தலைப்பு

செவ்வாய், 30 ஜூன், 2020

ஷிர்டி சாயி பக்தர்களை அரவணைத்த சத்ய சாயி!


சந்தேகப்பட்ட ஷிர்டி சாயி பக்தர்களை எப்படி தானே ஷிர்டி சாயி என உணர வைத்தார் எனும் சத்ய சாயி மகிமா பதிவு இதோ... 

திங்கள், 29 ஜூன், 2020

பாபா மீட்டளித்த பொக்கிஷப் பெட்டி!


அருளையே ஆறுதலாகவும்.. அன்பையே ஆன்மீகமாகவும் அள்ளித் தரும் இறைவன் சத்யசாயி பக்தரின் மேல் எத்தனை கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் என்பதும்.. அப்படி அவர் மீட்டளத்தப் பொக்கிஷமும் இதோ..

ஞாயிறு, 28 ஜூன், 2020

அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின்(NSF) இயக்குனர் திரு பஞ்சநாதன் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!!


அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்பின் (National Science Foundation)  இயக்குநர் விஞ்ஞானி திரு. சேதுராமன் பஞ்சநாதன் அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்! 

வெள்ளி, 26 ஜூன், 2020

சட்டைப் பையில் பணம் வைத்த சாயிபாபா!

பிரபல இலக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சாயி அனுபவப் பதிவு... 

இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபட அந்த இறைவனே வாய்ப்பு தருகிறார்.. பூஜை செய்ய பூக்களை பூமியில் மலர்த்துகிறார். பிரசாதங்கள் தயாரிக்க உணவு வகைகளை மட்டுமல்ல அதற்கான பொருளையும் உவந்து அளிக்கிறார் என்பதற்கான கடவுள் சாயியின் கருணை சார்ந்த பதிவு இதோ..

வேண்டுவது இதயத்திலிருந்து வேண்டும்.. உதட்டளவில் அல்ல!


இறைவனை எப்படி பிரார்த்தனை செய்வது..? எவ்வகையில் வழிபடுவது ..? என்பதை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியே விவரிக்கிறார் இதோ...

புதன், 24 ஜூன், 2020

கூரையை வலுவூட்டிய சாயி கண்ணன்!


அண்ட சராசரத்தின் அஸ்திவாரமே இறைவன் சத்யசாயியால் தான் அசையாமல் இயற்கையோடு இசைந்து போகிற போது மனிதர் வாழும் வீட்டுக் கூரைகள் மட்டும் சாயி விருப்பமில்லாமல் தாங்குமா ? என்பதற்கான..  உத்தரவாதப் பதிவிதோ... 

காளைக்கும் கருணை காட்டிய சாயி!


இரங்கியதால் தான் இறங்கினார் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா. மனித உயிர்களுக்கு மட்டுமல்ல அந்த ஈவிரக்கம் சகல ஜீவ ராசிகளுக்குமானது என்பதை உணர்த்தும் பரிவான பதிவிதோ.. 

செவ்வாய், 23 ஜூன், 2020

சுவாமி கல்வீசிய இடத்தில் சுரந்த நீர்!


இதய தாகம் அறிந்து இறங்கிய இறைவன் சத்ய சாயி தண்ணீர் தாகம் அறிந்து எவ்வாறு இரங்கினார் என்பதற்கான அற்புதப் பதிவு இதோ... 

கடவுள் சாயியே எழுதி அளித்த பிரார்த்தனைப் பாடல்!


கண்ணம்மா எனும் பழம்பெரும் பக்தை இறைவன் சத்ய சாயி முன் வந்து சுவாமி உங்களுக்கு இனி நிறைய பக்தர்கள் வருவார்கள்..
எங்களைப் போன்ற எளிய பக்தரை எல்லாம் ஒரு நாள் மறந்துவிடுவீர்கள்.
அதை நினைக்கும் போதே கண்ணீர் கண்களுக்குள் கட்டுப்படாமல் வெளியே தப்பித்து ஓடுகிறது எனக் கலங்கிச் சொல்ல..

சனி, 20 ஜூன், 2020

மாணவர்கள் தெய்வத் துணையை நாட வேண்டும்!


தெய்வமே ஒரே துணை என்கிறார் பரிபூரண தெய்வமான சத்யசாயி.
தெய்வத்துவம் என்பது அன்பே என அரசாணை பிறப்பிக்கிறார் இதோ ஈரேழு பதினான்கு லோகத்தின் ஒரே சக்கரவர்த்தியான இறைவன் சத்ய சாயி.. 

வெள்ளி, 19 ஜூன், 2020

உதி அளித்து கேன்சரை விரட்டிய சத்ய சாயி!


ஷிர்டி சாயியும் சத்ய சாயியும் ஒருவரே.
ஷிர்டி சாயி அளித்த உதியையே சத்ய சாயியும் அளித்து எப்படி புற்று நோயை விரட்டினார் என்பதற்கான அற்புத அனுபவம் இதோ.. 

பிறப்பே சர்வ துக்கங்களுக்கும் காரணம்!


பேதம் காண்பவர்களுக்கு எல்லாம் இறைவன் சத்ய சாயி உணர்த்துகின்ற வேதம் இதோ.. 

வியாழன், 18 ஜூன், 2020

திரு. ராஜாரெட்டி அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


திரு ராஜாரெட்டி அவர்கள், நமது சுவாமி அவர்களின் அவதாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சுவாமியிடம் வந்து சேர்ந்து அதிர்ஷ்டம் பெற்ற பக்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராக, சுமார் 30 வருட காலங்களாக சுவாமியின் அருகாமையில் இருந்து தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தவர் . 

திரு ராஜாரெட்டி அவர்களுடனான உரையாடல்:
பேட்டி கண்ட தேதி: 24- ஜூலை - 2007

இரு நதிக்கரையிலும் இரு சாயி நிகழ்த்திய பேரற்புதங்கள்!


இரு சாயியும் தாங்கள் அவதரித்த இரு நதிக்கரையிலும் புரிந்த பேரற்புதங்களின் ஆச்சர்யப் பதிவுகள் இதோ.... 

கோதாவரி நதிக்கரையில் அவதரித்தவர் இறைவன் ஷிர்டி சாயி.
சித்ராவதி நதிக்கரையில் அவதரித்தவர் இறைவன் சத்ய சாயி.

புதன், 17 ஜூன், 2020

டாக்டருக்கு குரு பாதம் காட்டிய கடவுள் பாபா!

Dr. Alreja Meets his Maha Guru 

இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே குருவுக்கு எல்லாம் குருவாகிய மகாகுரு.. சத்குரு.. கீதை உரைத்த ஒரே ஜகத் குரு.. பிற மகான்கள் வெறும் குருவே. உலகின் எல்லா குருவும் கடவுள் சத்ய சாயி கற்பக மலர் பாதங்களில் அடக்கம் எனும் பேருண்மையை உணர்த்தும் விதமாக ஒரு பரவச அனுபவப் பதிவு இதோ

இறையறிவே இளைஞர்க்கு அவசியம்!


பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் பரம்பொருள் சத்ய சாயி. அவரே வாழ்க்கையில் பரீட்சை வைத்து பாடம் நடத்துகிறார். அது பலப்பரீட்சை.. அந்தப் பாடம் வாழ்நாளை தேன் நாளாய் இனிக்கச் செய்யும் கீதையே.. 

செவ்வாய், 16 ஜூன், 2020

கண்ணிமைக்கும் நேரத்தில் உடைமையை‌ மீட்ட கடவுள் சாயி!


இறைவன் சத்ய சாயி அன்றாடம் நிகழ்த்தும் அனுபவங்கள் ஏராளம். அவரவர் அடைந்து கொண்டுவரும் அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க முயல்வது கடினமே.. சாயி தரும் பேரனுபவத்தை அனுபவிப்பது ஆனந்தம் என்றால் அதைப் பகிர்வது பேரானந்தம்.. 

'அதே பாபாதான் இவர்' தொடருக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?


கேள்வி: சத்ய சாயி யுகம் குருப்பில் எதற்கு 'அதே பாபாதான் இவர்' தொடருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இருவரும் ஒருவரே என்று நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றுதானே..

திங்கள், 15 ஜூன், 2020

பெற்றோர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்தல் கூடாது!


நம்மை பெற்றவர்களுக்கும் பெற்றோராக விளங்குவது சத்ய சாயி பரம்பொருளே.. அவரின் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வேதம்.. நம்மை செதுக்கும் சாயி உளி. இதோ பெற்றோர்க்கு சத்ய சாயி பெற்றோன் கூறும் ஆழ்ந்த அறிவுரை...

ஞாயிறு, 14 ஜூன், 2020

அறுவை சிகிச்சை செய்த ஆண்டவன் சாயி!


நம்மிடமிருந்து பூரண அன்பைப் பெற்றுக் கொண்டு ஆரோக்கியத்தை பிரசாதமாக வழங்குபவர் இறைவன் சத்ய சாயி...அப்படி ஒரு ஆபத்தான நோயாளிக்கு எப்படி சிகிச்சை அளித்தார் என்பதன் பரவச அனுபவம் இதோ..

சிறுவனின் கடிதம் படித்து வியந்த சாயி!


சிறுவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள். 
பரிசுத்தமானவர்கள். அவர்களின் இதயத்தில் பூமியின் பொய்ப் புழுதி கலக்கப்படுவதில்லை‌.. அப்பேர்ப்பட்ட சின்னஞ் சிறு சிறுவனான ஒரு சுவாமி மாணவன் கடிதமாக இறைவன் சத்யசாயிக்கு என்ன எழுதினான்... இதோ

மாணவர்கள், தங்களை தாயன்புடன் பாதுகாக்கும் பகவானின் மீது, அதிக அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். சாயியும், அவர்களோடு அளவளாவி, அவர்களது பிறந்த நாட்கள் அன்று அவர்களை ஆசீர்வதிப்பார்.

சனி, 13 ஜூன், 2020

குரோஷியா நாட்டிற்கே சென்று சேவையாற்றிய சாயி கடவுள்!


குரோஷியா(Croatia) நாடு வரைபடத்தில் எங்கிருக்கிறதென நம்மில் பாதி பேருக்கு தெரியாது என்பதே எதார்த்தம். வரைபடத்தில் இல்லாத தேசத்திற்கும் சுவாசம் அனுப்புபவர் இறைவன் சத்யசாயியே. அங்கே அவர் நிகழ்த்திய பேரற்புதம் இதோ.. 

குரோஷியக் குடியரசு, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்; வடமேற்கில் ஸ்லோவேனியா,வட கிழக்கில் ஹங்கேரி,கிழக்கே செர்பியா, தென்கிழக்கில் போஸ்னியா, ஹெர்சிகோவினா மற்றும் மாண்ட்டெனெக்ரோ முதலிய நாடுகளையும், இத்தாலியுடன் கடற்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு திகழ்கிறது.

இரு சாயியின் ஒற்றுமையான பதில்கள்!


இரு சாயியிடமும் கேட்கப்பட்ட ஒரே விதமான கேள்விக்கு.. ஒரேவிதமான பதில் அளித்த அற்புதமும் ... அந்தந்த காலத்திற்கு ஏற்றாற் போல பரிணாம பதில்களை அருளாய் ஆற்றலாய் வழங்கிய பதிவு இதோ.. 

ஷிர்டி கிராமத்தில் இறைவன் ஷிர்டி சாயியிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன..

வெள்ளி, 12 ஜூன், 2020

ஒரே நொடியில் ஆப்ரிக்கா சென்று வந்த ஆண்டவன் சாயி!


இறைவன் சத்ய சாயிக்கு காலம் - இடம் - தேசம் ஆகிய எந்த வேறுபாடும் இல்லை.. பாகுபாடும் இல்லை.. இறைவன் சத்ய சாயிக்கு காலம் என்ற வரையறையே இல்லை என்பதற்கான ஒரு அற்புத அனுபவப் பதிவோடு அந்த சந்தேக பக்தரின் ஐயத்தைப் போக்க அவருக்கு வழங்கப்பட்ட காலமற்ற சத்ய சாயியின் காலம் காட்டும் கைக்கடிகாரம் இதோ.. 

வியாழன், 11 ஜூன், 2020

ஆழ்கிணற்றில் மூழ்கிய சிறுமியை மீட்ட அற்புத சாயி!


இறைவன் சத்ய சாயி எதையும் சாதிப்பவர். அவரின் சங்கல்பப்படியே பூமி சுழல்கிறது என்பது வெறும் நம்பிக்கை அல்ல பேரனுபவம். 
புல்லரிக்கச் செய்யும் பூபாள பேரனுபவம் அநேகம். பார்த்து பரவசப்பட்ட சாட்சி ஒருவர் எழுதிய  பேரனுபவம் இதோ உங்கள் பரவச அனுபவத்திற்காக...

"நேர்மையே வழி - தர்மமே ஒளி" சொல்கிறார் இறைவன் சாயி


இறைவன் சத்ய சாயி கிருஷ்ணரை போல் ஓரிரு வரிகளில் கீதை சொல்லும் கடவுள் உலகில் வேறு யாரும் இல்லை. ரத்தினச் சுருக்கமாய் ஞானத்தை நம்  இதயத்தில் விதைத்து அதை பாரிஜாத வேராய் படர விடுகிறார் இதோ.. 

தருமமும் ஞானமும் மனிதனுக்கு, அவனுடைய தனித் தன்மையையும் இறையாண்மையையும் உணர்த்த கொடுக்கப்பட்ட இரு கண்களாகும்.

புதன், 10 ஜூன், 2020

ஈஸியான கடவுளும்.. கிரேஸியான பக்தரும்


கிரேஸி மோகன் அவர்களின் சத்யசாயி அனுபவமும்.. அவர் இயற்றிய சத்ய சாயி வெண்பாக்களும் நவரசப் பதிவாக இதோ.. 

மோகன் அவர்கள் திரு மோகன் ராகவாச்சாரியாகவே வாழ்ந்து மறைந்திருந்தால் பனி போல் விலகிச் சென்றிருப்பார்.
ஆனால் கிரேஸி மோகனாக வாழ்ந்திருந்ததால் உடல் மறைந்த பின்னும்  இன்னமும் தனித்துவமாய்.. தத்துவமாய் வாழ்கிறார்.

செவ்வாய், 9 ஜூன், 2020

பாபாவின் தரிசனமே ஆனந்தம் - 'பாரத ரத்னா' பண்டித் பீம்சேன் ஜோஷி


இறைவன் சத்யசாயிக்கும் பிரபல பாடகர் பாரத ரத்னா பீம்சேன் ஜோஷிக்குமான பக்த பந்தம் பற்றியும்.. இறைவனுக்கும் ஒரு பரம பக்தனுக்குமான பரம்பொருள் பிணைப்பை ஒரு நேர்காணலின் வழி அவரே விளக்குகிறார் இதோ...

பாபாவுடனான என்னுடைய முதல் சந்திப்பு புகழ்வாய்ந்த பாடகி திருமதி. ஹீராபாய் பரோடேகர் இல்லத்தில் நடந்தது. நம் இதய தெய்வமான பாபாவின் முன்னிலையில் நான் பாடினேன். அதன் பிறகு எனக்கு அடிக்கடி புட்டபர்த்தி சென்று பாபாவைத் தரிசிக்கும் வாய்ப்புகளும் அவர் முன்னிலையில் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன.

இரு சாயியும் கொண்டாடிய ராம நவமி!


ஷிர்டியிலும் புட்டபர்த்தியிலும்  ஆரம்ப நாட்களில் ஸ்ரீராம நவமியை எப்படிக் கொண்டாடினர் என்பதில் உள்ள இரு சாயியின் ஒற்றுமை இதோ.. 

இறைவன் மானுடராய் கீழ் இறங்கினான்.
ஏன்?
மனித உடல் என்ற ஒரு அரிய சாதனம் மேன்மை நிலை அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பதற்காக..

திங்கள், 8 ஜூன், 2020

Dr காடியாவுக்கு சீட் கொடுத்த கடவுள் சாயி!


Dr. காதியா தனது மேற்படிப்புக்காக U.K செல்கிறார். அங்கே நிகழ்ந்த எதிர்பாரா தெய்வீக அனுபவமும் அவருக்கு தங்கிப் படிக்க இடம் எவ்வாறு அமைந்தது என்ற அருமையான அனுபவமும் இதோ..

என்னுடைய தந்தையார் எனக்கு பாம்பேயிலிருந்து லண்டன் போவதற்கு ஆலிடாலியா ஏர்லைன்ஸ் மூலம் புதன்கிழமை புறப்படும்படியான ஒருவழி
விமான டிக்கட்டை அனுப்பிவைத்தார். ஆனால் சுவாமி எனக்குக் கூறிய நாளோ வியாழக்கிழமையாக இருந்தது! நான் ஆலிடாலியா அலுவலகத்துக்கு என் சீட்டைக் கன்ஃபர்ம் செய்வதற்காகச் சென்றேன். அங்கிருந்த ஊழியர் “மன்னிக்க வேண்டும். ஒரு எந்திரக் கோளாறு காரணமாக புதன்கிழமை ஃப்ளைட் கேன்சல் ஆகிவிட்டது. நாளைக்கு, அதாவது வியாழக்கிழமை, புறப்படும் TWA விமானத்தில் நீங்கள் செல்ல ஏற்பாடாகியுள்ளது” என்றார். இப்படியாக சுவாமியின் வார்த்தையே நடந்தது. நான் வியாழனன்று லண்டனுக்குப் பறந்தேன்.

வாழ்வின் இரு சீரிய குணங்கள்!


நேரடியாக உட்பொருளைச் சுட்டிக் காட்டிவிடுவார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. மனித அன்பின் வழியிலே தான் இறைவனின் பேரன்பை அடைய முடியும் என்பதையும் அதை தனக்கே உரிய தெய்வீக பாணியில் இதோ இறைவனே விளக்குகிறார். 

ஞாயிறு, 7 ஜூன், 2020

பாபாவையே கேள்விப்படாத பெண்மணிக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!


சத்ய சாயி யார்? எப்பேர்ப்பட்ட இறைவன் அவர்.. எத்தகைய பரிபூரண அவதாரம்.. என்பவை எதுவுமே தெரியாத ஒரு பெண்மணிக்கு இறைவன் சத்ய சாயி நிகழ்த்திய அற்புதத்தையும் அதனால் தீர்ந்து போன அவரது பிரச்சனையையும் அவரே எழுத்து வடிவில் பாக்கிய வாக்குமூலமாய் தருகிறார் இதோ...

 இந்த அற்புதம் நிகழ்வதற்கு முன்பு வரை எனக்கு ஸ்ரீ பகவானைப் பற்றி எதுவுமே தெரியாது. ஷிர்டி பாபா பற்றி கூட எதுவுமே அறியாது தானிருந்தேன். 

1000 கோடி செலவில் அரசின் திட்டத்தோடு புதுப்பிக்க இருக்கும் புட்டபர்த்தி!


புட்டபர்த்தியின் வளர்ச்சிப் பணிக்காக மாபெரும் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது : MLA திரு D. ஸ்ரீதர் ரெட்டி அவர்களின் பதிவு இதோ.. 

புட்டபர்த்தி(அனந்தபூர்): MLA D ஸ்ரீதர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பன்னாட்டு சேவார்த்திகளின் புனித யாத்திரை இலக்கான புட்டபர்த்தியின் வளர்ச்சிக்கே தான் பெருமளவில் பாடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா நம்மிடையே இன்றளவும் நடமாடும்  புட்டபர்த்தி அநேக வெளிநாட்டு பக்தர்கள் வருகையினால் ஆன்மீக புகழ் பெற்ற ஸ்தலமாக இருந்து வருகிறது. 

சனி, 6 ஜூன், 2020

செவித் திறனை மீட்டுத் தந்த சத்யசாயி!


உடல் சார்ந்த பிரச்சனையோ ... மனம் சார்ந்த பிரச்சனையோ பயப்படவே செய்யாமல் பரம்பொருள் சத்யசாயியிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டால் அவர் யாவற்றையும் கவனித்துக் கொள்வார் என்பதற்கான ஓர் பரவசப் பதிவு இதோ...

🦂 சின்ன கதை- என்ன ஆனாலும் உன் இயல்பைக் கைவிடாதே!


அன்பே மனிதனின் இயல்பு..இயற்கை குணம் அதை விட்டு விலகுவதே செயற்கைத் தனம்.. இயல்பாய் இயற்கையாய் வாழ்வதையே இறைவன் சத்ய சாயி அனைவரிடத்திலும் விரும்புகிறார் என்பதை இதோ இறைவனே..

வெள்ளி, 5 ஜூன், 2020

மாணவ சாயிக்கு பாடம் எடுத்த ஆசிரியரின் ஆச்சர்யக் குறிப்புகள்!


இறைவன் ஷிர்டி சாயியை தன் "முந்தைய மேனி" என்பார் இறைவன் சத்ய சாயி.

ஒரு விளக்கிலிருந்து அணைவதற்கு முன் இன்னொரு விளக்கில் ஏற்றப்படுகிற ஜோதி அதே பழைய ஜோதி தான்.
இரண்டு ஜோதிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.
அது போல இறைவனின் இரண்டு ரூபங்களான ஷிர்டி சாயி - சத்ய சாயி.

சாயி சத்சங்கம் - 8 | பிரார்த்தனைக்கு இரங்கும் பாபா!

👇 👇

வியாழன், 4 ஜூன், 2020

பத்மஸ்ரீ டி.எம்.எஸ் அவர்களுக்கு புது வாழ்வளித்த பாபா!


மனம் உடைந்து போன பத்மஸ்ரீ டி.எம்.எஸ் அவர்களுக்கு புதிய ஒளிப் பாய்ச்சி இறைவன் சத்ய சாயி தந்த மெய்ஞான அனுபவம் இதோ.. 

டி.எம்.எஸ் என்பது தமிழின் இசை வடிவ இனிஷியல்.
அந்தப் பேராச்சர்யப் பாடகர் திரை இசைப் பாடல்களுக்கு தன் நவரச உணர்ச்சிகளை ஊட்டி அதனை இறவாப் பாடல்களாகச் செய்தவர்.

உனது வாழ்வே பாரதப்போர்!


தர்ம வழி எப்படி வாழ வேண்டும் என்பதை இதிகாசம் வழி உணர்த்துகிறார் இறைவன் ஸ்ரீ சத்யசாயி இதோ.. 

புதன், 3 ஜூன், 2020

கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சாயி கடவுள்!


இறைவன் சத்ய சாயி ஒருவரே ஆபத்பாந்தவர்.. தன் பக்தர்களை எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்தும் இமை அசைக்கும் நேரத்தில் காப்பாற்றுபவர். அவசரத்தில் இறைவன் சத்ய சாயி பெயரை நாம் அழைக்க மறந்தாலும் நம்மை அந்த ஆபத்திலிருந்து அவர் மீட்கவே மறக்காதவர் என்பதற்கான இரு பரவச அனுபவங்கள் இதோ.. 

பாபாவின் கருணையினால் கார் விபத்தில் இருந்து தப்பிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஆனால் இரண்டு வினோதமான விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை, நிகழ்ந்திருக்க வேண்டியவை, நடக்கவே இல்லை.

யாவரின் வாழ்விலும் அற்புதம் செய்யும் சாயி!


நம்முடைய சத்ய சாய் யுகம் வாட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த திரு. காமராஜ் அவர்களின் கட்டுரை பகிர்வு.. 

ஓம் ஸ்ரீ சாய்ராம்..! இப் புனித நாமத்தை உச்சரிக்காத நாவுகள் இல்லை..! நாடுகளும் இல்லை..!

செவ்வாய், 2 ஜூன், 2020

GRACE பட்டம் பெற எவ்வளவு உழைக்கவேண்டும்?


சாதாரண உலக அறிவைக் கற்பதற்கே நிறைய நேரம் செலவழித்து...தேர்வுகள் எழுதி தயாராக வேண்டி இருக்கிறது.. இறைவனின் கருணைக்கு.. அவன் அருளுக்கு பாத்திரமாக எவ்வளவு மணி நேரம் செலவழித்து .. எத்தனை தேர்வுகளை சந்தித்து நம்மை தயார் படுத்த வேண்டும் என்பதை ஆழமாய் மிக சுருக்கமாய் விவரிக்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி... 

திங்கள், 1 ஜூன், 2020

நேரடி சத்தியத்தை உரைக்கும் சத்திய இறைவன்!


கடவுள் யாருக்கு இறங்கி வருகிறார்..? யார் பக்தர்..? யார் ஆத்ம சாதகர்? என்பதை மிக தெள்ளத் தெளிவாய் கடவுள் சத்ய சாயியே கருணை கூர்ந்து விளக்குகிறார்.. 

ஒருவரது வாழ்வில் பதினாறாவது வயது முதல் முப்பதாவது வயது வரை மிகவும் விலை மதிப்பில்லாதது. ஒருவரது சக்தியும் வீச்சும் எல்லா விதங்களிலும் உச்சத்தை அடையும் காலம் இது. அதனால் இந்தப் பருவத்தை ஒவ்வொருவரும் மிகச்சரியாக பயன்படுத்த எத்தனித்தல் அவசியம்.