தலைப்பு

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஸ்ரீ சந்திர யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் யார் கண்ணிலும் சிறைபடாதவர்கள்... அவ்வாறு இருக்கும் ஒரு யோகி பாபாவை பற்றி கூறிய மொழிகள் என்ன? அதை யாருக்கு கூறினார்? அவரின் தீர்க்க தரிசன மொழிகள் நடந்தனவா? இல்லையா? மிக பிரம்மிப்போடு இதோ...


மந்திரபிரகதா எனும் பெரிய குடும்பத்தில் சாரதா தேவி ஒருவர்... அவரின் தந்தையார் நரசிம்ம ராவ்... சாரதா ஒருவரே அந்த பெரிய குடும்பத்தின் பெண் வாரிசு... தனது குழந்தை பருவம் முதலே பக்தி சிரத்தையோடு இருக்கிறார்... பயபக்தி என்பது பாவங்களை குறித்த பயமும் பரமனை குறித்த பக்தியுமே... இரண்டுமே அவசியம்... பயம் இல்லாமல் போய்விட்டதால் தான் பக்தியும் இப்போது  குறைந்து போய்விட்டது! அதுபோலவே பக்திசிரத்தை... பகவன் மீதான பக்தியும்... அதை தினசரி கடைபிடிக்கும் சிரத்தையும்... இந்த இரண்டு அம்சமுமே சிறுமி சாரதா தேவியிடம் இருந்தது.. அது சாதாரண பெயரா? பரமஹம்சரின் குருபத்னி பெயர்... இப்படி இருக்க சிருங்கேரி பீடாதிபதியை வீட்டிற்கு அழைக்கும் போது அவர் முதலில் ஹைதராபாத் வர மறுக்கிறார்!


ஒருநாள் இரவு நீள் முடியுடன் தாடியுடன் சாரதாதேவி கனவில் ஒரு அற்புத யோகி தோன்றுகிறார்... "விரைவில் சிருங்கேரி பீடாதிபதி உன் இல்லத்திற்கு வருவார்.. உன் மாமாவை மீண்டும் நேரில் போய் அழைத்தால் நிச்சயம் வருவார்.. இது சந்திர யோகியின் ஆசீர்வாதம்...அருகே வந்தூ பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்" என யோகி உரைக்க... "நான் எங்கேயும் வருவதாக இல்லை" என சிறுமி சாரதா பதில் உரைக்க..‌ யோகி சாரதா மீது தலை வைத்து நிச்சயம் நீ என்னிடம் வருவாய் என சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார்! அந்த கனவை தன் மாமாவிடம் பகிர.. அவரும் அதன்படி மீண்டும் சன்னிதானத்தை வரவேற்க.. அவரும் இல்லம் வருகிறார்... சிறுமி சாரதாவை பார்த்து "இவளுக்கு மிகுந்த பக்தி இருக்கிறது...நிறைய யோகிகளை கடவுள் அவதாரங்களை தரிசிப்பாள்... தன் வாழ்வை துறந்து கலியுக பரமேஷ்வரருக்கு சேவை புரிவாள்!" தீர்க்கதரிசனம் பேசி ஆசி அளிக்கிறார்!


ஒருமுறை சிறுமி சாரதா பெற்றோரோடு பத்ரி யாத்திரை புரிகையில் 4 inch அளவில் தங்க கிருஷ்ண விக்ரகம் கைகளில் கிடைக்கிறது.. இதை அறிந்து அவளது தந்தையும் பாலகோபால மந்திரத்தை சாரதைக்கு உபதேசிக்கிறார்.. அதுமுதல் அந்த விக்ரஹத்திடம் நிரம்பி வழிகிற பக்தியோடு "என் கோபாலா என் கோபாலா!" என உருகுகிறாள்! ராதா பாவனை பக்தி நிலையில் திளைக்கிறாள்... தன்னை ஒரு கோபிகையாக யமுனை ஆற்றங்கரையில் உணர்கிறாள்! *தான் கிருஷ்ணருக்காக ரிஷிகளோடு சேர்ந்து காத்திருப்பதாக உணர்கிறாள்... எப்பேர்ப்பட்ட உணர்வு அது! அது வீண் போகவே இல்லை.. அந்த உணர்வும் கற்பனை இல்லை என்பதை காலம் அவளுக்கு ஒருநாள் உணர்த்துகிறது!


திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை சாரதாவுக்கு... அப்படி சிலருக்கு நேரும்... அது அதிர்ஷ்டமே.. அதுவே ஆன்மீக வாசலை அகலத் திறந்துவிடுகிறது.. அப்படியே சாரதைக்கும் திறந்துவிடுகிறது... திருமணம் "தனது , எனது என்னுடைய" எனும் பற்றில் நிலைகொண்டிருக்கிறது...! வழிபாடு செய்கிற போது கூட ரேஷன் கார்டில் சேர்ப்பது போல் பிரார்த்தனைகளிலும் உறவுப் பெயர்களை சேர்த்துக் கொள்வர் சிலர்... இறைவனுக்காகவே இறைவனை பக்தி செலுத்தும் நிலை இதை விட உன்னதமானது.. அந்த நிலைக்கு காலம் சாரதாவை அழைத்துச் செல்கிறது! அப்படி பலருக்கும் நிகழ்வதில்லை... அதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்... சாரதை உண்மையில் பாக்கியவதி! புற்றிலிருந்து பாம்பும் பற்றிலிருந்து கர்மாவும் கிளம்பி வருகிறது... திருமண வாழ்க்கையின் ரணகளமோ பற்றை இடித்துப் போட்டுவிடுகிறது சாரதைக்கு...!


சில வருடம் கடந்து... உஜ்ஜைன் மற்றும் ஓம்கார ஷேத்திரம் வழியாக துவாரகையை வந்தடைகிறார்... ஒரு நதியை கிடக்கிறார் சாரதை.. 5 நாள் பயணம்... ஒரு சுரங்கப்பாதையை கடக்கிறார்... சித்தபுருஷர்களின் தவச்சாலையை அடைகிறார்.. அனைவரும் பிரம்ம ஞானிகளாக திகழ்கிறார்கள்..‌5 குகைகள் கண்ணுக்கு தெரிகிறது... 4 நாள் வரை ஜபம் செய்கிறார் சாரதா... 4 ஆவது நாள் 360 வயது மேற்பட்ட சத்குரு மகராஜ் சாரதா முன் தோன்றி நீ எந்த குருவை சந்திக்க நினைக்கிறாய் எனக்கேட்கிற போது‌.. ஒருவரை காட்டுகிறார்.. அது வேறு யாருமல்ல குரு ஸ்ரீ சந்திர யோகி.. கனவில் தோன்றிய அதே மகான்... அவர் அன்று சொன்ன திருவாக்கு இன்று சத்தியம் என்பதை சாரதா உணர்கிறார்.. அந்த மகான் முன் அமர்ந்து ஜபிக்கிறார் சாரதா! நீ அப்படி செய் ஸித்தி அடைவாய் என முதிய மகான் சொன்னது நிகழ்கிறது அங்கே! இதே தெய்வீக தவ வாழ்வில் 6 வருடம் கடந்து போகிறது... அகம் கனிந்து போகிறது... ! 


ஒருநாள் தலைமை மகான் சத்குரு மகராஜ் சாரதையிடம் "ராதா, கவனமாக கேள்... ஞானம் எல்லாம் உனக்கு வழங்கியாகிவிட்டது! நீ வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது... உனக்கு நிறைய பணிகள் இருக்கிறது... கடவுள் இந்த மனித குல நன்மைக்காக பூமியில் சீக்கிரமே அவதரிக்கப் போகிறார்‌.. கடவுள் எங்கு அவதரிக்கிறாரோ நீ அங்கே செல்ல வேண்டியவள்‌.. இது மிகவும் உறுதி!" என்கிறார் மிக தீர்க்கமாக... மிக தெளிவாக..‌ 

செல்ல மனம் வராமல் சாரதா அழுகிறார்... "அழாதே... எழுந்திரு... உனது தெய்வ கோபாலன் உனக்கு வேறுவடிவில் தரிசனம் தருவார்... ஆகவே நீ உடனே இந்த இடம் விட்டுச் சென்றாக வேண்டும்! இது உன் குரு சந்திர யோகியின் கட்டளை...! போ... பரமாத்மாவிடம் சென்று அங்கேயே தங்கி நீ சேவை செய்யப் போகிறாய்! மறந்துவிடாதே!" என்கிறார்..‌


பிறகு யோகினி சாரதா நேபால் செல்கிறார்... பசுபதி நாதர் கோவில் தரிசனம் பெறுகிறார்... கண்டகி நதியில் முழுகி மூன்று நாட்கள் அங்கையே தங்கி உண்ணா நோன்புடன் ஜபிக்கிறார்... கனவில் வயதான தோற்றத்தோடு இறைவன் பசுபதி நாதர்... "மகளே.. நீ இப்படி சாப்பிடாமல் விரதம் இருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது... நீ விரும்பிய உருவத்தில் அல்ல இறைவன் தான் மனித குலம் நலம் பெற வேண்டி எடுத்த வடிவத்தில் தான் நீ அவரை தரிசிக்கப் போகிறாய்! அவர் சத்ய- தர்ம- சாந்தி-பிரேமை என்பதை அவர் தனது ஆயுதமாக வைத்து உலகை வெல்வார்! நீ அவரை தரிசிப்பாய்... இப்போது உன் விரதத்தை விடு.. சாப்பிடு மகளே!" என்கிறார் மிகுந்த கருணையோடு...! இந்த கனவை சத்குரு மகராஜிடம் சாரதா பகிர "வேறு மார்க்கம் இல்லையா குருதேவ்?" எனக் கேட்க... "சென்று வா மகளே! நீ மீண்டும் இங்கு வர நினைத்தாலும் இந்த வழி உன் விழிக்கு புலப்படாது!" என்று ஆசி கூறி குருமகராஜ் அனுப்புகிறார்! 


சில வருடம் கடந்து தனது பால கோபாலை பிரசாந்தி நிலையத்தில் தரிசிக்கிறார்... ஒருமுறை பாபாவின் பாதத்தை தொட்டு நமஸ்கரிக்கிற போது பாதம் மட்டும் பால கிருஷ்ணரின் பாதமாக  மாறிவிட .. "முழு தரிசனமும் கிடைக்காதா சுவாமி ?" என சாரதா அம்மையார் கேட்க... "இதற்கே நீ பாதி ஸ்தம்பித்து (உறைந்து) விட்டாய்... முழு ரூபம் காட்டினால் முழுமையாக உறைந்துவிடுவாய்!" என்கிறார் பாபா... பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதற்கான பல நேரடி சாட்சிகளில் சாரதா தேவியார் மிக முக்கியமான சாட்சி... அங்கே தங்கி தவ வாழ்வு அனுபவிக்கிறார் சாரதா தேவியார்... 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 150) / Author : Jantyala Suman babu / Eng Translation : pidatala Gopi Krishna/ Source : Autobiography Sri Betta pottu charithram) 


தவ வாழ்வு மிகவும் சுகமான வாழ்வு! எளிமை வாழ்வே சுகமான வாழ்வு என்பதை எளிமையாக வாழ்ந்தால் தான் உணர முடியும்! இந்த சாரதாதேவியாரையே பாபா "பெத்த பொட்டு அம்மா" என அன்போடு அழைக்கிறார்... இவர் ஷிர்டி பாபாவையும் நேரில் தரிசித்து தான் மீண்டும் வருகையில் உனக்கு தரிசனம் தந்து என்னுடனேயே தங்க வைப்பேன் என ஷிர்டி பாபா சொல்லியதும் பர்த்தி பாபாவாய் அவதரித்து அதனை நிறைவேற்றியதும் தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் "தவ யோகினி ஸ்ரீ பெத்த பொட்டு அம்மா!"

ஸ்ரீ பெத்த பொட்டம்மா பாதம் சரணம்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக