எல்லாவற்றுக்கும் interest (புண்ணிய கர்ம சேமிப்பு) இருத்தல் வேண்டும்! இதன் மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! விஷயங்களில் உங்களுக்கு In-Trust (நம்பிக்கை) இருக்க வேண்டும்! அதுவே interest (ஆர்வம்)!
எந்த சின்ன ஓசை வந்தாலும், எந்தக் கதவு திறந்தாலும் சுவாமி (பாபா) வந்துவிட்டாரோ என நினைக்கிறீர்கள்!
எவர் வந்தாலும் , சுவாமியின் திருச்செய்தியை (Message) எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என எண்ணுகிறீர்கள்! காரணம்? உங்களுக்கு சுவாமி மீது உள்ள interest (ஆர்வம்)! அந்த. Interest (புண்ணிய கர்ம சேமிப்பு + ஆர்வம்) இல்லை என்றால் உங்கள் முன்பு சுவாமியே (தன்னை சுட்டிக் காட்டுகிறார் பாபா) நின்று கொண்டிருந்தாலும் கூட நீங்கள் கவனிக்கவே மாட்டீர்கள்! எனவே Interest (புண்ணிய கர்ம சேமிப்பு + (அதனால் விளையும்) ஆர்வம்) மிகவும் முக்கியமானது!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 249 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக