தலைப்பு

வியாழன், 2 பிப்ரவரி, 2023

சுவாமி! உங்கள் மீதுள்ள எங்களது நம்பிக்கை ஒரே அளவில் இருப்பதில்லை... ஆனால் உங்களுக்கோ எங்கள் மீது எதனால் அத்தனை நம்பிக்கை?

"ஏகோவசி சர்வ பூதாந்தராத்மா" 

இறைவன் சகல ஜீவராசிகளிடமும் , விதவிதமான உருவங்களில் , வேறுபட்ட பெயர்களில் வாழ்கிறார்!


"தேஹோ தேவாலயப்ரோக்தோ, ஜீவதேவ சநாதநஹ" 

தேகமே தேவாலயம்! ஜீவனாகிய இறைவன் சநாதனமாக இருக்கிறான்!


"ஏகோஹம் பஹூஸ்யாம்" 

ஒரே இறைவன் தான்! இவ்வாறு பல உருவங்களில் தரிசனம் அளிக்கிறான்!


உங்கள் எல்லோர் உள்ளிலும் உறைபவன் நானே! ஆகவே தான் சுவாமி நான் அனைவரையும் நம்புகிறேன்! 

ஆனால் நீங்களோ என்னிலிருந்து உங்களை நீங்களே வேறுபட்டவர்களாக எண்ணுவதால் உங்களுக்குத்தான் நம்பிக்கை வருவதில்லை!  என்னுடைய சங்கல்ப மாத்திரத்திலேயே உங்களுக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்த என்னால் முடியும்! 

ஆனால் "I Want to Do through You!" உங்கள் மூலமாகவே அதைச் செய்ய வேண்டும் என்பதே என் உத்தேசம்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 235) 


இறைவன் பாபாவுக்கு நாம் அனைவரும் கருவிகளே என்பது இதன் மூலம் தெளிவாக உணரமுடிகிறது! பாபா வழி நடப்பவர்கள் மட்டுமே ... பாபாவின்  உபதேசங்கள் யாவையும் கடைபிடிப்பவர்களை மட்டுமே தன் கருவிகளாக தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் தெளிவுற உணர வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக