தலைப்பு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உங்கள் ஆசைகளுக்கு உச்சவரம்பு வைத்துக்கொள்ளுங்கள்!


மனிதர்களின் பேராசையைச் சுருக்கி ஆசையாக்கி அந்த ஆசைக்கும் ஓர் எல்லை வகுத்து அந்த எல்லைக்குள் சேமித்து வைத்த சாயி சேவை எனும் முல்லையைத் தொடுத்து.. தனக்கே ஆரமாய்ச் சூட்டி.. வாழ்வை மணமுள்ளதாய் மாற்றச் சொல்கிறார் இறைவன் சத்ய சாயி...

வியாழன், 29 ஏப்ரல், 2021

தன்னுடைய ஷீரடி சாயி அவதார சீடர் அப்துல் பாபாவுக்கு மோட்சம் அளித்த இறைவன் சத்ய சாயி!


இந்த அண்ட சராசரம் இறைவன் சத்ய சாயி கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.. அவரிடம் இருந்தே உயிர் தோன்றுகின்றன.. அவருள்ளே மீண்டும் அவை ஒடுங்குகின்றன.. அதில் யோகிகள் சதா சாயி இறைவனையே தியானித்த படி இருப்பதால் அவர்களுக்கு இன்னும் ஆழமான மேன்மையை அவர்களுக்கு வழங்குவது நியாயமே!!!

சேவாதள தொண்டர்களை எப்படி நடத்த வேண்டும்? - ஆச்சர்யம் பகிர்ந்த பாபா!


மிக முக்கிய விருந்தினருக்காக பிரசாந்தி நிலையத்தில் பல மாளிகைகள் அமைந்திருக்க, தமது இதய மாளிகையின் முக்கிய விருந்தினராக பாபா யாரைக் கருதுகிறார்? மனம் உருக்கும் பாபாவின் கருணை வெள்ளம். அதில் மூழ்கும் பக்தியுடன் தொண்டர் உள்ளம்... 

புதன், 28 ஏப்ரல், 2021

மருத்துவம் பிரம்மிக்கும் சாயி மகத்துவம்!


துன்பப்படுபவர் யாராக இருந்தாலும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் மனதின் ஆழத்திலிருந்து நம்பிக்கை யோடு பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு என் உதவி நிச்சயமாக கிடைக்கும்.    
இறைவன் ஸ்ரீ சத்யசாயி  பாபா 

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

விண் அளந்த சாயியின்... கண் அளந்த கச்சித அளவு!

ஸ்ரீ சத்யசாயி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவரின் விநோத அனுபவம்....

கற்றரிந்தவர் கணக்கு வேறு, முற்றும் உணர்ந்த பகவான் பாபாவின் கணக்கு வேறு. வந்தபின் உணர்வான் மனிதன். அதை வாராமல் முன்பே அறிந்து தடுப்பவர் இறைவன். "வேதா சாஸ்த்ராணி விஞ்ஞானம் ஏதத்சர்வம் ஜனார்த்தனாத்" என்கிறது விஷ்ணு சகஸ்ரநாம பலச்ருதி. 

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சாயியின் நாமத்தை சதா எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ... அவர் ஜீவன் முக்தர் ஆகிறார்...

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா பிருந்தாவன் வளாக ஹாஸ்டல் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு எழுதிய பிரகடனக் கடிதம்.... 

உங்கள் சத்ய சாயி "சாய்பாபா" எனும் பிரபலமான பெயரை பயன்படுத்தித் தானே புகழடைந்தார்?


கேள்வி: உங்கள் சத்ய சாயி "சாயிபாபா" எனும் பிரபலமான பெயரை பயன்படுத்தித் தானே தன்னையும் சாயிபாபா எனச் சொல்லி புகழடைந்தார் என்கிறார்களே.. உண்மை தானா??

இந்தியாவிலிருந்து ஜெருசலேமிற்கு திரும்பிய இயேசுவின் நிஜ உருவத்தை சிருஷ்டித்த பரமபிதா சாயி!


இறைவன் சத்ய சாயி யாவையும் அறிவார்.. பக்தர்களின் தேவையும் அறிவார்... சரித்திரம் என்று திரித்துக் கூறப்பட்ட விஷயங்களை எல்லாம் சத்தியம் குறையாமல் இதயத்திற்கு இதமாக உணர்த்தும் இறைவன் நம் சுவாமி... அவர் இயேசு கிறிஸ்துவின் நிஜமான உருவத்தை முதன்முதலில் சிருஷ்டித்து அருளிய போது எவ்வகையான சிலிர்ப்பை வெளிநாட்டவர்கள் பெற்றார்கள் என்பதன் அற்புதமான பதிவு இதோ...

இந்த லாக்டோன் காலகட்டத்திலும் நாராயண சேவை ஆற்ற முடியுமா... ??

இதுகுறித்து நம்முடைய ஸ்ரீ சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த சாயி சகோதரர் திரு S. ரமேஷ் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...

வியாழன், 22 ஏப்ரல், 2021

திரு. மகேந்திர குமார் தவே அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பக்தரும், தற்சமயம் சுவாமியின் கொடைக்கானல் சாய் சுருதி திருக்கோவிலில் பாதுகாப்பாளராகவும் சேவையாற்றி வரும் சாய் சகோதரர், திரு மகேந்திர குமார் தவே அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்! 

புதன், 21 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி ராமர் சிருஷ்டித்த ஸ்ரீ ராம - சீதா திருநகைகள்!


சம்பவாமி யுகே யுகே எனும் இறைவன் சத்ய சாயியின் திருவாக்கிற்கு இணங்க.. சுவாமி ஸ்ரீ ராமராய் அவதரிக்கையில் அணிந்து கொண்ட திருநகைகள் மற்றும் அன்னை சீதா தேவியின் திருமாங்கல்யம்...காண கண் கோடி வேண்டும்... இதனை தரிசிக்க தரிசிக்க  தெய்வீகப் பரவசம் தீண்டும்...

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி யுகம் பிளாக் (இரண்டாம் ஆண்டு நிறைவு )



உங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..

'ஸ்ரீ சத்ய சாயி யுகம் ப்ளாக்' தொடங்கி இன்றுடன்  இரண்டு வருடம்  நிறைவு பெற்றுள்ளது. இந்த இரண்டு வருடத்தில் இதுவரை 87 நாடுகளிலிருந்து நம்முடைய பதிவுகளை பார்த்து வந்திருக்கிறார்கள்.  இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைப் பக்கங்களை இந்த பிளாக் பெற்றிருக்கிறது.  இதற்கு  முக்கியக் காரணம் நம் அன்பு சுவாமியின் பரிபூரண சங்கல்பமே

திங்கள், 19 ஏப்ரல், 2021

காற்றை விடவும் பரந்தது கடவுள் சாயி பாதம்!


"என் பாதங்கள் உங்களுக்கு மிக அருகாமையில் நீங்கள் எளிதில் அடையும் வகையில் எப்போதும் உள்ளது." 

-இறைவன் ஸ்ரீ சத்ய சாயி

சூரியன் உதிக்கும் போது ஏரியில் உள்ள தாமரை மொட்டுக்கள் அனைத்தும் நறுமணம் வீசி மலர்வதில்லை.  எவையெல்லாம் முழு வளர்ச்சி பெற்று மலர்வதற்கு தயாராக உள்ளதோ, அவை மட்டுமே மலர்கிறது. ஏனைய மொட்டுக்கள், தாங்கள் மலர்வதற்க்கான நேரம் வரும் வரையில் பொறுமையாகக் காத்திருக்க தான் வேண்டும். அவ்வண்ணமே இறைவனது கருணையைப் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருந்தாலும், ஆன்மீக ஒழுக்கத்தினால் மட்டுமே அதை அடைய முடியும்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

ஏர்டெல் நிறுவன உரிமையாளரின் உலகம் வியக்கும் சாயி சேவைகள்!

பிரம்மாண்ட ஏர்டெல் நிறுவனத்தின் அதிபர் அவர்களின் வாழ்வில்  வெளியே தெரிய வேண்டிய மிக முக்கியமான பக்கங்கள்... அந்தப் பக்கங்களின் பக்கமாய்  சுவாமியிடம் பக்தியும்... சுவாமி சொல்லியபடியான சேவையும் எவ்வாறு அதிசயத்தோடு இயங்குகிறது என்பதை பரவசத்தோடு வாசிக்க இதோ... 

திருமதி. பிரபாவதி மேத்தா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் நீண்டநாள் பத்தையும், புட்டபர்த்தியில் உள்ள சுவாமியின் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான, சாய் சகோதரி திருமதி. பிரபாவதி ஆர் மேத்தா அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்... 

சனி, 17 ஏப்ரல், 2021

வீட்டிலேயே வழிபடலாமே? ஏன் சமிதிகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும்?



கேள்வி: பாபா நான் எல்லா இடங்களிலும் இருக்கின்றேன் என்று சொல்கின்றார். அப்படி இருக்கும்போது நான் வீட்டிலேயே  வழிபடலாமே? ஏன் சமிதி களுக்கும், கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும்?

வியாழன், 15 ஏப்ரல், 2021

காஞ்சி மகா பெரியவர் கருணைக்கடலான பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவைப் பற்றி..

தூயத் துறவி.. காஞ்சி மகான் மகா பெரியவர் கருணைக்கடலான சத்யசாயி பாபாவைப் பற்றி தன் பக்தர்களான இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி, தெய்வத்தின் குரல் ரா.கணபதி போன்றவர்களிடமும்... இதயம் திறந்து பகிர்ந்த இதிகாச  சத்திய அனுபவ வாக்குமூலம் முழுதாய்..‌ முதன்முதலாய் அடங்கிய அரிய வீடியோ தொகுப்பு..

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஏன் இந்த துயரங்கள்?


பக்தன்: கடவுளின் அன்பு எல்லோரிடமும் ஒரே மாதிரி இருக்குமேயானால் ஏன் இங்கே பலவித துயரங்களைக் காண நேர்கிறது?

சாயி: ஆமாம், கடவுளின் அன்பு ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. ஆனால் அது கடவுளிடமிருந்து மட்டுமே செலுத்தப்படும் ஒருவழிப்பாதையல்ல. பக்தனிடமிருந்து கடவுளுக்கும், கடவுளிடமிருந்து பக்தனுக்கும் செல்லும் அன்பு இருவழிப்பாதையாகும்.

பஹ்ரைன் இஸ்லாமிய டாக்டர் தன் பாக்கெட்டில் இருந்து காட்டிய சத்ய சாயி படம்!


பஹ்ரைனில் இருந்த அன்பருக்கு உறவினர் மூலம் சத்ய சாய்பாபாவின் அற்புதங்கள் பற்றி தெரிய வர அவரும் அவரது பக்தர் ஆனார். இப்படித்தான் சுவாமி ஒருவரை தனது பக்தராக்க பல்வேறு விதங்களில் அருள்புரிகிறார். அதற்கு பூர்வ பிறவிப் புண்ணியங்களும் மிக முக்கிய காரணமாக அமைகின்றன.. சுவாமி பக்தராக இருப்பவர்கள் தனது இதயத்தை அப்படியே கொடுத்து அதற்குப் பதிலாக சுவாமியையே முழுதாய் வாங்கிக் கொள்பவர்கள்... அப்படிப் பெற்றவரில் இந்த பஹ்ரைன் பக்தரும் ஒருவர்!!

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

கர்மாவை கழிப்பதற்காக பாபா அளித்த அதிர்ச்சி வைத்தியம்!

ரமண மகரிஷியின் முக்கிய சீடர்களில் ஒருவரான அமிர்தானந்தரின் அதிர்ச்சியூட்டும் சாயி அனுபவம்! 

இறைவன் ஸ்ரீ சத்யசாயி தன் பக்தர்களின் / தன்னை அண்டி வருபவர்களின் கர்மாவை சிறு பார்வையிலேயே கரைத்து விடலாம்.. ஆனால் சில வேளைகளில் அவ்வாறு அவர் செயல்படாமல் அந்த கர்மாவை கரைப்பதற்கான வழிவகைகளை செயல்பட வைத்து கர்ம நிவர்த்தியை தருகிறார்.. விதியை நிர்ணயிக்கும் சுவாமியே அவ்விதியை மீறுவதில்லை என்பதும் இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது! அப்படி ஓர் வழிமுறையை செயல்பட வைத்து கர்மாவை சுவாமி குணப்படுத்திய ஓர் அற்புத அனுபவப் பதிவு இதோ...

ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனமும் ஸ்வீடன் பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி உடன்படிக்கை!


உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

சந்தூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜமாதா சுசீலா தேவி அவர்களின் அனுபவங்கள்!


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சந்தூர் மாநிலம் இந்தியாவின் ஒரு சுதேச மாநிலமாக இருந்தது, சந்தூரு அதன் தலைநகராக இருந்தது.  தற்போது ​​இது கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஒரு நகரமாக உள்ளது.... 

முடிவிலா இறைவனின் முப்பெரும் சாயி அவதாரங்கள்!


இறை அவதாரங்கள் ஏன் நிகழ்கின்றன? 
புவியில் பல மாற்றங்களை ஏற்படுத்தவும், மானுட குலத்தைச் சீர்திருத்தி உயர்த்தவும் தான் இறை அவதாரங்கள் பூமியில் நிகழ்கின்றன. அப்படித்தான் சாயி அவதாரமும்.

புதன், 7 ஏப்ரல், 2021

பூக்காரரின் நேர்மைக்குப் பரிசாக பாபா அளித்த தங்கச் சங்கிலி!

ஏராள அற்புதம் நேர்கின்றன.. அதிலும் தாராள சுவாமி அருள் சேர்கின்றன.. சுவாமியின் அற்புதங்கள் எல்லாம் இதயம் மணக்கச் செய்பவை...பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன் என்பார்கள். ஆனால் பூ வைத்தவருக்கு பொன் சங்கிலி சிருஷ்டித்து ஆசீர்வதித்தார் பாபா.

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

இறந்தவரை உயிர்ப்பிக்கும் இறைவன் சத்ய சாயி!


 மனித கர்மாவை மாற்றி அமைக்கும் இறைவன் சத்யசாயிக்கு இறந்தவரை உயிர்ப்பிப்பதொன்றும் பெரிய செயலில்லை.. அதை அனுபவித்த பக்தர் பலர்... அதில் புட்டபர்த்தியில் வசித்துவரும் திரு. வெங்கடேஸ்வரன் என்ற பக்தரின் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை தான் இன்று பார்க்கப் போகிறோம். 

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ஸ்ரீ அன்னை (1878 –1973)


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

திங்கள், 5 ஏப்ரல், 2021

இறந்த நாயையும் உயிர்ப்பித்த பாபாவின் பெருங்கருணை!


உயிருள்ள / உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் உறைவது ஆத்மசக்தி.
புல்லாய்,, புழுவாய், கல்லாய் , மரமாய்
பறவையாய் மனிதராய் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில். பகவான் பாபா எல்லா உயிர்களையும் சமமாக நேசித்து, எவ்வாறு ஒரு இறந்த நாயை மீண்டும் உயிர்ப்பித்தார் என்ற அற்புத நிகழ்வை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

விஞ்ஞானமே சிலிர்க்கும் அளவிற்கு சாயி அற்புதம் காணும் அமெரிக்க தம்பதிகள்!

சாயி தம்பதிகள் ஜெயந்தி - டாக்டர் மோகன் அவர்களின் பேரனுபவங்கள்... 

கணவன் மனைவி இருவரும் சத்யசாயியின் ஆத்மார்த்த பக்தராக ஒருமித்து இணைந்து வழிபட்டால் எத்தகைய சாயி லீலா விநோதங்களை அனுபவிப்பர் என்பதற்கு இந்தப் பதிவு ஓர் பெரும் சான்று..

காஷ்மீரில் சமாதியான இயேசு கிறிஸ்துவை குறித்து பரமபிதா சத்யசாயி கூறுவது என்ன??


இயேசு நாதர் குறித்த மேன்மையை... தெய்வீகச் சிறப்பை.. மிக மிக ரகசியமான அவரது இள வயது வாழ்வை.. சிலுவை ஏற்றத்திற்கு பிறகு நிகழ்ந்ததை .. அவரின் ரகசிய சமாதியை.. என ஒவ்வொன்றாக இறைவன் சத்ய சாயி துல்லியமாக விளக்குகிறார் இதோ...

வியாழன், 1 ஏப்ரல், 2021

ஸ்ரீ சத்ய சாயி பாபாவை கிருஷ்ணராகப் பார்க்கிறேன் - Justice P.N. பகவதி


ஜஸ்டிஸ்  P.N. பகவதி அவர்கள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். இன்று 'பொது நல வழக்குகள்' என்ற பிரிவில் பல புகழ் பெற்ற வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன. இந்த முறையை முதலில் அமுலுக்கு கொண்டுவந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. சாயி பக்தரான இவர் 96 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து 2017ல் சுவாமியின் திருவடியில் சங்கமித்தார். ஜஸ்டிஸ் பகவதி அவர்களின் சாயி அனுபவங்களை அவரே கூறக்கேட்போம்...