தலைப்பு

புதன், 30 மார்ச், 2022

ஒரு சீனரின் உயிரை அந்தரத்தில் தோன்றியபடி காப்பாற்றிய குவான்யின் சாயி!

பாபா மேல் நம்பிக்கையே இல்லாத ஒரு சீனருக்கு நிகழ்ந்த பேராபத்திலிருந்து இருமுறை காப்பாற்றி தான் யார் என பாபா உணர்த்திய அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

திங்கள், 28 மார்ச், 2022

டாக்டர்களால் கைவிடப்பட்ட தன் மாணவருக்கு கண்பார்வை அளித்த கண்ணப்ப சாயி!

தீராத பிணிகளைத் தீர்த்தார். வாராது சென்ற உயிர்களை மனித உடலுக்குள் செலுத்தி  மறுபடியும் உயிர்ப்பித்தார். பாபா செய்யாத அற்புதங்கள் உண்டோ. செய்த அற்புதங்களுக்கு கணக்குதான் உண்டோ. இவை அனைத்தும் அவரது கை அசைவிலே, அசைவில் பெருகும் லீலா விபூதியிலே விளைந்த கருணையால் அன்றோ. பாபாவின் எண்ணற்ற லீலைகளில் மற்றுமொரு அமுதச் சொட்டு. கண் இழந்த தம் மாணவர்மீது கருணை கொண்டு, கை அசைந்த விபூதியால் அதைக் குணப்படுத்திய விந்தை. பாபாவின்  அந்நாளைய மாணவர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் கூறும் பாபாவின் மற்றுமொரு திவ்ய கருணாலீலையைக் காண்போமா... 

சனி, 26 மார்ச், 2022

வியாதிகள் பரவுவதற்கான காரணம் என்ன? எச்சரிக்கிறார் பாபா

இக்காலத்தில் வியாதிகள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை... சொந்த வீடு என்ற ஒன்றை கட்டிக் கொண்டு மனிதன் வாழ்கிறானோ இல்லையோ சொந்த வியாதிகளோடு வாழ்கிறான்! உடல் சார்ந்த நோய்களுக்கு மனம் சார்ந்த நோய்களே மிகப் பெரிய காரணமாகி இருக்கின்றன... இதோ பாபாவே தனது தெய்வத் திருவாய் மொழியால் விளக்குகிறார் இதோ...

வெள்ளி, 25 மார்ச், 2022

மரண விளிம்பில் காசிம் வாலேகருக்கு காட்சி கொடுத்து காப்பாற்றிய பாபா!

சிகிச்சை செய்பவர் தனது பக்தர் என்பதற்காக அவரின் பூஜையறை பிரார்த்தனைக்காக சுவாமி எவ்வாறு அவரின் நோயாளி ஒருவரை  மருத்துவமனைக்கே சென்று நொடிப் பொழுதில் காப்பாற்றினார் எனும் நெகிழ்வான அனுபவம் இதோ...

வியாழன், 24 மார்ச், 2022

ஸ்ரீ சத்ய சாயி ஆராதனா மஹோத்சவம் - 30 நாட்கள் தொடர் தெய்வீக சாதனா

நமது சுவாமி தமது ஸ்தூல ஸரீரத்தை விடுத்து பக்தர்களின் நெஞ்சமென்னும் சன்னதியில் நிரந்தரமாக குடிகொண்ட தினம் ஏப்ரல் 24; இன்று தொடங்கி சரியாக 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களை ஸ்ரீ சத்யசாயி சாதனா என்ற விதமாக தெய்வீகமாக நடத்திச் சென்று ஸ்ரீ சத்யசாயி ஆராதனை மகோற்சவம் தினத்தில் (ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை) சுவாமியின் பாதத்தில் நம் பக்தியினைச் சமர்ப்பிக்கலாம்.

செவ்வாய், 22 மார்ச், 2022

சிலோன் முல்லைத் தீவு பக்தையின் மகனையும் சேர்த்து குணப்படுத்திய மகிமா சாயி!

உடல் நலம் குன்றிய உள்ளன்பு பக்தரை சுவாமி எவ்வாறு உவகையோடு அழைத்து உறுதியாய் கனவில் ஊட்டச்சக்தி அருளி உருகிய படி தனது கருணையை கரைபுரண்டு பெருகச் செய்கிறார் என்பதை இலங்கை முல்லைத் தீவின் மகிமா வாசனையோடு இதோ...

திங்கள், 21 மார்ச், 2022

திராவிடர் கழகத்து முனுசாமியை முரட்டு பக்தராய் மாற்றிய பரமாத்ம பாபா


நாத்திகர்கள் இறைவன் இல்லை என சொல்பவர்கள்... எல்லா சொல்லிலும் பாபா குடியிருக்க... " இல்லை " என்ற சொல்லிலும் ஆம் என்றபடி பாபா நிறைந்திருக்கிறார் என்பதை நேர்காணல் வழி உணர்ந்த தி.க முனுசாமி பாபாவிடம் வைத்த கோரிக்கை என்ன..? சுவாரஸ்யமாய் இதோ...

வியாழன், 17 மார்ச், 2022

விமானத்தை கடத்திய ஹை-ஜாக்கர்களையே பாபா ஹை-ஜாக் செய்த மகிமை!


இக்கட்டான சூழ்நிலை எதுவாயினும் பாபா தன் பக்தர்களை கைவிடுவதே இல்லை.. தக்க சமயத்தில் தடுத்தாட் கொள்கிறார்.. தக்க சமயம் என்பது பல பக்தர்களுக்கு துக்க சமயமாகவே இருக்கிறது.. அப்படி ஒரு துப்பாக்கி முனையில் உயிர் ஊசலாடிய சம்பவம் சுவாரஸ்ய சுருக்கமாய் இதோ...

அன்யதா சரணம் நாஸ்தி (AUDIOBOOK)


ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் பால பாகவதமான "அன்யதா சரணம் நாஸ்தி" புத்தகம் முதன்முறையாக  ஆடியோ தொடர் வடிவில்.. பாபா பக்தர்களின் இதயங்களை ஆனந்தப்படுத்த இருக்கிறது... காண கிடைக்கா பால சாயியின் மகிமைகள்/ லீலா விநோதங்கள் / அற்புதங்களின் நேரடி சாட்சியான திருமதி விஜயம்மாவின் சுவாரஸ்ய அனுபவ வாக்குமூலங்கள்... சிலிர்க்க வைக்கும் இதிகாச சம்பவங்கள்... நெகிழ வைக்கும் துவாபர யுகத்து பால குறும்புகள்.. மகிமைப்படுத்தும் மங்கள வரிகளில்... அதனோடு நம்மை சங்கமப்படுத்தும் கவிஞர் பொன்மணியின் இதயப்பூர்வமான ஆத்மார்த்த குரலில்...

புதன், 16 மார்ச், 2022

ஒரு ஜப்பான் இளைஞனின் தாயை ஜப்பானுக்கே சென்று குணமாக்கிய சுவாமி!

தன் மேல் கசப்பு கொண்டவர்களையும்... வெறுப்பவர்களையும் எப்படி சுவாமி தன் பேரன்பால் அகம் மாறச் செய்கிறார் என்பதை உருக்கமாய்... ஜப்பானிய நெருக்கமாய் அனுபவிக்கப் போகிறோம் சுவாரஸ்யப் பதிவாக இதோ...

செவ்வாய், 15 மார்ச், 2022

அனுப்பிய கடிதம் ஏற்று ஒரு குடும்பத்திற்கே அனுகிரகம் புரிந்த பரம கருணா சாயி!

ஒரு குடும்பத் தலைவரின் கடிதம் ஏற்று அவருக்கும்... அவரின் மகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் சுவாமி எவ்வகையில் அனுகிரகம் புரிந்தார் எனும் ஓர் சுவாரஸ்ய அனுபவம் இதோ...

திங்கள், 14 மார்ச், 2022

அறுவை சிகிச்சை அறையில் தோன்றி டாக்டர்களையே வியக்க வைத்த பாபா! - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி


01-03-1986ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (ஹைதராபாத் பதிப்பு) வெளிவந்த சுவாமி நிகழ்த்திய அதிஅற்புத மகிமை குறித்தான வியப்பு மிகு செய்தி இதோ...

செவ்வாய், 8 மார்ச், 2022

இப்போது முகநூலிலும் ஸ்ரீ சத்ய சாயி யுகம்!

வாட்ஸ் அப் குழுவில் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிற ஸ்ரீ சத்ய சாயி யுகம் இப்போது முகநூலிலும் தனது வெளிச்ச முகம் காட்டுகிறது.. அதை குறித்த ஒரு தகவல் பதிவு இதோ...

திங்கள், 7 மார்ச், 2022

வாடகை வீட்டு பக்தர்களுக்காக சொந்தவீட்டுக்காரர் கனவில் தோன்றிய பாபா!

எந்தவித பிரச்சனை தனது பக்தர்க்கு என்றாலும் இறங்கிப் போய் கருணை காட்டுவதில் சாயி அவதாரம் போல் வேறொரு அவதாரம் இல்லை என்கிற அளவில் சுவாமி நிகழ்த்திய அற்புதக் கனவு சுவாரஸ்யப் பதிவாக இதோ...

சனி, 5 மார்ச், 2022

ஒரு ஆஸ்திரேலியா தம்பதியர்க்கு மகப்பேறு வரம் அளித்த மகா சாயி!

மகப்பேற்றையும் அதோடு சேர்த்து  மனப்பக்குவத்தையும் அளித்து ஒரு ஆஸ்திரேலிய வக்கீல் குடும்பத்தையே நல்வழிப்படுத்துகிறார் பிரபஞ்ச நீதிபதியான சுவாமி சுவாரஸ்யமாய் இதோ...

வெள்ளி, 4 மார்ச், 2022

ஒரு ஊதுவத்திப் புகை வழிகாட்ட இருசாயியும் ஒன்றே என உணர்ந்த பக்தை!


மிகுந்த விசித்திரமான அனுபவம் ஒரு பக்தைக்கு நிகழ்ந்திருக்கிறது... இந்த அனுபவங்கள் முழுக்க புகையும் புகை சார்ந்த இடமும்...அதனூடே மாயை எனும் மனப் புகையையும் எவ்வாறு சுவாமி விரட்டுகிறார் என்பது இதோ....

வியாழன், 3 மார்ச், 2022

ஹிரண்யகர்ப லிங்கம் தோன்றிய வரலாறும் -அதனால் நீடிக்கும் மகிமை சிகிச்சையும்!


பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடிப்படை உருவமும் லிங்கம் என்ற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழைத்துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதை வடிவம் என எந்த ஒரு பொருளும் அடிப்படையில் கோள வடிவமாக இருக்கும். மனித உடலின் அடிப்படையாக செல் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும் அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே....

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா எழுதிய தமிழ் கடிதம்!


சி.ராமச்சந்திரன் என்ற பக்தருக்கு சுவாமி எழுதிய கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல். (ஆங்கில ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி தமிழில் கடிதம்)

முள்ளில் ரோஜாவாய் தியானத்தில் மலர வேண்டும்!


தியானம் என்பது சாதாரண விஷயமல்ல.. சாதாரண விஷயத்திற்காகவும் அல்ல என்பதை இறைவன் ஸ்ரீ சத்யசாயி வாஹினிப் பொழிவாய் விவரிக்கிறார்..