விசாகப்பட்டினம், பிப், 14- ''அன்பு, அக்கறையுடன் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தன் அருளாசியில் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் மாவட்டம், அக்கையாபாலத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின், ஸ்ரீ சாய் சவுதா மந்திருக்கு காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் விஜயம் செய்தார்.
பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதாவது:
ஸ்ரீ சத்ய சாய்பாபாவால் துவக்கப்பட்ட சேவை செயல்பாடு அனைத்தும் சிறந்தது. அவரின் சேவை, 'மானவசேவையே மாதவ சேவை' என்பதன் சுருக்கம்.
அன்புடனும், அக்கறையுடனும் ஏழைகளுக்கு சேவை செய்வது ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நோக்கம். அதை நிறைவேற்ற தன் போதனைகள் வாயிலாக கூட்டத்தை கவர்ந்தார். இவ்வாறு அருளாசி வழங்கினார்.
இதையடுத்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தாடேபள்ளி பதஞ்சலி எழுதிய, ஸ்ரீ முத்துசுவாமி தீக் ஷிதர், 'கிருதிசர்வஸ்வம்' என்ற நுாலை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில், முன்னாள் தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியன், சங்கர மடத்தின் தலைவர் டி.ரவி ராஜு, பிரபல தொழில்நுட்ப விஞ்ஞானி வி.எஸ்.ஆர்.மூர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.வி.எஸ்.என்.நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆதாரம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக