முக்கியமாக இரண்டு லட்சணங்கள் ஒரு தலைவருக்கு இருப்பது அவசியம்! இவை இல்லாமல் இருப்பதால் தான் தற்போது தீய குணங்கள் தலைவிரித்து ஆடுகின்றன...!
அவையே Individual character (தனிக்குணம்) , National Character (சமூக குணம்)!
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய பாலகங்காதர திலகர் , சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு இந்த இரண்டு குணங்களும் இல்லாமல் இல்லை!
தனிக்குணம் இல்லாத எவருக்கும் தலைவர் ஆவதற்கான தகுதி கிடையாது! எப்பொழுதும் வழிநடத்துபவராக இருக்க வேண்டுமே தவிர தள்ளிவிடுபவராக இருக்கக் கூடாது!
முதலில்.. சேவை செய்பவரே நாயகராகவும் தகுதி உடையவர்!
தனது சொந்த புலன்களை அடக்கியவரே தலைவராகும் தகுதி பெற்றவர்!
கிங்கரராக இல்லாமல் சங்கரராக ஆக முடியாது!
First You Be
Then Do &
Then Tell
நல்லவராக இருந்து, நல்லவற்றை செய்து , நல்லதைச் சொல்பலரே சரியான தலைவர்! இதையே சுவாமி நான் அடிக்கடி குழந்தைகளுக்குச் சொல்வதுண்டு!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம்: 207)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக