தலைப்பு

புதன், 1 பிப்ரவரி, 2023

சுவாமி! உங்களுக்கு கோபம் வருமா?

சுவாமி எனக்கு எந்தவிதமான சுயநலமும் கிடையாது! சுவாமி எனக்கு கோபம் இல்லை! கோபமே வராது! 

Love is God - God is Love


உங்களைத் திருத்துவதற்காக, நான் கோபப்படுவது போல நடிக்கிறேன்! கோபப்படுவதெல்லாம் ஒரு நாடகமே! அது கூட ஒரு நொடியில் பனிபோல் உருகி விடுகிறது! உங்களுடைய விருப்பப்படி எல்லாம் நடப்பவர் எப்படி சுவாமியாக (பாபாவாக) இருக்க முடியும்?! 

உங்கள் நன்மைக்காக பாடுபடுவது தான் சுவாமி! 

இந்தப் பிரதேசம் அனைத்தும் ஒரு பட்டறை (workshop) போல்... இங்கே சரிப்படுத்தவே எல்லா வாகனங்களும் வருகின்றன...

இங்கு என்ன செய்ய வேண்டும்? Nuts, Bolts, Screws இவற்றை எல்லாம் சரிசெய்து நன்றாக சீராக்க (repair ) வேண்டுமல்லவா! அதுபோல் இங்கே வந்தடைபவர்களின் குறைபாடுகள், குற்றங்கள், பலவீனங்கள் இவற்றைப் போக்கடித்து , சரி செய்து, நல்ல இலட்சிய மனிதர்களாக மாற்ற வேண்டும் அல்லவா!


தப்பு செய்த உடனேயே அதை சரி செய்ய வேண்டும்! எச்சரிக்க வேண்டும்! இருப்பு நன்றாக காய்ந்து பழுத்திருக்கும் போது , எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம்! ஆனால் சாதாரணமாக இருக்கும் பொழுது , எப்படிப்பட்ட பலசாலியாலும் வளைக்க முடியாது! நன்றாக சூடாக இருக்கும் போதுதான் சம்மட்டியால் அடிக்க வேண்டும்! அது போன்று தவறு செய்கிற போதே தட்டித் திருத்த வேண்டும்!

பத்துப் பேரின் மத்தியில் உங்கள் தவறை சுட்டிக் காட்டித் திருத்தினால் , அதே தவறை மீண்டும் செய்ய மாட்டீர்கள்! 


ஒரு சிறு உதாரணம்: 

உங்கள் வீட்டில் நீங்கள் லுங்கி அணிந்து துடைப்பத்தால் சுத்தமாக்கும் போது... யாரேனும் வீட்டுக்கு வந்தால்.. என்ன செய்வீர்கள்? 

துடைப்பத்தை ஒரு ஓரமாக வைத்து வேறு ஆடை அணிந்து விட்டு அவர்களை வரவேற்பீர்கள் அல்லவா? ஏன்? அபிமானம் தான் காரணம்! 


அதேபோல்தான்! உங்கள் தவறுகளை பலர் முன்னிலையில் சுட்டிக் காட்டும் பொழுது , எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பீர்கள்! நீங்கள் உருப்படாமல் போனால் எனக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை! நன்றாக நடந்து நீங்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும்... அதுவும் எனக்காக அல்ல... உங்களுக்காகவே! 


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 203)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக