தலைப்பு

சனி, 4 மார்ச், 2023

சுவாமி! ஒருவர் Good'டாக (நல்லவராக) இருந்தால் போதாதா? ஏன் God'டை (கடவுளை) உணர்ந்து கொள்ள வேண்டும்?


Good'ல் ஒரு O'வை எடுத்துவிடுங்கள்.. அந்த Extra O'வே இயற்கை (பிரகிருதி). O போய்விட்டால் God ஆகிறது! 

உங்களுக்கு தெரிந்த எழுத்து W... அதாவது Double You...! 

அதுவே ஜீவாத்மா- பரமாத்மா (double you) (துவைதம்) ! அவை இரண்டின் ஒருமையை (ஏகத்துவத்தை) மறைப்பதே மாயை (அறியாமை) 


'MY' (மாய்) என்பதை நான்கு ஐந்து முறை உச்சரியுங்கள்... அது மாயா என்று உங்களுக்கே கேட்கும்!

ஆம்! "என்னுடையது என நீங்கள் நினைப்பதே உங்களின் அனைத்து துக்கத்திற்கும் காரணம்!"

பக்கத்தில் உள்ள காருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை! உங்கள் காருக்கு ஏதேனும் ஒன்று என்றால் (மோதல் ஏற்பட்டால்) நீங்கள் உடைந்தே போய்விடுகிறீர்கள்! 

ஏன்?

அந்த காரை "என்னுடையது" என்று எண்ணுவதால்தான்...!


பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை விற்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை.. ஒரு சாட்சியாய் வேடிக்கைப் பார்க்கிறீர்கள்! ஆனால்...! உங்கள் வீட்டை விற்கும் நிலை வந்தால் வேதனை படுகிறீர்கள்! எதனால்? 

"இந்த வீடு என்னுடையதே!" என்று நினைப்பதால் தான் இந்த வேதனை! 

இந்த "எனது" என்பதே மாயை! 

அந்த 'எனது' என்ற எண்ணம் போய்விட்டால், ஒருமையில் உள்ள தெய்வத்துத்தை (Godliness) உணர முடியும்!


எவரையேனும் கொஞ்ச நேரம் பிரிய நேர்ந்தால் ஒரு Bye..

அதிக காலம் பிரிந்தால் Bye Bye என்கிறீர்கள்! சேர்ந்து இருக்கையில் Bye - Boy ஆகிறது! 

அதே Boy ஒழுக்கநெறிகளோடு வாழ்ந்தால் Good Boy என்கிறோம்! 

Good'டாக இருந்தால் மட்டும் போதாதா? எனக் கேட்கிறீர்கள்! 

அதே Good Boy பக்தியோடு இறைவன் சொல்படி தொண்டு செய்து வரும்போதே God's Boy ஆகிறான்! 

இதயத்தூய்மை பெறுகிற Good Boy'யின் இதயத்தில் இறைவன் அமர God's Boy ஆகிறான்!

Good boy'யிலிருந்து God's Boy ஆவதே உங்கள் அனைவர் மனித வாழ்க்கையின் மாக் உயர்ந்த இலட்சியாகும்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 250)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக