தலைப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2024

கனல் எறிந்தாலும் கல் எறிந்தாலும் மந்தஹாசம் குறையாத இரு அவதார அகம்!


இரு அவதாரங்களின் மேல் பொறாமைப் பட்டு இரு யுகங்களிலும் தீய குணங்கள் பெற்றோர் என்னவெல்லாம் செய்தனர்... ? அதை எவ்வாறு இரு யுகத்து அவதாரங்களும் எதிர்கொண்டனர்? சுவாரஸ்யமாக இதோ...!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தனக்கொரு நிகர் இல்லா இரு தனிப்பெரும் அவதாரங்கள்!


போலியான ஆசாமிகள் உண்மையான அவதாரத்திடம் சவால் விட்டால் என்ன நேரும்பிரபஞ்ச நெருப்பிடம் சிறு பிரகாசத்தைச் சுமக்கும் மின்மினிப் பூச்சிகள் சவால் விட்டால் என்ன நேருமோ அது நேரும்ஆம்...இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் பல சவால்களை எதிர் கொண்டிருக்கிறார்கள்... அப்படி சில மூடர்கள் சவால் விட்ட அந்த விநோத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...! 

வியாழன், 4 ஏப்ரல், 2024

ஸ்ரீ சத்ய சாயிபாபா ~ என் வாழ்க்கையின் ஒளி - லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd)

லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd) அவர்களுக்கு பாபாவை பற்றி எப்படி தெரிய வருகிறது என்பது பற்றியும், இவரது வாழ்க்கை முறைகளை சுவாமி எவ்வாறு மேம்படுத்துகிறார், வேண்டுகோள்களை ஏற்கிறார், நெருக்கடியான சமயங்களில் சுவாமி எவ்வாறு அருள் பாலிக்கிறார் என்பதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறைவனுடனான அவருடைய அனுபவங்களில் சில.... 

புதன், 3 ஏப்ரல், 2024

பாபா எனும் ஜோதியில் கலந்தார் பரம பக்தர் Prof. அனில் குமார்!

பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர். பாபாவின் அண்மை என்னும் அருள் நிழலை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து, மகிழ்ந்து, அந்த சுவையை அனைவரிடமும் சத்சங்க அனுபவமாகப் பகிர்ந்து வாழ்ந்தவர். பரமனும் பர்த்தியை விட்டுஅகலவில்லை , பக்தரும் தமது இறுதிவரை எங்கும் செல்லவில்லை. ஐயனின் இணையடி நிழலில் ஒன்றாகக் கலந்து விட்டார் Prof. அனில் குமார் காமராஜூ அவர்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2024

"மறு ஜென்மம் எடுத்தேன்!" -- நடிகர் ரகுவரன்

(கல்கி பத்திரிகையில் 26-11-2000'ல் வெளியான ஆச்சர்யக் கட்டுரை)

பிரபல நடிகர் ரகுவரன் எவ்வாறு பேரிறைவன் பாபாவின் கருணை வளையத்திற்குள் வந்தார்? என்பது பற்றியும், எத்தகைய அகம் - புறம் மாற்றத்தை அவர் பெற்றார் எனும் ஸ்ரீ சத்ய சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...! 

புதன், 27 மார்ச், 2024

பெண்மையாகவும் உருமாறி தயை காட்டிடும் இரு தாய்மை அவதாரங்கள்!


எவ்வாறு பெண் வடிவிலும் பெண்மைத் தன்மையிலும் தன்னை உருமாற்றிக் கொண்டு தனது பக்தர்களுக்காக இரண்டு அவதாரங்களும் அனுகிரகம் அளிக்கிறது.. சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 26 மார்ச், 2024

நீயும் நானும் ஒன்று!! (இலங்கை யாழ்ப்பாண "வலம்புரி" பத்திரிகையில் வெளியான கட்டுரை - 2012)

யாழ்ப்பாணத்தில் வலம்புரி பத்திரிகையில் எழுந்த வளமையான கட்டுரை இது!! இதில் பேரிறைவன் பாபா யார் என்பதும்? அவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும்? யாழ்ப்பாணத்தில் பாபாவை அறிய ஏன் சற்று தாமதமானது என்பதும் - மிக சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருக்கிறது இதோ..!

புதன், 20 மார்ச், 2024

ஸ்ரீ பெங்களூர் நாகரத்னம்மா | புண்ணியாத்மாக்கள்

 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பான கடினமான காலகட்டத்தில் தேவதாசி பிரிவில் பிறந்து சங்கீத சாஸ்திரம், நாட்டியக் கலை மற்றும்  பன்மொழிப் பாண்டித்யம் பெற்று நாடுபோற்ற விளங்கியவர் பெங்களூர் நாகரத்னம்மா. அன்றைய மெட்ராஸில் "வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர்" என்ற பெருமைக்கு உரியவர். சமூக நலனிலிலும், சமத்துவம் நாட்டலிலும் ஒரு பெரும் போராளியாகத் திகழ்ந்து சாதித்துக் காட்டிய பரோபகாரி. தனது  மானசீக குருவான ஸ்ரீ தியாகராஜரின்   சந்நதிக்கு அருகிலேயே தனக்கும் ஒரு நிரந்தர நினைவிடத்தைப் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக, கலியுக ராமபிரான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமான புண்ணியாத்மா.

திங்கள், 18 மார்ச், 2024

பங்களாதேஷில் மோசடிகளுக்கு பெயர் போன ஒரு சிற்றூர் பாபாவால் பெற்ற புத்துயிர்!

மிக முரட்டுத்தனமான மனதை மலரினும் மென்மையாக மாற்ற பாபா எடுக்கும் மிகப் பெரிய ஆயுதம் பேரன்பு... பாபாவின் ஒவ்வொரு பேரற்புதங்களில் ஒளிந்திருப்பது பேரன்பே! தலைகீழாய் இருந்த பலரை எவ்வாறு பாபா நேராக மாற்றி அருளினார் என்பவை மிக சுவாரஸ்யமாய் இதோ...!

சனி, 16 மார்ச், 2024

ஒரே நேரத்தில் இரு இடங்களிலும் நிறைந்திருக்கும் இரு சர்வ வியாபக அவதாரங்கள்!


அது எப்படி சாத்தியம்? ஒரே நேரத்தில் ஒரே நொடியில் பௌதீகமாகக் கூட அவதாரங்களால் இருக்க முடியுமா? ஆம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அவதாரங்களால் இரு இடங்களில் இருக்க இயலாதா? எனும்படி ஆச்சர்யம் தரக் கூடிய அற்புதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ..

வெள்ளி, 15 மார்ச், 2024

உன்னத பாபாவுக்கு நன்றி! உலக பக்தர்களுக்கும் நன்றி!


• 1 Million+ Pageviews(பார்வைகள்)
• 120 தேசங்கள் தாண்டிய பல லட்சம் பார்வையாளர்கள்!
• 1600 மேலான அரிய தமிழ் பதிவுகள்!

புதன், 13 மார்ச், 2024

"உன்னால் என்னிடம் வர இயலாததால், நானே உன்னிடம் வந்தேன்!" - என்ற பேரன்பு பாபா

எவ்வாறு நூலாசிரியரின் வலி மிகுந்த நகர முடியாத நிலையில் பாபாவே வலிமை மிகுந்தபடி அனுகிரகம் செய்தார் எனும் கருணை தோய்ந்த உருக்கப் பதிவு இதோ...!

வெள்ளி, 8 மார்ச், 2024

லிங்கோத்பவகரா சாயி லிங்கேஸ்வரா!!

அருவாய் உருவாய், உளதாய் இலதாய் இலங்கும் ஈசனுக்கு உகந்த திருவுறு லிங்கமாகும். உருவமாய், அதே சமயம் உருவமற்று சிவனின் அடையாளமாய் வணங்கப்படும் லிங்கம், சுந்தர ரூபனாய், சிந்திடும் கருணையாய் வந்து நம்மைக் காக்கும் பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்களுடன் இடையறாத் தொடர்பு கொண்டது... 

