தலைப்பு

வியாழன், 23 பிப்ரவரி, 2023

சுவாமி! உங்கள் ஆசீர்வாதத்தினால் உங்கள் சந்நதி அடைந்திருக்கும் நாங்கள் பூர்வ ஜென்ம வாசனைகள் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டுமா?


இப்போது உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாக்கியங்கள், முற்பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல காரியங்கள் இரண்டும் தேவையானவையே!

ஒன்றுக்கு மற்றது சம்பந்தப்பட்டவையே! 

உதாரணம் ; அது ஒரு மணல் பாங்கான பிரதேசம்! மழை பலமாகப் பொழிகிறது! பெய்த நீரெல்லாம் மணலில் வீழ்ந்து வடிந்தூ போய்விடுகிறது! 

அப்படியே உள்ளது உங்களது நிலை! நிலையாக இருப்பதில்லை! 


ஆனால் ஒரு கால்வாய் , நதி உள்ள பிரதேசத்தில் மழை பொழிந்தால் என்ன ஆகிறது? நீரோட்டம் மறைந்து, மிக வேகமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது! 

முன் சென்ற ஜென்மத்தின் நல்வாசனைகள் என்ற கால்வாய் இருக்குமானால் , அனுகிரகம் என்ற மழை நீரோட்டத்தை அதிகரிக்கிறது! 

மழை என்பது இறைவனின் கருணை போன்றது! 

அதே போல் முன்ஜென்மங்களில் செய்த நல்ல செயல்கள் இறைவனின் அனுகிரகத்தை நிலைநிறுத்திக் கொள்கின்றன...! அதனால் தான் 


கையில் கிடைத்த 'சாயி'யை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்!

என்று சுவாமி கூறுகிறேன்! 


கிணற்றில் வாளியை இட்டு நீரை இழுத்து எடுத்து வருகிறீர்கள்! கவனமாக வாளியைப் பிடித்துக் கொள்ள வேண்டும் அல்லவா! நடுவில் கயிற்றை விட்டுவிட்டால், நீரை அடைய முடியுமா? 

ஆனால் ஒரு விஷயம் உள்ளது, அதாவது உங்கள் பூர்வ வாசனைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, இறைவனின் மீது உங்களுக்கு ஆழ்ந்த பக்தி இருக்குமானால், எதையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சாதிக்க இயலும்! மனித முயற்சி வலுவாக இருக்குமானால் இறைவனின் அனுகிரகம் அதனுடன் இணைந்து நல்ல பயன்களை அளிக்கும்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 182 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக