தலைப்பு

திங்கள், 6 மார்ச், 2023

மொரிஷியஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் புட்டபர்த்தி தரிசனம்!

மதிப்பிற்குரிய ஒரு வெளிநாட்டு முக்கிய மந்திரி பாபாவின் மேல் எத்தனை அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கிறார் என்பதை நமக்கு ஒரு பாடமாக விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...


மொரீஷியஸ் நாட்டின் நிலப் போக்குவரத்து இலகு ரயில் (light train) மற்றும் வெளியுறவு, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் வெளிநாட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் ஸ்ரீ ஆலன் கணூ இறைவன் பாபாவிடம் பிரார்த்தனை செய்ய இன்று(06-03-2023) புட்டபர்த்திக்கு விஜயம் செய்தார்.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள வெளியுறவு மந்திரி, அதிகாலை 3 மணிக்கு புட்டபர்த்திக்கு காரில் சென்று காலை தரிசனம் முடிந்து 10 மணிக்கு புறப்பட்டார்.

 புட்டபர்த்தியில் காலடி எடுத்து வைத்ததன் மூலம் தனது பயணம் இப்போது நிறைவடைந்துவிட்டதாக ஸ்ரீ கணூ மகிழ்ச்சியுடன் கூறினார்.


🌷பாபாவின் சிருஷ்டி லிங்கத்தை ஸ்ரீ கணு காட்டினார்: 

 நீண்ட கால பக்தரும் மொரீஷியஸ் மந்திரியுமான ஸ்ரீ ஆலன் கணூ 2004 ஆம் ஆண்டு சுவாமியால் உருவகப்படுத்தப்பட்ட லிங்கத்தை எப்பொழுதும் சுமந்து செல்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!

பாபா அவரிடம் தினமும் புனித லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொன்னார், அதிலிருந்து ஸ்ரீ கணு ஒரு நாளும் தவறுவதில்லை... அதுபோல் ஒவ்வொரு நாளும் லிங்கத்தை தன்னுடன் எடுத்துச் செல்வதைத் தவறவிடுவதும் இல்லை!!




ஆதாரம்: SSSMC 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக