தலைப்பு

வெள்ளி, 31 ஜனவரி, 2020

யுகஸ்லேவிய நாடோடிகளின் இரைச்சல்!

நீங்கள் எங்கிருந்தாலும் நான் உங்களை காத்து, வழிநடத்த எப்போதும் உங்களோடு இருப்பேன். எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்.

-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

இத்தாலியில் இருக்கும் பொழுது, நளினி, பலோக்னா என்ற இடத்தில் இரு பெண்மணிகளை சந்திக்கவேண்டி இருந்தது. மிலாமனா ஸ்டேஷனிலிருந்து ஒரு குறிப்பிட்ட ரயிலைப் பிடித்து பலோக்னா செல்லவேண்டியிருந்தது.

வணிக நிர்வாகத்தில் மனித பண்புக்கூறுகள்!


சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்று அடிப்படை மனித பண்புக்கூறுகளைப் பல வழிகளில் வணிகவியலின் அன்றாட செயல்பாடுகளில் கடைபிடிக்க முடியும்…

வியாழன், 30 ஜனவரி, 2020

பானு பாயின் கண் நோய் குணப்படுத்தப்பட்டது!


தவறுகள் நிறைந்த மனித சமூகத்தினரிடையே எல்லையற்ற கருணை கொண்ட பாபா எவறுடைய பலஹீனத்தையும் தவறையும் நேரிடையாக குத்திக்காட்டமாட்டார்.   யாரைத் திருத்த வேண்டும் என நினைக்கிறரோ அவர்களுக்கு ஒரு குறிப்பின்  மூலமோ, எப்படியோ, செய்தி அவர்களுக்கு சென்று சேருமாறு அருள் புரிவார்.   

இத்தகைய அன்பு தான் USAயில் இருக்கும் திரு. பானு பாய் படேல் அவர்கள் மீது பொழியப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஸாயி பக்தர் அல்ல! அவரது சகோதரர் UKயில் இருப்பவர் – திரு ப்ரகாஷ் பாய் அவர்கள் தான் பாபாவின் பக்தர்.  திரு. ப்ரகாஷ்  டாக்டர். காதியா குழுவினருடன் புட்டபர்த்தி செல்ல இருந்தார். 

ஒருபோதும் நன்கொடைகளை வேண்டாதீர்கள்!


பிரேம ஸ்வரூபங்களே!

உதவியற்றோர்க்கு உதவுங்கள். பசித்தோற்கு உணவிடுங்கள். இதற்காக அடுத்தவர் உதவியை நாடி செல்ல வேண்டாம். ஏதாவது உதவி தேவைப்பட்டால், என்னிடம் வாருங்கள். எந்த தயக்கமும் இன்றி ஸ்வாமி வழங்குகிறேன்.

புதன், 29 ஜனவரி, 2020

இறைவனை அடைய எளிய வழி இதோ !


எந்தவித சிக்கலில் மனிதர்கள் மாட்டிக்கொண்டு இருந்தாலும், கடவுளின் திருநாமத்தில் அவரவர்கள் மூழ்கி இருந்தால், அது அவர்களை சிக்கலிலிருந்து விடுவிக்கும். அதே சமயத்தில் எந்த உருவத்திலும் பெயரிலும் ஆண்டவனை நினைத்தார்களோ அதே உருவத்திலும் பெயரிலும் ஆண்டவனை அனுபவிக்கலாம்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

பால பட்டாபியின் உயிரைக் காப்பாற்றிய பகவான்!


தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆரம்ப கால பக்தர்களில் கரூரைச் சேர்ந்த பால பட்டாபி மிகவும் முக்கியமானவர் ஆவார். பால பட்டாபி அவர்களின் வாழ்வில் பகவான் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். கீழ்காணும் இந்த அற்புதத்தை பகவான் நிகழ்த்தும்போது அவருக்கு வயது வெறும் 21. 

ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் தோற்றமும் நெறிமுறைகள்!


1965 ம் ஆண்டு ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்கள் சேவையின் புனிதத்தை, அதன் மகத்துவத்தை நெறிமுறைப்படுத்தி சத்யசாயி சேவா நிறுவனத்தைத் தோற்றுவித்தார். மனித குலம் ஒன்றே அதில் ஜாதி மத இன பாகுபாடுகள் இல்லை என்று சூறிய பாபா ஆன்மீக சேவை என்ற சித்தாந்த்தை இந்த நிறுவனத்தின் அடி நாதமாக வைத்தார். மனிதன் தன் உள்ளுறை இறைவனை
அடையாளம் கண்டு ஒன்றிட  இந்த நிறுவனம் உதவியாக இரூக்கும் என்றார் பாபா.

திங்கள், 27 ஜனவரி, 2020

எனக்கு பிடிக்காதவர் இதயத்திலும் சுவாமி இருக்கிறார் என்பதை நான் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


ஹிஸ்லாப்: நம் மனதிற்குப் பிடிக்காத, நம்மால் ஒத்துக்கொள்ள முடியாத மக்களிலும் இறைவனைக் காண்பதற்கான, கைவந்த கலை என்ன?

பாபா: விரும்பத்தகாத குணமுள்ள மனிதர்கள் இதயத்திலும் கூட, இறைவன் இருப்பதை கண்டுகொள். இந்த உண்மையை மனத்திற்கொண்டு உனது முழுத் திறமைக்கும் உகந்த வகையில், அந்தக் கோணத்திலேயே அம்மனிதனை அணுகவும்.

சனி, 25 ஜனவரி, 2020

தற்கொலை செய்ய இருந்த ஒரு தந்தைக்கு வாக்கு கொடுத்த சாயி பகவான்!


ஒருமுறை தர்ஷனின் பொழுது பாபா, திடீரென ஒரு பையனைப் பார்த்து "நீ டாக்டராக ஆகிறாயா?" என்றார். அப்பொழுது அம்மாணவன் வெறும் இன்டர்மீடியட் வகுப்பில் இருந்தான். அதற்கான பரிட்சையோ, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வோ எழுதவில்லை!

23-01-2020 முதல் தொடர்ந்து தார்வாடு (Dharwad) நகரில் நிகழ்ந்துவரும் சத்ய சாயி அற்புதம்.


நேற்று (24-01-2020) பிரபல கன்னட நியூஸ் சேனல்களான News 18 Kannada, Power tv, public tv & Suvarna tv news என அனைத்து செய்தி சேனல்களிலும் ஃபிளாஷ் நியூஸ்இல் ஒரு செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது நம் சுவாமியை பற்றிய ஒரு செய்திதான்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

பணம் வேண்டாம். அன்பு ஒன்றே வேண்டும்!

பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம். பேராசிரியர் திரு. அனில்குமார் அவர்கள் பகிர்ந்துகொண்ட சாயி அனுபவம்.

ஒருநாள் ஸ்வாமி ஒரு கத்தை கடிதங்களுடன் அமர்ந்திருந்தார். ஒரு குறிப்பிட்ட கடிதத்தை காண்பித்து, திரு. அனில்குமாரிடம் அதைப் பிரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார் என்றார். உள்ளே ரூ37,500 க்கு ஒரு செக் காசோலை இருந்தது. அது ஒரு பழைய மாணவன் அனுப்பியிருந்தான். 

வியாழன், 23 ஜனவரி, 2020

பின்னணி பாடகர் கௌஷிக் மேனன் அவர்களின் சாயி அனுபவங்கள்! -கவிஞர் வைரபாரதி


இன்று திரைப்பாடல் ஒலிப்பதிவு..
வேலை இடைவேளையிலும் தியான அமர்வுகள் இருமுறை.
ஸ்டூடியோவில் அருமையான அதிர்வலைகள். ஆச்சர்யமே அடைந்தேன்..

கீழ் நுழைவாயிலில் பூஜையறையில் அமர்ந்த கோலத்தில் சிவன் சிலை. அதன் அருகிலும் ஒருநாள் தியானத்தில் அமர்ந்திருக்கிறேன்.

தியானத்தின் முக்கியத்துவம்! - சத்ய சாயி அருளுரைகள்



தன்னைத் தானே சோதனை செய்து கொள்ளும் வழியின் மூலமாக, சாதகன் உள் உலகத்தை அடையலாம்;பணிவும் பக்தியும் கொண்ட சாதகனை, வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த, மிகவும் புனிதமான அந்தஸ்தைப் பெற உள் உலகத்தில் கதவு திறந்தே இருக்கும்.

புதன், 22 ஜனவரி, 2020

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. துரைசாமி ராஜு அவர்களின் சாயி அனுபவங்கள்!

Former Justice of The Supreme Court of India.

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து இருக்கிறார். இதைத்தவிர  இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இவர் எழுதிய பல தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  தன்னுடைய ஒவ்வொரு தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் நம் சுவாமியை மனதார பிரார்த்தித்த பிறகே தீர்ப்பை வழங்கி இருக்கின்றேன் என்று தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை மனமுருக பகிர்ந்துள்ளார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு துரைசாமி ராஜு (or) D. ராஜு. இவர்களின் சாயி அனுபவங்களை தவறாமல் கேட்ட அனைவரும் ஆனந்தம் அடையுங்கள்.
👇👇

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஒரு பக்தனுக்கு ஒழுக்க கட்டுப்பாடு மிகவும் முக்கியம்!


மனிதனிடம் ஒழுக்கக் கட்டுப்பாடில்லாத(DISCIPLINE) பக்தி குடி கொண்டிருக்கலாம். ஒழுக்கக் கட்டுப்பாடில்லாதவனை, பக்தன் என்று கூற இயலாது. மனிதன் முதலில் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

திங்கள், 20 ஜனவரி, 2020

என் ஆற்றல் அளவற்றது!


“எனது ஆற்றல் அளவற்றது; எனது சத்தியம் சொல்லுக்கடங்காதது, ஆழம் காண இயலாதது. அவசியம் ஏற்பட்டதால், என்னைப்பற்றி நானே கூறுகிறேன். இப்பொழுது நான் செய்வதெல்லாம், ‘விஸிட்டிங் கார்ட்’ போன்ற அருட்கொடைதான் . அவதாரங்களால் தெரிவிக்கப்படும் சத்தியத்தைப் பற்றிய அழுத்தமான அறிவிப்புகள், தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் கிருஷ்ணனால் மட்டுமே கூறப்பட்டன என்று நான் கூற விரும்புகிறேன்.

ஆன்மிகத்தை விட ஒருசில மக்கள் சடங்கு சம்பிரதாயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!

பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்! 

ஏகாதசி விரதத்தைப் பற்றி நடந்த நிகழ்ச்சி ஒன்று:

இது பல வருடங்களுக்கு முன் NVP திரு.N. ரமணி அவர்களால் பகிர்ந்து கொண்டது. ஒரு சமயம் ஸ்வாமி அவர்கள் ப்ருந்தாவனத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது ஒரு பெரியவர் ஸ்வாமியை பார்க்க வந்திருந்தார். வந்திருந்தவர் ஜோதிஷம்,நாடி ஜோதிஷம் என்று பல ஸாஸ்திரங்களை அறிந்தவர். வந்தவர் ஸ்வாமியிடம் தங்களுக்கு தான் நாடி ஜோதிஷம் பார்க்க விரும்புவதாகவும் தனியே அதைப்பற்றி கூறவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

நீர் பெட்ரோலாய் மாறியதும், பெட்ரோல் டாங்கின் விரிசல் சரி செய்யப்பட்டதும்!!!


திருச்சியிலிருந்த ஒரு ரயில்வே அதிகாரி, ஸ்வாமியின் தெய்வீக மேன்மையை கேள்வியுற்று, தன் குடும்பத்தோடு புட்டபர்த்திக்குக் காரில் வந்தார். மகிழ்ச்சியுடன் தங்கி, ஸ்வாமியின் லீலைகளைப் பார்த்து மகிழ்ந்தார்.ஆனால் ஸ்வாமியுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை!

மனநிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

பக்தர்: ஸ்வாமியின் பரிசுகள் அழகானவை. ஆனால் மனநிம்மதி மட்டுமே வேண்டுவோருக்கு என்ன வழி?

பாபா:  இறைவனைப் பற்றிய எண்ணங்களும் இறைவனை நேசித்தலுமே மன அமைதியைக் கொடுக்கும். உலகைப் பற்றிய எண்ணங்கள் குறையும் பொழுது, இறைவனைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கின்றன.

சன்யாசிகள் உணர்ந்து கொண்ட ஸ்ரீ சத்ய சாயி இறைவன்!


கலியுகத் தன்மை கண்டு கீழிறங்கிடும் இறை அவதாரம் எளியவருக்கு எளியவராய் தன் தனிப்பெரும் கருணையால் நடமாடுகிறது... ஆகச் சிறந்த எதார்த்தத்தையும்... பரிபக்குவத்தையும்... சராசரிகளுக்கான சமத்துவத்தையும் தானே வாழ்ந்து காட்டியபடி பேரிறை அவதாரமாகிய சுவாமி போதிக்கிறார்... அப்படி இருக்கையில் எவ்வாறு சுவாமி தூயத்துறவுக்கு மரியாதை கொடுத்து...‌தன் இறைப்பெருந்தன்மையை உணரச் செய்தார் என்பது பரவச அனுபவமாய் இதோ...!

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 6 | வைத்தியர்க்கு வைத்தியன் வைத்தீஸ்வர சாயி! - டாக்டர் நளாயினி

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் பிரபல டாக்டர் நளாயினி அவர்களின் சாயி அனுபவங்கள். 

பிரபல பின்னணி பாடகி P. சுசீலா அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


இந்திய மொழிகளில் எதைத்தான் விட்டு வைக்கவில்லை பி.சுசீலா அம்மையார்.. சுமார் 25,000-க்கும் மேல் ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ உள்ளிட்ட மொழி பாடல்களைப் பாடி... 5 தேசிய விருதுகள், 10-க்கும் மேல் மாநில விருதுகள், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷன்.. அனைத்துக்கும் மேலாக கின்னஸ் சாதனை.. என விரியும் பட்டியலை நம் முன்வைத்து விட்டு இன்றும் அதே அமைதியுடன் காணப்படுகிறார் சுசிலா அம்மையார். அவர்களின் ஆத்மார்த்த சாயி அனுபவங்களை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.

வியாழன், 16 ஜனவரி, 2020

பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் நமஸ்கார புகைப்படங்களின் பின்னணியில் உள்ளடங்கிய மாபெரும் திட்டம்!


ப்ரசாந்தி நிலையத்தில் ரேடியோ சாயி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர் திரு அரவிந்த் அவர்களது அருமையான குறிப்புகள். அவர் ப்ரசாந்தி நிலையத்தில் சுவாமி அவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களை (வீடியோ) பதிவு செய்து வந்தவர். மேலும் அவர்தான் சுவாமி அவர்களின் நமஸ்காரம் செய்யும் திருக்கரங்களை, ஆம் நம் உள்ளங்களை உருக்கும் புகைப்படங்களை படம்பிடித்தவரும் ஆவார்.

இறைவனின் மாபெரும் திட்டம் ( Masterplan ):

2011-ம் வருடம் ஏப்ரல் மாதம்27-ம் தேதி கண்டுணர்ந்த உள்ளத்தை உருக்கும் புகைப்படங்கள் - அந்த நிகழ்வுகளை கண்டு ஆனந்தித்த உணர்வுகள் போன்று வேறெந்த நிகழ்வும் இந்த பூமியில் நிகழவில்லை.

புதன், 15 ஜனவரி, 2020

சாதகனுக்கு சாத்வீக உணவு மிகச் சிறந்தது!


