தலைப்பு

திங்கள், 30 டிசம்பர், 2019

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

புட்டபர்த்தியைப் புகைப்படத்தில் கூடப் பார்க்காத இவருக்கு, நம் அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா புட்டபர்த்தியை முழுவதும் கனவில் சுற்றி காண்பித்திருக்கிறார். இவரின் அனுபவங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். இந்த பதிவை தவறாமல் படித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

இன்று (28/12/2019) (மதியம் 1.45)
ஒரு மீட்டிங் சாலிகிராமத்தில்.. கோடம்பாக்கத்திலிருந்து ஓலா ஆட்டோ புக் செய்தேன்..
அது ஓலா அல்ல சுவாமி லீலா என பிறகு தான் புரிந்தது ...

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கவிதா வாஹினி! (பக்கம் -2) -கவிஞர் வைரபாரதி

32) ஷிர்டி சாயி சத்ய சாயி:

ஷிர்டியில் வாழ்ந்த 
அதே ஜோதி தான் 
பர்த்தியில் பிறந்தது 

அகல் விளக்கா 
குத்து விளக்கா 
எதில் 
எந்த ஜோதி சிறந்தது? 

சனி, 28 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 5 | பாதங்கள் தருவாய் பர்த்தீசா! - உமேஷ்



 🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் ஃபிஜியன் உமேஷ் அவர்களின் அனுபவங்கள்! 

மன்பதை காக்கும் சாயி மாணிக்கப் பாதம் தானே!
துன்பத்தைப் போக்கும் சாயி தூமணிக் கரங்கள் தானே!
அன்பதைப் பொழியும் அந்த ஆனந்த மூர்த்தம் தானே!
இன்பத்தைப் பொழியும் சாயி ஈடிலாக் கருணை தானே!









ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பனில் உள்ள கரண்டேலில் அற்புதமானதொரு சாயி சக்தி செயல்படுகிறது. சென்ட்டர் என்றும் சமிதி என்றும் பதிவு செய்து கொள்ளாத ஒரு சாயி பக்தர் குழு அங்கே நிதானமாய் அமைதியாய் இயங்குகிறது. வியாழக்கிழமைகள் தோறும் நடக்கும் பஜனைகளில் சுவாமியின் படங்களிலிருந்து பூக்கள் 'பட்பட்'டென்ற சப்தத்துடன் கீழே விழுவது ஆனந்தமான சாயி லீலை. கராஜ் ஒர் அழகிய சத்யசாயி கோயிலாகியிருக்கிறது.

வெள்ளி, 27 டிசம்பர், 2019

பாகம் 3 (நிறைவுப் பகுதி) | ஸ்ரீமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


பாரத ரத்னா M.S.அம்மாவிற்கு பாபா பரிசளித்த வைரநெக்லஸ்:

வாழ்வே தவம். இசையே வழிபாடு. ஈகையே மகிழ்ச்சி என வாழ்ந்தவர் இசைக்குயில் M.S. அம்மா.

கோவிந்தன் குழல் கொண்டு ஊதியபோது கோபிகைகள் மட்டுமின்றி ஆவினங்களும் பறவைகளும் கூட உண்பதை நிறுத்தி இமைப்பதை மறந்து நின்றனவாம். M.S அம்மாவின் இசைக்கும் அந்த அறபுத சக்தி உண்டல்லவா.?
தன் தெய்வீக இசையால் அவர் கோடிக்கணக்கில் பொருள் சேர்த்து பெரும் செல்வந்தராக ஆகி இருக்கலாம். ஆனால் அவர்  தம் இசைக் கச்சேரிகள் மூலம் ஈட்டிய செல்வம் அனைத்தும் நற்பணிகளுக்காக வழங்கினார்.

வியாழன், 26 டிசம்பர், 2019

பாகம் 2 | ஸ்ரீமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


இன்னிசை அரசி M.S. அவர்கள் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதம்:

மன அமைதி குன்றி சற்றே கண் மூடி அமர்ந்திடும் போது காற்றினிலே ஒரு கீதம் அது கண்ணனின் மோகன கீதமாக சற்றே வந்து காதில் விழுகிறது. குறை ஒன்றும் இல்லாத மறை மூர்த்தி கண்ணன் கோவிந்தனின் நாமமும் காதில் கேட்க நமது உள்ளம் பரவசத்துடன் அமைதி அடைகிறது.

புதன், 25 டிசம்பர், 2019

பாகம் 1 | ஸ்ரீமதி. M. S. சுப்புலட்சுமி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


'திருப்பதியானது புட்டபர்த்தி ' - கவிஞர் பொன்மணி

பிரபல வார இதழான குமுதத்தில் "வெற்றிப் பெண்மணிகள்" என்ற வரிசையில் ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு சிறப்பான பெண்மணியைப் பேட்டி கண்டு தொடராக எழுதியிருந்தேன். அவர்களுள் சாயி பக்தர்களாயிருந்தவர்களிடம் சுவாமி தந்த அனுபவங்களைக் கேட்டு எழுதினேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. இசைத்துறைக்கு இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களைப் பேட்டிகாண முயன்றேன். அதற்குமுன் 'கல்கி' குடும்பத்தின் பேட்டிக்காக குடும்பத்தோடு அவர்கள் இல்லம் சென்றபோது... எம்.எஸ். அம்மாவும் அங்கு வந்து எங்களோடு அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

கொடைக்கானல் அருகே மண் சரிவு தடுக்கப்பட்டது! -T.G கிருஷ்ண மூர்த்தி


1990 களில் ஆரம்ப காலத்தில் நடைப்பெற்றது,  (T G கிருஷ்ண மூர்த்தி முன்னாள் தமிழ்நாடு மாநில சாயி சேவா தலைவர் –  Ex Tamil Nadu State President) ஸ்வாமியுடன் கொடைக்கானல் சென்று மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஸ்வாமி திடீரென வெளியே வந்து உடனே காரை எடுத்து, கிளம்ப வேண்டும் என்றார், ராதாக்ருஷ்ணன் அவர்களும் காரைக் கொண்டு வர பின் சீட்டில் தனது அருகில் TGK ஐ அமரச் செய்து, இன்னொரு பக்தரை பின்புறம் அமரச் செய்தார்.  மைசூர் போகும் பாதையில்  போகச் சொல்லி வண்டியும் போயிற்று, ராதாகிருஷ்ணன், மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டியிருந்தது ஏனெனில் மலைப் பாதையாக இருந்தது.

திங்கள், 23 டிசம்பர், 2019

எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி | பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்!


பகவான் அடிக்கடி தன்னுடைய உரைகளில் 'எனது வாழ்க்கையே நான் தரும் நற்செய்தி' என்று குறிப்பிடுவர். அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பக்தர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும். அப்படி பகவானின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தான் நீங்கள் இப்போழுது பார்க்க போகிறார்கள்! 

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு(Tippu) மற்றும் அவர்களுடைய மனைவி ஹரிணி அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய  பக்தரும், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகருமான சாய் சகோதரர் திரு திப்பு மற்றும்  அவரது துணைவியார் ஸ்ரீமதி  ஹரிணி திப்பு (  பிரபல  திரைப்படப் பின்னணிப் பாடகி) அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.. 

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி. கீதா மோகன்ராம் அவர்களின் அனுபவங்கள்


ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் கீதா மோகன்ராம். பத்மநாபனுடைய மாமா சேஷகிரிராவ் இன்றும் பிரபலமானவர்.

வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?

 ஏன் இந்த உடல் கொடுக்கப்பட்டுள்ளது?



யாருக்காகவும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்காகவும் கவலைகொள்ளாதீர்கள், உங்களுக்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்!

மங்களூரை சேர்ந்த பிரபல ஸ்தாபனமான M.S PAI & CO குழுமத்தை சேர்ந்த திரு. பத்மநாப பாய் அவர்களின் அனுபவங்கள்!

ஓம் ஸ்ரீ சாயி சரணாகத வத்சலாய நமஹ.
                   
தன்னை நாடிவந்த பக்தர்களை பாபா ஓடிவந்து துயர் துடைத்த நிகழ்ச்சிகள்
எண்ணில் அடங்கா.

வியாழன், 19 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் சமாதிக்கு பின்னர் நடந்த அற்புதம்!

கொல்கத்தாவில் பிரபல நரம்பியல் டாக்டராக இருந்த Dr. D. P பானர்ஜி அவர்களின் அனுபவப் பக்கங்களிலிருந்து..

டாக்டர் D.P பானர்ஜியும் அவரது துணைவியாரும் பிராசாந்தியிலே வாழ வேண்டுமென, 2008ல் அக்டோபரில் வந்து சேர்ந்தனர். திருமதி.ஷோபா பானர்ஜி இறைவனின்(சாயியின்) அருளுக்குள், ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே வந்தவள். இதயபூர்வமான இந்த பந்தம், வளர்ச்சி அடைந்து, ஆண்டாண்டுகளாக உறுதிப்பட்டுள்ளது. அவளது கனவில் ஸ்வாமி அடிக்கடி வருவார்; ஆனால் மற்றவர்களுக்கான நலனுக்காகவே  அது  நடந்தது. ஸ்வாமியின் கருவியாக அவள் செயல்பட்டமைக்கு மிகுந்த ஆசி பெற்ற ஒருவள், அவள்!! மிகுந்த தெய்வீக மாகவும், மனித நேயத்தோடும் சேவையை செய்து வந்தாள்.

புதன், 18 டிசம்பர், 2019

பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி பத்மஸ்ரீ V.K கோகாக் அவர்களின் அனுபவங்கள்!

V.K கோகாக் என்பவர் பிரபல புகழ்பெற்ற கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்டத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் 'ஞானபீட விருது'(Jnanpith Award) பெற்றவராவார். இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நிறைய நூல்களை எழுதியுள்ளார். 1961 ஆம் ஆண்டில், கோகாக்கிற்கு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மாமிசம் உண்பவர்களுக்கும் பாவ கர்மாவில் பங்குண்டு!


அசைவ உணவு உண்பது பெருந்தீய பாவம்... அந்த கொடுப்பாவம் நிழலாய் நம்மையே பின் தொடரும்... பின் தொடர்ந்து கெடுதல் விளைவுக்கு.. பொழிகின்ற இறை அருளை முரணாய் முன்நின்று தடுக்கும்... ஜீவகாருண்ய அடிப்படையில்  எதற்காக ஒருவர் அசைவத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது மிக விளக்கமாக இதோ..!

திங்கள், 16 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 4 | ஆண்டவன் தோட்டத்து அன்பு மலர்கள்!

🇦🇺 ஆஸ்திரேலியா பெண்மணி மோயா(MOYIA) அவர்களின் அனுபவங்கள்! 

சேவையின் மகத்துவங்கள் ஜெகமெலாம் புரியவைப்பாய்
சேவைகள் பக்தர் புரியப் பாரெலாம் அனுப்பி வைப்பாய்
சேவையே உனக்கு கந்த சிறந்த வழிபாடென்பாய் நீ
சேவையை வாழ்க்கை யாக்கும் அன்பரை அரவணைப்பாய்!









🌹ஆஸ்திரேலிய ரோஜாக்கள்:

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் வாழும் 'பிங்க் சிஸ்டர்ஸ்' சுவாமியின் பிரத்யேகமான அன்பையும் அருளையும் அடைந்திருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

அவர் திருநாமம் "அலிபாபா" அல்ல "சாயிபாபா"

🇻🇪 வெனிசுலா நாட்டைச் சேர்ந்த திருமதி. அனா எலினா டயஸ் தன் வாழ்வில் நடந்த நிகழ்வை தன் கட்டுரையில் விவரிக்கிறார்.. 

நிறைமாத கர்ப்பிணியாக... நான் 2வது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, என்னுடைய 10 வயது மூத்த மகன் எட்வர்டு உடன் தொலைக்காட்சி நிகழ்சியை பார்த்துக்கொன்டிருந்தேன், அது இயேசுநாதரின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம்.18 வயது முதல் 30 வரை யாரும் அறிந்திராத, எந்த விவிலிய(Bible) நூல்களிலும் எழுதப்படாத  காலத்தைப்பற்றியது.. ரிச்சர்டு பேக் என்ற ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் தான் அதை வெளியிட்டிருந்தார். அதில் பல விஷயங்களை தெளிவுப் படுத்தியிருந்தார். இயேசு வட இந்தியாவின் பல தபோவனங்களில் வாசம் செய்ததாகவும், பாகிஸ்தானில் வசித்துவந்ததாகவும் தெரிவித்திருந்தார். கடைசியில் ஆவணப்படம் சத்ய சாயிபாபாவின் செய்திகளுடன் முடிவடைந்தது.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்த "சௌகார் ஜானகி" அவர்களின் அனுபவங்கள்!

இவர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் இன்றுவரை கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா உடனான இவர்களின் அனுபவங்கள் கேட்பதற்கு மிகவும் மெய்சிலிர்க்கும் படியாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாகம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதனால் தவறாமல் சௌகார் ஜானகி அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.

சனி, 14 டிசம்பர், 2019

உலகில் முதன்முதலாக நிறுவப்பட்ட ஷீரடி பாபா சிலை!

கிண்டி ஷீரடி பாபா திருக்கோயில், சென்னை. 

அன்பெனும் கங்கையும் கருணையாம்
யமுனையும் அருள் என்னும் சரஸ்வதியும்
சங்கமம் ஆகும் சாயியின் திருவடி.
இங்கவர் நிகழ்த்தியது ஒரு அற்புத ரக்ஷணம் கதையையும் மிஞ்சிய ஒரு உண்மை வாழ்க்கை கதை... 

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஸ்ரீ ராமர் - ஏற்றமிகு கதாநாயகர் -ஸ்ரீ சத்ய சாயி பாபா


ஸ்ரீ மத் இராமாயணத்தை ஸ்ரீ இராம கதா ரச வாஹினியாக பாபா அளித்ததே துல்லியமான இராமாயணம்...! காரணம் தன் முந்தைய அவதாரத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி அவரை விட வேறு யாரால் அவ்வளவு தெளிவாக விளக்கிவிட முடியும்?! ஸ்ரீ ராம நிகழ்வுகளைக் குறித்து நாம் அறியாத பல ஆச்சர்ய அதிசய ரகசியங்களை எல்லாம் நம்மை பரவசமாக்கிட பேரிறைவன் பாபாவே விவரிக்கிறார் இதோ...

வியாழன், 12 டிசம்பர், 2019

மருத்துவக் கல்லூரி மாணவர்களை தீ விபத்தில் இருந்த காத்த பாபா!


அது 1992ம் ஆண்டு. T.A.பாய் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகி பாபாவுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
நடந்தது என்ன?

பாபா தம் மாணவர்களிடையே உரையாடிய போது கூறியது...
T A. பாய் மருத்துவக் கல்லூரி(Kasturba Medical College, Manipal) மாணவர்கள் 40 பேர் கலாசாலையில் ஒரு அறையில் குழுமி இருந்தனர். விலை உயர்ந்த கருவிகளும் அந்த அறையில் இருந்தன.

புதன், 11 டிசம்பர், 2019

கர்நாடகத்தின் தலைசிறந்த மேதை பத்மபூஷன் திரு. T A.பாய் அவர்களின் அனுபவங்கள்!

பிரபல T. A. PAI மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியூட், மணிபால் சேர்மன் பத்மபூஷன் 
திரு. T A.பாய் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து...

ஷீரடி சிவன்தான் பின்
பர்த்தியில் சிவசக்தி.....
மாறியது உருவம்தான்
மாறாதது பக்த ரட்சணம்.

திரு. T A.பாய். கர்நாடகத்தின் தலைசிறந்த மேதை. பன்முகத் திறமை கொண்டவர். தொட்டது எல்லாம் துலங்க வைத்தவர். அவர் எவ்வாறு ஷீரடி பாபாவும் சத்யசாயி பாபாவும் ஒருவரே என உணர்ந்தார் நிகழ்வுகளை அறியும் முன்.. திரு பாய் அவர்களைப்  பற்றி.....

சாயி சாஸ்திரிகள் - திரு. ரா. கணபதி


'108' என்று விரல் ரேகைகளில் சரியாக கணக்கிட்டவாறுதான் காயத்ரீ ஜபம் செய்யவேண்டுமா என்ன? எண்ணிக்கை பாராமல் எண்ணம் ஒருமுகப்பட்டு நிற்கும் வரை செய்தால் தேவலை போலிருக்கே!’ என்ற எண்ணம் எனக்குத் தலைதூக்கியிருந்த காலம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மறக்க முடியாத அந்த பிருந்தாவனம் பயணம்!

1957ஆம் ஆண்டு பகவானுடன் ஆன்மீக சுற்றுலாவாக வடஇந்தியா சென்று வந்த ஒரு பக்தரின் அனுபவ பக்கங்களிலிருந்து...

30 ஜூலை 1957ஆம் ஆண்டு சாயி பகவானுடன் ரிஷிகேஷில் இருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பிருந்தாவன் சென்றோம். யமுனை நதியின் ஒவ்வொரு அலையும் பாபாவின் வரவை எதிர் பார்த்தது போல அன்று ஆர்ப்பரித்தது. 

திங்கள், 9 டிசம்பர், 2019

ஸ்ரீ சத்யசாயி லீலைகள் - தொலைந்தது கிடைத்தது!

இச்சம்பவம் பகவானின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரால் விவரிக்கப்பட்டது.

ஒருமுறை இந்த மாணவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் லண்டன் சென்றிருந்தபோது, அங்கு ஷாப்பிங் செல்ல தெருக்களில் நடந்து கொண்டிருந்தார். வெளியே வரும் பொழுது எதேச்சையாக அவரது தந்தையார் தனது கைப்பையில் கைவிட தங்கள் அனைவரது பாஸ்போர்ட்டுகளும் இல்லாததை உணர்ந்து மிகவும் தடுமாறிவிட்டார். முதலில் மிகவும் பதட்டம் அடைந்த பொழுதிலும், பகவானிடம் அவர்கள் வைத்திருந்த பக்தி அவர்களை நிதானப்படுத்தியது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

விபூதியால் குணமான விஷப்பாம்பு கடி!


ஒருமுறை பாபா தரிசனம் கொடுத்துவிட்டு தனது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்த பொழுது, ஒரு டாக்டர் வேகமாக வந்து ஒரு மாணவனை விஷப்பாம்பு கடித்து விட்டதால் பாபாவிடம் கூட்டி வந்தார். மகளிர் பகுதியில் வந்து கொண்டிருந்த பகவானை நிறுத்தி விஷயத்தை கூறினார். சுவாமி விபூதியை வரவழைத்து விஷம் தீண்டப்பட்ட மாணவனை உண்ணச் செய்தார். பாம்பின் விஷம் பலவீனமடைந்து விட்டது. மாணவன் பிழைத்தான்.

ஆதாரம்: ஆரோக்கியப்ரதாயினி - P18

சனி, 7 டிசம்பர், 2019

சென்னையை சேர்ந்த பிரபல கண் டாக்டர் ரங்காராவ் அவர்களின் அனுபவங்கள்.


ரங்காராவ் என்ற டாக்டர், சென்னையில் இருந்த முன்னணி கண் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவர் தனது தொழில் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் பீமாவரத்தில் பொது மருத்துவராக இருந்துவந்தார். ஒரு முறை, சீரடி பாபாவை உயிருடன் தரிசித்த ஒரு பக்தருக்கு வைத்தியம் செய்ய நேர்ந்தது. அன்று முதல் ரங்காராவ் டாக்டரும் சீரடி பாபா பக்தராகி, தினமும் அவரை பிரார்த்தித்து வந்தார், எப்பொழுதும் தன்னை ஷீரடி பாபா வழி நடத்துவதை உணர்ந்தார்.

நான் தினமும் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனாலும், பிரச்சினைகள் தீரவே இல்லையே!

 ஒரு பக்தையின் கேள்வியும் இறைவன் சத்ய சாயியின் பதிலும்

ஒரு பெண்மணி, 'நான் தினமும் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனாலும், பிரச்சினைகள் தீரவே இல்லை. பகவான் இன்னும் கண்திறந்து பார்க்கலை' என்று வருத்தப்பட்டார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

குறள் வடிவில் சத்ய சாயி பகவானின் பொன்மொழிகள்:


(LOVE ALL SERVE ALL) 

 அன்புக்கு இணையான தவமில்லை ஆதலால்
அன்பு செய் அனைவருக்கும்.

 செய்திடு சேவை செய்தக்கால் அச்சேவை(நீ)
உய்ந்திடு வழி காட்டியாம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 3 | உலகின் ஒரே பாதுகாவலன்!


ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. சைலேஷ் சந்த் தர்ஷன் அவர்களின் அனுபவங்கள்.

நடனம் செய்வோரில் வல்ல நடராசன் நானே! நடன
 அடியினை ஒவ்வொன்றாக அவரவர் புத்திக் கேற்ப
படிப்படியாய்ப் பயிற்றநான் படும் பாடு யாரறிவார்?
கடினமே எனினும் நடனம் பயிற்றவே வந்தேன் நானே!
 - பாபா