மனம் நிலை கொள்வதில்லை, மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்! இது உண்மை அல்ல!
மனம் என்பதே உண்மையில் இல்லை..
எப்படி துணியானது நூல்களின் சேர்மானமோ அதுபோல் ஆசைகளின் அழுக்குமூட்டையே மனம்! மனம் என்பது தனியாக ஒன்று இல்லை!
உங்கள் மனம் அலைபாய்கிறது என்கிறீர்கள்! இது சரியல்ல...
எப்படி காற்று வீசும் போது மரங்களின் இலைகள் அசைகிறதோ... அப்படி ஆசைகள் ஏற்படும் போது மனம் அலைபாய்கிறது!
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வது சரியல்ல!
எப்படி சைக்கிள் மற்றும் கார் ஓட்டும் போது கவனமாக இருக்கிறீர்கள் அல்லவா! அப்படியில்லை என்றால் விபத்து தானே ஏற்படும்?
அப்போது மட்டும் உங்களுக்கு எப்படி கவனம் (concentration) ஏற்படுகிறது?
ஒரு புத்தகம் வாசிக்கும் போது அதில் உள்ள கருத்துகளை எப்படி உள்வாங்க முடிகிறது?
அப்போது உங்களுக்கு கவனம் இருக்கிறது தானே! வேலை பார்க்கும் போது.. அதே கவனமே! மனதை வேறு இடத்தில் திருப்பிவிட்டு வேலை செய்கையில் வேலை கெடுகிறது!
உங்கள் வேலையில் மட்டும் எப்படி கவனமாக இருக்கிறீர்கள்?
ஆனால் ஆன்மீக விஷயங்களில் ஏன் அந்த கவனம் இல்லை? இது எவ்வளவு பரிதாபகரமான துரதிருஷ்டம்!
மனம் நிலை கொள்வது சாத்தியமே! அதனால் தான் நீங்கள் எல்லா வேலைகளையுமே செய்கிறீர்கள்!
மனம் அலைபாய்வது தான் அசாதாரணம்!
மற்ற வேலைகளில் உள்ள ஆர்வமும் ஈடுபாடும் ஆன்மீகத்தில் உங்களுக்கு இல்லை என்பதே தெளிவாகிறது!
இதற்கு எல்லாம் காரணம்:
நீங்கள் எதனை அதிகம் விரும்புகிறீர்களோ அதில் தான் உங்கள் மனம் லயிக்கிறது (ஒன்றிணைகிறது)!
ஆகவே மனதைத் தூற்றக்கூடாது! அது தூய்மையான கண்ணாடி போன்றது!
அதன் முன்னால் எது இருக்கிறதோ அதை அப்படி அது திருப்பிக் காட்டுகிறது!
ஆகவே தான் நல்ல சிந்தனைகள் மிகவும் அவசியம் என்பதை சுவாமி நான் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன்!
மனம் இருப்பவனே மனிதன்!
இவ்வளவு மிகவும் மதிப்பானது Diamond (வைரம்) அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
Die Mind - Diamond (மனமற்றிருப்பதே ஆன்ம வைரம்) மனம் அற்றது என்று பொருள்!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 41)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக