தலைப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2024

எல்லா சமயங்களுக்குமான சமமான இரு சமத்துவ அவதாரங்கள்!

இரு அவதாரங்களும் ஒரு சமயத்திற்கான கடவுளர் அல்ல , அவர்கள் இருவருமே எல்லா சமயங்களுக்குமான இறைவன் என்பதை ஆச்சர்ய சம்பவங்களின் வாயிலாக உணர்த்தும் உன்னதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 25 ஜூலை, 2024

டாக்டர் B சீதாராமையா | புண்ணியாத்மாக்கள்


மனிதர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சொரூபமே! மனிதருக்கு விளைகின்ற இன்பமும் துன்பமும் தனிப்பட்ட உணர்தலுக்கானது மட்டுமல்ல.. அடுத்தவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் தான்! இன்னும் சொல்லப்போனால்... ஒவ்வொரு மனிதரும், தாம் பெற்றிருக்கும் உடல்.. பிறருக்கு சேவை செய்வதற்காகப் பெற்ற வரமாகக் கருத வேண்டும் என்று வேதமும் "பரோபகாரார்தம் இதம் சரீரம்" என்று பிரகடனம் செய்கிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதனுக்கு சேவை என்றால் என்ன என்றே தெரியவில்லை. மனிதர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் வணிக நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. மனிதர்கள், ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய... ஒருவரை சந்தித்து சிரித்துப் பேசி நலம் விசாரிப்பதைக் கூட பயனற்ற காரியமாக கருதத் தொடங்கிவிட்டனர். 20ம் நூற்றாண்டில்...  மனித வாழ்க்கைக்கு அடிப்படையான.. உணவு, நீர் மற்றும் மருத்துவம்  ஆகிய மூன்றுமே உச்சகட்ட வணிகமயம் ஆகிவிட்டது. அப்படியே போனால்.. மனிதன் மிருகநிலைக்கு எளிதில் தள்ளப்பட்டு மீண்டும் பல உலக யுத்தங்கள் வெடிப்பது நிச்சயம் என்ற சூழ்நிலையில் தான் இறைவன் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயியாக பூமிக்கு வந்தார்.

வியாழன், 18 ஜூலை, 2024

"எல்லா பெயர்களும் வடிவங்களும் என்னுடையவையே!" -- இரு அவதாரங்களின் ஒரு சேர்ந்த பிரகடனம்!

சகலம் ஸ்ரீ கிருஷ்ண மயம் போலவே சகலம் ஸ்ரீ சாயி மயம் என்கிற ஆன்மீகப் பேருண்மையை வாசிப்பவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிகிறபடி இரு அவதாரங்களுமே அதனை எவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள் எனும் ஆச்சர்ய மொழிகள் சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 9 ஜூலை, 2024

1948'ல் சனாதன சாரதியை அனுபவித்துச் சிலிர்த்த கப்பல் பார்த்தசாரதி!

பாபாவின் ஆதிகாலத்து பக்தர்களின் சிலிர்க்க வைக்கும் நேரடி வாக்குமூலங்கள் பற்பல... அதை ஒட்டுமொத்தமாகத் திரட்டினால் பாற்கடலாய் இதயத்தில் அமுத அலையோசையே எழும்... அத்தகைய பக்தர் ஒருவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...

சனி, 6 ஜூலை, 2024

ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்!

பாபா ஸ்ரீ கிருஷ்ணரே என்கிற சத்தியத்திற்கு சாட்சியாக பாபாவே பல பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள் மெய் சிலிர்க்கும்படியானது... அதன் ஆச்சர்ய நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இதோ...!