தலைப்பு

வெள்ளி, 28 ஜூன், 2024

ரம்மியமான இரு அவதாரங்கள் வழங்கிய ராம தரிசனங்கள்!

ஸ்ரீ கிருஷ்ணரும் ராம தரிசனம் வழங்கி இருக்கிறாரா? பாபாவும் அவ்வாறு புரிந்திருக்கிறாரா? எனும் ஆச்சர்யப்படுபவர்களின் இதயங்களில் அமுத மழையே வரிவடிவமாகப் பொழியப் போகிறது சுவாரஸ்யமாக இதோ...!

வெள்ளி, 14 ஜூன், 2024

பேராசிரியர் ஸ்ரீ அனில்குமார் காமராஜு | புண்ணியாத்மாக்கள்

பேராசிரியர் அனில் குமார் காமராஜு, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சொற்பொழிவுகளின் போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதாக பெரும்பாலோரால் அறியப்படுபவர்.ஒயிட்ஃபீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் (பிருந்தாவன் வளாகத்தின்) முதல்வராக இருந்தவர். பிரசாந்தி நிலைய வளாகத்தில்... உயிரி வேதியியல் துறையில், 2012ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். பொதுவாக வெளியுலகிற்குத் தெரிந்ததெல்லாம் இவ்விதமான அறிமுகமே! இவற்றைக் கடந்து... அவர், சுவாமியின்  மகாசேவகர்களில், அத்யந்த பக்தர்களில்  குறிப்பிடத்தகுந்த ஒருவர். சுவாமிக்கும் அவருக்கும் இருந்த அனுபந்தம், அதன் ஆரம்பகால சிக்கல்கள், பிற்கால முதிர்ச்சி மற்றும் இறுதி ஐக்கியம் பற்றி புண்ணியாத்மாக்கள் வரிசையில் காண்போம்.

திங்கள், 10 ஜூன், 2024

ஆவியின் பேயாட்டத்தை தனது பார்வையிலேயே அடக்கிய பாபா!

முற்காலத்தில் பேய் பிடித்தவர்களை பாபாவிடம் கொண்டு வருவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அணுகுமுறையில் பாபா அதை சரி செய்திருக்கிறார், அப்படி ஒரு திகில் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...

சனி, 8 ஜூன், 2024

பணத்தின் அளவு vs பணத்தின் தரம் - ஸ்ரீ சத்ய சாயுடன் பேராசிரியர். சுதிர் பாஸ்கரின் அனுபவங்கள்


"சிக்கன வாழ்வினை தந்து நீ காக்க!" என்று ஸ்ரீ சத்ய சாயி கவச வரிகள் பகிரும் பேருண்மை கீழ்வரும் அனுபவங்களில் சம்பவமாகி இருக்கிறது இதோ...!

வெள்ளி, 7 ஜூன், 2024

பூர்வ ஜென்மங்கள் பேசி காரணத்தை புரிய வைத்த இரு கடவுள் அவதாரங்கள்!

ஒரு விஷயத்தை ஏன் அவதாரங்கள் புரிகின்றன? ஏன்? ஏன்? ஏன்? எனக்கு இல்லையா? அவனுக்கா? என்ன இந்த பாரபட்சம்? போன்ற பல்வேறு விதமான நமது கேள்விகளுக்கு இரு அவதாரங்களும் உணர்த்தும் பூர்வ ஜென்ம காரணங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 6 ஜூன், 2024

இறைத்தாய் ஈஸ்வரம்மா பாபாவின் கைக்குட்டையால் இதயத்தில் எழுதிய பாசக் கடிதம்

பாபாவின் தாய் ஒரு தெய்வீகத் தனிப்பிறவி... அந்த ஸ்படிக வயிற்றில் நீல ஒளியாய் நுழைந்த சூரியன் பாபா... அவரே ஈஸ்வர அன்னையின் இயல்பை விளக்குகிறார் இதோ...

புதன், 5 ஜூன், 2024

பரம்பொருள் பாபா - சூட்சும அறுவை சிகிச்சை நிபுணர்!



நான் ஒரு ஆன்மீக குடும்பத்தில் பிறந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரமாக நான் நினைக்கிறேன். எனது தாயார் ஸ்ரீ ஷிரடி சாயிபாபாவின் தீவிர பக்தர். எனது மூத்த சகோதரருக்கும் எனக்கும் அவரது மகிமைகளைப் பாட கற்றுக் கொடுத்து தினசரி காலை மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பாட வைத்து பக்தி மார்க்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். என் தந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகத்தைப் பெற்று, ஆன்மீக பயிற்சியின் அத்வைத அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி ஆன்மீகத் தேடுலில் ஈடுபட்டிருந்தவர். எங்கள் தந்தை எங்களுக்கு ஞான மார்க்கம் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். எனது சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் ஆன்மீக வளர்ச்சியில் எனது நாயகனாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்த வந்த என் மூத்த சகோதரர் எனக்குக் கிடைத்த மற்றொரு வரம்.

அவதார ரகசியம் - 17.05.1968' ஆம் ஆண்டு உலக மகா நாட்டில் பாபா பகிர்ந்தவை!

பேரிறைவன் பாபாவின் ஆதிகாலத்து அரிய உரை! அதுவும் உலக மகாநாட்டில் மேடையில் பாபா பொழிந்த சத்திய மொழிகள், வாசிக்க அரிதான பொக்கிஷம், உணரப்பட வேண்டிய பேருண்மை சுவாரஸ்யமாக இதோ...