ஒரு சாதகன் விலங்குணவு உண்ணலாகாது. அவ்வாறுண்பதால், விலங்குணர்வுகளைப் பெறுகிறான். ஆடுகள், கோழிக்குஞ்சுகள், பன்றிகள் போன்ற பிராணிகள் குரல் வளை அறுத்துக் கொல்லப்படுகின்றன. இது பாவமான காரியம். கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை ரசித்து உண்பவர், அதைக் கொன்ற பாவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

🇧🇪 பெல்ஜிய நாட்டு இளவரசி ஆஸ்ட்ரிட்னின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


நித்தமும் இயேசுவை வணங்கி வந்த  பெல்ஜிய நாட்டு இளவரசி ஆஸ்ட்ரிட்னின்  வாழ்வில் பாபா எவ்வாறு நுழைந்தார் என்பதைப் பற்றியும் மேலும் பாபாவை நம்பாமல் கேலி செய்த இளவரசியின் மூத்த மகனான அம்மிடியோவுக்கு பாபா  தன்னுடைய அற்புதத்தால் எவ்வாறு பாடம் புகுத்தினார்  என்பதனை பற்றிதான் இந்த பதிவில் நீங்கள் வாசிக்க இருக்கிறீர்கள்...

❌ வெள்ளைச் சர்க்கரை வேண்டவே வேண்டாம்! - சத்ய சாயி பகவானின் தெய்வீக அருளுரை


சில வெளிநாடுகள் அணு ஆயுதப் பரிசோதனைகளைக் கடலிலும், விண்வெளியிலும், தரையிலும் நடத்தியுள்ளன. இதனால் காற்று மண்டலம் முழுவதும்நஞ்சு நிறைந்துவிட்டது. புல், பூண்டுகள் மேற்கண்ட பரிசோதனைகளால் நஞ்சு நிறைந்தவையாகிவிட்டன. பசுக்கள் இந்தப்புல்லைத் தின்கின்றன. பால் கெட்டு, நஞ்சுள்ளதாகிறது. வெண்ணெய், நஞ்சு நிறைந்ததாகிறது. பசுக்களுக்கும் கேன்சரும், இதய நோய்களும் வருகின்றன.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சத்ய சாயி சென்ட்ரல் ட்ரஸ்டின் டிரஸ்டி திரு. R.J. ரத்னாகர் அவர்களின் சாயி அனுபவங்கள்!


“பிரச்சினைகள் நாணல் போன்று லேசானது தான்!
மனதை அலைபாய, ஊசலாட விடாதீர்கள்!        
இதயத்தின் அன்பில்  பழுத்து, புன்முறுவல் பூக்கும்,
இறைவனிடத்தில் கவலைகளையும் சங்கடங்களையும் விட்டுவிடுங்கள்!!
-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 

பிரசாந்தி நிலையத்தில் ரத்னாகர் மிகவும் பிரபலமானவர். ஸ்வாமியின் தம்பியின் மகனான அவர் சத்ய ஸாயி சென்ட்ரல்  ட்ரஸ்டில் டிரஸ்டியாகவும் இருப்பவர்!

வெள்ளி, 10 ஜனவரி, 2020

நடிகர் மோகன் ராமன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


ஆரம்பத்தில் சத்யசாயி பகவானை வெறுத்து கடுமையாக விமர்சித்தவர், பின்னர் தீவிர சாயி பக்தராக மாறி இருக்கிறார். அவர் மாறியதற்கு காரணம் என்ன? பகவான் அவரது வாழ்வில் அரங்கேற்றிய அற்புதங்கள் தான் என்ன? கேட்போம்..

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

பாபாவை நம்பாதவர் பின்னர் தந்தையாரையும் நம்ப வைத்தவர்

ஆந்திராவின் தலைமை Drug controller ஆக இருந்த காலம்சென்ற திரு. B. V. ரமணாராவ் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்.

பாகம் - 1

ஆந்திராவில் துணை Drug controller ஆக பணிபுரிந்துவந்தார் திரு. ரமணாராவ். அவருடைய நண்பர் தீட்சித் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்அடிக்கடி பாபாவைப் பார்க்கவும்சேவைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் புட்டபர்த்திக்கு சென்றுவிடுவார். அவர் திரும்பி வந்தவுடன் ரமணாராவ் அவரை கேலி செய்வார். ஏன் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறாய் என்று கடிந்து கொள்வார். 

பாகவத வாஹினி - அர்ஜுனனுக்கு பசுபதாஸ்திரம் கிடைத்த நிகழ்வு!


பாண்டவர்கள் கானகத்தில் உள்ளனர். ஒரு நாள் தர்மன் பதட்டத்தில் உள்ளார். தனது நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்ட காலம் முடிந்தாலும் கௌரவர்கள்  தங்களை  அமைதியாக இருக்க விடுவார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.  ராஜ்யத்தில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்குமா என்று  அவருக்கு சந்தேகமாக இருந்தது. போர் தவிர்க்க முடியாததாக போய் விடும் என்று  அவர் கருதினார். பீஷ்மர், துரோணர்,

சனி, 4 ஜனவரி, 2020

இறப்பிற்குப்பின் என்ன நிகழும்?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: இறப்பிற்குப்பின் என்ன நிகழும் என்று பக்தர்கள் கேட்கிறார்கள். நான் பதிலளிக்கக் கூடியதெல்லாம், நான் சுவாமியிடமிருந்து புரிந்துகொண்டது, இறப்பிற்குப்பின் அனுபவம் எல்லோருக்கும் ஒரே விதமாக இருக்காது; ஒவ்வொருவருக்கும் அது ஒரே விதமாக இருக்காது என்பதே.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு.ரத்தன் டாடா பகவான் பாபாவை தரிசனம் செய்தபோது!

 “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா. நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் சாயி அனுபவங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒருவர் செல்வம் பல பெற்றவராயினும் உயர் பதவி வகிப்பவராயினும் பணிவு என்கிற நற்குணம் இருந்தால் மட்டுமே இறை அருளையும் , சக மனிதர்களின் மதிப்பையும் பெற இயலும் இந்த வகையில் திரு.ரத்தன் டாடா அவர்களின் நற்குண மாண்பு அவரை மனித நேயம் மிக்க ஒரு சிறந்த தொழில் அதிபராக மிளிர வைக்கிறது.

ஆத்மா உறைவதற்கு உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: ஆத்மா உறைவதற்கு உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா? இவ்விடத்தில் தியானத்தின் பொழுது லயிக்கலாமா? ஆத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட இடம், தங்குவதற்கு ஆசனம் இருக்கிறதா? 

வியாழன், 2 ஜனவரி, 2020

முழுமையான சுயநலமற்ற எண்ணத்துடன் பிறருக்குரிய தேவையினை செய்ய முற்படின் இயற்கை தனது சக்தியினால் அதனை செய்து முடிக்கும்!

சாயி முன்னாள் மாணவர் திரு வி. அஸ்வின் என்பவரின் அனுபவப் பக்கங்களிலிருந்து...

ஒருமுறை கொடைக்கானலில் தங்கி சேவைகள் செய்த தன்னாா்வ தொண்டா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டா்களின் ஒருங்கிணைப்பாளா்கள் அனைவருக்கும், ஸ்வாமி பரிசினை அளிக்க விரும்பினாா். அங்கு சேவையில்

'ராமாயணத்தில் மகளிர்!' - சாயி பார்வையில்


அவதார ராமாயணத்தை கலியுக அவதாரமே விவரிக்கும் போது இதோ ஆன்மீக ராமாயணமாகிறது! பகவத் ராமாயணத்தை இறைவன் பாபாவே விவரிப்பதால் மட்டுமே அது பரவச ராமாயணமாக திகழ்கிறது... திரேதாயுகத்தில் வாழ்ந்த அதே பரப்பிரம்மம் ஸ்ரீ சத்ய சாயியாய் கலியிலும் வாழ்வதில் ஸ்ரீமத் ராமாயணம் ஸ்ரீ சாயி ராமாயணமாய் உயிர்ப்பிக்கிறது! அதிலும் சுவாமி அருள்கிற மகளிர்க்கான போதனை ஞானமாய் திருவிளக்கு ஏற்றுகிறது இல்லத்தரசிகளின் இதயத்தில் இதோ..