொழி தெய்வீகத் தாய்மொழியாக இதோ...

வியாழன், 26 அக்டோபர், 2023

காற்றில் தோன்றி ஐரோப்பியரின் மாரடைப்பை குணமாக்கிய மகத்துவ பாபா!

எவ்வாறு ஒரு ஐரோப்பிய முதியவரின் மாரடைப்பை பேரிறைவன் பாபா காற்றில் தோன்றி குணமாக்கிய அற்புத அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...!

ஸ்ரீமத் பகவத் கீதையும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரமும்...!

எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் கீதை மொழியில் பகிர்ந்தது போலவே பேரிறைவன் பாபா தனது அவதாரத்தை பிரவகித்ததன் அருட்சுவடாக திகழும் ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திரத்தில் அது மிகவும் பொருந்திப் போகிறது எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 19 அக்டோபர், 2023

காப்பி பொடியா? கடவுளா? யார் பெரியவர்?

 
நம் அன்பு சுவாமி பக்தர்களிடம் பங்காரு உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்? என்பார்.

பக்தர்களும் மனம் நெகிழ்ந்து

புதன், 18 அக்டோபர், 2023

அட்சயப் பாத்திரம் அருளிய இரு அருட்பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு துவாபர மற்றும் கலியுகத்தில் ஆச்சர்யம் மிகுந்த அட்சய பாத்திரம் எத்தகைய மகிமைகளைச் செய்தது... ? அதற்கு இரு அவதாரங்களின் பங்கும் மகிமையும் என்னென்ன? சுவாரஸ்யமாக இதோ...

🔥 வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்! (சிறு தொகுப்பு)

நவராத்திரி 4ம் நாள் துவங்கி விஜய தசமி அன்று மஹா பூரணாஹுதியுடன் நிறைவடையும் பிரசாந்தி நிலையத்தின் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சியான 'வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்' இன்று முதல் 18.10.2023 துவங்க உள்ளது.

சனி, 14 அக்டோபர், 2023

டாக்டர். சூரி பகவந்தம் | புண்ணியாத்மாக்கள்

டாக்டர் எஸ்.பகவந்தம் ஒரு சிறந்த விஞ்ஞானி, பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். தனது ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியல் வெளியீடுகளால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஒரு வகையில்... தேசத்திற்க்கே வழிகாட்டியாக செயல்படும் அங்கீகாரம் பெற்ற உயர்ந்த நிலையில் இருந்தவர். இருப்பினும் சந்தேகப் படுபவர்களுக்கோ, சவால் விடுபவர்களுக்கோ, பத்திரிக்கைகளுக்கோ, பொது மக்களுக்கோ அஞ்சாமல்... தன்னுடைய சாயி அனுபவங்களைத் தெள்ளத் தெளிவாக மேடையிட்டு எடுத்துரைத்த புண்ணியாத்மா. அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ...

வியாழன், 12 அக்டோபர், 2023

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்த முடியாதவரை குணமாக்கிய பாபா!

எவ்வாறு தன் மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு பெரியவரின் முதல் பிரார்த்தனையை பாபா எவ்வகையில் நிறைவேற்றி அவரின் நோயை குணமடையச் செய்தார்? சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 10 அக்டோபர், 2023

சனி, 7 அக்டோபர், 2023

மதுராவாசியும் புட்டபர்த்திவாசியும் பக்தர்களின் இதயவாசியே!

எவ்வாறு இரு பெரும் பூரண அவதாரங்களும் சதா நமது இதயத்திற்குள்ளேயே வீற்றிருந்து அனைத்தும் அறிந்து நமக்கு உடனுக்குடன் உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்பது சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...


புதன், 4 அக்டோபர், 2023

சக்கர நாற்காலியில் பாபா - "நாடகத்தை நிறுத்தி நடங்கள்!" என்று கதறிய பக்தர்!

பார்க்கிற காட்சியில் பதறிப் போன பக்தர்... அந்த சக்கர நாற்காலியில் தான் அமர்ந்து தரிசனம் தந்ததை குறித்து பாபா அவருக்கு அளித்த விளக்கம் சுவாரஸ்யமாக இதோ‌...

செவ்வாய், 3 அக்டோபர், 2023

கண் இமைக்கும் நேரத்தில் கண் ஆப்ரேஷன் செய்த கண்ணான பாபா!

கண் ஆப்ரேஷனுக்கு சில நியமங்கள் இருக்கின்றன.. ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இத்யாதிகள் ஆகியவை அளவோடு இருக்க வேண்டும், அப்போதே மருத்துவர் அறுவை சிகிச்சை புரிவர் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்க பல மருத்துவர்கள் கைவிட்ட கண்ணை கண்ணான கண்ணனான கடவுள் பாபா எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் அறுவை சிகிச்சை புரிகிறார் எனும் அதீத அற்புதம் அறுவை அற்ற சுவாரஸ்யப் பதிவாக இதோ...

சனி, 30 செப்டம்பர், 2023

கால நேர இடத்தையே மாற்றி அமைக்கும் இரு கடவுளவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்தின் இரு அவதாரங்களும் கால-நேர - இடத்தின் வர்த்தமானங்களை கடந்து வாழ்வாங்கு வாழ்கிறது எனும் பேராச்சர்ய சான்றாதாரங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 27 செப்டம்பர், 2023

ஸ்ரீ லோகநாத முதலியார் | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபா, தனது அவதாரத்தின் துவக்க காலங்களில்... தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பக்தர்களுக்காக தன்னுடைய லீலைகளை மகிமைகளை வெகுவாகப் பொழிந்தார். அது வெறுமனே அவருடைய அவதார மகிமைப் பிரகடனத்துக்கானது அல்ல! மாறாக... பல ஜென்மங்களாக இறைவனை எண்ணி பக்தித் தொண்டாற்றிய ஆன்மாக்களுக்கு அவர் பிரதிபலனாகக் கொடுத்த தெய்வீக சன்மானம். அத்தகைய பெரும்பேறு வாய்த்த சில உன்னதமான பக்தர்களில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ லோகநாத முதலியார் குறிப்பிடத் தகுந்த ஒருவர். இறைவனின் சமீபத்தை சம்பாதித்த பேரதிர்ஷ்டம் பெற்ற புண்ணியாத்மா ஸ்ரீ லோகநாத முதலியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இதோ...

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

ஒரு டாக்டரையே குணமாக்கிய டாக்டர்களின் டாக்டர் பாபா!

எவ்வாறு ஒரு மருத்துவரின் தொண்டைப் புற்று நோயையும் நீக்கி அவரின் குடும்பத்தையே நலமாக வாழ வைத்த சாயி மகிமை, சுவாரஸ்யமாக இதோ...

சனி, 16 செப்டம்பர், 2023

வாழ்வில் வளமையை வரமாக சேர்க்கும் வற்றாத இரு அவதார செல்வங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் தனது பக்தர்களின் அகமும் புறமும் வளம் சேர்த்தன எனும் ஆச்சர்யப் பொருத்த திருச்சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...

வியாழன், 14 செப்டம்பர், 2023

தற்கொலை புரிய இருந்தவரை சிறையில் அடைத்து சிறைச்சாலையில் காட்சி கொடுத்த பாபா!

தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக இருந்த ஒருவரை பாபா எவ்வாறு இருமுறை தடுத்தாட் கொள்கிறார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

இறந்த ஆறு வயது உடலுக்கு மீண்டும் உயிர் அளித்த இறவா இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!

எவ்வாறு ஆறே ஆறு வயதான ஒரு குழந்தையின் இறந்த உடலுக்கு பாபா எவ்வகையில் மீண்டும் உயிர் அளிக்கிறார் என்கிற பரவச மகிமா சம்பவம், சுவாரஸ்யமாக இதோ...

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

கருத்தரிக்கக் கூடாத பெண்மணிக்கு சாயி கீர்த்தியை அருளிய சாயி கீர்த்தி!

கர்ப்பம் தரிக்கவே இயலாத உடல் கேட்டில் இருந்த பெண்மணிக்கு பேரிறைவன் பாபா நிகழ்த்திய மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ..!

சனி, 9 செப்டம்பர், 2023

பெயரை உச்சரித்தாலே காக்க ஓடோடி வந்திடும் இரு பெரும் அவதாரங்கள்!

எவ்வாறு தங்களது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே இரு பெரும் அவதாரங்களும் ஆபத்தில் உதவுகின்றனர் எனும் ஆச்சர்யப் பொருத்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

"ஸ்ரீ சத்ய சாயி - மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர்" - ரிஷி பரத்வாஜ்

ஸ்வாமியே மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர். சிறந்த மருத்துவர்கள் தோல்வியடையும் போது, அவர் வெற்றி பெறுகிறார்! இதை பற்றி சொல்வதற்கு எனக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது...

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

இறைவன் பாபா மடியில் தலை சாய்த்து இன்னுயிர் நீத்த மகான்!

ஸ்ரீ சத்ய சாயி பாபாவாரு அவர்களின் பாட்டனார், ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள் தவ வாழ்வு வாழ்ந்த தயாசீலர். நூற்றுப்பத்தாண்டு நிறைவாழ்வு வாழ்ந்து, மண்ணுலகில் அவதாரம் எடுத்த பாபாவை இறைவன் என அறிந்து அவர் மடியில் படுத்தபடி விண்ணுலகம் ஏகிய பேற்றைப் பெற்றவர்...

சனி, 2 செப்டம்பர், 2023

இரு அவதாரங்களும் வேற்றுலகத்திற்கு அழைத்துச் செல்லுதல்! : அமானுஷ்ய ஆச்சர்ய அனுபவங்கள்!

எவ்வாறு இரண்டு அவதாரங்களுமே ஒரே விதமான அனுபவங்களை யுகம் கடந்தும் வழங்கி வருகின்றன எனும் மெய் சிலிர்க்கும் அரிய அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...

புதன், 30 ஆகஸ்ட், 2023

நான்கு மாதங்கள் கடந்தும் அழுகாத கல்லறைப் பிணம் - பாபாவின் விசித்திர லீலை!

ஒரு மருத்துவர் அவர் பாபா பக்தர், ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார், அது போலீஸ் கேஸ் வரை நீள்கிறது! அது என்ன பிரச்சனை? எப்படி அவர் அதிலிருந்து மீள்கிறார்? விறு விறு சுவாரஸ்யமாக இதோ...

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மூன்று நாட்களே உயிரோடு இருக்கப் போகிற மூன்று மாத கர்ப்பிணியை பாபா காப்பாற்றிய அதிசயம்!

எவ்வாறு உயிர் போகிற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணியை பாபா காப்பாற்றுகிறார், ஆச்சர்யமான அதிசயம் விறு விறு என இதோ...