தலைப்பு

திங்கள், 30 செப்டம்பர், 2019

🤱சாயிமாதா சத்தியமாதா!


சாயி என்பதே தெய்வீக தாய் என்பதை குறிக்கும். சுவாமி மேலும் கூறுகையில் சாயி மாதா என்று அழைத்தே பிராா்த்தனை செய்யுங்கள் என்கிறாா் பகவான். சாயிமாதா என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியினை காண்போம்.

ராஜமுந்திரியில் முதியோா் இல்லமும் ஒரு சிறுமருத்துவமனையும் வைத்து நடத்தி வந்தவா் திரு. காருண்யாநந்தா அவா்கள். அவரது மருத்துவ மனையில் கார்பிணி பெண் ஒருத்தி மருத்துவ உதவி வேண்டி அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

🏏 கிரிக்கெட்டும் பிரசாந்தி சேவையும்!


சுமார் 10 வயது சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். தெருவில் நடமாட்டம் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தனர். தன்னை நோக்கி வந்த பந்தை அவன் வேகமாக தனது மட்டையால் தட்ட, பந்து எதிர் வீட்டு ஜன்னலின் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்துவிடுகிறது. வீட்டின் சொந்தக்காரர் மற்றும் தெருவில் நடமாடிக் கொண்டிருப்பவர்களும் கிரிக்கெட் விளையாடுபவர்களை

அருள் தரும் சாயி நவ துர்கேஸ்வரி! - நவராத்திரி ஸ்பெஷல் 🎉

ஶ்ரீ சத்ய சாயிபாபா சிவசக்தி அம்சமாகினும் பாபாவிடம் சற்றே மாதுர்ய பாவம் பக்தர்களிடையே உரையாடும் பொழுதும் அவர் நடந்து வரும் பொழுது பேரழகு ததும்பும் ஹம்ச நடையும் கலந்திருக்கும். பாபா எவரிடம் பேசினாலும் அந்த பக்தர் பகவான் பாபா நமக்கானவர் என்ற தாயினுடைய அன்பினை கூட்டி எண்ண வைத்துவிடுவாா். நமது பாபா நவ துா்க்கைக்கும் மேம்பட்டவரே. பெருஞ்சக்தியான பாபாவை இந்த நவராத்திரி பண்டிகையில் பாபாவை அம்பாளாகவே நாம் அனுபவித்து மகிழ்வோமாக..


நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள்

சீரடி சாயி பற்றி சத்ய சாயி


சீரடி பாபாவின் உண்மைத்தன்மை பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. அவரது பதினாறாவது வயதிலிருந்துதான் அவருடைய வாழக்கையின் செயல்பாடு பற்றி ஒரு சிலா் இவ்வுலகில் அறிந்திருக்கக்கூடும். 1835 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28 ஆம் தேதி பிறந்து 1918 ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் சமாதி அடைந்தாா். அவரது வாழ்நாளில் அநேக விஷயங்களை மக்களுக்கு கற்பித்தாா் மற்றும் குறிப்பிடத்தக்க செயல்களை

வியாழன், 26 செப்டம்பர், 2019

கடவுளை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்!


ஒரு சிலர் தங்களின் சுயநல ஆசைக்காக, அகில அண்டத்தையும் படைத்தவனிடம் விளையாடுகிறோம் என்று தெரியாமல் கடவுளையே ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். "உங்களிடம் நேர்மை இருக்கும்போதுதான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும்" என்று கூறி, பகவான் தனது கதையிலிருந்து ஒரு அத்தியாயத்தை விவரித்தார், கடவுளை ஏமாற்றுவதற்கான முயற்சி மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று முடித்தார் ... அக்டோபர் 19, 1999 அன்று பகவானின் தெய்வீக சொற்பொழிவிலிருந்து..

புதன், 25 செப்டம்பர், 2019

கேன்சருக்கு பகவான் கனவில் சொன்ன 'காபி' வைத்தியம்!


ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரியை  சேர்ந்த சுஜாதா என்ற பெண்மணி சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தை. அவருடைய கணவரோ பாபா மீது நம்பிக்கை இல்லாதவர். அவர் துபாயில் வேலை செய்து வந்தார். 1987இல் அவருக்கு உடல் நலம் குன்றியது. அதனால் துபாய் கம்பெனிகாரர்கள் அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைத்தார்கள். இந்தியா வந்த அவர்,

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

வைத்தீஸ்வர சாயி - டாக்டர் நரசிம்மன் குடும்பத்தில் சுவாமி நிகழ்த்திய அற்புதம்!


எந்த ஒரு சாயி குடும்பமும், சாயியிடம் சரணாகதி அடைந்து, அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று, எல்லாம் சாயியாய் வாழ்வதற்கு, அவர்களது வாழ்வில் சாயி நிகழ்த்திய ஏதோ ஓர் அற்புதமே காரணம்! அது, அவர்களுக்குள் நல்லதொரு மனமாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

டாக்டர் நரசிம்மனின் குடும்பத்தில் நிகழ்ந்த மனமாற்றமும் அர்ப்பண உணர்வும் அப்படிப்பட்டதுதான்.

📻 பாரததேசத்தின் சிறப்பு!


1) அவதாரங்கள் ஏன் நம்முடைய பாரத தேசத்தில் மட்டும் நிகழ்கின்றது?

2)  ஏன் நம்முடைய பாரத தேசத்தில் மட்டும் மூடநம்பிக்கைகள் அதிகமாக இருக்கின்றது?


3) கடவுளுக்கு மிருகங்களை பலி கொடுக்கிறார்களே அது சரியா?


4) சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன?


5) நம் பாரத தேசத்தில் பிறந்து, பலர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்களே அது சரியா?


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் சாயி பகவான் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள கீழிருக்கும் ஆடியோவை கேட்கவும்..

👇 👇 👇



Audio Courtesy: RadioSai

திங்கள், 23 செப்டம்பர், 2019

✈️ அமெரிக்காவுக்குப் பறந்த மருந்து!


சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது.

எங்களின் மகளுக்கு வளைகாப்பு முடிந்த கையோடு, வாஷிங்டனுக்குச் செல்ல நேர்ந்தது. மருமகனுக்கு அங்குதான் உத்தியோகம். இந்தியாவில் மகப்பேறு மருத்துவரால் எழுதித் தரப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தாள் எங்கள் மகள். இந்த நிலையில், ''அந்த மாத்திரைகள் இங்கு கிடைக்கவில்லை. அந்த மாத்திரைகளை வாங்கி, உடனே

🎶 பிரபல TOP 12 தமிழ் சாயி பஜன்ஸ் (ஆடியோஸ்)


இக்கலியில் இறை நாம சங்கீர்த்தனம் ஒன்றே கடைத்தேற வழி என்பது நாம் அறிந்ததே..

நம்மை கடைத்தேற்றுவதற்காகவே அவதரித்த பகவான், நமக்காக வழங்கிய அற்புதமான பாதையே சாயி பஜன்..




ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

பிரசாந்தி நிலையத்தில் ஆன்லைன் மூலமாக அறை முன்பதிவு செய்வது எப்படி?


பிரசாந்தி நிலையத்தில் ஆன்லைன் மூலமாக அறை முன்பதிவு செய்வது எப்படி? ஒரு வழிகாட்டி.

ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்ய கீழ்கண்ட இணையதளத்தை உபயோகிக்கவும்: www.prasanthinilayam.in

தற்போது இந்த இணையதளத்தின் மூலம் இரண்டு வகையான அறைகள் மட்டும், இருப்பை கொண்டு, முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்ய முடியும்.

பர்த்தியிலே வந்த கங்கை!



இது தான்  சித்ராவதி;
பர்த்தியின் இனிய இளவரசி;
துளித்துளியாய் ஒளிரும் நீரோடை;
கரை புரளா ஆனந்த நீரோடை;

வியாழன், 19 செப்டம்பர், 2019

பகவான் ஸ்ரீ சத்ய சாயி சாய் பாபாவின் அன்பான அறிவுரைகள்:


🌟 யாரையும் ஏமாற்றாதே.

🌟 யார் மீதும் கோபம் கொள்ளாதே. யாரை பற்றியும் யாரிடமும் குறை கூறதே.

🌟 மற்றவர்களிடம் பேசும் முன் யோசித்து பேசு. வார்த்தைகளை கொட்டாதே. 

🌟 உன்னை புகழ்ந்து பேசும் போது அமைதியாக இரு. உன்னை இகழ்ந்து பேசும் போது கேட்காமல் இரு.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

இறந்த சிறுவனை உயிா்ப்பித்த ஶ்ரீ சத்யசாயி பகவான்!


சிம்லா, 02 ஏப்ரல் 1973:-
சத்திய சாயி பகவானின் அதிமனித தெய்வீக சக்தியின் அடையாளமாக மற்றொரு உதாரணம் இங்கே நாம் காணலாம்.

ஒருமுறை பகவான் ஶ்ரீ சத்திய சாயி பாபா தனது பக்தா்கள் சிலருடன் சிம்லாவுக்கு சென்றாா். அந்த குழுவில் சுவாமி காருண்யா நந்தாவும் இருந்தாா். அந்த பயணம் நம்ப முடியாத நிகழ்வினை கொண்டதாகும்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இறந்தவர் மீண்டார்!



1988, வியாழக்கிழமை அக்டோபர் 20 ஆம் நாள் சுவாமி பக்தர்களை மீண்டும் ஒரு முறை வியப்பில் ஆழ்த்தினார். அன்று விஜயதசமி தினம், திடீரென்று இதற்குமுன் அவர் எப்போதும் செய்திராதபடி, தனது சொற்பொழிவை இடையில் நிறுத்தி விட்டார். பூர்ணசந்திரா அரங்கத்தில் மேடையிலிருந்து
படிகள் வழியாக கீழே இறங்கி வி..பி பகுதிக்குச் சென்றார். நீண்ட கால

1200 ஆண்டுகால ரகசியத்தை பத்ரிநாத்தில் வெளியிட்ட சாயி பகவான்!

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பத்ரிநாத் விஜயம் 

புதன், ஜூன் 07, 1961 முதல்
 சனிக்கிழமை, ஜூன் 17, 1961 வரை 

1961ம் வருடம் ஜூன் மாதம் 7ஆம் தேதி ஸ்வாமியும் அவரைச் சேர்ந்தவா்களும் சென்னையிலிருந்து டெல்லி வழியாக பத்ரிநாத் புறப்பட்டனா். நான்கு நாட்கள் டெல்லியில் தங்கிய பிறகு, ஸ்வாமி உத்திரப்பிரதேச மாநில ஆளுநா் டாக்டா் பி.ஆா். ராமகிருஷ்ண ராவ் மற்றும் அவரது குழுவினருடன் ஜூன் 11ஆம் தேதியன்று பத்ரிநாத்துக்குப் புறப்படத் தயாராயினா். ஆயினும் டெல்லியிலிருந்து கிளம்புமுன்  இதுவரையில் யாரும் கேட்டிராத குறிப்புடன் கூடிய நடவடிக்கைள் பற்றி உயரிய விவரங்களுடன் ஸ்வாமி விவரித்தாா்.

புதன், 11 செப்டம்பர், 2019

'ஸ்ரீ சத்யசாயி்' - என் வாழ்க்கையின் தலைமை நிர்வாக அதிகாரி || திரு. N. T அருண்குமார்

திரு. N. T அருண்குமார்
CMD & Head of Innovation | Board Director | Digital, Technology, Global Business Services, Telstra 🇦🇺
CMD & Head of Innovation | Board Director | Digital, Technology, Global Business Services

திரு. அருண்குமார் அவர்கள் UBS இன்வெஸ்ட்மென்ட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனராக(Manging director) பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்னதாக D&B ட்ரான்ஸ்யூனியன் அனலைசிங் and  பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்(CEO) இருந்திருக்கிறார்.

2008 ஆம் வருடம் திரு. அருண்குமார் அவர்கள் ரேடியோ சாயிக்கு  அளித்த ஆங்கில பேட்டியின் தமிழாக்கம் கீழ்வருமாறு.. 

எங்கள் நிறுவனத்துடன் சுவாமி எப்பொழுதும் எல்லா சமயங்களிலும்

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

பகவான் முன்கூட்டியே காட்டிய அடையாளம்!


கூடலூர் சமிதியைச் சேர்ந்த திரு. ஜோகையா லிங்கராஜ் அவர்களின் அனுபவம்.

 2011ஆம் ஆண்டு ஒருநாள் பகவானின் திருஉருவப் படத்திற்கு சாத்தியுள்ள மாலை சத்தத்துடன் வெடித்து, சிறு துண்டுகளாக சிதறி, அந்த துண்டுகள் கீழே விழாமல் மேலே மேலே போய், கடைசியில் ஒரு விநாயகர் படத்திற்கு மாலை ஆகிவிட்டது. பயந்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியில்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

உங்களின் நன்மைக்காகவே நான் உங்களை கண்டிக்கிறேன்!


தனது குறைகளை சிறியவை என்று நினைப்பதும், மற்றவர்களது சிறிய தவறுகளை பெரிது படுத்துவதும் ஒரு பக்தனுக்கு அழகல்ல, சரியல்ல. அவன் மற்றவர்களிடம் உள்ள சிறுசிறு நல்ல இயல்புகளையும் வெளியே விரித்துரைக்கும் நற்பண்பு பெற்றிருக்க வேண்டும். நல்லியல்புகள், கெட்ட இயல்புகள் இவற்றுடன் கூடி மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கிறார்கள்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயி பாபா பற்றி காஞ்சி மகா பெரியவா!


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் சிவசக்தி அம்சத்தை பக்தர்களுக்கு உணர்த்திய காஞ்சி பெரியவர் கூறிய சர்வ ஆதாரப் பதிவுகள் இதோ. ஸ்ரீ சத்ய சாயிபாபாவை குறித்து பலமுறை பல பக்தர்களிடம் சத்ய சாயியே சாட்சாத் காமாட்சி என்றும் .. புட்டபர்த்தியே திருப்பதி என்றும்.. ஸ்ரீ சத்ய சாயியே சிவ சொரூபம் எனும் பரம ரகசியத்தையும் மொழிந்திருக்கிறார். அதன் பரவச பதிவுகள் இதோ...  

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபா கிருஷ்ணரின் அவதாரம்!

புட்டபர்த்தியில், முஸ்லிம் அன்பர்களுக்காக பாபா தர்க்கா கட்டிக்கொடுத்தார். "மெஹத்தி மெவுட்' என்ற அரேபிய புத்தகத்தில், தீர்க்க தரிசி மொகமத்," சாய்பாபாவின் கடைசி ஒன்பது வருடங்களில் தான் இவரை புரிந்துகொள்வார்கள்' என்றார். கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் "நாஸ்டர்தாம்ஸ் என்ற தீர்க்க தரிசி, "இந்தியாவின் தெற்கு பகுதியில் ஞானஸ்வரூபியாக ஒருவர் வந்துபிறப்பார்; மொத்த உலகத்தையும் வழிநடத்துவார்' என்று செஞ்சுரீஸ் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

💧தண்ணீர் தண்ணீர்!


"சாயி நிறுவனங்களின் மாவட்ட தலைவராய் நான் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி என்னால் மறக்க முடியாத ஒன்று.

மதுரைக்கு, சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு கிராம சேவைக்காக சென்றிருந்தோம். அது ஒரு குக்கிராமம். எளிய மக்கள். அங்கு கடுமையான குடிநீர் பஞ்சம். நாங்கள் சாயி சேவையை பற்றி பேசத் தொடங்கும் போது, “உங்கள் பேச்சு இருக்கட்டும். நாங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் வாடுகிறோம். உங்களால் எங்களுக்கு தண்ணீர் வரவழைத்துத் தரமுடியுமா?” என்று கூட்டத்தினர் கேட்டனர்.