நாடறிந்த நல்ல எழுத்தாளர் திருமதி அனுராதா ரமணனின் பாபா அனுபவங்களும்... அவர் பாபாவுக்காக பார்த்து பார்த்து எழுதிய ஆன்மீகப் படைப்பின் பின்னணியும் சுவாரஸ்யமாய் இதோ...!
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரசாந்தி நிலையம்
- பிரேம சாயி பாபா
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- தெய்வீக நிகழ்வுகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
திங்கள், 31 அக்டோபர், 2022
வியாழன், 27 அக்டோபர், 2022
ஸ்ரீ ரத்னாகரம் கொண்டமராஜு | புண்ணியாத்மாக்கள்
பூர்ணாவதார ஸ்ரீ சத்யசாயி பாபாவாக, கடவுள் இப்பூமியில் வந்திறங்கியபோது பல பவித்திரமான ஆத்மாக்களை தன்னோடு கொணர்ந்து தனது தெய்வீக நாடகத்தை அரங்கேற்றினார். அப்படிப்பட்ட பவித்ராத்மாக்களில் தனக்கென ஒரு விசேஷமான பாத்திரத்தைப் பெற்றவர் ஸ்ரீ ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள். இறைவன் ஒரு அவதாரமாக பூமியில் இறங்கிவந்து வாழுகின்ற அதே காலகட்டத்தில், அவருக்கு சமகாலத்தவராக பிறப்பதென்பதே பல மனிதர்களுக்குக் கிடைக்காத பேரதிர்ஷ்டம். அதிலும் அவரது அவதாரப் பணியில் ஒரு கருவியாக செயல்பட்டு, இறுதியாக அவரது தெய்வீகத் தாமரைப் பாதங்களில் இணைவதை விட மனிதப் பிறவிக்கு பெரிய பாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது.
சாதாரணமாகவே எந்தவொரு பாட்டனாருக்கும் தனது பேரனைக் கொஞ்சுவதென்பது மகிழ்ச்சியின் உச்ச அனுபவமாக இருக்கும். அதிலும் பரபிரம்மமே பால்மாறாக் குழந்தையாக தன் மடிமீது தவழ்வதென்பது தேவர்களுக்கும் கிட்டாத தெய்வீக அனுபவமல்லவா? அந்த வகையில் ஸ்ரீ கொண்டமராஜு எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி ஒரு மாபெரும் புண்ணியாத்மா ஆவார்.கர்மாவினால் ஆன்மாவுக்குப் பிறவி ஏற்படுகிறது எனில் சிலருக்கு குறைந்த ஆயுள் எதற்காக?
ஒரு ஜீவனின் கர்மாவில் நல்லவை கெட்டவைகளைப் பல விதத்தில் கலந்து , ஒவ்வொரு விதமும் குறிப்பிட்ட ஒரு ஜென்மத்திலோ , பல ஜென்மத்திலோ கழியும் படியாக இறைவன் பிறவிகளைக் கொடுக்கிறான்! இப்படிக் கர்மா கழிய வேண்டுமானால் ஜீவன் புதிதாக பாவ கர்மாவை சேர்க்காமலும், புதுப் பிறவியில் செய்யும் புண்ணிய கர்மாவின் பலனை இறைவனுக்கு அர்ப்பணமாக தியாகம் செய்தும் வாழ வேண்டும்! இல்லாவிடில் பழைய பாக்கி தீரும்போதே புதுக் கர்மக்கடன் சேர ஆரம்பிக்கிறது!
புதன், 26 அக்டோபர், 2022
ஸ்ரீ மாதவானந்த சுவாமிஜி & ஸ்ரீ கோதாவரி மாதா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
எவ்வாறு ஒரு மகான் பாபாவின் வழிகாட்டுதல்களைப் பெறுகிறார்... எவ்வாறு ஒரு மாதாஜி இரு பாபாவும் ஒருவரே என்பதனை உணர்கிறார்.. சுவாரஸ்யமாக இதோ...
செவ்வாய், 25 அக்டோபர், 2022
இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லலாமா?
புதன், 19 அக்டோபர், 2022
நாங்கள் செய்த நல்லதும் கெட்டதும் எவ்வாறு எங்களுக்கே திரும்புகின்றன?
விதையை ஊன்றிவிட்டு முளை வரக்கூடாதென்றால் எப்படி? நீங்கள் செய்த கர்மாவின் பலனுக்குத் தப்பிக்க இயலாது!
செவ்வாய், 18 அக்டோபர், 2022
பக்தரின் கண்பார்வையை மீட்க பாபா செய்த விநோத சிகிச்சை!!
திங்கள், 17 அக்டோபர், 2022
ஸ்ரீ சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
கலியுக பூர்ணாவதாரமான பாபாவை பற்றி ஞானிகளும் மகான்களும் சொன்னவை அநேகம்... அந்த வகையில் தஞ்சாவூர் சுவாமிகள் என அழைக்கப்பட்ட ஸ்ரீசிவபிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் பாபாவை பற்றி பகிர்ந்த சத்திய ஞான மொழிகள் பரவசமாய் இதோ...
சனி, 15 அக்டோபர், 2022
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சாயி அனுபவங்கள்!
வியாழன், 13 அக்டோபர், 2022
பிரபலங்களின் சாயி அனுபவங்களைப் பதிவு செய்து பாபாவிற்கு விளம்பரம் செய்வது அவசியம் தானா?
பிரபலங்களின் சாயி அனுபவங்கள் அதற்காகப் பதிவு செய்யப்படுவதில்லை! இறைவன் பாபாவுக்கும் பூக்கடைக்கும் விளம்பரமே அவசியமில்லை! விண்மீன்கள் ஒளிர்வதை தண்டோரா அடித்துச் சொல்ல வேண்டியதில்லை! பிரபலங்களின் அனுபவங்கள் மட்டுமில்லை ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் பதிவு செய்யப்படுகிற சாயி தமிழ்ப்பதிவுகள் யாவும் பன்முகத்தன்மை வாய்ந்தவை! இறைவன் பாபாவே பன்முகத்தன்மை வாய்ந்தவரே! நாம் ஒருமுகப்பட்டால் தான் பாபாவின் பன்முகத்தன்மையை ஓரளவுக்கேனும் உணர முடியும்! அதற்கான ஒரு பெரிய வாய்ப்பே ஸ்ரீசத்யசாயி யுகம்!
ஸ்ரீமதி கலி சாரதாதேவி (பெத்த பொட்டு) | புண்ணியாத்மாக்கள்
Pedda Bottu (Sharada Devi) - She lived 98 years. 8th Aug 1888 to 25th Dec 1986. She was a contemporary of Shirdi Sai and Sathya Sai both.
புதன், 12 அக்டோபர், 2022
தரமான அரிசி தானா? கேட்ட பாபா - திகைத்த பெண்மணி
கோயிலின் சந்நிதியில் ஒரு குழல் விளக்கை அமைத்து, அதில் தனது பெயரை விளம்பரப் படுத்தும் காலமிது. வேண்டாததையும், தரம் குறைந்த பொருட்களையும் தானமென்ற பெயரில் கொடுத்து, புண்ணியம் தேட நினைக்கும் சமயமிது. ஆனால் பகவான் பாபா தானம் செய்வது பற்றி கூறும் அருள் வழிகாட்டிகள் யாவை?. அன்னதானம் என்னும் நாராயணசேவை பற்றி பாபா கூறுவதென்ன.?
எங்கள் துக்கங்கள் எப்போது தீரும்?
கசப்பான மேல்தோல் இல்லாமலேயே இனிமையான பழம் மட்டுமே உண்டாக வேண்டுமென்றால் முடியுமா? ஒரு ரூபாய் தாளில் முன்பக்கம் போதும்.. பின்பக்கம் வேண்டாம் என்றால் முடியுமா? ஒருவரை வீட்டுக்கு அழைக்கும்போது "தலையை மட்டும் கொண்டு வாருங்கள்.. காலைக் கொண்டு வராதீர்கள்!" என்றால் சாத்தியப்படுமா? வாழ்க்கையில் துக்கமில்லாமல் சுகமே இருக்க வேண்டும் என விரும்புவது இவற்றைப் போலத்தான்!
திங்கள், 10 அக்டோபர், 2022
காஞ்சன்காட் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிஜி & ஸ்ரீ நீலகண்ட பர்வத யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்
எவ்வாறு ஒரு துறவியும் யோகியும் பாபாவை உணர்ந்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. உண்மையில் பாபா சமாதி அடைந்துவிட்டாரா? எனும் அடிப்படை கேள்விக்கான ஆழமான விளக்கம் சுவாரஸ்யமாக இதோ...
ஞாயிறு, 9 அக்டோபர், 2022
சனி, 8 அக்டோபர், 2022
நாங்கள் செய்த கடந்த ஜென்ம கர்மாவை நினைத்தாலே கவலை வருகிறதே.. இதிலிருந்து மீள என்ன வழி?
பழையவினை, முந்தைய பிறவிகளின் கர்ம பாக்கி, இனி வரவிருக்கும் பிறவிகள் என்பதை எல்லாம் எண்ணி எண்ணி சிந்தை வயப்பட்டு கலங்காதீர்கள்! நீங்கள் எப்போதும் உள்ள நிகழ் பொழுதிலேயே மனத்தை முழுமையாகச் செலுத்தி அதை ஜீவசக்தியுடன் பயன்பட வாழுங்கள்!
வெள்ளி, 7 அக்டோபர், 2022
தன் தாய்க்காக தெய்வ சாயியிடம் பரிந்து கேட்ட காங்கிரஸ் சசிதரூர்!!
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அவரது சாயி அனுபவமும்.. பாபா அவரிடம் பகிர்ந்த அற்புதமும் கருணையும் சுவாரஸ்யமாக இதோ...
சேவைக்கு உதாரண புருஷராக திகழ்பவர் யார்?
தொண்டர்களுக்கு இருக்க வேண்டிய எல்லாத் தகுதிகளையும் பூர்ணமாகப் பெற்றிருந்தவர் ஆஞ்சநேயர்! செருக்கு, பேராசை, பொறாமை, பகை உணர்ச்சி , போட்டி மனப்பான்மை, ஆகியவற்றால் மாசு (குற்றம்) பெறாத நிர்மல இதயம், பகவந்தனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, இறைவனே தனது ஆற்றலுக்கு ஊற்று என்கிற விநயம், சோர்வறியா சுறுசுறுப்பு ஆகியனவே சோவாதளர்களுக்கு (தொண்டர்களுக்கு) இருக்க வேண்டிய யோக்கியதாம்சங்கள்!(தகுதிகள்!). இவை யாவும் முழுமையாகப் பெற்று அதோடு அபரிமிதமான அறிவாற்றலும் அதை சமயோஜிதம் அறிந்து உபயோகிக்கும் சாதுர்யமும் மிக்கவராக இரவு பகல் எப்போதும் சேவா கர்மமே புரிபவராக இருந்தவர் ஆஞ்சநேயர்! தொண்டர்களுக்கெல்லாம் ஆதர்ஷ (எடுத்துக்காட்டு) நிலையின் விளக்கமாக உள்ள அவர், கர்மத்துக்கு சற்று குறைவில்லாத பக்தியும், ஞானமும் நிறைந்தவர்!
வியாழன், 6 அக்டோபர், 2022
கொலம்பியாவில் தோன்றி பக்தரின் குடும்பக் கவலை தீர்த்த பாபா!!
துவாபர யுகத்தில் குசேலர் தமது வறுமை நீங்க, ஸ்ரீகிருஷ்ணரை நாடிச் சென்றார். அவர் கொணர்ந்த அவலை ஸ்ரீகிருஷ்ணர் உண்ட அக்கணமே குசேலரின் வறுமை நீங்கியது. . நம் சாயிகிருஷ்ணரோ, கலியுகத்தில், தாமே பக்தரை நாடி கொலம்பியா நாட்டில் தோன்றி, அவரது குடும்ப வறுமையை ஒரு நூதன முறையில் தீர்த்தார். வாருங்கள் அந்த திவ்ய சரிதம் காண்போம்...
செவ்வாய், 4 அக்டோபர், 2022
பிரம்மஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமண்ய சாஸ்திரி | புண்ணியாத்மாக்கள்
சனி, 1 அக்டோபர், 2022
'நானே சாயி' என பிரகடனம் செய்த பகவான் தன்னை பற்றி அறிவித்துக் கொண்ட பேரறிவிப்புகள் சில உங்களுக்காக!