தலைப்பு

புதன், 15 பிப்ரவரி, 2023

சாக்ஷாத் சங்கர ஸ்வரூபம்

பகவானின் இளம் வயதில், மந்திரில் தினசரி பூஜை செய்யும் புரோகிதர் திரு. சேஷகிரிராவ் மற்றும் அந்நாளைய பக்தர்கள் சிலர் இணைந்து நம் ஸ்வாமி மேல் 108 நாமங்களை தொகுத்து ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்திர சத நாமாவளியை உருவாக்கினர். 


பின்னொரு காலத்தில், திரு. கஸ்தூரி அவர்கள் பிரசாந்தி நிலைய அச்சக பொறுப்பாளர் ஆன பின் சில பக்தர்கள் 108 நாமத்தை மறு பதிப்பு செய்ய அவரிடம் வேண்டினர். 

மறுபதிப்பு செய்யும்முன் ஸ்வாமியிடம் காட்டி உத்தரவு - அங்கீகாரம் பெறலாம் என்று எண்ணிய திரு. கஸ்தூரி அவர்கள் அஷ்டோத்திர தொகுப்பினை பகவானிடம் காண்பிக்கிறார். 

பகவானும் அதில் உள்ள சில நாமங்களை நீக்குகிறார். சில நாமங்களை இணைகிறார்.

சில நாமங்களை சரி செய்கிறார். 

அதில் ஒரு நாமம் 'ஓம் ஸ்ரீ சாயி சங்கர அம்ஸாய நம:' என்று இருக்கிறது. அதாவது சிவ பெருமானின் அம்ஸமாக - பகுதியாக இருக்கும் சாயிக்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். இந்நாமத்தில் இருக்கும்

'அம்ஸாய' எனும் வார்த்தையை பகவான் நீக்குகிறார். இது 'ஓம் ஸ்ரீ சாயி சங்கராய' என இருக்க வேண்டும் என கூறுகிறார். 

அதாவது பகவான், சிவ பெருமானின் சிறு பகுதி அல்ல, பூரணமான - "சாக்ஷாத் சிவ ஸ்வரூபமே" அவர் என்பதை உறுதி செய்தார்!

ஓம் ஸ்ரீ சாயி சங்கராய நம:


ஆதாரம்: கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக