தலைப்பு

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

பிக்பாக்கெட் திருடன் ஹலகப்பாவின் இதயம் திருடி நல்வழியில் ஜொலிக்க வைத்த சாயி!

ஒரு திருடனின் மனதை திருடி அவரை திருந்த வைத்து எவ்வாறு சுவாமி நல்ல பாதையில் மாற்றி... ஆன்மீகத்தில் எழ வைத்தார் என்பதன் பரவச அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...!

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இனிக்க இனிக்க இறைவன் -பேராசிரியர் அனில் குமார் காமராஜு


ஆத்ம பக்தர் அனில் குமார் அவர்களின் வாழ்வில் நடந்த நெகிழ்வான ஒரு சுவாமி அனுபவம். 

கொடைக்கானலில் ஒரு நாள்  பெப்பர் மென்ட்களையும்... சோக்கோ பார்'களையும்... இன்னும் இதர பிரசாதங்களையும் இறைவன் சத்ய சாயி தன் திருக் கைகளாலேயே மாணவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

சனி, 28 ஆகஸ்ட், 2021

லக்ஷ்மணனுக்கு கீதை சொன்ன சாயி கிருஷ்ணர்!


இந்திய கிரிக்கெட் வானில்  V.V.S. லக்ஷ்மண் அவர்கள் ஒரு ஒளிவிடும் தாரகை. ஹைதராபாத் நகரத்தில் பிறந்த அவர் 1992ல்  கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து 1996ல் டெஸ்ட் கிரிக்கெட்டராக பரிமளிக்கத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 281 ரன்கள் குவித்து பிரபலமானார். 2012ம் ஆண்டு கிரிக்கெட் ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்று, V.V.S.அறக்கட்டளையை நிறுவி  சமூக சேவை ஆற்றுகிறார். பாபாவின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான இவர் பாபா எவ்வாறு தன் வாழ்வில் ஒளி விளக்காக வழி காட்டுகிறார் என்பதை பக்தியுடன் நினைவு கூறுகிறார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

விவசாயத்துறை விஞ்ஞானி இதயத்தில் ஆன்மீக அறுவடை புரிந்த விசித்திர இறைவன் சாயி!!


விவசாயத் துறையை  சேர்ந்த ஒரு விஞ்ஞானி எவ்வாறு சுவாமியை உணர்ந்து கொள்கிறார்.. சுவாமியின் மகிமைகளை எவ்வாறு ஆச்சர்யகரமாய் நினைந்து மனதில் இறுத்துகிறார் என்பதை விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

புதன், 25 ஆகஸ்ட், 2021

சிவானந்த ஆசிரமத்தில் சுவாமிக்கு காரியதரிசியாக 24/7 கூடவே இருந்த சதா சிவானந்தாவின் பரவச அனுபவங்கள்!

🎙️பகிர்கிறார் :- சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதி சிஷ்யை சுவாமினி பாலானந்த சரஸ்வதி (மாதாஜி)

சுவாமியின் ரிஷிகேஷ் பயணத்தில் சிவானந்த ஆசிரம விஜயத்தின் போது காரியதரிசியாக 24/7 கூடவே இருந்து எவ்வாறெல்லாம் சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதி சுவாமிக்கு சேவையாற்றினார் என்பதும்‌... அவருக்கு நிகழ்ந்த பரவச அனுபவம் என்ன? அவர் சுவாமியை பற்றி என்ன பகிர்ந்திருக்கிறார்? என்பதை பரவசமாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...

151-200 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

பாபா அமராமல் தனியே வந்த காருக்கு கரம் குவித்த பக்தர்கள்!

சிலருக்கு தனியான சிறப்புகள் இருக்காது. ஆனால் அவர்கள் சேருமிடத்தால் சிறப்பிக்கப்படுவர். சிவன் கழுத்தில் மாலையாகவும், திருமாலுக்கு படுக்கையாகவும், விநாயகருக்கு இடுப்பிலும் இருப்பதால் நாம் அக்கடவுளர்களுடன் பாம்பையும் சேர்த்து வணங்குகிறோம். பகவான் பாபாவை சுமந்த மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும் அத்தகைய கௌரவம் ஒரு சமயம் கிடைத்தது... 

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

100 கோடி ராமநாமத்தின் தெய்வீக அதிர்வுகளுடன் பர்த்தியில் அருள் புரியும் ஸ்ரீராமர்!

ராம நாமமே ஜென்ம ரட்சக மந்த்ரம். இதன் மகிமை அளவற்றது. ராம நாமத்தை தினமும் ஜெபிக்காத சாயி பக்தர்களே இல்லை. சாயிராம் சாயிராம் என நாம் ஒருவரை ஒருவர் எத்தனை முறை அழைத்துப் பேசுகிறோம். பகவான் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த அற்புத மந்த்ர உபதேசம் இது அல்லவா...

சனி, 21 ஆகஸ்ட், 2021

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியை கொடும் விபத்திலிருந்து காப்பாற்றிய பகவான் பாபா!


அமெரிக்க மாகாணமான லாஸ் ஏஞ்ஜல்ஸ்'சில் ஏற்பட்ட கொடும் விபத்திலிருந்து தனது பக்தையான இந்திரா தேவியை எவ்வாறு சுவாமி காப்பாற்றினார் என்பதும்... சாயி யோகா என இந்திராதேவி அம்மையார் நடத்திவந்த யோக கலைக்கு எவ்வாறு பெயர் வந்தது என்பதும் சுவாரஸ்ய பதிவாய் இதோ... 

புதன், 18 ஆகஸ்ட், 2021

இரயில்வே துறையில் அனைவராலும் பாராட்டப்படுபவருமான EX - MP பெரியவர் TV. ஆனந்தன் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!

சாய்ராம்! சுவாமியின் பழம்பெரும் பக்தரும், தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றிய வரும், ராஜ்ய சபா முன்னாள் எம்பியுமான காலம் சென்ற சாய் சகோதரர் மரியாதைக்குரிய திரு T. V. ஆனந்தன் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ராஜ்புட் மகாராணி பல்பீர் கௌரின் தீவிர புற்றுநோயை போக்கியது பத்திரிகையில் வந்த சுவாமியின் சிறுபடம்!

மூன்றாவது அறுவை  சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த மகாராணியாரின் முற்றிய நிலை புற்றுநோயை சுவாமி எவ்வாறு குணப்படுத்தினார் என்பதும் சுவாமி அந்த மகாராணியார் பரம்பரைக்கே தனது பேரன்பை எவ்வாறு பொழிந்தார் என்பதும் சுவாரஸ்ய பதிவாய் இதோ...

சனி, 14 ஆகஸ்ட், 2021

பாபாவின் விநோத பரிசளிப்பு - ஹோவர்ட் மர்பெட்டின் மலைப்பு!

மனிதர்கள் கால, நேரம் போன்ற விதிகளுக்கு கட்டுப்படவர்கள். ஆனால் பகவான் பாபா எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் மீறி , அவற்றை தமது கட்டுக்குள் வைத்து இயங்கச் செய்பவர். காலம், இடம், குணம், அன்பு , கருணை போன்ற அனைத்து விதிகள்/குணங்களிலும் அதீதமானவர்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

போதை மாத்திரை உண்டு சீரழிந்த அமெரிக்கரை நல்வழியில் கரையேற்றிய சாயி தெய்வம்!

பரவசம் கிடைக்கும் என தவறான வழிகாட்டுதலால் போதைக்கு அடிமையாகி.. வேறு பல இன்னலிலும் சிக்கிய அமெரிக்க நபரை சுவாமி எவ்வாறு நல்வழிப்படுத்துகிறார்...? அவரின் கோப தாபங்களை எவ்வாறு தணிக்கிறார்? என்பதை சுவை பட கூறும் சுவாரஸ்ய பதிவு இதோ...

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

இறைவனே ஒரே வழிகாட்டி!

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: 'தர்மம்' என்பதன் பொருள் என்ன?

பாபா: தர்மம் என்ற சொல் கடமையை குறிப்பதல்ல. கடமையை செய்வதில் சுதந்திரம் என்பதில்லை. அறிவைப் பயன்படுத்தும்போது அதில் சுதந்திரம் இருக்கிறது; மதம் சார்ந்த செயல்களில், விவேக விளக்கம் கூடிய கடமை இருக்கிறது.தர்மம் என்பது மதச் சார்புடன் கூடிய செயல்களை குறிக்கும். அந்த சொல்லிலேயே, கடமை மற்றும் விவேக விளக்கம் என்ற ஒருங்கிணைந்த உட்பொருள் இருக்கின்றன.

புதன், 11 ஆகஸ்ட், 2021

அமெரிக்காவில் பக்தர் தொலைத்த மோதிரத்தை பிருந்தாவனத்தில் மீட்டு கொடுத்த பாபா!

இறைவனுக்கு ஆயிரம் சிரங்கள், ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள் என்று வேதங்கள் இயம்புகின்றன. நாம் மறைந்திருந்து செய்யும் செயல்கள் , மற்றவர்கள் அறியாமல் போகலாம், ஆனால் மாயவனாம் சாயி கிருஷ்ணர் அறியாமல் போவாரோ?

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

வங்காள ராய் தம்பதியரின் சாயி அனுபவங்களும்... திடீர் திருப்பம் நிறைந்த பயணங்களும்!

வங்காளத்தை சேர்ந்த ஒரு தம்பதியரை எவ்வாறு சுவாமி அருகழைத்துக் கொண்டார் என்பதும் .. அவர்கள் சாட்சியாக இருந்தபடி எத்தனை மகிமைகளையும், ஞானத்தையும் அடைந்தார்கள் என்பதும் சுவாரஸ்ய திருப்பங்களாய் இதோ...

டாக்டர். வள்ளுவன் ஜீவானந்தம், MD | இதயம் & வாஸ்குலர் மையத்தின் இயக்குனர் @ சிகாகோ மெடிக்கல் சென்டர், 🇺🇸 USA


டாக்டர். வள்ளுவன் ஜீவானந்தம் அவர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்சமயம் அமெரிக்காவின் புகழ்பெற்ற சிகாகோ மெடிக்கல் சென்டரின் இதயம் & வாஸ்குலர் மையத்தின் இயக்குனராக இருக்கிறார். ஆரம்பத்தில் சுவாமியின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்த இவர் பின்னர் எவ்வாறு சுவாமியின் தீவிர பக்தராக மாறினார்? சுவாமி இவர்களின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் என்ன? 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கர்மாவைப் பற்றி ஸ்ரீ சத்ய சாயியின் கீதை!

 

கர்மாவை பற்றிய கீழ்காணும்  இந்த பதிவு ஜுலை 12, 1995 அன்று ஸ்ரீ சத்ய சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய  உரையின் ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது...!!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

இறந்து போன டாக்டர் காடியாவை மீண்டும் உயிர்ப்பித்த சத்ய சாயி பேரற்புதம்!


ஆயுளைக் கூட்டிக் குறைப்பதும்.. விதியை தலைகீழாக மாற்றி அமைப்பதும் மகான்களால் அல்ல இறைவனாலேயே முடியும்.. ஆகையால் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பரம்பொருளால் ஆயுள் நீள்வதும் .. அந்த ஆன்மாக்கள் தொடர்ந்து சுவாமியின் சேவையாற்ற சுவாமியே வாய்ப்பு தருவதுமான சிலிர்க்க வைக்கும் பேரற்புதங்கள் பல.. அதில் ஓர் திவ்ய துளி இதோ..

நீயும் நானும் ஒன்றே (பத்தே வார்த்தைகளில் பகவான் பாபா விளக்கும் அத்வைதம்)

Don' t walk in front of ME (எனக்கு முன்னால் நடக்க வேண்டாம்)

Don't  walk behind ME (எனக்கு பின்னாலும் நடக்க வேண்டாம்

Still walk besides ME (என்னுடன் நட..) - பாபா 

சனி, 7 ஆகஸ்ட், 2021

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியின் முதல் சாயி அனுபவம்!


யோக கலையை மேற்கத்திய நாடுகளுக்கு முதன்முதலாக பரப்பி.. 'Mother of Western Yoga' என போற்றப்படும் மாதா இந்திராதேவி எவ்வாறு சுவாமியை முதன்முதலில் தரிசனம் செய்தார்.. அப்போது அவருக்கு நேர்ந்த சுவாரஸ்ய சுவாமி அனுபவம் இதோ...

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

சர்வாந்தர்யாமி இறைவன் ஸ்ரீ சத்ய சாயி - திரு கே. சுரேஷ் (Alumnus, SSSIHL, Prasanthi Campus)


நான் எங்கும் நிறைந்திருப்பவன் - ஸ்ரீ சத்ய சாயி
(நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடு மனிதர்களுக்குத் தானே அன்றி பரம்பொருளுக்கு அல்ல.)

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

சவனூர் சமஸ்தான இளவரசர் மெஹர்பான் நவாப் சாஹேப் உயிரை காப்பாற்றி உன்னதமளித்த பாபா!

ஒரு சமஸ்தானத்தின் இளவரசரின் உயிரையே காப்பாற்றி எப்படி அவரை சுவாமி  நல்வழிக்கு திருப்பினார் என்பதை சுவாரஸ்ய திருப்பங்களோடு இதோ...

பகவான் பாபாவின் டெலிபோன் எண் வேண்டுமா?

மூன்று இலக்கங்கள் கொண்ட பாபாவின் டெலிபோன் எண்ணுக்கு நீங்கள் அழைப்புவிடுத்தால், பாபா உடனே ஆஜராகி அருள் புரிவார். வாருங்கள் டயல் செய்வோம்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

கேலி பேசியவரை காலடியில் கண்ணீரால் பேச வைத்த கடவுள் பாபா!

சுவாமியின் தோற்றத்தை எள்ளி நகையாடிவர் எவ்வாறு சுவாமியிடம் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி பக்தரானார்.. அவரை எவ்வாறு சுவாமி அரவணைத்தார் என்பதை குறிப்பிடும்  சுவாரஸ்ய பதிவு இதோ...

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

இகழ்ந்து பேசியவரின் இதயத்தை உருக வைத்த இமய இறைவன் சாயி!

சுவாமியின் ஒரு தீவிரமான பக்தரின் நண்பர் சுவாமியை மிக இகழ்வாக பேசுகிறார்.. அவரை சுவாமியிடம் அழைத்துப் போகிறார் அந்த பக்தர்.. பிறகு என்ன நேர்கிறது? என்பதை விளக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஸ்ரீமதி. M. S. சுப்புலட்சுமி அம்மாவின் மகளான ராதா விஸ்வநாதன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


ராதா விஸ்வநாதன் (11 டிசம்பர் 1934 - 2 ஜனவரி 2018) ஒரு இந்திய கர்நாடக இசைப் பாடகர் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். M.S அம்மாவின் இசைப் பயணத்தில் 50 ஆண்டுகால இசை மேடைகளைப் பகிர்ந்து கொண்டவர்.

நவவித பக்தி- இறைவனுடன் நட்பும் ஒரு பக்தியே!

ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்மநிவேதனம். இவையே இறைவனை அடைய  நவவித பக்திகளாக கீதையில் கண்ணன் எடுத்துரைக்கும் மார்க்கங்களாகும். சநாதன சாரதியாக அவதரித்து கலியுகத்தை கடைதேற்ற வந்த பாபா அவர்கள்,  நாம் இறைவனிடம் கொள்ளும் நட்புதான் சிறந்த நட்பு என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். நட்பு பற்றி பாபா கூறும் பொன்னுரையின் சாரம் இதோ....