புதன், 21 பிப்ரவரி, 2024

சாயி கிருஷ்ணா - புதுச்சேரி, ஸ்ரீ சத்யசாயி சேவா மையத்தின் புது விலாசம்

மணக்குள விநாயகர் அருள் பாலிக்கும் தலம். அரவிந்தர், அன்னை ஆன்மீக சுவாசம் தவழும் இடம் புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி. அங்குள்ள ஆன்மீக ஒளியில் கலந்து சுடர்விட இன்று உதிக்கிறது ஸ்ரீ சத்யசாயி சேவா மையம்... 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

அனைத்திலும் ஊடுறுவி அனைத்தையும் பாதுகாத்து ரட்சிக்கும் இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களே இவ்வுலகத்தையும் இப்பிரபஞ்சத்தையும் நிர்வகித்து ஆள்கின்றன எனும் ஆச்சர்யமான அனுபவம் இருவரின் வாய் மொழி வழியாக சுவாரஸ்யமாக இதோ...!

திங்கள், 12 பிப்ரவரி, 2024

18 உபநிஷதங்களும் சாயி உன்னத மொழிகளும் ஒன்றே!

எவ்வாறு வேத உபநிஷதங்களும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் ஞான மொழிகளும் ஒன்றாகவே திகழ்கின்றன எனும் பேராச்சர்ய பதிவுகள் சான்றாதாரங்களோடு சுவாரஸ்யமாக இதோ...!

சனி, 10 பிப்ரவரி, 2024

கடும் பிரச்சனைகளே இரு அவதாரங்களையும் பக்தர் பால் இழுத்திடும் காந்தம்!

எவ்வாறு இரு யுகங்களிலும் கடும் பிரச்சனைகள் வரும் போதெல்லாம் அது பக்தியை, ஆன்மீகத்தை , பரிபக்குவத்தை ஏற்படுத்துகிறது  எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 8 பிப்ரவரி, 2024

தூர தரிசனத்திலேயே தீராத நோயை பாபா தூர விரட்டினார்!

எவ்வாறு ஒரு நபருக்கு இருந்த உடற் பிரச்சனையை தனது தூர தரிசனத்திலேயே பாபா அதை நீக்கினார் எனும் அதிசய அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 7 பிப்ரவரி, 2024

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பிரம்மம் சத்யம் ஜகன் மித்யா (பிரம்மமே உண்மை, உலகம் மாயை) என்பதற்கும்... சர்வம் விஷ்ணு மயம் ஜகத் (உலகமே விஷ்ணு மயம்) என்பதற்கும் முரண்பாடு இருக்கிறதே?

நீங்கள் குறிப்பிடும் இரண்டும் உண்மையே! இதை நீங்கள் புரிந்து கொள்வதில் தான் முரண்பாடு இருக்கிறது! இவை இரண்டுமே உங்களுடைய மனநிலை வளர்ச்சியை பொறுத்தே விளங்கிக் கொள்ளப்படுகிறது! 

உதாரணத்திற்கு: நீங்கள் எப்போது வந்தீர்கள்? எனும் என்னுடைய கேள்விக்கு... "இப்போது தான் வந்தேன் சுவாமி" என பதில் அளிக்கிறீர்கள்! நீங்கள் சொல்வது இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் உடலைத் தான் அல்லவா! 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

"அன்புள்ள பக்தனே...‌ அருள் தரும் ஓர் கடிதம்!" -பாபாவின் அதிசய கடிதங்கள்

பேரிறைவன் பாபா தனது பக்தர்களுக்கு எழுதிய அதிசய கடிதங்களில் பேரன்பு சொட்டும் விதத்தையும் படித்து பரவசம் பெறப் போகிறோம் இதோ...

சனி, 3 பிப்ரவரி, 2024

விபத்திலிருந்து உயிர் காத்திடும் இரு வினய அவதாரங்கள்!

எவ்வாறு இரு யுகத்திலும் இரு அவதாரங்களும் தங்களது பக்தர்களுக்கு ஏற்படும் விபத்திலிருந்து உயிரை காப்பாற்றுகின்றனர் எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்ய சுருக்கமாக இதோ...!

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

சுவாமி! நாங்கள் எவ்வளவோ படித்தும் சம்பாதித்தும் ஏன் மனசாந்தியோடு இருக்க முடிவதில்லை?

மனசாந்தியை கல்வி அளிப்பதில்லை. 18புராணங்கள் எனும் அஷ்டாதச புராணங்களை இயற்றிய வியாச முனிவருக்கும் மனசாந்தி ஏற்படவில்லை! இறுதியில் நாரதரின் ஆலோசனைப்படி பாகவதம் எழுதியபின் தான் அவருக்கு மனசாந்தி கிடைத்தது! ஆகவே கல்வியால் மட்டுமே மனசாந்தி கிடைக்காது! பணம், அந்தஸ்து, அதிகாரம் இவற்றால் கூட மனநிம்மதி கிடைக்காது! 

"சொர்க்கம்-- நரகம்'ன்னு ஒண்ணு இருக்கா சுவாமி?" என உம்மாச்சி பாபாவை கேள்வி கேட்ட குழந்தை

குழந்தைகள் பக்தியில் பழுத்திருப்பதைப் பார்க்கும் போது அவர்களே பிறருக்கு குருவாக செயல்படுகிறார்கள் ஞான சம்பந்தர் போல்... இத்தகைய குழந்தைகளின் பாபாவுடனான ஆன்மீகத் தொடர்பு பற்றி சுவாரஸ்யமாய் இதோ...!

வியாழன், 1 பிப்ரவரி, 2024

பாபாவின் தரிசனத்திற்கு ஏங்கிய ஒரு பத்ரிநாத் யோகி! - சுவாமி திவ்யானந்த சரஸ்வதி

பத்ரிநாத் யோகி ஒருவர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் பற்றியும் தியான தரிசனம் மற்றும் நேரடி தரிசனத்திற்கான வித்தியாசம் பற்றியும் தெளிவுற மொழிந்திருப்பது சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 31 ஜனவரி, 2024

🚉 மீண்டும் பிரசாந்தி நிலையத்தில் ரயில்கள் இயங்கும்!!

சாய்ராம்... புட்டபர்த்தி அருகே உள்ள சுரங்கப்பாதை வேலை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலைய ரயில் நிலையத்திற்கு வராமல் மாற்றப்பட்ட ரயில்கள், நாளை பிப்ரவரி -1,முதல் பழையபடி மீண்டும் புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி  -ரயில் நிலையம் வழியாக  இரண்டு மார்க்கங்களிலூம் (up & downward routes) நின்று செல்லும். 

இந்து மதத்தில் நாம் வர்ணாசிரமத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால் தான் அது பலவீனமாகி விட்டது என்று கருதுகிறேன். மற்ற மதங்களில் இப்படிப்பட்ட பிரிவு இல்லை... அப்படி இல்லாது போயிருந்தால் இந்து மதம் நமக்கு இன்று அதிகப் பலன் தருவதாக அமையும் அல்லவா?

'வர்ணாசிரமம்' என்பது உலகில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக ஏற்பட்டது! ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதற்காக ஏற்பட்டதல்ல... இந்த முறையினால் ஒவ்வொருவனும் தனக்கு ஏற்பட்ட கடமையைச் செய்கிறான்... மற்றொருவனுக்கு உண்டான வாழ்க்கையில் அவன் குறிக்கிடுவதில்லை... அதனால் சமுதாயம் சிக்கல் இல்லாமல் ஓடுகிறது...ஒவ்வொரு தனிமனிதனும் பொதுவாக சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறான்... இது மதத்துக்கு உரிய சிறப்பு!

திங்கள், 29 ஜனவரி, 2024

திருமதி. (காபி பொடி) சாக்கம்மா | புண்ணியாத்மாக்கள்


பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபாவுக்காக "பாத மந்திரம்" (பழைய மந்திரம்) என்னும் கட்டிடம் புட்டபர்த்தி கிராமத்தில் அமைய திருமதி.சுப்பம்மாவும் திருமதி. கமலம்மாவும் முக்கியப் பங்காற்றினர் என்பது அனைவரும் அறிந்ததே! அந்தப் பழைய மந்திர் கட்டிடம் வெகு சீக்கிரமே சிரியதாகிப் போகும்படி மக்கள் வெகுவாகக்குவியத் தொடங்கினர். எனவே ஒரு புதிய, பெரிய கட்டிடம் தேவை என்பதையும், எதிர் காலத்தில்...பாபா பெரும் கூட்டத்தை வரவழைப்பார் என்பதையும் உணர்ந்து அந்த காரியத்தைப் பலரும் ஆர்வமுடன்மேற்கொண்டனர். அந்த முயற்சியின் விளைவாக சுவாமியின் தெய்வீக சங்கல்பத்தில் உருப்பெற்றது தான் "பிரசாந்தி மந்திர்" என்கின்ற பிரம்மாண்ட கட்டிடம். அந்தக் கட்டிடம் இன்று அடையாளம் காண முடியாத அளவிற்கு அகன்று வளர்ந்து, பொலிவுபெற்று, தன்னைச் சுற்றி ஒரு மாபெரும் நகரம் உருவெடுக்கக் காரணமானது. புட்டபர்த்தி என்னும் புண்ணிய சேத்திரத்தின் கருவறையாகிய "பிரசாந்தி நிலையம்" மந்திரத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தவர் பெங்களூரூவைச் சேர்ந்த புண்ணியாத்மா திருமதி சாக்கம்மா

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இசைக் கச்சேரி நடத்துபவரோடு இறைக் கச்சேரி நடத்திய பாபா!

எவ்வாறு ஒரே இசைக் கச்சேரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாபாவை தரிசிக்கிறார்கள், பிறகு அவர்களுக்கு நடந்த மகிமை என்ன? சுவாரஸ்யமாக இதோ...!

புதன், 10 ஜனவரி, 2024

இரு அவதாரங்களின் விஸ்வரூப தரிசனப் பிரவாகங்கள்!!

எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் தனது பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்து தனது தெய்வீக சுயரூபம் ஆட்கொண்டனர் எனும் ஆச்சர்ய ஆனந்தப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!

செவ்வாய், 9 ஜனவரி, 2024

தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்? - பாபா


தன்னிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டுமென அறிவுறுத்தி பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு 1960 புத்தாண்டு அன்று பாபா ஆங்கிலத்தில் எழுதியருளிய பிரார்த்தனை மடல் (தமிழாக்கம்)

வெள்ளி, 5 ஜனவரி, 2024

எளிமையிலும் எளிமை - ஒரே ஒரு ராகிக் களி உருண்டை - பாபாவின் பழக்க வழக்கங்கள்!


21/10/2004 ஆம் ஆண்டு தசராவின் போது பாபா பகிர்ந்த அவரது அன்றாட சுவாரஸ்ய பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு ஸ்ரீ சத்யசாயி யுகம் மகிழ்கிறது.. இதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பலருக்கு இருக்கிறது என்பது அடிப்படை...மேலும் இறைவன் பாபாவின் பழக்க வழக்கங்கள் நமக்கான முன்னுதாரண பாடங்கள்! அதையும் தனது திவ்ய திருமொழியாலேயே பாபா தெரிவிக்கிறார் இதோ...!

வியாழன், 4 ஜனவரி, 2024

"உலகத் தலைவர்களையே உருவாக்குகிறார் ஸ்ரீ சத்ய சாயி பாபா!" - மனம் திறக்கும் காந்தியவாதி வி.கே.நரசிம்மன்

The entire book of 'Bapu to Baba' by V. K. Narasimhan has been condensed into a single post.

மகாத்மா காந்தியின் அறவழியில் ஈர்க்கப்பட்ட வி.கே நரசிம்மன் நீண்ட நெடிய நேர்மையான பத்திரிகையாளராக திகழ்ந்து , அதன் வாயிலாக பாபாவின் ஆன்மீக அணுகுமுறையை எவ்வாறு உணர்கிறார்? என்பது மிகத் தெளிவாக சுவாரஸ்யமாக இதோ...

351-400 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

செவ்வாய், 2 ஜனவரி, 2024

ஒரு மந்திரவாதி விடுத்த பயங்கர சவால்! - பாபாவின் மகிமைத் திருப்புமுனை என்ன?

ஒரு பக்தையின் மகளுக்கு குழந்தையே இல்லை... பரிதவித்து பல்வேறு பரிகாரம் செய்தும் எதுவும் பலிக்கவே இல்லை! இதில் ஒரு மந்திரவாதி வேறு சவால் விடுகிறார் , அது என்ன சவால்? அந்த பக்தை என்ன செய்தாள்? குழந்தை பிறந்ததா? இல்லையா? சுவாரஸ்யமாக இதோ...!