தலைப்பு

வெள்ளி, 31 ஜூலை, 2020

திட்டியவரை பாதம் விழவைத்து பக்தராக்கிய பரம்பொருள் சாயி!

🇲🇾 Dato J. Jagadeesan - Former Deputy Director General of Industrial Development Authority, Malaysia.

மலேசிய தொழில் துறை தலைவர் நாத்திகர் ஜெகதீசனை, ஆத்திகர் ஜெகதீசன் ஆக்கி, அருள்செய்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீ சத்ய சாயி என்பதன் அற்புதம் சொரியும் ஆச்சர்யப் பதிவு...

வியாழன், 30 ஜூலை, 2020

கண் பார்வையை முற்றிலும் இழந்தவருக்கு பாபா செய்த விபூதி மருத்துவம்!


நம் பிறவி என்னும் பெரும்பிணியை  தீர்க்க அருமருந்தாக அவதரித்த பகவான் பாபா , ஆயிரம் ஆயிரம் மக்களின் பிணிகளை தம் கை அசைவில் ஒரு நொடிப் பொழுதில் தீர்த்த அற்புத நிகழ்வுகளை அறியாதார் யார்? தம்மை நாடி வராத நபர்களைக் கூட அவரே தேடிச் சென்று உடற்பிணி தீர்த்த நிகழ்வுகளும் ஏராளம்.

புட்டபர்த்தி இரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய 'லிப்ட்' துவக்கம்!


பகவானின் பெரும் கருணையால், இன்று (30.07.2020) காலை புட்டபர்த்தி இரயில் நிலையத்தில் (ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம்) பயணிகளின் உபயோகத்திற்காக புதிய பளுதூக்கிகள் (lift) துவக்கி வைக்கப்பட்டன. 

புதன், 29 ஜூலை, 2020

செவ்வாய், 28 ஜூலை, 2020

சேவை ஹீரோவான பிரபல நடிகர் சோனு சூட் சாய்ராம்!


பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நிவாரண சேவையில் கோலோச்சுகிறார்.
அவரின் சேவைக்கு கிரியா ஊக்கியாக விளங்குவது கடவுள் சத்ய சாயியே என்பதன் அற்புதத்தை விளக்கும் மகிமைப் பதிவு...

ஆத்ம விசாரம்(விசாரணை)


ஸ்வாமியையும், நம்மையும் இணைப்பது  பிரேமை என்கிற அன்பே (Love). அந்த அன்பு நம்மிடையே, நம்மோடு சேர்ந்து வளர்வதற்க்கு பதிலாக, சில நேரங்களில் நாம் மனதளவில் தளர்ச்சியாகிறோம். காரணம் நம்மையறியாமலேயே  நமக்குள் அன்பு என்கிற பெரும் தெய்வீக சக்திக்கு  எதிர்மறையான ஒரு தொற்று நோய் நம்மை ஆட்கொண்டு விட்டதுதான் காரணம்.
அதன் பெயர்
👉👉ஈகோ - Ego👈👈

திங்கள், 27 ஜூலை, 2020

மைலாப்பூர் ஷிர்டி சாயி கோவில் தலைவர் உணர்ந்து கொண்ட சத்ய சாயி!

K. THANGARAJ - PRESIDENT, ALL INDIA SAI SAMAJ, SAI BABA TEMPLE, MYLAPORE, CHENNAI.

இறைவன் அவதரிக்கிறான் யுகங்கள் தோறும். அப்படி அவதரிக்கையில் எந்த வடிவம் எடுப்பது என்பதை சங்கல்பிப்பது இறைவன் தானே அன்றி பக்தர்கள் இல்லை. அவனை வா என அழைக்க மட்டுமே சாதகரும், பக்தரும் கடமைப்பட்டவர்கள். நரசிம்ம ரூபம் எடுத்துத் தான் நாராயணனான சாயி வருவார் என முன்பே பிரகலாதன் அறியாதது போல் தான் இதுவும். ஷிர்டி சாயியே சத்ய சாயி. ரூபம் மட்டுமே வேறாக இருக்கிறது. இதை மைலாப்பூர் ஷிர்டி சாயி கோவில் தலைவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதன் அனுபவக் குறிப்பும் இதோ...

ஞாயிறு, 26 ஜூலை, 2020

திருமலையில் பக்தருடன் மலையேறிய சாயி வேங்கடவன்!


பக்தரின் அழையா விருந்தாளியாக உடன் வருவது என்றும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே... அழைக்காமல் வரும் சத்ய சாயி மாதா தினம் அலுக்காமல் பாதுகாப்பை வழங்கும் அவரே திருமலையிலும்.. கயிலையிலும் வீற்றிருக்கும் பரிபூரண பரம்பொருள்.. சாயி கருணை கால் கடுக்க கல்மலையிலும் நம் கூட வரும் என்பதை விவரிக்கும் ஆச்சர்ய பதிவு இதோ...

வியாழன், 23 ஜூலை, 2020

சர்வாந்தர்யாமியான இரு சாயி!


ஷிர்டி சாயியும்‌... சத்ய சாயியும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே எப்படி பல இடங்களுக்கு விஜயம் செய்தார்கள் என்பதன் அற்புதங்களை விவரிக்கும் பதிவு இதோ.. 

புதன், 22 ஜூலை, 2020

🇿🇲 ஜாம்பியா நாட்டில் மாய ஜோதியாய் வழிகாட்டும் சத்ய சாயியின் Miracle School!


Mr. Victor Kanu, J.P., M.A. (Oxon) is former High Commissioner of Sierra Leone, Africa to Great Britain, with further accreditions to Norway, Denmark and Sweden.

இறைவன் சத்ய சாயிக்கு ஒருவரை தன் பக்தராக்க சிறு கடைக்கண் பார்வையே போதும். முரடரும் பாதம் விழுவர். நாத்திகரும் பாதம் தொழுவர். செல்வந்தரும் எளிமையாகி சேவையாற்றுவர். இந்த பிரபலம் என்னவானார்? எதனால்? என்ன சேவையாற்றினார் எனும் ஆச்சர்ய அனுபவப் பதிவு இதோ.. 

அன்பின் பாதையே தர்மத்தின் பாதை!


பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்கள் அல்ல அவை வாழ்க்கையை திறக்கும் ஞானச் சாவிகள் என்பதை உணர்த்தும் பதிவு இதோ.. 

செவ்வாய், 21 ஜூலை, 2020

திங்கள், 20 ஜூலை, 2020

தன்னை வெறுப்பவரையும் தொழ வைத்த சாயி தெய்வம்!


யார் இறைவன் சத்ய சாயியை அதிகமாக வெறுக்கிறார்களோ அவர்களே அவரின் காலடியில் விரைவில் விழப்போகிறார்கள் என அர்த்தம்.
இறைவன் சத்ய சாயிக்கு எது மீதும்.. எவர் மீதும்  வெறுப்பும் இல்லை.. அவருக்கு எதிரிகளே இல்லை.. 
கடிந்து கொள்பவரை சம்ஹாரம் செய்யாமல் ஆரத்தழுவி அரவணைக்கும் ஒரே பரம்பொருள் சத்ய சாயியே என்பதன் பரவசப் பதிவிதோ...

ஞாயிறு, 19 ஜூலை, 2020

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி.V. பாலகிருஷ்ணா ஈரடி அவர்களின் சாயி அனுபவங்கள்!


திரு.பாலகிருஷ்ணா ஈரடி (19 ஜூன் 1922 - 30 டிசம்பர் 2010) 
இந்தியாவின் (சுப்ரீம் கோர்ட்) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அவர் மேலும் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் தேசிய நுகர்வோர் தகராறு தீர்க்கும் ஆணையத்தின் தலைவராகவும் ரவி&பியாஸ் நீர் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்தார். மேலும் ஆன்மீகத் துறையிலும், கலாச்சாரத் துறையிலும், சமூக அமைப்புகளிலும் அனைவராலும் அறியப்பட்டவர். 

தியானத்தில் செய்ய வேண்டுவதும் செய்யக்கூடாததும்!


தியானமாக அமரத்தி ஞானமாக இதயத்தில் நடமிடும் சத்ய சாயி பரம்பொருளே தியானத்திற்கு வழிகாட்டுகிறார்.இதில் தியானத்திற்கு வழிகாட்டுவதும் அவரே.. தியானத்தின் முடிவாய் அடையப்போவதும் அவரையே என்பதை ஒவ்வொரு சாதகரும் உணர்கிற தருணம் உன்னதம்.. தியானம் பற்றிய சாயி ஞானம் இதோ.. 

சனி, 18 ஜூலை, 2020

அபய ஹஸ்தத்தால் இதய ஓட்டையை அடைத்த ஆண்டவன் சாயி!


இறைவன் சத்ய சாயியே ஒரே மருத்துவர். இதயத்தை வைத்தியம் செய்யும் இறைவன். பிற மருத்துவர்கள் அனைவரும் இறைவன் சத்ய சாயியின் கருவிகளே.. ஒரே ஒரு அபய ஹஸ்தத்தால் நோயின் தீவிரத்தை  சரிசெய்த ஆண்டவர் சாயி என்பதன் அற்புதப் பதிவு இதோ...

அகவிடுதலையே வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் இதழிலிருந்து மலர்ந்தவை எல்லாம் இதிகாசம். பேசியவை புராணம்.. சொன்னவை சூரிய ஞானம்... பகிர்ந்தவை பேரானுபூதிக்கான பிரகாசம்.. அதில் ஓர் சூரியத் துளி இதோ...

வெள்ளி, 17 ஜூலை, 2020

ஓய்வளித்து நோயை ஓடச் செய்த மருத்துவ சாயி!


இறைவன் சத்ய சாயியே யாராருக்கு என்னென்ன சிகிச்சை தர வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவர். அவரே சிரஞ்சீவ இறைவன்.. அவரின் ஒவ்வொரு அசைவுமே சஞ்சீவினி மூலிகை...

வியாழன், 16 ஜூலை, 2020

சத்ய சாயி பாபாவின் மொழிப்புலமையை சந்தேகித்த கென்யா நாட்டு இளைஞர்!


ஈரேழு உலகையும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் இறைவன் சத்ய சாயிக்கு மொழி என்பது ஒரு தடையே இல்லை.. எல்லா மொழியும்.. மொழிப் புலமையும் ... அதன் வழி மனிதன் உறவாடும் உள்ளாற்றலும் அவரே ஆகையால் மொழி ஒரு சுவரில்லை அவருக்கு..
எல்லா மொழிகளை விடவும் இறைவன் சத்ய சாயி விரும்புவது மனிதனின் இதய மொழியே!

இரு சாயி அருளியதும் ஒரே சேவையே!


இரு சாயி அவதாரமும் ஒரே விதமான சேவையையே மனித குலத்திற்கு  செய்து வருகிறது என்பதை உணர்த்தி அக விழிப்புணர்வு தரும் ஒரு ஆழமான பதிவு... 

புதன், 15 ஜூலை, 2020

தியானமே அஞ்ஞானத்தை அழிக்கிறது!


கடவுள் உரை.. கீதை உரை.. கடவுள் எழுத்து அழியாத கல்லெழுத்து என்பதை உணர்த்தும் பரம சத்திய பதிவு இதோ... இதை வாசிப்பவர்கள் தியானத்தில் மூழ்கி அஞ்ஞான சுழலிலிருந்து ஞானக் கரை ஒதுங்குவர்.. 

செவ்வாய், 14 ஜூலை, 2020

பிறர் குற்றங்காண்பதில் மனதை தொலைக்காதீர்!


பிறர் என்பதிலிருந்து நம் என்பதை நோக்கி உள்ளே நகர்த்துவதே ஆன்மீகம். அதையே இறைவன் சத்ய சாயி கீழ்காணும் சாயி கீதையில் உரைக்கிறார்

திங்கள், 13 ஜூலை, 2020

சாவியை கண்டுபிடித்து பக்தியை திறந்த சாயி!


Sri Lankan Business leader, D. Eswaran who was the Ex- Chairman of the famed Eswaran Brothers (Pvt) Ltd

இலங்கையில் பிரபல வர்த்தகர், மொரிஷியஸ் நாட்டு தூதுவர், இலங்கை சத்ய சாயி நிறுவனத்தின் அறங்காவலர், பல ஆலயங்களின் தர்மகர்த்தா, சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர், எழுத்தாளர், சமூக சேவையாளர் என்று வாழ்ந்தவர் அமரர் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன். பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற, இலங்கை பக்தருக்கான புத்த பூர்ணிமா நிகழ்வொன்றில், பகவான் இவரை அழைத்து, சொற்பொழிவாற்றும்படி கூறியதுடன் பகவானிடம் மறக்க முடியாத மோதிரம் பரிசையும் பெற்றவர்.

சனி, 11 ஜூலை, 2020

தனது தெய்வீக அற்புதங்களை பற்றி சத்யசாயி பகவான்!

தனது தெய்வீக அற்புதங்களை பற்றி குஜராத் ‘நவகால்’ பத்திரிக்கைக்கு பகவான் பாபா அளித்த பேட்டி (மும்பை, ஜூன் 14, 1969)

கேள்வி: பொருட்களை சிருஷ்டிக்கும் உங்களது சக்தி குறைவற்றதா?

பாபா: அந்த சக்தி எல்லையற்றது. சமுத்திரத்தைப் போலக் குறைவற்றது. ஒவ்வொருவரும், அவர் யாராக இருந்த போதிலும், அவர் எங்கே இருந்த போதிலும் சரியே. தமக்குத் தேவையானதை, போதுமான அளவு என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

வெள்ளி, 10 ஜூலை, 2020

உலக புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் A.V ஸ்ரீனிவாசன் அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்!


"என்னிடம் வரும் நோயாளிகளுக்கு நான் வெறும் சிகிச்சை மட்டும் தான் பார்க்கிறேன். பாபாதான் அவர்களை கவனித்து குணப்படுத்துகிறார்."

 -Dr. A.V Srinivasan 
M.D, D.M in Neurology, PhD in Neurology, DSC, FRCP(London), F.I.A.N, F.A.A.N.

இரு சாயி சங்கல்பமும் ஒன்றே!


உருவ வடிவத்தில் ... அடிப்படையாய்ப் பேசும் மொழிகளில்..  வேறுபாடு இருப்பினும் எப்படி இரு சாயியின் சங்கல்பமும் ஒன்றே என்பதை விவரிக்கும் பதிவு இது.. 

வியாழன், 9 ஜூலை, 2020

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!


சுவாமியின் முன்னாள் மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம்:

“திக்கற்றவர்க்கு தெய்வமே துணை” என்பார் சுவாமி.  மனிதன் தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் இறைவன் பக்கம் திரும்புகிறான், அவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. பிருந்தாவன் வளாகத்தில் ஸ்ரீ சத்ய சாயி உயர் கல்வி நிலையத்தில் படித்து வந்த ஒரு மாணவன் இந்த உண்மையை தன் வாழ்நாளில் உணர்ந்திருக்கிறார். 

புதன், 8 ஜூலை, 2020

Crazy மாது வழிபடும் Graceஸி கடவுள்!


பிரபல மேடை நாடக நடிகர் கிரேஸி கிரியேஷன்ஸ் மாது பாலாஜி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்.. 

செவ்வாய், 7 ஜூலை, 2020

🎯 "சாய்ராம்" என்ற சொல்லின் சக்தி!


1986ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி எனது மகன் முருகன், என் அண்ணன் மகன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர்களுடன் முதுமலை சரணாலயத்தில் பார்த்துவிட்டு, மாயாறுக்கு செல்லும் வழியில் மசினகுடி அருகில் செல்லும்போது, குறுகலான பாதையில் எதிரில் ஒரு பஸ் வருவதைக் கண்டு, ஓரமாக ஜீப்பை நிறுத்தியுள்ளான். ஆனால் பஸ் நிற்காமலும், வேகத்தை குறைக்காமலும் வருவதைக் கண்டு, ஜீப்புடன் மோதுவது நிச்சயம் என்பதை உணர்ந்து அஞ்சி, இனி பிழைக்க முடியாது என எண்ணி உடனே "சாய்ராம்" என தனது உள்ளத்தில் இருந்து பகவானை அழைந்துள்ளான்.

சாயி சத்சங்கம் - 9 | நாமஸ்மரணையே நன்மை புரியும்!

👇 👇

திங்கள், 6 ஜூலை, 2020

தன் முந்தைய அவதாரத்தின் பக்தையைப் பற்றி விவரிக்கிறார் சத்ய சாயி!


ஷிர்டி சாயி காலத்து பக்தையான ஒருவர் வாழ்வில் நடந்து.. யாரும் அறியாத பேரதிசய அனுபவம் ஒன்றை விவரிக்கிறார் ஷிர்டி சாயியின் அவதாரமான சத்ய சாயி.. 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

லீலா மோகன சாய் - மல்லிகேஸ்வரன்

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் திரு. மல்லிகேஸ்வரன் அவர்களின் அனுபவங்கள். 

"தொலைக்காட்சி பார்க்காதே திரையரங்குகளுக்கு படம் பார்க்க செல்லாதே" இவ்வாறு பகவான் என்னிடம் குளிர் கால விடுமுறைக்கு நான் வீட்டிற்கு செல்ல ஆயத்தப் படும்போது அன்புடன் கூறினார்.

இறைவன் இருக்கிறார்! - பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி -5


இந்த மந்திரம் ஒன்றே போதுமானது:
மகான்கள் இறைவன் பெயரை மந்திரமாய் அளிப்பர்.ஆனால் இறைவனோ எதை மந்திரமாய் அளிக்கிறார் என்பதை விவரிக்கும் பதிவு இது... 

சனி, 4 ஜூலை, 2020

Puzzles


குறுக்கெழுத்து - 1

பனிமலையில் பக்தரைக் காத்த சாயி - பில் எய்ட்கன்(Famous Travel Writer)


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஆபத்பாந்தவர்.. ஆபத்சகாயர்.. அவரை நினைத்த மாத்திரத்திலேயே (நம்மை அவரை நோக்கி நினைக்கவும் வைத்து) அங்கே இறங்கி பேரன்பால் இரங்கும் பரிபூரண பரம்பொருள் அவர்.. எப்பேர்ப்பட்ட ஆபத்திலும் நமக்கு உறுதுணையாக நின்றுதவும் ஆண்டவர் அவர் மட்டுமே என்பதை மெய்சிலிர்க்க விவரிக்கும் பதிவு.

வெள்ளி, 3 ஜூலை, 2020

SMS மூலமாக செய்தி அனுப்பிய சத்திய சாயி பகவான்!


பொதுவாக பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா தன்னுடைய பக்தர்களுக்கு கனவுகள் மூலமாக அல்லது கடிதங்கள் மூலமாக தான் செய்திகளைஅனுப்பி இருக்கின்றார். ஏன் சில பக்தர்கள் தங்களுடைய வீட்டின் பாபாவின் புகைப்படத்தில் இருந்து கூட அவருடைய செய்திகளை கடிதங்களாக பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாபா குறுஞ்செய்தி(SMS) மூலமாக செய்தி அனுப்பி இருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆம் இதுபோன்ற அற்புதங்களையும் பாபா நிகழ்த்தி இருக்கின்றார்.

மூத்த நாடக நடிகர் S.V.S குமார் அவர்களின் சாயி அனுபவங்கள்!


சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய பக்தரும்,  நாடக உலகின் பிதாமகரும் சிறந்த நடிகருமான திரு S.V. சகஸ்ரநாமம் அவர்களின் குமாரரும், ஹிந்துஸ்தானி கஜல் பாடல்களில்  அபார திறன் பெற்றவரான சாய் சகோதரர் திரு S.V.S குமார் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!  

வியாழன், 2 ஜூலை, 2020

இரண்டாம் உலகப் போரிலிருந்து ஓர் இன்னுயிரை மீட்ட இறைவன் சாயி!


சாயி என்றாலோ.. பாபா என்றாலோ... சாயி ராம் என்றாலோ அந்தப் பெயரை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பக்தரை ஆபத்திலிருந்து மீட்கும் ஒரே இறைவன் சத்ய சாயி என்பதை உணர்த்தும் மெய் சிலிர்க்கும் ஒரு அனுபவப் பதிவு... 

மனிதனுக்கு இடப்பட்ட ஐந்து தருமங்கள் (கடமைகள்)


இறைவன் சத்ய சாயி கண்ணன் மனிதர்களை கடமையாற்றும் போது ஒரு கருவியாக மட்டும் இயங்கச் சொல்லி .. பலன்களையும் சேர்த்து அவரிடம் சமர்ப்பிக்கச் சொல்கிறார் அல்லவா.. அப்பேர்ப்பட்ட கடமைகள் எனும் அடிப்படை தர்மங்கள் விவரிக்கப்படுகிறது இதோ...

புதன், 1 ஜூலை, 2020

ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்து அமெரிக்கன் சிஐஏ(CIA) சேகரித்த இரகசிய ஆவணங்கள்!


அமெரிக்கன் சிஐஏ(சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி) கடந்த 70 வருடங்களாக அவர்கள் சேகரித்த சில ஆவணங்களை சமீபத்தில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் நம் அன்பு தெய்வம் சாயி பகவானைப் பற்றியும் 16 பக்கங்கள் கொண்ட ஆவணத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதைத்தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறீர்கள்.