தலைப்பு

சனி, 31 ஜூலை, 2021

ஷிர்டி சாயியே சத்ய சாயி எனும் சத்தியம் உணர்ந்த ஷிர்டி சன்ஸ்தான் டிரஸ்ட் சேர்மன் பி.கே சாவந்த்!


ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் சேர்மனாக இருந்த பி.கே சாவந்த் சீரடி ட்ரஸ்ட் ஆரம்பித்த பிறகு இவர்தான் முதல் சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது... ஸ்ரீ சத்யசாயி ஷிர்டி சாயியின் மறு அவதாரம்.. இந்த சத்தியப் பேருண்மையை எவ்வாறு அவர் உணர்ந்து கொண்டார் என்பதும்... அப்பேர்ப்பட்ட பரிபூரண அவதாரமான சுவாமி எங்கும் நிறைந்தவர் என்பதற்கான மகிமை உதாரணமும்... பதிவு ஒன்று அனுபவம் இரண்டாய் அலங்கரிக்கிறது இதோ...

வியாழன், 29 ஜூலை, 2021

லிங்க அபிஷேக நீரால் தொழு நோயாளிகளை குணப்படுத்திய விநோத மருத்துவர் பாபா!

அன்னையர் கூட சில நேரங்களில் தமது பிள்ளைகளில் பேதம் காட்டலாம். ஆனால் ஆயிரம் அன்னைக்கு இணையான பாபாவின் பார்வையில் பக்தர்கள் அனைவரும் சமமே. பணம், பதவி, படாடோபம்  இவை அல்ல பாபா பார்ப்பது. குணம், உதவி, எளிமை இவைகளே பாபாவை ஈர்ப்பது.

செவ்வாய், 27 ஜூலை, 2021

தடியால் கை ஓங்கிய தந்தையை எதிர்த்து அதட்டிப் பேசிய ஒரு ஊமை பக்தை!


முடவரை நடக்க வைக்க... ஊமையைப் பேச வைக்க... இப்படி பலவித பிரச்சனைகளுக்கு சுவாமி தனியாக சிகிச்சை தர வேண்டிய அவசியமே இல்லை... பிறகு எவ்வாறு குணமாகும் என்பதற்கான உன்னத பதிவு இதோ...

திங்கள், 26 ஜூலை, 2021

நம் இல்லத்தையே பிரசாந்தி நிலையமாக மாற்ற பகவான் பாபா கூறும் ஐந்து வழிமுறைகள்!

கடவுளை வெளியில் தேட வேண்டாம். உள்ளத்தில் உறையும் இறைவனை நம் உள்ளே தேடினால்  உவகையுடன் அவனது அனுக்கிரஹம் கிட்டும். இதற்கு பகவான் பாபாவின் வழிகாட்டுதல்கள் என்ன. நாம் எந்த நெறிமுறைகளைப் பற்றி நடந்தால், நம் இல்லமே பிரசாந்தி நிலையமாக மாறும் என, சில எளிய வழிமுறைகளை பாபா நமக்கு அன்புடன்  விளக்குகிறார். வாருங்கள் பாபாவின் அமுத மொழிகளைக் கேட்போம்... 

ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஸ்ரீ சத்யசாயி பகவானின் பார்வை பட்டால் எதுவும் நடக்கும்!

-வியந்து விவரிக்கிறார் திரு.கே. வைத்யநாதன் (முன்னாள் ஆசிரியர், தினமணி)

சுவாமி அனைத்தும் அறிபவர்.. அதற்கு காரணம் யாவற்றையும் அவரே புரிபவர். இதனை மிக தெளிவாய் விளக்கும் அனுபவம் இது. மனிதர்கள் போல் பொழுது போக்கு பேச்சல்ல.. சுவாமி இறைவன்.. இறைவன் பேச்சு பழுது போக்கும் பேச்சு...சுவாமியின் நாவிலிருந்து வருகின்ற ஒவ்வொரு சொல்லும் பரம சத்தியம் என்பதற்கான உதாரணம் இதோ... 

வெள்ளி, 23 ஜூலை, 2021

ஒரு வீர சைவர் வழிபாடு செய்துவந்த ஸ்படிக லிங்கத்தில் காட்சி தந்த சதாசிவ சாயி!


சைவ மரபினர் சிவனை தவிர எந்த தெய்வ ரூபங்களையும் வணங்காதவர்கள். அதில் ஒருவருக்கு எவ்வாறு சுவாமியே ஆதிசிவன் என்பதையும் அனைத்து தெய்வ ரூபங்களும் தானே என்பதை உணர்த்தினார் என எடுத்துரைக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ..

வியாழன், 22 ஜூலை, 2021

தேசத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


இப்படி ஒரு தலைவர் இப்போது இல்லையே எனும் ஏக்கத்தையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிட்டுப் போனவர். லோக் நாயக்(மக்கள் தலைவன்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மகாத்மா ஜெய்பிரகாஷ் நாராயணின் சுவாமி அனுபவத்தை மெய் சிலிர்க்கும் படி வாசிக்கப் போகிறோம் இதோ...

புதன், 21 ஜூலை, 2021

நள்ளிரவு தோறும் பாங்காக் புறநகரில் வாட்ச்மேனை எழுப்பிய பரம காவலர் பாபா! 


எழுப்ப வந்தவர் தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி... தூக்கத்திலிருந்து விழிப்பிற்கு...மாயையிலிருந்து ஞானத்திற்கு... கற்பனையிலிருந்து நிதர்சனத்திற்கு.. அவ்வகையில் பாதுகாவல் பணி செய்பவரை அப்பணியில் எவ்வாறு ஒழுங்குபடுத்தி அருளினார் என்பதை விளக்கும் தூர தேசத்து மகிமை பதிவு இதோ...

அற்புத பர்த்தி பாபா பாக்கெட் விபூதியின் வரலாறும் அதன் தயாரிப்பு முறையும்!

THE MAKING OF THE WONDROUS HOLI ASH

பிரசாந்தி நிலையம் செல்பவர் அனைவரும் பரம பக்தியுடன் பிரசாதமாக பெறுவது பாபாவின் விபூதி பொட்டலங்களைத்தான். சர்வ ரோக நிவாரணியாக, சர்வ ஐஸ்வர்களின் பிரதிபலிப்பாக , சங்கட நாசினியாக பக்தர்கள் அணிவது இந்த பாபா விபூதியைத் தான். இந்த பர்த்தி பாபா விபூதி எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை இனி காண்போம்... 

செவ்வாய், 20 ஜூலை, 2021

ஒரு ஏழை விவசாயியின் முற்றிய புற்றுநோயை குணமாக்கியது சிறிய சுவாமி படமும்... ஒரு டம்ப்ளர் தண்ணீரும்...!


சுவாமிக்கு தீனதயாளன் என்ற பெயர் இருக்கிறது. இரக்கமே வடிவான இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எவ்வாறு ஏழையைக் கண்டு இரங்குகிறார் என்ற சத்தியம் விளக்கும் பதிவு இது... 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு எவ்வுலகமும் இல்லை' என்பதாக சுவாமியின் இந்தப் பதிவை வாசித்திருந்தால் புலவர் தனது தமிழ் கூற்றை மாற்றி எழுதி இருப்பார்...

திங்கள், 19 ஜூலை, 2021

நலிந்து போன ஒரு நேர்மையான வங்கி அதிகாரியை முன்னேற்றிய சாயி!


சுவாமி எவ்வாறு.. யாரை எந்த நேரத்தில் தன் பக்தராக ஈர்த்து அவரை முன்னேற்றுகிறார் என்பதில் அந்த தனிநபரின் குணத்தையும் வலியுறுத்தி அப்படிப்படட்ட முன்னாள் வங்கி அதிகாரியின் வாழ்வையே மாற்றிப்போட்ட ஒரு மகிமை அனுபவம் இதோ...

ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஒரு நாத்திகரின் ஒட்டு மொத்த குடும்பமுமே பரம பக்தரான சுவாரஸ்ய சாயி அனுபவம்!


இறைவன் சத்ய சாயியை வழிபட வழிபட .. தீய வினைகள் வழிவிட வழிவிட ஆரம்பித்துவிடும். குணங்கள் நல்லனவாகும்... அசைவம் சைவமாகும் . குரூரம் சாந்தமாகும் .. கோபம் பணிவாகும்.. அகந்தை வாய்மூடி சாயிராம் சாயிராம் என அமைதியாகும். நாத்திகமோ வால் அறுந்து போய் பக்குவப்பட்டு ஆத்திகமாய் பின் ஆன்மீகமாய் ஜொலிக்கும். கடவுள் சத்ய சாயி மேல் பக்தியே இல்லா அப்படி ஓர் குடும்பமே பரம பக்தராய் மாறிய ஆச்சர்ய அனுபவம் இதோ...

சனி, 17 ஜூலை, 2021

நேர்காணல் அறையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற பக்தர்!


இடமும் காலமும் வெறும் மாயை. மனதின் பிறழ்வுகள்.. இறைவனே மெய்யானவர். அந்த பரிபூரண பரம்பொருளான இறைவன் சத்யசாயிக்கு எல்லா இடமும் ஒரே இடமே. காற்றையே நிர்வகிக்கும் கடவுளுக்கு இதய ஈரம் உண்டே தவிர தூரம் என்ற ஒன்றே இல்லை... 

வெள்ளி, 16 ஜூலை, 2021

சரி செய்யவே முடியாத உடைந்த முழங்காலை ஒரே ஒரு ஸ்பரிசத்தால் குணமாக்கிய சாயி!


பாலபட்டாபி பழம்பெரும் சுவாமி பக்தர். அசைக்க முடியா நம்பிக்கையை சுவாமி மேல் வைத்திருக்கும் ஆத்மார்த்த பக்தர். மருத்துவரால் கைவிடப்பட்ட அவர் மனைவியின் உடைந்த முழங்காலை சுவாமி சரிபடுத்திய அதிசயம் பதிவாக இதோ...     

வியாழன், 15 ஜூலை, 2021

ஒரு மாணவனுக்கு இரண்டு ஜோடி காதணிகள் சிருஷ்டித்த தாயுமானவ சாயி!


ஏன் மாணவனுக்கு ஒன்றல்ல இரண்டு ஜோடி காதணிகள் சுவாமி  சிருஷ்டித்து தர வேண்டும்? அதன் பின்னணி சம்பவம் என்ன? என்பது சுவாரஸ்ய பதிவாக இதோ...

புதன், 14 ஜூலை, 2021

சுவாமியின் 'Humko Tumse Piyar Kitna' பாடல் உருவான விதம்!


சாய்ராம் பிருந்தாவன் கல்லூரிவளாக மாணவர்கள் சரியாக படிப்பதில்லை ஒழுங்கீனமாக உள்ளார்கள் என சுவாமி அவர்கள் மேல் கோபம் கொண்டார். பிருந்தாவன் சென்று அவர்களை பார்ப்பதே நிறுத்திக்கொண்டார். அவர்கள் புட்டப்பர்த்தி தரிசனம் வருவதையும் தடை செய்துவிட்டார்.

சுவாசத்தை விடவும் சாயி பக்தர்களுக்கு சுவாமி மேலான 'விஸ்வாசமே' அவசியம்!


முதிய வயதான முன்னாள் கலெக்டர் ஒருவரின் சுவாமி அனுபவங்களும்.. அவரின் மனக் கொந்தளிப்பை ஆற்றக்கூடிய மருந்துமே சுவாரஸ்ய பதிவாய் இதோ....

செவ்வாய், 13 ஜூலை, 2021

திருப்பதி மலையேற வைத்தபின் மாயமாய் மறைந்த அந்த அமானுஷ்ய நாய்!


சுவாமி எந்த ரூபத்திலும் வருவார். உயிர்திணை அஃறிணை என்ற பேதமே சுவாமியிடம் இல்லை. காரணம் எல்லா உயிரினங்களின் தாயும் அவரே.. தாய் தன் மகவை வெறுக்காதது போலவே சத்ய தாயும் நம்மை ஒருபோதும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அஃறிணை ரூபத்தில் தோன்றி எவ்வாறு சுவாமி வழிகாட்டினார் என்பதன் விசித்திர பதிவு இதோ..‌.

திங்கள், 12 ஜூலை, 2021

சேவை ஒன்றே சாயியை மகிழ்விக்கும்!

தியாகம் என்பது இதய யாகம் ... தியாகம் என்பது ஆன்ம ராகம்... அது வளர வளர இதயம் பிரகாசிக்கிறது... வாழ்வே சாயி எனும் பாடல் வரியைச் சுமக்கும் தெய்வீக இசையாகிவிடுகிறது.. அத்தகைய தியாகத்தின் சேய்களே சேவைகள் என்பதை மிக எளிமையாக எடுத்துரைக்கிறார் இதோ ஸ்ரீ சத்ய சாயி...

ஞாயிறு, 11 ஜூலை, 2021

பிரேம சாயிக்கு ஸ்டோர் கீப்பராக இருக்கப்போகும் சாயி பக்தர்!


🇬🇧 மூன்று அவதாரங்களுக்கும் ஒரு பக்தர் சேவை ஆற்றுவது என்பது சாதாரண செய்கை இல்லை.. பாபாவின் பரிபூரண கருணையும் அந்தந்த ஆன்மாவின் உன்னத பூர்வ பிறவிகளுமே காரணமாகிறது... சுவாமி பாதசேவை என்பது வைகுண்ட இன்பத்தை விட பேரின்பமானது... அதனை பெற்றிருக்கும் ஒரு புனித பக்தரைப் பற்றி அரிய பதிவு இதோ...

சனி, 10 ஜூலை, 2021

ஜப்பானில் நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு காட்சி தந்து குணமளித்த சுவாமி!

சுவாமி எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். அவரின் கருணைக்கு இந்த பூமியோ.. இந்த பூமியில் நிறைந்திருக்கும் பிரபஞ்சமோ சமானமில்லை. எல்லா இடத்திலு நீக்கமற நிறைந்திருக்கும் சுவாமி  ஜப்பானில் தோன்றி எவ்வாறு ஒரு பெண்மணியை குணமாக்கினார் என்பதும்.. சுவாமியை பிடிக்காத அவளின் மகனுக்கு எவ்வாறு பக்திப் படிப்பை ஏற்படுத்தினார் என்பதும் பரவசம் ததும்பத் ததும்ப இதோ...

வெள்ளி, 9 ஜூலை, 2021

மணக்க மணக்க சாயி அனுபவம் பகிர்கிறார் டி.எம்.எஸ் மல்லிகா!


இறைவன் சத்யசாயியின் ஆச்சர்யகரமான அனுபவங்கள் .. சர்வ சகஜமான அதுவும் மிக நூதனமான தரிசனங்கள் .. மிக மிக பிரியமான சம்பாஷனைகள் ... தலை தொட்டு ஆசிர்வதிக்கும் நிமிடங்கள்.. டாட்டா காட்டும் உரிமையான உணர்வுப் பரிமாற்றங்கள் இவை எல்லாம் முன் ஜென்ம பிராராப்தம் .. அந்தக் கொடுப்பினை இருந்தாலே கிடைக்கும்.. அப்படிப்பட்ட அனுபவங்கள் பகிர்கிறார் டி.எம்.எஸ் மல்லிகா அம்மா...

வியாழன், 8 ஜூலை, 2021

பக்தையின் தந்தையின் முற்றிய கேன்சரை விபூதியால் கேன்சல் செய்த வினோத வைத்தியர் பாபா!

நாம் பிரார்த்திக்கும்  தெய்வங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பிரார்த்தனைகள் சென்று அடைவது, பாபா என்னும் கலியுக தெய்வத்திடம் தான். அவரே சர்வதேவதா அதீத ஸரூபன். சர்வ சக்தியின் ஒரே இருப்பிடம். சர்வாந்தர்யாமி... 

ஸ்ரீ சத்ய சாயி பற்றி பிரபல அமெரிக்கன் நியூஸ்வீக் பத்திரிகை!


50 வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல நியூஸ்வீக் பத்திரிகை சத்ய சாயி பாபாவைப் பற்றி வியந்து வெளியிட்ட செய்தியின் தொகுப்பு இதோ... 

இறைவன் சத்ய சாயியின் அற்புதங்கள்.. லீலா விநோதங்கள் எல்லாம் தொகுத்து எழுதிட ஆகாயமே பத்திரிகையாக மாறினாலும் பக்கங்கள் தீராது எனும் பரம சத்தியம் எப்போதுமே வியக்க வைக்கிறது.

புதன், 7 ஜூலை, 2021

'அம்மா' என்று கதறி அழைத்த அடுத்த நொடி மாணவனின் வேதனை தீர்த்த சாயி மாதா!

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்பார்கள். அன்னை தெய்வமாக இருப்பது சிறப்பு தான்.. ஆனால் தெய்வமே நமக்கு அன்னையாக இருப்பது சிறப்பிலும் சிறப்பு... பெரும்பாக்கியம். யாருக்கும் வாய்க்காத பெரும் பேறு. பக்தர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தன் மேல் பக்தியே இல்லாது போயினும் அவர்களுக்கும் எவ்வாறு சுவாமி அன்னையாக இருக்கிறார் என்பதற்கான நெகிழ்வான அனுபவம் இதோ!!

பிரேம சாயி பாபா அவதார வருகை எப்போது? இணையத்தில்.. நான்தான் பிரேம சாயி பாபா என்பதாக ஒரு சிலர் வலம் வருகிறார்களே.. அவை எல்லாம் உண்மையா?


நல்ல கேள்வி. பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி மிகத் தெளிவாக தன் ஆன்மீக உரையாடலில் பிரேம சாயியின் பிறப்பிடத்தையும் .. யாருக்குப் பிறக்கிறார் (ஸ்ரீமான் கஸ்தூரி சாய்ராம்) ... எந்த காலகட்டத்தில் அவதாரப் பிரகடனம்  செய்வார் என்பதையும்.. பிரேம சாயி எவ்வாறு இருப்பார் என்பதன் அடையாளத்தையும் தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

என்னிடம் திடமான விஸ்வாசத்துடன் இருங்கள் - மாணவருக்கு ஏற்பட்ட சாயி அனுபவம்!

அவதாரத்தின் முக்கிய திருப்பணியே மக்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை யெல்லாம் கருணையோடு கொடுத்து, மகிழ்வித்து, உயிர் தோழனாக இருந்து உதவிகள் செய்து,  இக, பர சுகங்கள் இரண்டையும் அடைய வழி வகுப்பது தான்.. 

EP 9: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! | இடைக்காடர் மகரிஷி நாடி & அகஸ்திய மகா சிவ நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... இடைக்காடர் மகரிஷி நாடி மற்றும் அகஸ்திய மகா சிவ நாடியை தான் வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்.... 

திங்கள், 5 ஜூலை, 2021

பக்தையின் தொலைந்து போன ஜபமாலையை சித்ராவதி மணலில் இருந்து மீட்ட சாயி மாதவன்!

சுவாமி அனைத்தையும் அறிபவர். சுவாமியின் திருச்செயல் யாவும் நேரத் துல்லியம் நிறைந்தது. கால இயந்திரத்தை முன்னுக்கும் பின்னுக்கும் அசைக்கும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தொலைந்த வாழ்வையே மீட்டுத் தருபவர்.. இதோ தொலைந்த ஜபமாலையை மீட்டுத் தரும் விசேஷ பால லீலா பதிவை வாசிக்கப் போகிறீர்கள்...  

தியான நிலையில் இருக்கும்போது நம்முடைய எண்ண ஓட்டத்தை எப்படி குறைப்பது?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: எண்ண ஓட்டங்கள் நம்முடைய ஒருமுக தியான நிலையில் குறுக்கிடுகின்றன. எண்ண ஓட்டத்தை எப்படி குறைப்பது?

பாபா: சிந்தனை செய்வது என்ற பழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது. இப்பழக்கத்தை ஒதுக்கி விட்டாலும். அதை மெள்ளவே நிறுத்த முடியும்.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

காரை நிறுத்தி கீழே இறங்கி காத்திருந்த சாயி கருணை!


பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவை காண முக்கிய பிரமுகர்கள், முதல்-மந்திரிகள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதி, போன்ற பெரும் தலைவர்கள் வந்து காத்திருப்பது உண்டு!

சுவாமியே, ஒருவருக்காக வெயிலில் கால்கடுக்க காத்திருந்தார்... யாருக்காக ?

சனி, 3 ஜூலை, 2021

வியாழன், 1 ஜூலை, 2021

தன் கையாலேயே அறுவை சிகிச்சை செய்த தெய்வ சாயி!


உண்மையான மருத்துவர் இறைவன் ஒருவரே.. வலிகளின்றி அறுவை சிகிச்சை செய்வதென்பது இறைவனுக்கே உரித்தான கருணை.. அப்படி ஒரு அற்புத சிகிச்சையை இறைவன் சத்ய சாயி ஆற்றிய மகத்துவப் பதிவு இதோ...