தலைப்பு

வியாழன், 23 ஜூலை, 2026

'வேதியியல்' என்றால் என்ன? 'மருத்துவம்' என்பதன் உண்மையான பொருள் என்ன?

ஜூலை 23, 1992

அன்று மாலை, அனைத்து மாணவர்களும் பகவானை விடுதிக்கு வருமாறு பிரார்த்தித்தனர்.

சுவாமி: விடுதி எங்கே இருக்கிறது? அதன் முகவரியைக் கொடுங்கள்.

மாணவர்: சுவாமி, அது எங்கே இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

சுவாமி: ஆம், எனக்குத் தெரியும். இதுவே (மந்திர்) உங்கள் விடுதி. இதுவே உங்கள் உண்மையான விடுதி.

சிறிது நேரத்திற்குப் பிறகு...

புதன், 22 ஜூலை, 2026

22 July 1957 - பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிற்கு சுவாமி சிவானந்தர் அளித்த தெய்வீக வரவேற்பு

ஜூலை 22ஆம் தேதி 1957, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா டெல்லியிலிருந்து காரில் ரிஷிகேஷ் நோக்கிப் புறப்பட்டார். ஹரித்வாரிலிருந்து சுவாமி சிவானந்தரின் துறவிச் சீடர்கள் அவரை வரவேற்று அழைத்து வந்தனர். மாலை 6.30 மணிக்கு சிவானந்தநகரை அடைந்தபோது, சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து, பகவானுக்கு மனமார்ந்த வரவேற்பளித்தார்.

திங்கள், 20 ஜூலை, 2026

இன்று (20 ஜூலை 2026) ஶ்ரீ கிருஷ்ணரின் 5253வது அவதார தினமாகும்!

 

இந்த நாளில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார் — இந்தக் கணக்குகளின் படி, அது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3228 ஆண்டுகளுக்கு முன், ஜூலை 20ஆம் தேதி ஆகும். இதனை நமது இந்திய நாட்காட்டியில் காண்பதென்றால், அது "ஸ்ரீமுக" வருடம், "சிராவண" மாதம், "பகுல" பட்சம், மற்றும் அஷ்டமி திதி ஆகும். அன்று நட்சத்திரம் ரோஹிணி. நேரம் நள்ளிரவுக்குப் பிறகு காலை 3:00 மணி.