சத்ய சாய்பாபாவின் எத்தனையோ மெய்சிலிர்க்கும் அற்புதங்களை நாம் புத்தகத்தில் படித்திருப்போம், பிறர் சொல்லி கேட்டிருப்போம், ஏன் நமது வாழ்வில் கூட நடந்திருக்கும். ஆனால் இந்த அற்புதமோ சற்றும் வித்தியாசமானது.
ஒரிசாவைச் சேர்ந்த அசோக் சந்திரா என்ற ஒரு சாயி அன்பர், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். அவர் சம்பாதிக்கும் வருமானம் அவர் குடும்பத்திற்கு பத்தாமல் இருந்தது. இப்படி அவர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த தருவாயில். 1982இல் ஒருமுறை பகவான் பாபாவை தரிசிக்க புட்டபர்த்திக்கு சென்றார்.